Monday, August 31, 2009

சமூக தளங்களை தாக்கி வரும் Koobface வைரஸ்

Facebook,Twitter,myspace,friendster புதுப்பித்து hi5 கணணியை சமுதாய இணைய தள வலைப்பின்னல்களை பயன்படுத்துபவரா நீங்கள்! அப்படியானால் அண்மைக் காலத்தில் வேகமாகப் பரவி வரும் கூப்பேஸ் (Koobface) வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

இந்த தளங்களின் பேரில் உங்களைத் தூண்டும் தகவல் ஒன்று உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்ட காணொளி ஒன்றை தரவிறக்கம் செய்து பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளும் தூண்டில் செய்தி ஒன்று கிடைக்கும். காணொளிக்கான இணைப்பை சொடுக்கினால் youtube போல தளம் ஒன்று திறக்கப்படும். அங்கே ஒரு காணொளி காட்சி ஒன்று உள்ளதென்றும், அதனைக் காண மென்பொருள் ஒன்றை இறக்கிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு அதற்கான இணைப்பு கொடுக்கப்படும்.

இதற்கு ஆம் என அழுத்தினால், உங்கள் கணனியில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைத் திருடி அனுப்பும் மென்பொருள் ஒன்று இறங்கி அமர்ந்து கொள்ளும். பின் உங்களின் பயனர் கணக்கு, கடவுச்சொல், வங்கி சார்ந்த தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு அனுப்பப்படும்.

ஏற்கனவே இந்த வைரஸ் உங்களுடைய கணனியில் மேலே சொன்ன நடவடிக்கைகளினால் இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் உடனே இந்த koobface வைரஸ் குறித்த அனைத்து வரிகளையும் பதிவகத்திலிருந்து (Registry )நீக்கவும். உங்கள் Anti வைரஸை புதுப்பித்து (Update) கணனியை முழுமையாகச் சோதனை செய்திடவும்.



நன்றி : Lankasri


Sunday, August 30, 2009

ஒரே சொடுக்கில் 12 தளங்களில் கோப்புகளை ஏற்றுவதற்கு


கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்குக.

uploadmirrors

இந்தத் தளத்தின் முகப்பு பக்கத்தை (home page) திறந்து, எந்தக் கோப்பினை (file) ஏற்ற விரும்புகிறோமோ அதை தேர்வு செய்து Upload ஐ சொடுக்க வேண்டும். ஒரே சொடுக்கில் கீழே உள்ள 12 தளங்களிலும் உங்களது கோப்பு ஏற்றப்பட்டு (upload) அவற்றிற்குரிய தரவிறக்கச் சுட்டி (download links) உங்களுக்குக் கிடைத்துவிடும்.

12 தளங்கள்

UploadedTo
DepositFiles
FileFactory
HotFile
MegaUpload
EasyShare
ZShare
FlyUpload
SendSpace
SharedZilla
Badongo
NetLoad
Loadto
MegaShare
RapidShare
ZippyShare

ஆகிய தளங்களில் அந்த கோப்புக்கள் தரவேற்றப்படும்

அந்தச் சுட்டிகளை (links) தனியாகக் குறித்துக்கொண்டு அவற்றை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டால் அவர்கள் எளிதாக தரவிறக்கம் செய்ய இயலும்.

ஒவ்வொரு தளத்திற்கும் தனியாக பயனர் கணக்கு (user account) உருவாக்க வேண்டிய அவசியம் கிடையாது.

Saturday, August 29, 2009

கோப்புகளை மறைப்பது எப்படி?


எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமலேயே உங்கள் கணினியில் உங்களது கோப்புகளை யாரும் அறியாமல் மறைத்து வைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களை எழுத்துபலகையைத்( Notepad ) திறந்து அதில் சேமிக்கவும். அந்த வாக்கியங்களில் இருக்கும் "type your password here" என்ற வார்த்தைகளை நீக்கி விட்டு உங்களுக்குத் தேவையான கடவுச்சொல்லை வழங்குங்கள் (மேற்கோள்கள் இன்றி தரவும்). இதை எந்தக்காரணம் கொண்டும் மறக்க வேண்டாம். அந்த கோப்பை ஏதாவது ஒரு பெயர் கொடுத்து *.bat கோப்பாக சேமிக்கவும். உதாரணமாக hide.bat என கோப்பின் பெயரைக்கொடுத்து சேமிக்கவும்.

----------------------------------------------------------
cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%=="type your password here" goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End
-------------------------------------------------------------

நீங்கள் சேமித்த hide.bat கோப்பை இரண்டு முறை சொடுக்கினால் Locker என்ற ஃபோல்டர் உங்கள் கண்களுக்குத் தென்படும். நீங்கள் மறைக்க விரும்பும் கோப்புகள் எல்லாவற்றையும் அந்த ஃபோல்டருக்குள் சேமியுங்கள்.

இப்போது மீண்டும் hide.bat கோப்பினை இரண்டு முறை சொடுக்குங்கள். 'கோப்பினைப் பூட்டிவிடவா' என செய்தி வரும் MSDOS செய்திப்பெட்டியில் y என தட்டச்சு செய்தால் Locker மறைந்து விடும்.

மறைந்த Locker-ஐ காண விரும்பினால் மீண்டும் hide.bat என்ற கோப்பை இரண்டு முறை சொடுக்குங்கள். கடவுச்சொல்லைத் தரும்படி கேட்கும் செய்திப்பெட்டியில் உங்கள் கடவுச்சொல்லை தாருங்கள். Locker உங்கள் கணனி திரையில் வரும்.

குறிப்பு:
கூடுதல் பாதுகாப்பு தேவை என கருதினால் hide.bat கோப்பினை வேறொரு இடத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அல்லது வேறொரு வட்டில் சேமித்துக்கொண்டு, இந்தக்கோப்பை நீக்கி விடுங்கள்.

நூலகம் இணையமானது நன்கொடையாளர்களிடமிருந்து நிதிப்பங்களிப்புகளை எதிர்பார்க்கின்றது.

நூலகம் இணையமானது(http://www.noolaham.org/ ) நன்கொடையாளர்களிடமிருந்து நிதிப்பங்களிப்புகளை எதிர்பார்க்கின்றது.






நூலகத் திட்டம்: இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.




நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன.

1.நூலக நிறுவன நிர்வாகச் செலவுகள்
2.நூலகத் திட்டம், சுவடி மின்னூலகம் போன்ற எண்ணிமமாக்கற் திட்டங்களுக்கான நிதியுதவிகள்
3.தமிழ் எண்ணிம நூலக வலைத்தளப் (noolaham.org) பராமரிப்பு
எண்ணிமமாக்கம், எண்ணிம நூலகம் போன்ற துறைகள் தொடர்பான 4.ஆய்வுகள், பரவலாக்கல் முயற்சிகளுக்கான நிதியதவி


நிதியுதவி அளிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் அழுத்துங்கள்:

Thursday, August 27, 2009

"விருப்பப்படி" -ஒரு முழுமையான தமிழ் மென்பொருள்

தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக வெளிவந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக்குடும்பங்களும், பத்திற்கும் மேற்பட்ட விசைப்பலகை வகைகளும் உள்ளன. இதனால் ஒரு எழுத்துருவில் தட்டச்சு செய்தோர் மற்ற எழுத்துருவில் அத்தகவலை பார்க்க முடியாமல், தட்டச்சு செய்ய முடியாமல் உள்ளனர். இதே போல் ஒரு விசைப்பலகையில் பழகியோர் அந்த விசைப்பலகை துணை செய்யாத மற்ற எழுத்துருக்களில் தட்டச்சு செய்ய முடியாத நிலை உள்ளது. 'விருப்பப்படி' மென் பொருளானது மேற்கூறிய சிக்கல்களை எளிதாக தீர்த்து வைக்கிறது. அதாவது ஒரு தகவல் எந்த எழுத்துருவில் உருவாக்கப்பட்டிருந்தாலும், எந்த விசைப்பலகை முறையை பயன்படுத்தி உருவாக்கப் பட்டிருந்தாலும், ஒருவர் அதே எழுத்துருவில் அவர் அறிந்த விசைப்பலகை முறையை கொண்டு 'தட்டச்சு' செய்ய முடியும். அதாவது எந்த விசைப் பலகை முறையை கொண்டும் எந்த எழுத்துருவிலும் தட்டச்சு செய்யவோ அல்லது ஏற்கனவே தட்டச்சு செய்ததை 'தட்டச்சு' செய்யவோ முடியும். இம்மென்பொருளை பயன்படுத்தி பெரும்பாலான மென்பொருள்களில்(MS Office,Corel draw,Pagemaker..) தட்டச்சு செய்ய முடியும். இந்த பயன்பாடு விருப்பபடி மென்பொருளின் முதன்மையான வசதியாக கூறப்பட்டாலும் மேலும் பல மேம்பட்ட வசதிகளை கொண்டுள்ளது.

