Monday, November 23, 2009

கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி


பல இணையவழியிலான ஆங்கிலம்-தமிழ் ,தமிழ்-ஆங்கிலம் அகராதிகள் இருக்கின்ற போதிலும் மிகவும் பரந்துபட்ட பிரபல்யமான இணையவழியிலான ஒரு கட்டற்ற அகராதி களஞ்சியமாக திகழ்வது தமிழ் விக்சனரி (Tamil Wiktionary) ஆகும். இதில் பல்வேறுபட்ட அறிய சொற்கள் காணப்படுவது இதன் ஒரு சிறப்பம்சமாகும்.

அத்தகைய இணைய உலகிற்கு வலுவாக அமையும் விதத்தில் பல்வேறுபட்ட அதிரடி அறிவிப்புக்களை செய்துவரும் கூகிள்(Google) ஆனது ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் என்னும் இணைய அகராதியினை அண்மையில் வெளியிட்டிருக்கின்றது. கூகிள் இணைய அகராதியானது தமிழ் விக்சனரியின் தகுதிக்கு இல்லாத போதிலும் கிட்டதட்ட அதன் தகுதியை அண்மித்த ஒன்றாக காணப்படுகின்றது.

அத்துடன் கூகிளானது மிகவும் இலகுவான மேலும் பல்வேறுபட்ட விடயங்களுடன் புதிய இடைமுகத்துடன் (Interface) வெளிவரவிருப்பது இன்னுமொரு சிறப்பம்சமாகும்.

கூகிள் ஆங்கிலம்-தமிழ் இணைய அகராதி சுட்டி

Sunday, November 22, 2009

புகைப்படங்களை வடிவமைப்பதற்கான இலவச இணையவழி பதிப்பு (Free Online Editor)



உங்களிடம் தெளிவில்லாத புகைப்படங்களை வடிவமைப்புக்கு என்று பல மென்பொருட்கள் (Softwares) மற்றும் இணையவழி மென்பொருட்கள் (Online editing) என பல மென்பொருட்கள் காணப்படுகின்றபோதிலும் Pic Treat என்னும் ஒரு சிறப்பான இலவச இணையவழியிலான மென்பொருளாக ( Free Online editor) காணப்படுகின்றது. புகைபடங்களிலுள்ள தேவையற்ற புள்ளிகளை அகற்றி மிகவும் தெளிவாக புகைப்படங்களை வடிவமைக்க மிகவும் பயனுள்ள தளமாக இது காணப்படுகின்றது. அத்துடன் இதில் நீங்கள் வடிவமைக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

Pic Treat க்கான இணையதளமுகவரி: http://www.pictreat.com/



Friday, November 20, 2009

கட்டற்ற இலவச திறந்த மென்பொருட்கள்


கட்டற்ற திறந்த இலவச மென்பொருட்கள் பல இணைய உலகில் உங்களுக்காக இருக்கின்றன. அவற்றில் சில பயனுள்ள மென்பொருட்களின் தரவிறக்க சுட்டிகளை உங்களுக்கு தருகின்றேன். தரவிறக்கி நிறுவி பயன்படுத்தி பாருங்கள்.

இணைய உலாவி: Mozilla FireBox
விரைவான இணையத்தேடலுக்கான ஒரு இலவச மென்பொருள்
தரவிறக்க சுட்டி: http://www.mozilla.com/en-US/firefox/ie.html

காணொளி இயக்கி(Video Player): Miro 2.5
தரவிறக்க சுட்டி: http://www.getmiro.com/

ஒலிப்பதிவு மென்பொருள்: Audacity
ஒலிபதிவுகளை பதிவு செய்வதற்கான ஒரு மென்பொருள்.
தரவிறக்க சுட்டி: http://audacity.sourceforge.net/download/windows

புகைப்பட வடிவமைப்பு மென்பொருள்: GIMP
புகைப்படங்களை அழகாக வடிவமைப்பு செய்யவென ஒரு இலவச மென்பொருள்.
தரவிறக்க சுட்டி:http://gimp-win.sourceforge.net/stable.html

முப்பரிமாண மென்பொருள்: Blendor
முப்பரிமாணத்தில் படங்களை உருவாக்கவென ஒரு இலவச மென்பொருள்.
தரவிறக்க சுட்டி: http://www.blender.org/download/get-blender/

இத்தகைய இன்னும் பல மென்பொருட்களின் விபரங்களை அறிய: http://www.opensourcewindows.org/

