Showing posts with label வைரஸ். Show all posts
Showing posts with label வைரஸ். Show all posts

Monday, December 28, 2009

கணனியிலுள்ள வைரஸ் மென்பொருள் (Anti Virus) ஒழுங்காக வேலை செய்கின்றதா என பரிசோதித்து(Check) பார்ப்பது எப்படி?


உங்கள் கணனியில் நீங்கள் நிறுவியிருக்கும் Anti-Virus மென்பொருளானது சிலவேளைகளில் அதனுடைய செயற்பாட்டை இழந்தோ அல்லது புதிய வைரஸ்களை இனங்கான முடியாமலோ இருக்கலாம். அத்தகைய நேரங்களில் உங்கள் கணனியிலுள்ள Anti-Virus மென்பொருளை பரிசோதித்து பார்ப்பதற்கான வழிமுறைதான் இது.

முதலில் Notepad ஐ திறந்து கொள்ளுங்கள் (open Notepad)

கீழே தரப்பட்டுள்ள Code ஐ பிரதி செய்து Notepad இல் இடுங்கள்.
(Copy this Code in text file)

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

இதனை fakevirus.exe என்னும் பெயரில் சேமித்து கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் சேமித்த இந்த ஆவணமானது உடனே அழிக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே உங்கள் கணனியிலுள்ள Anti-Virus ஆனது ஒழுங்காக செயற்படுகின்றது.

Monday, August 31, 2009

சமூக தளங்களை தாக்கி வரும் Koobface வைரஸ்

Facebook,Twitter,myspace,friendster புதுப்பித்து hi5 கணணியை சமுதாய இணைய தள வலைப்பின்னல்களை பயன்படுத்துபவரா நீங்கள்! அப்படியானால் அண்மைக் காலத்தில் வேகமாகப் பரவி வரும் கூப்பேஸ் (Koobface) வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

இந்த தளங்களின் பேரில் உங்களைத் தூண்டும் தகவல் ஒன்று உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்ட காணொளி ஒன்றை தரவிறக்கம் செய்து பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளும் தூண்டில் செய்தி ஒன்று கிடைக்கும். காணொளிக்கான இணைப்பை சொடுக்கினால் youtube போல தளம் ஒன்று திறக்கப்படும். அங்கே ஒரு காணொளி காட்சி ஒன்று உள்ளதென்றும், அதனைக் காண மென்பொருள் ஒன்றை இறக்கிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு அதற்கான இணைப்பு கொடுக்கப்படும்.

இதற்கு ஆம் என அழுத்தினால், உங்கள் கணனியில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைத் திருடி அனுப்பும் மென்பொருள் ஒன்று இறங்கி அமர்ந்து கொள்ளும். பின் உங்களின் பயனர் கணக்கு, கடவுச்சொல், வங்கி சார்ந்த தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு அனுப்பப்படும்.

ஏற்கனவே இந்த வைரஸ் உங்களுடைய கணனியில் மேலே சொன்ன நடவடிக்கைகளினால் இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் உடனே இந்த koobface வைரஸ் குறித்த அனைத்து வரிகளையும் பதிவகத்திலிருந்து (Registry )நீக்கவும். உங்கள் Anti வைரஸை புதுப்பித்து (Update) கணனியை முழுமையாகச் சோதனை செய்திடவும்.



நன்றி : Lankasri


Tuesday, August 11, 2009

மால்வேர் புரோகிராம்கள்(Malware programs) என்ன எங்கே எப்போ?


அண்மையில் ஓர் இணையத்தளம் ஒன்றைப் பார்த்தேன். நம் கணனியையும் நம்மையும் பயமுறுத்தும் பாதுகாப்பு குறித்து நாம் Update செய்திடும் வகையில் அந்த தளம் செயல்படுவதனைக் கண்டு கொண்டேன். இது இணையச் செயல்பாட்டினை கண்காணிக்கும் ஒரு தளமாக இயங்குகிறது. இதில் கணனியை அவ்வப்போது அச்சுறுத்தும் மால்வேர்(Malwares) புரோகிராம்களைப் பற்றி விலாவாரியாகக் கூறுகிறது.