கீழ்காண்பது விருப்பப்படி மென் பொருளின் விசைப் பலகை மற்றும் எழுத்துருக் குடும்பம் தேர்வு செய்யும் முறை ..





குறிப்பாக" தன்னியக்க திருத்தம் "( Autocorrect ) எனும் வசதி எல்லா மென்பொருள்களிலும் இயங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இவை தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க உதவுகிறது. அடுத்ததாக "Font Sampler" எனப்படும் எழுத்துருக்களை குழுக்களாக காட்டும் வசதி உள்ளது. இவ்வசதியினால் ஏராளமாக எழுத்துருக்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த முடியாமல் இருக்கும் பல பயனாளர்கள் பெரிதும் பயன் பெறுவர். சிறப்பம்சமாக தமிழ் - ஆங்கிலம் அகராதியை கொண்டுள்ளது. இதில் ஏறத்தாழ 60000 ஆங்கில வார்த்தைகளுக்கு 1,50,000 தமிழ் பொருள்களை கொண்டுள்ளது. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலிருந்தும் எந்த எழுத்துருவிற்கும் ஒரு தகவலை மாற்றிக் கொள்ள முடியும். ஒருங்குறி மூலமாகவும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் சிறப்பம்சங்களாக முகவரி புத்தகம் மற்றும் மின்னஞ்சல் சேவையையும் விருப்பப்படி கொண்டுள்ளது.

தமிழ் மொழியைப் பொறுத்தவரை கணினியில் அதன் அடுத்தக் கட்ட இலக்குகளை அடைவதில் தடையாக இருந்தவை எழுத்துருச்சிக்கல்கள், விசைப்பலகையில் உள்ள குழப்பங்கள் ஆகியவை ஆகும். இவற்றை முழுமையாக தீர்த்து வைக்கும் விதமாக "விருப்பப்படி" மென் பொருள் வெளிவந்துள்ளது. மேலும் சொல் திருத்தி போன்ற கருவிகளுக்கு அடிப்படையான " தன்னியக்க திருத்தம் "(Auto Correct) வசதியுடன் வெளிவந்துள்ளது சிறப்பான ஒன்றாகும். உண்மையில், 'எந்த எழுத்துருவிலும், எந்த விசைப்பலகையிலும்' என்ற நிலை ஒரு கனவு போலத்தான் இருந்து வந்திருக்கிறது இதுவரை. ஆனால் விருப்பப்படி இக்கனவை நிறைவேற்றி உள்ளது.

மேலும் இதுவரையில் வெளிவந்திருக்கும் ஏராளமான எழுத்துருக்களில் எதில் தட்டச்சு செய்யப்பட்ட தகவல்களையும் எளிதாக நாம் விரும்பிய எழுத்துருவிலோ அல்லது ஒருங்குறியிலோ மாற்றம் செய்து கொள்ள முடிவது மிகவும் அரிய ஒரு வசதியாகும். தற்போது அதிக அளவில் பயன்படுத்தபடுகின்ற மொழிமாற்றும் ( transliteration )விசைமுறையை பயன்படுத்தியும் கூட எல்லாவகை எழுத்துருக்களிலும், ஒருங்குறியிலும் தட்டச்சு செய்ய முடியும் என்றவாறு உருவாக்கியுள்ளது மிகவும் சிறப்பானதொரு முன்னேற்றமாகும். இம்மென் பொருளின் பயன்பாட்டு எல்லைகள் உண்மையில் கணக்கிட முடியாததாகும். இதுவரை வந்துள்ள பெரும்பாலான மென்பொருள் கருவிகளின் பயன்பாடுகள் அனைத்தையும் "விருப்பப்படி" மென்பொருள் ஒன்றிலேயே கொண்டுள்ளது. "விருப்பப்படி" மென்பொருளை ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டுமெனில் ஒரு முழுமையான தமிழ் மென்பொருள் என்று கூறலாம்.

மேலதிக தகவல்களுக்கு: http://auw.sarma.co.in/Info/flasha/index.htm



Friday, August 21, 2009

படங்களை உருவாக்க, படங்கள் மற்றும் புகைப்படங்களில் தேவையான மாற்றங்களை செய்வதற்கான இந்த GIMP (Graphical Image Manipulation Program) மென்பொருள்

படங்களை உருவாக்க, படங்கள் மற்றும் புகைப்படங்களில் தேவையான மாற்றங்களை செய்வதற்கான இந்த GIMP (Graphical Image Manipulation Program) மென்பொருள், Unix மற்றும் Linux இயங்குதளங்குகளில் உபயோகிப்பதற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. விண்டோஸ் இயங்குதளங்களில் 'Paint' தவிர்த்து, பெரும்பாலும் Adobe photoshop, Corel Draw, Irfanview போன்ற மென்பொருட்கள் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இதில் Irfanview இலவச மென்பொருளாக கிடைக்கிறது. கூடுதல் வசதிகள் நிறைந்த மேலும் பல மென்பொருட்களும் சந்தையில் விலைக்கு கிடைக்கின்றன.

தற்போது விண்டோஸில் இயங்குவதற்கான GIMP2 மென்பொருள் பதிவிறக்கத்திற்கு கிடைக்கிறது. கிட்டத்தட்ட Adobe photoshop மென்பொருளில் இருக்கும் அத்தனை வசதிகளும் இதிலும் இருக்கின்றனவாம். இந்த மென்பொருளை உபயோகிப்பதற்கு முன்னர் GTK+ (GIMP Tool Kit) என்ற மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும். முதலில் GTK+ நிறுவிய பின்னர், ஜிம்ப்-ஐ நிறுவ வேண்டும். நிறுவும் போது, "Select Components" - தலைப்பில் "Full Installation" என்பதை தேர்வு செய்திருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மென்பொருளை நிறுவும் போது default ஆக உள்ளவற்றில் எதையும் மாற்றத் தேவையில்லை. மிகவும் உபயோகமான இந்த மென்பொருட்கள் இலவசம்தான் என்பது பயனாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

நான் பதிவிறக்கி உபயோகம் செய்து பார்த்தேன். நன்றாகத்தான் இருக்கிறது. மென்பொருளில் உள்ள வசதிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். விரும்புபவர்கள் பதிவிறக்கி உபயோகம் செய்து பாருங்கள்.

பதிவிறக்குவதற்கான சுட்டி:
http://gimp-win.sourceforge.net/stable.html

நன்றி :தமிழ்மன்றம்

Wednesday, August 19, 2009

உலகின் முதல் 64 GB Memory Card :Toshiba நிறுவனம் வெளியிட்டது


ஜப்பானை சேர்ந்த Toshiba நிறுவனம் உலகின் முதல் 64 GB Memory Card வெளியிட்டுள்ளது. இதன் விலை 630 Dollars என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதில் 35 MB per Second வேகத்தில் தகவல்களை எழுதவும் , 60 MB per Second வேகத்தில் தகவல்களை படிக்கவும் இயலும் .

இது சந்தை விற்பனைக்கு வரும் நவம்பர் மாதம் வரலாம் என எதிபார்க்கப்படுகிறது.

மேலும் சில புதிய 32 GB , 16 GB வகை கார்டுகளையும் வெளியிடுகிறது. இதன் சிறப்பு என்னவெனில் , இதில் 35 MB per Second வேகத்தில் தகவல்களை எழுதவும் , 60 MB per Second வேகத்தில் தகவல்களை படிக்கவும் இயலும் என்பது தான் .
நன்றி : தமிழ்.இன்

வீடியோ கோப்பு வடிவை மாற்ற 5 இலவச மென்பொருட்கள்



ஒவ்வொரு இணைஞரிடமும் மேசைக்கணினி (desktop), மடிக்கணினி (laptop), செல்பேசி, கையடக்க இசைக்கருவி(hand held), எம்பி3 இசைப்பான் என நவீனத்துவத்தைக் காண நேரிடுகிறது. காதில் மாட்டிக்கொண்டி திரிகிறார்கள். இசைப்பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.


ஒவ்வொரு கருவிகளுக்கும் தனிப்பட்ட கோப்பு வடிவங்கள் (file formats). ஒன்றை ஒன்று எதிர்க்கின்ற (incompatible) வகையில் அமைந்திருக்கும் கோப்பு வடிவங்கள்.

இந்தக் கருவியில் இயங்கக்கூடிய கோப்பானது வேறு கருவியில் ஒத்திசையாமல் போகிறது. கணினியில் காண இயலும் காணொளியை, கையடக்கக் கருவியில் காண ஏதேதோ தகிடுதத்தம் செய்ய வேண்டி இருக்கிறது.