Thursday, November 19, 2009

கூகிளின் பல்வேறுபட்ட வசதிகளுடனான உச்சரிப்பு முறையில் அமைந்த எழுத்து பலகை( Transliteration service with a Rich WYSWYG Editor)

புதியதாக பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிவரும் கூகிள்(Google) அண்மையில் தமிழ் உட்பட பிரதான இந்திய மொழிகளில் தனது புதிய உச்சரிப்பு முறையில் அமைந்த எழுத்து பலகையை ஒன்றை பல்வேறுபட்ட புதிய வசதிகளுடன் வெளியிட்டிருக்கின்றது. (Transliteration service with a Rich WYSWYG Editor )


கூகிளின் இந்த புதிய சேவையில் சொல் செயலாக்கியுடனான (Word Processor) HTML Source Editor இதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது இணையப்பக்க வடிவமைப்புகளுக்கு மிகவும் பயனுள்ள சேவையாக அமைகின்றது.



அத்துடன் கூகிளின் ஆங்கில-தமிழ் அகராதி தமிழ்-ஆங்கில அகராதி இந்த புதிய சேவையில் உள்ளமை இன்னுமொரு சிறப்பம்சமாகும்.



அத்துடன் ஒருங்குறி எழுத்துக்களை சேர்க்கும் வசதியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Wednesday, November 18, 2009

MS word அமைப்பிலுள்ள (Format:doc,ppt,etc) தொகுப்புக்களை pdf வடிவில் மாற்ற ஒரு இலவச மென்பொருள்


உங்களிடம் இருக்கும் MS word, MS powerpoint போன்ற ஆவணங்களை இலகுவாக அவற்றின் எழுத்துருக்கள் மற்றும் வடிவங்களில் மாற்றமின்றி இலகுவாக மாற்றியமைக்க PDF Creator என்னும் மென்பொருள் உள்ளது.

PDF Creator தரவிறக்க இணையச்சுட்டி: http://www.pdfforge.org/
இந்த மென்பொருளை நீங்கள் மேலே உள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவியதன் பின்னர் PDF ஐ உருவாக்குவதற்கான வழிமுறைகள்:







1.முதலில் நீங்கள் PDF க்கு மாற்ற வேண்டிய ஆவணத்தை திறந்து கொள்ளுங்கள்.



2. பின்னர் MS word இல் File-->Print (Ctrl+p) என்பதை தெரிவுசெய்யுங்கள்.



3. வரும் Print என்னும் window இல் Name என்னும் தெரிவில் PDFCreator என்பதை தெரிவுசெய்து OK ஐ அழுத்துங்கள்.


4. பின்னர் வரும் window வில் Save என்பதை அழுத்தி PDF வடிவில் ஆவணத்தை சேமித்து கொள்ளுங்கள்.



மென்பொருள் தரவிறக்க சுட்டி: PDF Creator 0.9.8

Monday, November 16, 2009

PDF,word,txt,excel,ppt போன்ற வடிவங்களில்(Formats) அமைந்த ஆவணங்களை தேடி பெற்றுக்கொள்ளவென சில தேடல் இயந்திரங்கள்


இணையத்தளங்களில் PDF, MS word,MS power point ,Html files ,மற்றும் xls போன்ற பல்வேறுபட்ட அமைப்புக்களில்(formats) ஆவணங்களானது சேமிக்கப்பட்டுள்ளன. அவற்றை இலகுவாக தேடி பெற்றுக்கொள்ளவென சில சிறப்பான தேடல் இயந்திரங்கள் தான் இவை. இவற்றில் நீங்கள் அத்தகைய ஆவணங்களை (Documents) தேடி பெற்றுக்கொள்ள முடியும்.

1. Docjax
இணையச்சுட்டி : http://www.docjax.com/
இவ் இணையத்தளத்தில் doc,ppt,pdf இணையச்சுட்டி இணையச்சுட்டி xls போன்ற வடிவங்களில் அமைந்த ஆவணங்களை தேடி பெற்றுக்கொள்ளலாம்.

2.PDF Database
இணையச்சுட்டி:www.pdfdatabase.com/
இவ் இணையத்தளத்தில் மின்புத்தகங்கள் மற்றும் PDF, Word வடிவங்களில் அமைந்த ஆவணங்களை இலகுவாக தேடி பெற்றுக்கொள்ளலாம்.