அந்த தளத்தின் முகவரி:http://mtc.sri.com/

ஒவ்வொரு மோசமான மால்வேர்(Malware) புரோகிராமும் எப்போது வந்தது; எந்த அளவில் மோசமானது; அதனை எதிர்க்கும் பணியினை யார் யார் மேற்கொண்டுள்ளார்கள்; அதனைத் தவிர்க்க என்ன செய்திடலாம் என்பது போன்ற தகவல்களை சரியான புள்ளி விபரங்களுடன் தருகிறது. எனவே ஏதேனும் ஒரு மால்வேர்(Malware) குறித்து நீங்கள் சந்தேகப்பட்டு அது குறித்த தகவல்கள் வேண்டும் என்றால் உடனே இந்த தளத்தினை அணுகலாம். அந்த மால்வேர் புரோகிராமின் பெயரைக் குறிப்பிட்டு அது எங்கிருந்து வருகிறது என்ற தெளிவான தகவலைத் தருகிறது.

அத்துடன் குறிப்பிட்ட மால்வேர் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டருக்குள் நெருங்கவிடாமல் இருக்க அது வரும் ஐ.பி. முகவரியினைத்(IP address) தந்து அந்த முகவரியிலிருந்து எது வந்தாலும் அனுமதிக்காமல் செட் செய்திடும்படி கூறுகிறது. phishing மற்றும் வேறு வகைகளில் உங்கள் கணனிக்குள் வரும் புரோகிராம்களை அனுப்புவோரின் பொதுவான Domain பெயரையும் குறிப்பிடுகிறது.


இப்போது உலா வந்து கொண்டிருக்கும் மால்வேர் புரோகிராம்களைக் குறிப்பிட்டி இவற்றிற்கு எதிரான Antivirus மென்பொருட்களை யார் தயாரித்து வழங்குகிறார்கள் என்ற தகவலும் இங்கு கிடைக்கிறது. இதனை அறிந்து கொண்டு அத்தகைய தளங்களுக்குச் செல்லாமல் இருக்கலாம் இல்லையா!எனவே தங்கள் கணணி மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த தளம் அரிய தகவல்களைத் தரும் தளமாக உள்ளது.தடுக்கிறோமோ இல்லையோ கெடுதல் விளைவிப்பவர்கள் குறித்து அறிந்து கொள்வது நல்லதுதானே.

நன்றி : இணையம்

Friday, July 10, 2009

எச்சரிக்கை : Michael jackson புதிய ஈ-மெயில் வைரஸ்


மைக்கேல் ஜாக்சனின் பெயரைப் பயன்படுத்தி இமெயில்கள் மூலம் வைரஸ் பரவி வருகிறது. எனவே ஜாக்சன் என்ற பெயரில் இமெயில் வந்தால் திறந்து பார்க்காமல் அழித்து விடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.ஜாக்சனின் நினைவாக என்ற பொருளில் அனுப்பப்படும் அந்த மெயிலில், ஜிப் பைல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் மைக்கேல் ஜாக்சனின் இசை வடிவங்கள், இதுவரை பார்த்திராத படங்கள் உள்ளிட்டவை உள்ளதாக அந்த மெயில் கூறுகிறு. அடடா, என்று ஆச்சரியப்பட்டு திறந்து பார்த்தால் அவ்வளவதுதான், கம்ப்யூட்டர் காலியாகி விடுகிறதாம்.sarah@michaeljackson.com என்ற முகவரியிலிருந்து அந்த மெயில் அனுப்பப்படுகிறது.இந்த மெயிலைத் திறந்து பார்த்தால் நமது கம்ப்யூட்டர் மட்டுமல்லாது, யுஎஸ்பி மெமரி ஸ்டிக்கையும் இது பாதிக்கிறதாம்.அதேபோல மைக்கேல் ஜாக்சனின் கடைசிப் படைப்பு வீடியோ என்ற பெயரில் இன்னொரு வைரஸும் பரவுகிறதாம்.ஜாக்சன் ரசிகர்களே, ஜாக்கிரதை...
நன்றி : Times of India