ஒரு கருவியில் பார்த்த காணொளியை அடுத்த கருவியில் காண வைப்பதற்கு ஏகப்பட்ட cracking தளங்களையெல்லாம் நாட வேண்டியிருக்கும். அத்துடன் வைர (virus) போன்ற வியாதிகளையும் இலவசமாக வாங்க வேண்டி இருக்கும்.

ஏன் இந்தக் கொலை வெறி?

ஏராளமான காணொளிகளுக்கான கோப்பு வடிவங்களால் (Video file types) வந்த பிரச்சினையே இவை. ஒன்றையொன்று அனுசரித்துப்போகாத வடிவங்கள்.


இதில் இருந்து சமாளித்து எல்லாக் கருவிகளிலும் நமது காணொளிகளை இயக்கி மகிழ என்ன வழி?

எந்த கேடுவிளைவிக்கும் cracking தளத்திற்கும் செல்லாதீர்கள். கீழ்க்கண்ட தளங்களில் கிடைக்கும் அருமையான இலவச மென்பொருட்களைப் பயன்படுத்துங்கள். பயன்படுத்துவதற்கு எளிமையானதாக இருக்கும் அதே வேளையில் அற்புதமான செயல்திறமை கொண்ட மென்பொருட்கள் இவை.

1) Quick Media Converter [ http://www.cocoonsoftware.com/ ]

மிகத் திறமையான இலவச மென்பொருள். இதன் மூலம் FLV, AVI, DIVX, XVID, MPEG 1-4, iPod/iPhone, Real Media, and M4A ஆகிய கோப்புகளைக் கையாலும் திறன் கொண்டது.


2) Super Video Converter [ http://www.erightsoft.net/S6Kg1.html ]

3GP and 3G2 for mobile phones, ASF, DIVX AVI, MOV, MPEG, flash video, real media, PSP video கோப்புகளை மாற்றித்தரும் இயல்புடையது.

3) Any Video Converter [ http://www.any-video-converter.com/products/for_video_free/ ]

மிக எளிமையான முகப்புடன் வருகிறது. யாரும் இயக்கலாம் - எந்தச் சிக்கலும் இல்லாதது.

4) MediaCoder [ http://mediacoder.sourceforge.net/]

இதன் நிரலானது இலவசமாகக் கொடுக்கப்படும் Open Source வகையைச் சேர்ந்தது. ஏராளமான கோப்பு வகைகளுடன் அனுசரனை உள்ளது. நாளை ஏதேனும் புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான update ஐயும் இவர்கள் தருவார்கள் என்பது சிறப்பம்சம்

வேறெந்த மற்ற மாற்றிகளிடம் காணாத சிறப்பம்சங்களான Video Compression, வீடியோவில் இருந்து ஒலியை மட்டும் பிரித்தெடுத்தல், கெட்டுப்போன கோப்புகளை சரிசெய்யும் வசதி - இவையெல்லாம் உண்டு.


5) Format Factory [ http://www.formatoz.com/]

PSP, iPhone இன்னும் பல வீடியோ வகைகளுடன் இயங்க வல்லது.
நன்றி : இணையம்

Tuesday, August 18, 2009

கணனியின் வேகத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளில் இதுவும் ஒன்று.



கணணியை இயக்க தொடங்கும்போது(Log on) உங்கள் கணனியானது தொடங்குநிலைக்கு(Start up) செல்ல கூடிய நேரம் எடுக்கின்றதா? அதற்கான காரணம் நீங்கள் உங்கள் தொடங்குநிலை பட்டியலில்(Start up menu) கூடிய தகவல்களை வைத்திருப்பதுதான். அவற்றிக்கான தீர்வு அத்தகைய தகவல்களை உங்கள் தொடங்குநிலையிலிருந்து அகற்றுவது தான் சரியான வழி.

அதற்கு நீங்கள் செய்யவேண்டியது Run கட்டளை என்ற (Run command window) msconfig என தட்டச்சு செய்யுங்கள்.














OK என்பதினை அழுத்துங்கள்.




பின்னர் வரும் சாளரத்தில்(Window) Startup என்ற Tab தெரிவுசெய்யுங்கள்
















அதில் தொடங்குநிலையில்(start up menu) என்ன தகவல்கள் இருக்க வேண்டும் என்பதினை தெரிவுசெய்து விட்டு தேவையற்றவை என நீங்கள் கருதும் தகவல்களை நீக்கிவிடுங்கள்.


இப்பொழுது உங்கள் கணனியை மீள ஆரம்பிக்கவும்(Restart).


இப்பொழுது உங்கள் கணனியில் வேகத்தின் மாற்றத்தை உணருவீங்கள்.





Monday, August 17, 2009

கணனியில் ஆவணங்கள்(Documents), படங்களை(Pictures) ,கோப்புறைகளை(Folders) எவ்வாறு விரைவாக திறப்பது?

ஒரு ஆவணத்தை அதன் நிரலி (Program) மூலம் திறப்பதற்கான நேரத்தைக் காட்டிலும் Internet Explorer மூலம் குறைவான நேரத்தில் திறந்துவிடலாம். குறிப்பாக படங்கள் ஆவணங்களை இந்த வகையில் திறக்கலாம்.

Internet Explorer அனைத்து வகை ஆவணங்களையும் திறக்கும். Internet Explorer ஆனது கணனியில் உடனடியாக திறபடக்கூடியதாக இருக்கும். ஆனால் படங்களைத் திறக்கும் Picture Manager, Adope photoshop போன்ற Applications programs திறக்கப்பட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
தற்கு என்ன செய்ய வேண்டும்? அந்த ஆவணத்தை அப்படியே Mouse துணை கொண்டு இழுத்து வந்து Internet explorer window இல் போட்டுவிட வேண்டியதுதான். பட ஆவணங்கள் மட்டுமின்றி எழுத்து ஆவணங்களையும் இது திறக்கும். Outlook Emails, ஏன் MS Office ஆவணங்களையும் இது திறக்கும். ஆனால் இதற்கு மட்டும் அந்த கணனியில் MS Office பதிக்கப்பட்டிருக்க வேண்டும். இது போதாதா? சரி, அப்படியானால் ஒரு கோப்புறை(Folder) முழுவதையும் அப்படியே இழுத்து வந்து Internet Explorer சாளரத்தில்(Window) போட்டால் என்னவாகும்? அனைத்து ஆவணங்களும் காட்டப்படும். பின் திறக்கப்படும்.
(கணனியில் தமிழின் பாவனையை அதிகப்படுத்தும் முயற்சிக்கு உதவிடும் வகையில் இங்கு சில இடங்களில் கணனியின் தமிழ்க்கலைச்சொற்களை பயன்படுத்தியிருக்கிறேன்.)



Sunday, August 16, 2009

கைத்தொலைபேசிகளின் இரகசிய குறியீட்டு இலக்கங்கள்


கைத்தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு குறியீட்டு எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் கைத்தொலைபேசியின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில குறியீட்டு எண்களை வகுத்து தந்துள்ளன. இது கைத்தொலைபேசி பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.

LG வகை கைத்தொலைபேசியின் குறியீட்டு எண்கள்

கைத்தொலைபேசியின் Test Mode க்கு செல்ல –– 2945#*#
எல்ஜி கைத்தொலைபேசியின் ரகசிய Menu ஐக் கொண்டு வர – 2945*#01*#
கைத்தொலைபேசியில் உள்ள மென்பொருள் தொகுப்பின் பதிப்பு எண் அறிய – *8375#
கைத்தொலைபேசியின் IMEI எண்ணை அறிய –*#06# இது எந்த கைத்தொலைபேசிக்கும் பொருந்தும்.
கைத்தொலைபேசியின் (LG 7010 மற்றும் 7020) Sim Card lock சரி பார்க்க-2945#*70001#
LG-B 1200 கைத்தொலைபேசியின் Sim Lock சரி செய்திட 1945#*5101#
LG-B 5200 மற்றும் 510W கைத்தொலைபேசிகளின் Sim Lock Menu சரி செய்திட 2945#*5101#
LG 500 மற்றும் 600 கைத்தொலைபேசிகளின் Sim Lock சரி செய்திட 2947#*

NOKIA தொலைபேசிகளுக்கான இரகசிய குறியீட்டு இலக்கங்கள்

இவற்றின் மூலம் உங்கள் NOKIA கைத்தொலைபேசிகள் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிழைகள் இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிழைகளின் தன்மையை அறிய உதவும்.

