Showing posts with label கூகுள். Show all posts
Showing posts with label கூகுள். Show all posts

Thursday, September 10, 2015

Apple iPhone 6S and 6S Plus அறிமுகம்

கைத்தொலைபேசி துறையில் புதிய பரிமாணங்களை படைத்துவரும் Apple நிறுவனமானது செப்டெம்பர் 9ம் திகதி, 2015 இல் தனது புதிய பதிப்பான iPhone 6S மற்றும் iPhone 6S Plus ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Retina® HD என்னும் தொடுதிரையுடன் முப்பரிமாண தொடுதிறனுடன் (3D Touch) மற்றும் பல அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது.

iPhone 6S மற்றும் iPhone 6S Plus இன் Features and Specifications ஐ இங்கே பட்டியலிட்டுள்ளேன்.

 iPhone6S

•Silver, Gold, Space Grey and Rose Gold colour options in 7000 series aluminium

• 4.7in (1334x750, 326ppi) Retina HD display with 1400:1 contrast ratio, 500 cd/m2 brightness, fingerprint-resistant oleophobic coating, Reachability

• Apple A9 64-bit processor with embedded M9 motion coprocessor

• 16GB, 32GB or 64GB of storage

• 12Mp iSight camera with 1.22µ pixels, f/2.2 aperture, five-element lens and True Tone flash, now with support for Live Photo and 4K video recording

• 5Mp FaceTime HD selfie camera with Retina Flash and 720p video

• Second-generation Touch ID fingerprint sensor

• 802.11a/b/g/n/ac Wi-Fi with MIMO

• Bluetooth 4.2

• NFC

• aGPS and GLONASS

• 4G LTE Advanced

• iOS 9

• 138.3x67.1x7.1mm

• 143g
                       
   


Thursday, September 3, 2015

Google Logo ஒரு பார்வை

இணையத்தேடல் மூலமாக காலடி எடுத்து வைத்த Google ஆனது இன்று மென்பொருள் உருவாக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பல புரட்சிகளை செய்துகொண்டிருக்கின்றது. அதே நேரம் அதன் சின்னங்களையும்(Logo) காலத்துக்கு காலம் மாற்றி வருகிறது. அந்த வகையில் செப்டெம்பர் முதலாம் திகதி, 2015 இல் அதன் சின்னத்தை மாற்றி அமைத்திருக்கின்றது.
அதைவிட இந்த பதிவில் இதுவரை காலமும் Google மாற்றி அமைத்த சின்னங்கள் மீதான ஒரு பார்வை..

1. 1998
லாரி பேஜ் மற்றும் சேர்கே பிறின் பல்கலைக்கழக ஆய்வுக்கட்டுரைக்காக பயன்படுத்திய முதல் சின்னம்.
Larry Page and Sergey Brin use this logo for their Stanford University graduate project.




2.30 August 1998
The team heads to Burning Man and creates the first Doodle as an out of office message.




3.September 1998
Google moves to google.com and shares its beta release with the world.


4.May 1999
Still playful, the logo gets a more sophisticated look based on the Catull typeface.




5.May 2010
The logo brightens up and sports a reduced drop shadow.


6. September 2013
The logo goes flat with some typographical tweaks.


7. September 2015
The logo becomes part of a new family that includes the Google dots and 'G' icon.



Friday, July 6, 2012

கூகிளில் சில வித்தியாசமான ஆச்சரியப்படக்கூடிய தேடல்கள்



தேடல் துறையில் சாதனைகளை படைத்துவரும் கூகிளானது சில வித்தியாசமான தேடல்களையும் தருகிறது அத்தகைய தேடல்கள் சில....

1.Do a barrel roll :  google.com சென்று Do a barrel roll என்றவாறு தட்டச்சு  செய்யுங்கள். என்ன நடக்கிறதென்று பாருங்கள்.


2. Zerg rush: கூகிளில் Zerg rush என்றவாறு தட்டச்சு செய்து 10 விநாடிகள் பொறுத்திருந்து பாருங்கள்.

3. Google Gravity trick: கூகிளில் Google Gravity trick: என்று தட்டச்சு செய்துவரும் தேடல் முடிவில் முதலாவது தேடல் முடிவின் மீது அழுத்துங்கள்.