3.pdf-search-engine
இணையச்சுட்டி: http://www.pdf-search-engine.com/
இவ் இணையத்தளத்தில் மின்புத்தகங்கள் மற்றும் pdf வடிவில் அமைந்த ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

4. toodoc
இணையச்சுட்டி: http://www.toodoc.com/
இவ் இணையத்தளத்தில் pdf,txt,word,excel மற்றும் ppt வடிவங்களில் அமைந்த ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

5. Pdfgeni
இணையச்சுட்டி: http://www.pdfgeni.com/
இணைய சஞ்சிகைகள் மற்றும் மின்புத்தகங்கள் போன்றவற்றை PDF வடிவில் பெற்றுக்கொள்ள முடியும்.

6.PDFQueen
இணையச்சுட்டி: http://www.pdfqueen.com/
மின்புத்தகங்களை pdf வடிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
இவை போன்ற இன்னும் பல தளங்கள் உள்ளன.
.search-pdf-books.com
http://www.pdf-searcher.com/
http://www.ebook-search-engine.com/
http://www.pdf.rapid4me.com/
http://www.alldatasheet.com/

Saturday, November 14, 2009

கணனியில் விரைவாக கோப்புக்களை (Folders) திறப்பதற்கான வழிமுறை


உங்கள் கணனியில் கோப்புறைகளை (Folders) திறக்க அதிக நேரம் எடுக்கின்றதா? இதற்கு காரணம் உங்கள் கணனியின் இயங்குதளமானது (operating system) உங்கள் கணனியில் இணைக்கப்பட்டுள்ள வலையமைப்பு ஆவணங்கள் மற்றும் அச்சியந்திர இணைப்புக்களை ( Network files and printers) தானாகவே தேடி கண்டுபிடிக்க நேரம் செலவாகுதலாகும்.
இவற்றினை நிறுத்தி மிக விரைவாக கோப்புகளை(Folders) திறப்பதற்கான வழிமுறைகள் இதோ..

1. முதலில் My Computer ஐ திறவுங்கள்.( open My Computer)
2. Tools Menu வில் அழுத்துங்கள்.
3. Tools menu வில் Folder option என்பதினை அழுத்துங்கள்.
4. View Tab என்பதினை தெரிவு செய்யுங்கள்.
5. Automatically search for network folders and printers என்பது தெரிவு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கி விடுங்கள்.
6. Apply செய்து OK பண்ணுங்கள்.

இப்பொழுது உங்கள் கணனியில் நீங்கள் விரைவாக கோப்புறைகளை திறக்க கூடியதாக இருக்கும்.

Friday, November 13, 2009

கூகிளின் GO என்னும் கணனி நிரலாக்க மொழி


தேடல் துறையில் பல புரட்சிகள் படைத்து உலகையே கட்டிப்போட்டிருக்கும் கூகிள் மேலும் பல்வேறுபட்ட புதிய படைப்புக்களான இயங்குதளம்(Google OS),இணைய உலாவி(google Chrome), கூகிள் அலை(Google Wave) போன்ற பல்வேறுபட்ட புதியனவற்றை அறிமுகப்படுத்தி வரும் கூகிள் கணனி நிரலாக்க மொழித்துறையிலும் காலடி பதித்துள்ளது.

GO என்னும் திறந்த இலவச கணனி நிரலாக்கமொழியினை(Open Source programming lanuage) அண்மையில் அறிமுகப்படுத்தி வெளியிட்டிருக்கின்றது.
இவ் கணனி நிரலாக்க மொழியானது உலகில் மிகவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் C என்னும் நிரலாக்க மொழிக் குடும்பத்தினை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவ் நிரலாக்க மொழியானது Python and the Pascal/Modula/Oberon போன்ற மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியாகவுள்ளமை இதிலுள்ள ஒரு சிறப்பம்சமாகவுள்ளது.அத்துடன் இந்த நிரலாக்க மொழியானது மென்பொருள் கட்டுமான துறைக்கென(Building software) விசேட விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இவ் நிரலாக்க மென்பொருளின் பயிற்சிகளும் விளக்கங்களுக்குமான இணையச்சுட்டிகள் இங்கே தரப்பட்டுள்ளன.

http://golang.org/

http://golang.org/doc/go_faq.html

(பல்கலைக்கழக விடுமுறை காரணமாக நீண்ட நாட்களாக பதிவுகள் இட முடியவில்லை.)