*#7780# –Restore Factory setting க்கு
*#3283# -தொலைபேசி தயாரான தேதியை அறிந்து கொள்ள
*#746025625# – Sim கடிகாரத்தை நிறுத்த
*#67705646# -Operator Logo ஐ நிறுத்த
*#73# – Reset Timer
*#0000# –மென்பொருள் பதிப்பு குறித்து அறிய
*#92702689# – தொலைபேசியின் உத்தரவாதம் குறித்த தகவல்களுக்கு (தொடர் இலக்கம் , எங்கு தயாரானது, வாங்கப்பட்ட தேதி, திருத்தம் செய்த திகதி)


SAMSUNG கைத்தொலைபேசிகளின் குறியீட்டு இலக்கங்கள்


SAMSUNG தந்த பழைய கைத்தொலைபேசிகளுக்கு இது பொருந்தாமல் இருக்கலாம்.

*#9999# –தொலைபேசியின் மென்பொருள் பதிப்பை பற்றி அறிய
#*3849# – Reboot செய்வதற்கு
#*2558# – Time ON/OFF
#*7337# – அண்மைக் காலத்தில் வெளியான கைத்தொலைபேசிகளை Unlock செய்திட
#*4760# – GSM. வசதிகளை ON/OFF செய்திட
*#9998*246# – Memory & Battery
*#7465625# – மொபைலின் Lock எந்த நிலையில் உள்ளது என்று அறிய
*#0001# – தொடர் இலக்கத்தை அறிய
*2767*637# –Unlock செய்திட
*#8999*636# –Storage திறனைக் காட்ட
*2562# – Reboot செய்திட

Saturday, August 15, 2009

இந்தியாவின் முப்பரிமாண வரைபடம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(ISRO) இணையத்தளத்தில்


Google Earth இணையத்தளத்தைப் போல இந்தியாவின் எந்த இடத்தையும் பார்க்க உதவும் புதிய இணையதளத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) தொடங்கி உள்ளது. இதில் வீதியில் நிற்கும் ஒரு காரைக்கூட தெட்டத்தெளிவாக பார்க்க முடியும்.

Google Earth இணையதளம் உலக அளவில் பிரபலமானது. இதில் கிராமத்திலிருந்து நகரம் வரைக்கும் உலகின் எந்த இடத்தையும் தெட்டத்தெளிவாக பார்க்க முடியும். இவை எல்லாம் செயற்கைக்கோள் மூலம் படம் பிடிக்கப்பட்டவை. ஒரு காரின் இலக்க தகட்டை கூட இதில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எதிர்ப்புகள் எழுந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்ணில் இருந்து படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல் பார்க்க முடியாத அளவுக்கு ஆக்கப்பட்டது.


கூகுள் எர்த்துக்கு போட்டியாக இப்போது இந்தியாவின்
ISRO(Indian Space Research Organization) புதிய இணையதளத்தை தொடங்கி உள்ளது.

http://www.bhuvan.nrsc.gov.in/about.html
http://www.isro.org/

என்ற அந்த இணையதளத்தில் சென்றால், இந்தியாவின் எந்த நிலப்பரப்பையும் தெட்டத்தெளிவாக பார்க்க முடியும். அதன் துல்லிய அளவு, 10 மீட்டர் முதல் 55 மீட்டர் உயரம் வரை. இதன் மூலம் ரோட்டில் உள்ள ஒரு காரை கூட இந்த இணையதளம் மூலம் பார்க்க முடியும்.


ஆனால், தீவிரவாதிகள், தேச துரோகிகளுக்கு உதவிடும் வகையில் இந்த இணையதளம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக, பாதுகாப்பு பகுதிகள், ராணுவ சம்பந்தப்பட்ட இடங்கள், முக்கிய இடங்கள் ஆகியவை குறிப்பிட்ட அளவுக்கு மேல் துல்லியமாக பார்க்க முடியாது.

இதில் உள்ள காட்சிகள் ஒரு ஆண்டுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்திய செயற்கைக்கோள்கள் CARTOSAT-1 ,CARTOSAT - 2 ஆகியவை மூலம் முப்பரிமாணத்தில் படம் பிடிக்கப்பட்டவை.
நன்றி: பிரித்தானியா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்(BBC)

Friday, August 14, 2009

செல்பேசிகளில் தமிழ்த்தளங்களை வாசித்தல்.

அனேகமான செல்லிடப்பேசிகளில் தமிழ் எழுத்துருக்களை வாசிப்பதற்குப் பிரச்சினை இருந்து வருகிறது.நான் கூடப் பலநாட்களாக முயன்று அதன்பின்னதாக அறிந்து கொண்ட சில வழிமுறைகளைப்பற்றி உங்களுக்கும் அறியத்தரலாம் என்று எண்ணுகின்றேன்.

இதற்காக இரண்டுவகையான உலாவிகளைச் செல்லிடப்பேசிகளிலே பயன்படுத்தமுடியும்.

1.Skyfire-இதனைச் செல்லிடப்பேசியின் உலாவியிலே
www.skyfire.com என்ற தளத்திற்குச் சென்று அதனைப்பதிவிறக்கி நிறுவினால், நேரடியாகவே தமிழ்த்தளங்களைத் தங்குதடையின்றிப் பார்வையிட முடியும்.

2.Operamini-இதனைச் செல்லிடப்பேசியின் உலாவியிலே http://www.operamini.com/ என்ற தளத்திற்குச் சென்று அதனைப்பதிவிறக்கி நிறுவினால் தமிழ்த்தளங்களை நேரடியாகப் பார்வையிடமுடியாது.இதற்காக பின்வரும் வழிமுறைமூலம் தமிழ் எழுத்துருக்களைப் பார்க்கும் வசதியை உயிர்ப்பிக்க முடியும்.

வழிமுறை:
1.செல்லிடப்பேசியில் நிறுவப்பட்ட ஒபேராமினியை திறக்கவும்.
2.முகவரிச்சட்டத்தில்(Address bar) opera:config எனப் பொறிக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4.ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இப்போது உங்கள் உலாவி தமிழ் மொழிக்காகத் திறக்கப்பட்டுவிட்டது

நன்றி: FaceBook நண்பர்

Wednesday, August 12, 2009

தமிழ் இடைமுகத்துடன் (Interface) hotmail,livemail

ஹொட்மெயில் ஆரம்பத்தில் ஒரு இந்தியரால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தவேளையில் அதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கிக்கொண்டது. பின்னர் Hotmail இணையப்பயனர்களிடையே மிகப்பெரிய ஆதரவுபெற்ற இணைய மின்னஞ்சல்சேவையாகத் திகழ்ந்தது. பின்னர் Gmail வந்தவுடன் நிலைமைகள் மாறத்தொடங்கியது.

பல பேர் வேகமாக ஜிமெயிலுக்கு மாறத் தொடங்கினர். ஜிமெயிலின் வெற்றிக்கு காரணம் 1GB சேமிப்பிடம் வழங்குவோம் என்று வாக்களித்தமையுடன் எளிமையான இடைமுகத்தையும் (Interface) வழங்கியமையே ஆகும்.

இதன்பின்னரும் பல மின்னஞ்சல் சேவைகள் பாவனைக்கு வந்தாலும் ஜி-மெயில் போல எந்த ஒரு மின்னஞ்சல் சேவையும் வெற்றி பெறவில்லை. ஏற்கனவே சந்தையில் இருந்த Yahoo,Hotmail போன்றோரும் சேமிப்பிடத்தை அதிகரித்து தம்மை விட்டு ஓடும் பயனர்களைக் காத்துக்கொண்டனர்.

முதல் கட்டமாக இவ்வாறு வசதிகளை வழங்கி மக்களைக் கவர்ந்தவர்கள் பின்னர் மெல்ல மெல்ல பல்வேறு மொழிகளில் இடைமுகத்தை வழங்கி மக்களைக் கவர முற்பட்டனர். இந்த இலவச மின்னஞ்சல் சேவை வழங்குனர்களிடையே போட்டி அதிகரிக்க அதிகரிக்க பாவனையாளர்கள் அதிகளவு பயனை இலவசமாகப் பெற்றனர்.

நான் அறிய முதலில் தமிழ் இடைமுகத்தை வழங்கியது வெப்துணியா மெயில். அதன் பின்னர் பிற மின்னஞ்சல்கள் வழங்கத்தொடங்கின.

இந்த சேவைகள் தமிழில் வழங்கப்பட்டாலும் இவற்றினால் Gmail போன்ற சேவைகளுடன் போட்டிபோட முடியாது. ஏன் எனில் ஜிமெயிலில் வழங்கப்படும் சேவைகளில் பாதிகூட இங்கு இருக்காது. இந்த தமிழ் இடைமுக சேவைகளில் அடிப்படை வசதிகளை மட்டுமே வழங்கியிருப்பர்.