4.Google's Les paul Guitar: கூகிலானது Les paul என்னும் இசைக்கலைஞரின் 96 ஆவது பிறந்தநாளை கௌரவிக்கும் முகமாக கொண்டுவரப்பட்ட ஒரு தேடல் நீங்களும் இசைத்து மகிழ்திடுங்கள்.


5.  Askew: கூகிளில்  Askew என்றவாறு தட்டச்சுசெய்து என்ன நடக்கிறதென்று பாருங்கள்.

Wednesday, February 17, 2010

கூகுளில் சில வித்தியாசமான நகைச்சுவையான தேடல்கள்

உலகில் இணைய  தேடல்  இயந்திரங்களில்   முதலிடத்தை பல ஆண்டு காலமாக தக்கவைத்துகொண்டிருக்கும் தேடலில் ஆர்வமுள்ளவர்களுக்கென சில நகைச்சுவையான வித்தியாசமான சில தேடல் வடிவங்கள் உள்ளன. இந்த தேடல் வடிவங்கள் வித்தியாசமாக தேட விரும்புபவர்களுக்கு என உருவாக்கப்பட்டவை.


வித்தியாசமாக எவ்வாறு தேடுவது எனப்பார்ப்போம்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களை Google இன் இணையமுகவரியில் (http://www.google.com/) சென்று தட்டச்சு(type) செய்யுங்கள்.
(Just write it in google searchbar )

பின்னர் I'm Feeling Lucky என்பதன் மேல் அழுத்துங்கள். அப்பொழுது கூகுளின் வித்தியாசமான தேடல் முகப்பு தோற்றங்கள் நகைச்சுவையாக தோற்றமளிக்கும்.
(Then Click on I'm Feeling Lucky)

வித்தியாசமான தேடல் வடிவங்களுக்குரிய சொற்கள்:

  1. Elgoog
  2. Google 133t
  3. Google Gothic
  4. Google BSD
  5. Google Easter egg
  6. xx-piglatin
  7. Google linux
  8. Ewmew fudd
  9. xx-klingon
  10. Google BearShare
  11. Google Loco
  12. Google Linux
  13. Google Ewmew
  14. Answer to life the Universe and Everything
  15. Google Mozilla
  16. Google Gizoogle
கூகுளின் மற்றுமொரு வேடிக்கையான தேடலை அடுத்துவரும் பதிவுகளில் தருகிறேன்.






Monday, February 15, 2010

கடந்த வருடம்(2009) கூகுளில் அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியல்( top searches on google)

2009 கடந்து பல மாதங்கள் சென்றபின் இது ஒரு காலம் தாமதித்த இடுகை. கூகுளில் கடந்த 2009 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியல் இதோ. இதில் அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியலில் Michael jackson என்னும் சொல் முதலிடத்தில் உள்ளது.
இதோ கூகிளில் அதிகம் தேடப்பட்ட முதல் பத்து சொற்களின் பட்டியல்:



  1. michael jackson
  2. facebook
  3. tuenti
  4. twitter
  5. sanalika
  6. new moon
  7. lady gaga
  8. windows 7
  9. dantri.com.vn
  10. torpedo gratis
இதைவிட விளையாட்டுகள்,பொழுதுபோக்கு அம்சங்கள்,உணவு மற்றும் குடிபானங்கள் போன்றவற்றிலும் அதிகம் தேடப்பட்டவற்றையும் இங்கே பட்டியல் இட்டுள்ளேன். இது ஒரு உலகளாவிய பட்டியல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயம்.

பொழுதுபோக்கு அம்சங்களில்...........
  1. michael jackson
  2. transformers
  3. eminem
  4. naruto shippuden
  5. beyonce
  6. peliculas id
  7. paranormal activity
  8. anime online
  9. natasha richardson
  10. poker face lyrics

விளையாட்டு சம்பந்தமாக................
  1. real madrid
  2. us open
  3. ufc
  4. sahadan
  5. livescore
  6. pacquiao vs cotto
  7. wbc 速報
  8. pga tour leaderboard
  9. confederations cup
  10. l'equipe football
உணவு மற்றும் குடிபானம் சம்பந்தமாக................

