Monday, June 14, 2010

பதிவுகளை திருடி வெளியிடுபவர்களின் கவனத்திற்கு........

பதிவுகளை இணையத்தளங்களில் இருந்தோ அல்லது வலைப்பூக்களில் இருந்தோ திருடி தங்களின் வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடுபவர்களின் கவனத்திற்காக இந்த பதிவை எழுத்துகின்றேன். பல பதிவர்களின் பதிவுகளை திருடி சில இணையத்தளங்களிலும் மற்றும் வலைப்பூக்களிலும் வெளியிடுகின்றார்கள். அவ்வாறு வெளியிடுவது தவறில்லை ஆனால் அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் தயவுசெய்து எந்த வலைப்பூக்களில் திருடினார்களோ அந்த வலைப்பூக்களின் பெயர்களை அந்த பதிவுகளின் கீழே பதிவிட்டுக்கொள்ளுங்கள்.
இந்த வகையில் என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்ட இணையத்தளங்களிலும் மற்றும் வலைப்பூக்களிலும் வெளிவந்துள்ளன. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

என்னுடைய பதிவுகள் வெளியிடப்பட்ட சில இணையத்தளங்களின் பெயர்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

www.tamilcnn.com
(http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=3351&Itemid=444)

www.z9tech.com
(http://www.z9tech.com/mobile.php?page=5)

www.paranthan.com
(http://parantan.com/pranthannews/Detail.asp?id=12707)

http://computerthaha.blogspot.com
(http://computerthaha.blogspot.com/2010/06/facebook-voice-and-video-chat.html)

http://tamilwep.blogspot.com/2010_05_01_archive.html

இன்னும் பல வலைப்பூக்களில் இத்தகைய எனது பல பதிவுகள் வெளிவந்துள்ளன.

குறிப்பு: தகவல் தொழில்நுட்பப் பூங்காவானது(http://tamilitpark.blogspot.com) முன்னர் வன்னி தகவல் தொழில்நுட்பம்(http://vannitec.blogspot.com) என்னும் பெயரில் இயங்கிய வலைப்பதிவு என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக வலைப்பதிவின் பெயரில் மாற்றம் செய்த்துள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் தங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.6 கருத்துரைகள்:

பிராது said...

ஆமாம் நண்பரே பலர் இப்படி செய்கிறார்கள்.
எனது சிறு பட்டியல்கள்
டெக்னிக்கலாக நடப்பது என்ன?

Saran R said...

நல்ல பதிவு,

மிகவும் நாகரிகமாக மிரட்டி உள்ளீர் .

வாழ்த்துக்கள்

http://SaranR.in

Valaakam said...

உண்மைதான்... நாங்கள் கஷ்ட‌ப்பட்டு எழுதிறதை இவர்கள் சிலர்... இலாவக‌மாக சுட்டு விடுகிறார்கள்...
அவர்களுக்கு ஹிட்ஸ் முக்கியம்... ஆனால், எழுதின எங்களுக்கு ஒரு இடமாவது கிடைக்கனுமே... அதனால், நீங்கள் சொல்வது மாதிரி சிறியதாகத்தனும் எழுதியவருக்கு ஒரு நன்றி சொன்னால் நல்லம்... :)

ReeR said...

பல மாதங்களுக்கு பின், எனது சொந்த வலை தளத்தினை(www.padukai.com) விட்டு வளம் வந்த எனக்கு உங்களது பதிவுகள் கண்டதில் மகிழ்ச்சி.

நான் தேடிய பல எப்படி என்பதற்கு இங்கு விடை உள்ளது.

நன்றி.
செல்வா.கு
படுகை.காம்

Iqbal Selvan said...

இதைப்பற்றி நான் பல காலம் அவதானித்து வருகிறேன். குறிப்பாக லங்கா ஸ்ரீயின் z9tech , tamilcnn , paranthan போன்ற தளங்கள் தினமும் பல வலைப்பதிவர்களின் பதிவுகளை திருடி வலையேற்றி பணம் சம்பாதித்து வருகின்றன, z9tech சுவிசர்லந்திலிருந்தும், tamilcnn இங்கிலாந்திலி இருந்தும், பரந்தன் எதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்தும் செயல்படும் திருட்டு தளங்கள். இவை யாவும் புலம்பெயர் ஈழ மக்களால் வியாபார நோக்கம் கொண்ட தளங்கள். அவை ஒரு இடத்திலும் உண்மையான ஆசிரியர் பெயரையும், தளத்தையும் குறிப்பிடாதது வருந்தக்கது. tamilcnn பதிவுகள் பல இன்ட்லியில் இருக்கின்றன, சில நண்பர்கள் எனது பதிவினை லங்கா ஸ்ரீயில் படித்து விட்டு எதோ நாம் திருடினது போல் கேள்வி கேட்டார்கள். இந்த அறிவு சொத்துரிமை திருட்டை தடுக்க பாதிக்கப்பட்ட வலைப்பதிவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து சில முக்கய பனி செய்யப்படல் வேண்டி இருக்கின்றது. அவற்றில் சில இன்ட்லி போன்ற தளங்கள் வலைப்பதிவர்களால் வளர்ந்தவை அவற்றில் tamilcnn போன்ற திருட்டு தளங்கள் உலா வருவதை தடுக்கலாம், சம்பந்தப்பட்ட திருட்டு தளங்களுக்கு நேரிடையாக நமது கண்டனத்தை அறிவிக்கலாம், அத்தகு திருட்டு தளங்களை புறக்கணிக்க அனைத்து வலைப்பதிவர்களும் campaign ஒன்றினை ஏற்படுத்தலாம், இந்திய அறிவு சொத்துரிமை நிறுவனத்துக்கும், சம்பந்தப் பட்ட நாட்டு copy rights சம்பந்தமாக அந்தந்த அரசுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் கடிதங்களையும், புகார்களையும் செய்யலாம். இது சம்பந்தமாக விவரமாக ஒரு பதிவினையும் , வலைப்பூவினையும் நிறுவலாம் என்று இருக்கிறேன். ஆதரவு தரும் தோழர்களை வரவேற்கிறேன். அறிவுத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுப்பது நமது கடைமையாகும்.

தமிழ்ப் பையன் said...