இந்தவேளையில்தான் முதன்முதலாக ஹிந்தி இடைமுகத்தை கூகிள் ஜிமெயிலுக்கு வழங்கியது. இதைப் பார்த்து உலகெங்கும் வாழும் தமிழர்களும் ஆர்ப்பரித்தனர் காரணம் அடுத்ததாக வரிசையில் தமிழ் வரக்கூடும் எனும் காரணமே.
ஆயினும் ஆண்டுகள் மேல் ஆண்டுகள் ஓடியும் ஜிமெயில் தமிழ் இடைமுகத்தை வழங்கவில்லை. இதனால் தமிழ்கணனி ஆர்வலர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

சில வருடங்களின் பின்னர் மெல்ல மெல்ல கூகிள் தன் தயாரிப்புகளை ஹிந்தி தவர்ந்த பல இந்திய மொழிகளில் வெளியிடத் தொடங்கியது. இக்காலகட்டத்தில்தான் orkut, Google Docs போன்ற சேவைகள் தமிழில் அறிமுகம் ஆகியது.

அப்போதுகூட பல தமிழ் ஆர்வரலர்களும் ஜிமெயில் தமிழில் எடுப்பதை விட்டுவிட்டு மற்றதயாரிப்புகளை தமிழுக்கு மாற்றுவது முட்டாள்தனமான வேலை என்று பொரிந்து தள்ளினர். திடீர் என ஒரு நாள் ஜிமெயில் தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டது.

அன்றய தினத்தில் பலரும் கூகிளைப் பாராட்டி மகிழ்ந்தமையும், கணித்தமிழ் இணைய உலகில் பலம் பெற்றுதிகழ்வதற்கு இது ஒரு உதாரணம் எனவும் மக்கள் ஆர்ப்பரித்தனர்.

இதனைத் தொடர்ந்து யாகூ மெயில் தமிழில்வரும் என்று எதிர் பார்த்தாலும் வழமை போல யாகூ தமிழர்களை ஏமாற்றிவிட்டது. ஆனால் Microsoft தன்னுடைய Hotmail, Livemail சேவைகளை தமிழில் வழங்கி தமிழர்கள் பாராட்டைப் பெற்றுள்ளது.

தமிழ் இடைமுகத்தை Livemail இல் அல்லது Hotmail இல் பெற்றுக்கொள்ள முதலில் அவர்களின் மின்னஞ்சல் சேவைக்குள் புகுபதிகை செய்யவும்.

பின்னர் இங்குள்ள படிமத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Options என்பதை சொடுக்கவும்.













பின்னர் English என்பதைசொடுக்கவும்.
பின்னர் காட்டப்படும் மொழிகளில் “தமிழ்” என்பதை தெரிவு செய்யவும்.
இதன் பின்னர் நீங்கள் அருமையான தமிழ் இடைமுகத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இன்றைய இலத்திரணியல் உலகில் தமிழ்மொழி பல்வேறு துறைகளிலும் கொடிகட்டி பறக்கின்றன. ஆயினும் மேலும் தமிழ் வியாபிக்க வேண்டிய துறைகள்,இடங்கள் இன்னும் இருக்கின்றன.

இந்த தமிழ் இடைமுகத்துடன் கூடிய வலைமனைகளை வாசித்து அறிய முடியவில்லை என்று குறை கூறம் பல நண்பர்கள் தமக்கு ஆங்கிலம் தெரியும் என்பதையும் பலர் ஆங்கிலம் தெரியாமல் இருப்பதையும் மறந்து விடுகின்றனர். தமிழ் மட்டுமே தெரிந்த இணையப்பயனர்கள் உருவாகும்போது இவ்வாறான தமிழ் இடைமுகங்கள் பெரும் பங்காற்றும்.

தமிழரான நாங்களே இவ்வாறான முயற்சிகளில் பங்களிக்காது விட்டால் வேறு யார் இந்த தமிழ் இடைமுகங்களைப்பாவிப்பர்???? நான் ஏற்கனவே Gmail,Hotmail தளங்களில் தமிழ் இடைமுகங்களையே பாவிக்கின்றேன். சில நாட்கள் புரியாமல் இருந்தாலும் போகப்போக பழக்கமாகி விடுவதுடன் நன்கு பரீச்சயமாகியும் விடுகின்றது.

தமிழைத் தமிழாய் இணையத்தில் பயன்படுத்துவோம்!!!! .

Tuesday, August 11, 2009

மால்வேர் புரோகிராம்கள்(Malware programs) என்ன எங்கே எப்போ?


அண்மையில் ஓர் இணையத்தளம் ஒன்றைப் பார்த்தேன். நம் கணனியையும் நம்மையும் பயமுறுத்தும் பாதுகாப்பு குறித்து நாம் Update செய்திடும் வகையில் அந்த தளம் செயல்படுவதனைக் கண்டு கொண்டேன். இது இணையச் செயல்பாட்டினை கண்காணிக்கும் ஒரு தளமாக இயங்குகிறது. இதில் கணனியை அவ்வப்போது அச்சுறுத்தும் மால்வேர்(Malwares) புரோகிராம்களைப் பற்றி விலாவாரியாகக் கூறுகிறது.

அந்த தளத்தின் முகவரி:http://mtc.sri.com/

ஒவ்வொரு மோசமான மால்வேர்(Malware) புரோகிராமும் எப்போது வந்தது; எந்த அளவில் மோசமானது; அதனை எதிர்க்கும் பணியினை யார் யார் மேற்கொண்டுள்ளார்கள்; அதனைத் தவிர்க்க என்ன செய்திடலாம் என்பது போன்ற தகவல்களை சரியான புள்ளி விபரங்களுடன் தருகிறது. எனவே ஏதேனும் ஒரு மால்வேர்(Malware) குறித்து நீங்கள் சந்தேகப்பட்டு அது குறித்த தகவல்கள் வேண்டும் என்றால் உடனே இந்த தளத்தினை அணுகலாம். அந்த மால்வேர் புரோகிராமின் பெயரைக் குறிப்பிட்டு அது எங்கிருந்து வருகிறது என்ற தெளிவான தகவலைத் தருகிறது.

அத்துடன் குறிப்பிட்ட மால்வேர் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டருக்குள் நெருங்கவிடாமல் இருக்க அது வரும் ஐ.பி. முகவரியினைத்(IP address) தந்து அந்த முகவரியிலிருந்து எது வந்தாலும் அனுமதிக்காமல் செட் செய்திடும்படி கூறுகிறது. phishing மற்றும் வேறு வகைகளில் உங்கள் கணனிக்குள் வரும் புரோகிராம்களை அனுப்புவோரின் பொதுவான Domain பெயரையும் குறிப்பிடுகிறது.


இப்போது உலா வந்து கொண்டிருக்கும் மால்வேர் புரோகிராம்களைக் குறிப்பிட்டி இவற்றிற்கு எதிரான Antivirus மென்பொருட்களை யார் தயாரித்து வழங்குகிறார்கள் என்ற தகவலும் இங்கு கிடைக்கிறது. இதனை அறிந்து கொண்டு அத்தகைய தளங்களுக்குச் செல்லாமல் இருக்கலாம் இல்லையா!எனவே தங்கள் கணணி மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த தளம் அரிய தகவல்களைத் தரும் தளமாக உள்ளது.தடுக்கிறோமோ இல்லையோ கெடுதல் விளைவிப்பவர்கள் குறித்து அறிந்து கொள்வது நல்லதுதானே.

நன்றி : இணையம்

இணையத்தில் தமிழ் மின்னூல்கள்

இணையத்தில் இப்போது கணனியில் வாசிப்பதற்கான மின்புத்தகங்கள்(EBooks) தாராளமாகவே கிடைக்கின்றன. கடைத்தெரு, நூல் நிலையம் என்று நடந்து சென்று நல்ல புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று அலைந்து திரிந்து களைத்துப் போய்விடாமல் வீட்டில் இருந்தபடியே கணனி மவுஸ் பட்டனை அழுத்தி விரும்பிய புத்தகங்களை தெரிவு செய்து படிக்கும் முறை நன்றாகத்தான் இருக்கிறது.
அதைத்தவிர இணையத் தளங்களிலிருந்து இலவசமாகவே எத்தனையோ தமிழ், ஆங்கில மின் புத்தகங்களை சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடிகிறது..
தமிழில் அதிகளவு மின்புத்தகங்கள் கிடைக்கின்றன. ஈழத் தமிழ் மண்ணின் ஆக்கங்களாக திகழும் அரும்பெரும் நூல்களின் களஞ்சியமாக
www.noolaham.net என்ற மின்நூலகம் திகழ்கின்றது.
அதேபோல் தமிழக இணையத்தள இலவச நூலகங்களாக www.chennailibrary.com,
www.projectmadurai.org/pmworks.html,
www.tamilvu.org/library/libcontnt.htm போன்ற பல தளங்கள் காணப்படுகின்றன.
இந்த வகையான இணையத்தள நூலகங்களில் இலவசமாகக் கிடைக்கும் தமிழ் மின்புத்தகங்கள் பெரும்பாலும் PDF File முறையிலும் HTML வகையானகோப்புக்களாகவுமே காணப்படுகின்றன.


