Friday, September 18, 2009

நேரடியாகவே YouTube இலிருந்து காணொளிகளை (Videos) தரவிறக்குவது எப்படி?

YouTube இலிருந்து அதிலுள்ள காணொளிகளை(Videos) தரவிறக்கி(Download) பயன்படுத்த விரும்புபவர்கள் நேரடியாகவே YouTube இலிருந்து தரவிறக்கி கொள்வதற்கான மிகவும் எளிமையான நடைமுறை தான் இது.
நீங்கள் செய்யவேண்டியது உங்கள் Address Bar இல் http://www.youtube.com/ என்பதற்கு பதிலாக http://www.kickyoutube.com/ என தட்டச்சு செய்யுங்கள். அதாவது Youtube என்பதற்கு முன்னால் kick என்னும் சொல்லை போட்டால் போதும்.
பின்னர் தோன்றும் திரையில் நீங்கள் தரவிறக்க வேண்டிய காணொளியை தேடல் பெட்டியினுள் (Search Box) தட்டச்சு செய்வதன் மூலம் தேடி அதனை தெரிவுசெய்யுங்கள்.


பின்னர் விரும்பிய வடிவமைப்பினை (format:MP4,FLV,3GP,IPHONE,PSP,MP3) தெரிவு செய்து பச்சை நிறத்திலான GO என்பதினை அழுத்துங்கள்.



GO என்பதினை தெரிவு செய்த பின்னர் நீல நிறத்திலுள்ள DOWN என்பதினை அழுத்துங்கள். இப்போது நீங்கள் தரவிறக்கி பார்க்கலாம்.


Facebook தகவல்: தற்பொழுது Facebook இன் பயனாளர்(User name) பெயருக்கு நீங்கள் நேரடியாகவே உங்கள் பயனர் பெயரையே பாவிக்கலாம். மின்னஞ்சல் பாவிக்க வேண்டிய அவசியம் இல்லை.


3 கருத்துரைகள்:

Btc Guider said...

பயனுள்ள தகவல்.
நன்றி நண்பா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெகுநாளாக இதைத் தேடினேன்.மிக நன்றி!
உடன் பயன் படுத்தியும் விட்டேன்.

தகவல் தொழில்நுட்பப் பூங்கா said...

கருத்துக்களுக்கு நன்றி யோகன் பாரிஸ்