அதேபோல் ஆங்கிலத்திலும்
http://manybooks.net,
www.mobipocket.com,
www.free-ebooks.net,
www.ereader.com/ereader/eBooks/freebooks.htm?
போன்ற பல தளங்களிலிருந்து பல்வகையான புத்தகங்களை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.


அதேவேளை ஆங்கிலமொழி மின் நூல்கள், பலவகையான E-Reader என்று கூறப்படும் இன்னொரு மென்பொருள் கொண்டு மின்நூல்களை வாசிக்கும் முறையை கொண்டிருக்கின்றன. இந்த வாசிப்பு மென்பொருளானது அழகான வடிவத்தை நிறங்களை பின்னணி படங்களை உருவாக்கும் வசதி கொண்டிருப்பதால் அதன் மூலம் நாம் வாசிக்கும் மின் புத்தகத்தின் அழகு மேம்படுகிறது.தமிழ் மின்னூல்களுக்கு இந்தமுறை இருப்பதாக தெரியவில்லை. (யாரவது இருந்தால் சொல்லுங்கோ) எதிர்காலத்தில் நிறைய உருவாகலாம்.
இப்போது ஆங்கில E-Reader கள் சிலவற்றின் மூலம், தமிழ் மின்நூல்களை நாம் எப்படி அழகுறச் செய்வது என்று பார்ப்போம். இப்படியான நூல்களை நீங்கள் செய்து மற்றவரும் பயன்படும்படி செய்து கொள்ளலாம்.


eReader மென்பொருட்கள் iPhone, iPod touch, BlackBerry, Palm OS, PocketPC, Windows Mobile, Smartphone Symbian போன்றவற்றிலும் பாவிக்கும் வகையில் இருப்பதால் இப்படி உருவாக்கும் தமிழ் மின்புத்தகங்களை இந்த மின் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்போரும் அவற்றில் பதிவு செய்துவைத்து வாசிக்க முடியும். (பரீட்சித்து பார்க்கவில்லை)
ஆங்கில வாசிப்பு மென்பொருட்கள் பலவகை உண்டு. இவை இலவசமாகவே கிடைக்கின்றன. உதாரணத்திற்கு eReader, microsoft Lit, Plucker, MobiPokcet, Ebook Maestro, FBReader எனப் பலவகை காணப்படுகின்றன.

முதலில் eReader ல் எப்படி தமிழ் மின்புத்தகம் உருவாக்குவது என்று பார்க்கலாம்.
eReader
இதற்கு தயார் படுத்த வேண்டியது
1) கதை அல்லது ஏதாவது தமிழ் ஆக்கம்

2) eReader Pro for Windows
3) Open office Text document
4) பாமினி எழுத்துரு அல்லது அந்த வகையை சார்ந்த இன்னொரு எழுத்துரு.
5) அவசியமேற்படில் பொங்குதமிழ் உருமாற்றி (www.Suratha.com)

1) முதலில் http://www.ereader.com/ என்ற இணையத்தளத்திலிருந்து வாசிப்புக்கான மென்பொருளை (eReader Pro for Windows) தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.இதை கணனியில் நிறுவி வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: இதே இணையத்தளத்தில் அல்லது manybooks.net இல் நிறைய இலவச ஆங்கில மின் புத்தகங்கள் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து இந்த reader மூலம்வாசிக்கலாம். ( *.Pdb என்ற வகையிலான மின்நூல்கள் மட்டுமே.)

2) நீங்கள் எழுதிய அல்லது யாராவது நண்பர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆக்கம், கதை, கவிதை போன்றவை, பாமினி வகையை சேர்ந்த எழுத்து முறையால் ஆனதென்றால் (4) வது பகுதிக்கு போங்கள்.

3) unicode முறையிலோ TSCI அல்லது வேறெந்த முறையிலோ இருக்கும் ஆக்கத்தை பாமினி முறைக்கு மாற்ற வேண்டும். இதற்கு இணையத்தில் பொங்கு தமிழ் மூலம் உங்கள் கதையை வெட்டி ஒட்டி பாமினி முறைக்கு மாற்றவும்.( http://www.suratha.com/uni2bam.htm )பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியிலிருந்து பாமினி உருவிற்கு மாற்றிய கதையினை copy செய்து
கொள்ளவும்.

4) Open office text document ஐ திறந்து அதில் பாமினி எழுத்துருவில் உள்ள கதையை Paste செய்யவும். இந்த document ஐ Save as மூலம் Save Type ——– AportisDoc (Palm *.Pdb) வகையைத் தெரிவு செய்து பதிவு செய்து கொள்ளவும்.
open office தரவிறக்கம் செய்யும் முகவரி
http://www.openoffice.org/

இப்போது கதை தயார். eReader ஐ திறந்து அதற்குள் கதையை எடுத்து வைப்பதன் (அல்லது File ————> add Books) மூலம் புதிய வடிவில் கதையை வாசிக்கலாம். எழுத்துக்கள் முதலில் புரியாத வடிவில்காணப்படும். Menu வில் view —-> view setting ல் சென்று bamini எழுத்துருவுக்கு மாற்றிக் கொள்ளவும். இங்கே டிசைன், பாமினி குடும்ப வேறுவகை எழுத்துரு, நிறம் இவைகளை மாற்றி கொள்ளலாம். கீழே உள்ளSave ஐ பயன்படுத்தி பதிந்து வைத்துவிட்டால்மீண்டும் eRaeder ஐ திறக்கும்போது விரும்பிய தெரிவு மாறாமல் இருப்பதைக் காணலாம்.

நன்றி:இணையம், நண்பர்கள்

Monday, August 10, 2009

யாஹுவுடன் கை குலுக்கியது மைக்ரோசாப்ட்


பல மாதங்களாக நீடித்து வந்த இழுபறி நிலையை மைக்ரோசாப்ட் மற்றும் யாஹூ நிறுவனங்கள் ஒரு பத்தாண்டு ஒப்பந்தத்தினைப் போட்டு முடிவிற்குக் கொண்டு வந்துள்ளன. தேடல் இயந்திரம் தொழில் நுட்பத்திலும் அதனைச் சார்ந்த விளம்பர வர்த்தகத்திலும் Google கொண்டிருக்கும் முதல் இடத்தை அசைத்துப் பார்ப்பதற்காகவே இந்த ஒப்பந்தம் இருக்குமோ என்ற எண்ணம் இணைய உலகில் அனைவருக்கும் எழுந்துள்ளது.
தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தப்படி Microsoft நிறுவனத்தின் Bing தேடல் இயந்திரத்தினை தன் தளத்தில் Yahoo பயன்படுத்திக் கொள்ளும். அத்துடன் விளம்பர இட விற்பனையை உலக அளவில் மேற்கொள்ளும் உரிமையை Yahoo மட்டுமே பெறுகிறது. Yahoo நிறுவனம், அதன் பயனாளர்கள் மற்றும் இணைய வர்த்தகச் சந்தை ஆகிய அனைத்திற்கும் பல பயன்களை இந்த ஒப்பந்தம் தரும் என்று Yahoo நிறுவன தலைவர் அறிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பால் ஸ்டீமர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் இரு நிறுவனங்களும் வெற்றி அடையும் ஒரு இனிய ஒப்பந்தம் இது என்று குறிப்பிட்டார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் யாஹூ நிறுவனத்தின் தேடல் இயந்திர தொழில் நுட்பத்தினைப் பத்து ஆண்டுகளுக்குப் பயன்படுத்த தனி உரிமையினைப் பெறுகிறது. இதனைத் தன் தளங்களில் இயங்கி வரும் தேடல் இயந்திர தொழில் நுட்பத்துடன் ஒருங்கிணைத்து பயன்படுத்தும். 18 மாதங்களுக்கு முன்புதான் யாஹூவை எடுத்துக் கொள்ள மைக்ரோசாப்ட் தன் முதல் அஸ்திரத்தை வீசியது. பிப்ரவரி 1, 2008 அன்று 4,460 கோடி டாலருக்கு விலை பேசியது. இது யாஹூவைப் பெரிய அளவில் உலுக்கியது. அதன் தலைவர் இடத்தில் புதிய ஒருவர் பொறுப்பேற்றார். மூன்று புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட்டனர்.
இருப்பினும் திரை மறைவில் இந்த இரு நிறுவனங்களும் தொடர்ந்து உறவாடிக் கொண்டு தான் இருந்தன என்று பலரும் பேசிக் கொண்டிருந்தனர். எல்லாம் எதற்காக? இணையத் தொழில் நுட்பத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள கூகுள் நிறுவனத்தை அதன் இடத்திலிருந்து இறக்கத்தான் இந்த ஏற்பாடுகள். தற்போது வந்த ஒப்பந்த அறிவிப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை தனி ஒரு சர்ச் இஞ்சின் நிறுவனமாக இயங்கி வந்த யாஹூ அந்த அடையாளத்தினை இந்த ஒப்பந்தம் மூலம் முறித்துக் கொண்டுவிட்டது.
மைக்ரோசாப்ட் முதலில் அறிவித்த பங்கு முதலீட்டினை ஜெர்ரி யாங் காட்டமாக மறுத்துத் தன் நிறுவனத்தைக் காப்பாற்ற அதி தீவிர முயற்சிகள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து அடுத்து பங்குகளைக் கொண்டிருந்த கார்ல் தன் பக்கத்திற்கு மூன்று இயக்குநர் இடங்களைப் பிடித்தார். தாக்குப் பிடிக்க முடியாத ஜெர்ரி யாங் தலைவர் பதவிலியிருந்து இறங்க கேரல் பார்ட்ஸ் யாஹூவின் தலைமை நிர்வாக அதிகாரியானார்.
ஒரு பெண்ணுக்குரிய நிதானம் மற்றும் வேகத்துடன் சிந்திக்கத் தொடங்கி கேரல் பல நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டே இருந்தது. இதற்கு வலுவான காரணமும் இருந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் தேவையான பணமும் இருந்தது; தேவைகளும் இருந்தன. இந்த பிரிவில் உயரச் செல்ல ஆசையும் இருந்தது. யாஹூ ஏற்கனவே உயரத்தில் இருந்ததால் அதனைப் பிடிக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டது. அதே நேரத்தில் யாஹூ தன் செலவுகளைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது. வெளியிலிருந்து சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தினைப் பெற்றால் ஆண்டுக்கு 50 கோடி டாலர் மிச்சம் பிடிக்க முடியும் என்று பார்ட்ஸ் கருதினார். இன்றைய ஒப்பந்தம் குறித்துப் பேசுகையில் அனைவரும் இந்த பணம் மிச்சமாவதனையே குறிப்பிட்டனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தின் திறனும் தன்மையும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே இது யாஹூ நிறுவனத்திற்கு பெரிய உறுதுணையாக இருக்கும். இப்போதைய ஒப்பந்தம் யாஹூவின் பணிக் கலாச்சாரத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த 18 மாதங்களாகத் தன் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி முன்னேற்றப் பாதையினைப் பார்க்க உழைத்துக் கொண்டிருந்த யாஹூ திடீரென இன்னொரு நிறுவனம் அமைத்த தொழில் நுட்பத்தினைத் தழுவிக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு நிறுவனங்களுக்குமே ஒரு புதிய பாதையைக் காட்டியுள்ளன. ஒவ்வொரு மாதமும் தன் தளத்தில் வந்து தேடும் 30 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சேவை அளித்துத் தக்க வைக்க வேண்டிய நிலையில் யாஹூ உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விளம்பரங்களையும் விற் பனை செய்திடும் உரிமை யாஹூவிற்குப் பெரிய அளவில் கை கொடுக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: கம்ப்யூட்டர்மலர்

Saturday, August 8, 2009

செப்டம்பர் 30ல் கூகுள் வேவ்


கூகுள் வேவ் குறித்து கம்ப்யூட்டர் மலரில் வந்த தகவல்கள் உங்கள் மனதில் இன்னும் இருக்கும் என எண்ணுகிறேன். சென்ற மே மாதம் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கில் இது குறித்த அறிவிப்பினை கூகுள் முதல் முதலில் வெளியிட்டது. ஆனால் அதனை அடுத்து மைக்ரோசாப்ட் தன் பிங் (Bing) சேவை குறித்து செய்திகள் வெளியிட்டு டிஜிட்டல் மீடியா கவனத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டது.
கூகுள் மே மாதம் அறிவித்த போது இது கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி சாதனையாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. தற்போதைய ஜிமெயிலின் ஒரு எக்ஸ்டென்ஷனாகத்தான் இது இருக்கும் என அனைவரும் எண்ணினார்கள். இதன் மூலம் பயனாளர்கள் இமேஜஸ், வீடியோ மற்றும் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்றும் பலர் ஒரே நேரத்தில் எளிதாகத் தங்களுக்குள் உரையாடலை நடத்திக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 30ல் இந்த சேவை பொதுமக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கனவே 6000 டெவலப்பர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு அவர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி இதனை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தந்து வருகின்றனர். அடுத்து பொது மக்களில் ஒரு லட்சம் பேரைத் தேர்ந்தெடுத்து சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளைக் கேட்க கூகுள் முடிவு எடுத்துள்ளது. இவர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று இன்னும் கூகுள் அறிவிக்கவில்லை. இது குறித்து தொடர்ந்து தகவல் பெற
http://wave.google.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.
நன்றி: கம்ப்யூட்டர்மலர்

Friday, August 7, 2009

GPRS உதவியுடன் எந்த நாட்டிற்கும் கைத்தொலைபேசியிலிருந்து தொடர்புகொள்ள


நான் இத்தளத்தினை இணையத்தேடல் மூலமாக அறிந்துகொண்டேன் இத்தளத்தினுாடாக நாம்
MSN
Skype
Google Talk
Yahoo
மேலும் பல இலவச இணைய Voice Chating ஊடாக மற்றவர்களை கையடக்கத் தொலைபேசியிலிருந்தே கணினிக்கு தொடர்பு கொள்ளலாம். இத்தளத்திலிருந்து ஒரு மென்பொருளை கையடக்கத் தொலைபேசியில் தரவிறக்கம் செய்து அம்மென்பொருளினுாடாக கணினிக்கு அழைப்பு(Call) எடுக்கமுடியும். இம் மென்பொருள் உங்கள் நண்பர்கள் கையடக்கத்தொலைபேசியில் உபயோகித்தால் அவர்களுக்கு நீங்கள் அழைப்பு(Call) எடுக்கும் பொழுது அவர்களுடைய கையடக்கத்தொலைபேசிக்கு தொடர்புபடுத்திவிடும். இணையத்திலிருந்தே messenger உதவியில்லாமல் அரட்டை(Chatting) செய்வதற்கு e-buddy போன்ற பல தளங்கள் உள்ளன ஆனால் அவற்றில் கையடக்கத்தொலைபேசியிலிருந்து voice chating செய்ய இயலாது ஆனால் இதில் அவ்வசதியுள்ளது.ஆனால் இலவசம் என்று சொல்ல முடியாது GPRS கட்டணம் அறவிடப்படும் GPRS Pack பாவிப்பவர்களுக்கு இது இலவசமானது ஏனெனில் அவர்களுக்கு மாதாந்தம் குறிப்பிட்டளவு MB Download இலவசமாக கொடுத்திருப்பின் உங்கள் கையடக்கத் தொலைபேசியிலிருந்து எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.
இதுபோன்று தளம் உங்களுக்குத் தெரிந்திருந்தால் கூறுங்கள். நிச்சயம் இது உதவும் என்று நினைக்கிறேன்.
மென்பொருள் தரவிறக்க: http://www.fring.com/download/
இணையத்தளம்: http://www.fring.com/

Thursday, August 6, 2009

MS OFFICE மென்பொருள் இல்லாமல் Ms word, Ms excel, Ms powerpoint ஆவணங்களைப் பார்ப்பது எப்படி?-இலவச மென்பொருள்


மென்பொருள் துறையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியிருக்கும் மைக்ரோசொப்ற்(Microsoft) தற்பொழுது MS Word,excel,Powerpoint போன்ற ஆவணங்களை உங்கள் கணனியில் MS OFFICE நிறுவப்படாவிடில் படிப்பது எவ்வாறு என்ற தனது புதிய இலவச மென்பொருள் ஒன்றை அண்மையில் வெளியிட்டிருக்கின்றது. அதற்க்கான இணையச்சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவதன் மூலமாக அவற்றை MS OFFICE இன் உதவியின்றி பார்வையிட முடியும்.


இணையச்சுட்டி:







Wednesday, August 5, 2009

PDF,Ms Word documents இலிருந்து Ms Word Documents,PDF க்கு மாற்றுவது எவ்வாறு? கூகிளின்(Google Docs) மற்றுமொரு சேவை

PDF,Ms Word documents இலிருந்து Ms Word Documents,PDF க்கு மாற்றுவது எவ்வாறு? கூகிளின்(Google) மற்றுமொரு சேவை.

1.முதலில் கூகிளின் ஆவணங்கள்(Google Docs) பகுதியில் login செய்யுங்கள்
2.Upload என்ற இணைப்பின் மீது அழுத்துங்கள்(Click)





3.Browser இன் மீது அழுத்தி ஆவணத்தை(pdf,word,html) தரவேற்றம்(Upload) செய்து கொள்ளுங்கள்










4.Upload நிறைவுபெற்றதன் பின்னர் உங்களுக்கு தேவையான வடிவத்தை(Format: PDF,word,HTML,Text) தெரிவுசெய்து பெற்றுகொள்ளக்கூடியதாக இருக்கும்.








Tuesday, August 4, 2009

Microsoft புதிய Online சேவைகள்



சிறிய மற்றும் நடுத்தர நிலையில் இயங்கும் நிறுவனங்களின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைதொடர்புக்கான செலவினப் பாதியாகக் குறைத்திடும் வகையில் பல்வேறு ஆன்லைன் வசதிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத் தியுள்ளது. இந்த சேவைகளை இரண்டு மாதத்திற்கு இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்திப் பார்த்துப் பின் தேவை எனில் கட்டணம் செலுத்திப் பெறலாம். வர்த்தக ரீதியில் இவை வரும் அக்டோபர் மாதம் முதல் கிடைக்கும். வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள், அலுவலர்கள், தனி உரிமம் பெற்று இயங்குபவர்கள் ஆகியோரை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்கள் வர்த்தக தொடர்பான அலுவல்களை குறைந்த செலவில் மேற்கொள்ளும் வகையில் இந்த வசதிகள் தரப்படுகின்றன. இதனால் நிர்வாக மற்றும் உற்பத்தி செலவுகள் குறைந்து நிறுவனத்தின் செயல்திறன் கூடும். இமெயில் போக்குவரத்து, டிஜிட்டல் நெட்வொர்க், எக்சேஞ் ஆன்லைன், ஆபீஸ் ஷேர் பாய்ண்ட் ஆன்லைன், வீடியோ கான்பரன்சிங், ஆபீஸ் லைவ் மீட்டிங், எம்.எஸ். ஆபீஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆன்லைன் எனப் பல வசதிகள் தரப்படுகின்றன. ஒரு நிறுவனம் இவை அனைத்தையும் மொத்தமாகக் கேட்டு கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும் என்பதில்லை. தேவைப்படும் வசதிகளை மட்டும் பெறலாம். பயன்படுத்தும் வசதிகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வசதியும் உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை எப்போதும் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இவற்றைப் பெற்றுப் பயன்படுத்துகையில் தேவைப்படும் ஆலோசனைகளையும் உதவியையும் மைக்ரோசாப்ட் எந்நேரமும் வழங்குகிறது. இந்த திட்டத்தினைத் தற்காலிகமாக இலவசமாகப் பெற நீங்கள் அணுக வேண்டிய தள முகவரி: www.microsoft.com/india/onlineservices



இந்த முகவரிக்குள் முதலில் லாக் இன் செய்திடவும். பின் உங்கள் நாடு என்ற பட்டியலில் இந்தியா என்பதைட்தேர்ந் தெடுத்துப் பின் உங்கள் லைவ் மெயில் ஐ.டி.யைத் தரவும். அடுத்து எந்த எந்த சேவைகள் வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் உங்களுக்கு எந்த எந்த சர்வீஸ் தரப்படுகிறது என்று அறிவிப்பு கிடைக்கும். அதன் பின் அவற்றைப் பயன்படுத்தலாம்.



இனிமேல் ஆண்ட்ராய்ட்



கூகுளின் ஸ்மார்ட் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தங்கள் போன்களில் கொண்டுவர முன்னணி மொபைல் தயாரிப்பாளர்கள் முன்வந்துள் ளனர். எச்.டி.சி., சாம்சங், எல்.ஜி., மற்றும் மோட்டாரோலா ஆகிய நிறுவனங்கள் நகரங்களில் வாழும் இளைஞர்களை முன்னிறுத்தி ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் போன்களைக் கொண்டு வர இருக்கின்றன. மத்திய மற்றும் உயர் ரக போன் வரிசையில் இவை கிடைக்கும். எச்.டி.சி. நிறுவனம் தன் முதல் ஆண்ட்ராய்ட் போனை இந்தியாவிற்குக் கொண்டு வந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி என்ற பெயரில் முதல் ஆண்ட்ராய்ட் போனை அடுத்த மாதம் கொண்டு வர இருக்கிறது. எல்.ஜி. மற்றும் மோட்டாரோலா நிறுவனங்களின் போன்கள் டிசம்பரில் இங்கு கிடைக்கும்.



இது குறித்து கூகுள் இந்தியா இயக்குநர் கூறுகையில் உலக அளவில் 47 நிறுவனங்கள் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் போன்களைத் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன என்று கூறினார். வரும் டிசம்பரில் பன்னாட்டளவில் 15 முதல் 20 மாடல்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் வரும். ஆண்ட்ராய் இன்டர்நெட் பிரவுசிங் மற்றும் டச் ஸ்கிரீன் பிரிவில் பல புதுமையான வசதிகளைத் தரும் சிஸ்டமாகும். தற்போது சிம்பியன் மற்றும் விண்டோஸ் மொபைல் சிஸ்டங்கள் மார்க்கட்டில் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் இயங்குகின்றன.



அடுத்ததாக ஆண்ட்ராய்ட் பெரிய அளவில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக மொபைல் பயன்படுத்துபவர்கள் தங்கள் போன்களில் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது என்று பார்ப்பதில்லை. அவர்களுக்கு நவீன புதிய ஆச்சரியப்படத்தக்க வகையில் வசதிகள் தரப்பட வேண்டும்; அவ்வளவுதான். இதனை ஆண்ட்ராயட் அவர்களின் எதிர்பார்ப்புக்கும் மேலாக நிறைவேற்றும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மேலும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்த எந்த உரிமைத் தொகையையும் செலுத்த வேண்டியதில்லை என்பதால் மொபைல் போன்களின் விலை குறைய அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது எச்.டி.சியின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ரூ.30,000க்கும் சாம்சங் ரூ. 29,000க்கும் விற்பனையாகின்றன. இன்னும் குறைவாக ரூ.10,000 முதல் ரூ.15,000 வரைக்குள்ளாக போன்கள் வெளியானால் தான் மார்க்கட்டைப் பிடிக்க முடியும்.



விண்டோஸ் 7ல் எக்ஸ்பி மோட்



விண்டோஸ் எக்ஸ்பியின் தீவிர ரசிகர்களை இணைத்தால் ஒரு நாடே உருவாக்கலாம். அந்த அளவிற்கு எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றே போதும் என இருப்பவர்கள் கோடிக்கணக்கானோர். அதனாலேயே விண்டோஸ் விஸ்டா, எக்ஸ்பி பிரபலமான அளவிற்கு உயரவில்லை. இப்போது விண்டோஸ் 7 வர இருக்கிறது. மைக்ரோசாப்ட் அண்மையில் விண்டோஸ் எக்ஸ்பி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்லி உள்ளது.விண்டோஸ் 7 தொகுப்பில் விண்டோஸ் எக்ஸ்பி மோட் வசதி தரப்படும். இதன் மூலம் விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்கி விண்டோஸ் 7ல் இயங்க மறுக்கும் புரோகிராம் ஒன்றினை விண்டோஸ் எக்ஸ்பி மோட் பெற்று இயக்க முடியும். இதன் மூலம் மக்களை விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விலகி விண்டோஸ் 7 தொகுப்பிற்கு வரச்சொல்கிறது மைக்ரோசாப்ட். ஆனால் இதில் ஒரு கெட்ட செய்தியையும் தந்துள்ளது. இந்த விண்டோஸ் எக்ஸ்பி மோட் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அனைத்து பதிப்புகளிலும் கிடைக்காது. புரபஷனல் மற்றும் அல்டிமேட் பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும். எனவே அதிகமானோர் வழக்கமாகப் பயன்படுத்தும் ஹோம் எடிஷன்களில் இது இருக்காது. மைக்ரோசாப்ட் இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து பதிப்புகளிலும் தரும் என்று எதிர்பார்க்கலாம்.


நன்றி: கம்ப்யூட்டர்மலர்