  1. acai berry
  2. picnic
  3. クックパッド
  4. tesco direct
  5. senseo
  6. peanut butter recall
  7. nespresso commande
  8. habibs delivery
  9. mocktail
  10. masterchef ஆஸ்திரேலியா
இவற்றை எல்லாம் விட அண்மைய நாட்களில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியல்....
1. winter olympics schedule

2. valentines
3. pairs short program
4. mens moguls
5. medals
6. kumaritashvili
7. johnny spillane
8. bharti airtel
9. we are the world 25
10. ohno




 

Wednesday, February 10, 2010

Gmail இன் Google Buzz என்னும் தொடர்பாடல் துறைக்கான புதியதொரு சேவை

ஐந்து வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் Gmail ஆனது ஒரு வெறும் மின்னஞ்சல் சேவையாக மாத்திரமே செயற்பட்டுக்கொண்டிருந்தது. காலப்போக்கில் Gmail ஆனது அரட்டை பகுதியை (Chat) ஆரம்பித்து தொடர்பாடல் துறையை மென்மேலும் மெருகூட்டியது. அத்துடன் மேலும் பல படிகள் சென்று குரல்வழி அரட்டை (Voice Chat) ,காணொளி அரட்டை (Video Chat) என தனது தொடர்பாடல் துறையில் பல புரட்சிகளை ஏற்படுத்தியது. அத்தகைய பல புரட்சிகளை படைத்த Gmail ஆனது மேலும் ஒரு புதியதொரு சமூக தொடர்பாடல் சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.





Google Buzz எனப்படும் இச்சேவையானது twitter, lite facebook போன்று நுண்ணிய பதிவுகளை (Micro blogging) பிறருடன் பகிர்ந்து கொள்ளவென உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சேவையினூடாக புகைப்படங்கள்,காணொளிகள்,போன்ற பல்வேறுபட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த சேவையை எமது Gmail முகப்பு பக்கத்தில் Inbox,Sent mail,Spam போன்ற பகுதிகளுடன் இணைந்து காணப்படும். இது எல்லோரினதும் Gmail இல் உடனடியாக தோன்றாது. (எனது முகப்பு பகுதியிலும் இதுவரை தோன்றவில்லை)காலப்போக்கில் இது தோன்றும் என Google அறிவிப்பு செய்துள்ளது. ஆனால் இந்த சேவைக்குரிய உங்களது தனிப்பட்ட கணக்கை நீங்கள் உருவாக்கி கொள்ளமுடியும்.

Google Buzz இல் என்னை பின்தொடர எனது விபரம்: http://www.google.com/profiles/vanniinfo

Google Buzz இன் இணையச்சுட்டி: http://www.google.com/buzz






















Friday, November 13, 2009

கூகிளின் GO என்னும் கணனி நிரலாக்க மொழி


தேடல் துறையில் பல புரட்சிகள் படைத்து உலகையே கட்டிப்போட்டிருக்கும் கூகிள் மேலும் பல்வேறுபட்ட புதிய படைப்புக்களான இயங்குதளம்(Google OS),இணைய உலாவி(google Chrome), கூகிள் அலை(Google Wave) போன்ற பல்வேறுபட்ட புதியனவற்றை அறிமுகப்படுத்தி வரும் கூகிள் கணனி நிரலாக்க மொழித்துறையிலும் காலடி பதித்துள்ளது.

GO என்னும் திறந்த இலவச கணனி நிரலாக்கமொழியினை(Open Source programming lanuage) அண்மையில் அறிமுகப்படுத்தி வெளியிட்டிருக்கின்றது.
இவ் கணனி நிரலாக்க மொழியானது உலகில் மிகவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் C என்னும் நிரலாக்க மொழிக் குடும்பத்தினை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவ் நிரலாக்க மொழியானது Python and the Pascal/Modula/Oberon போன்ற மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியாகவுள்ளமை இதிலுள்ள ஒரு சிறப்பம்சமாகவுள்ளது.அத்துடன் இந்த நிரலாக்க மொழியானது மென்பொருள் கட்டுமான துறைக்கென(Building software) விசேட விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இவ் நிரலாக்க மென்பொருளின் பயிற்சிகளும் விளக்கங்களுக்குமான இணையச்சுட்டிகள் இங்கே தரப்பட்டுள்ளன.

http://golang.org/

http://golang.org/doc/go_faq.html

(பல்கலைக்கழக விடுமுறை காரணமாக நீண்ட நாட்களாக பதிவுகள் இட முடியவில்லை.)

Friday, September 11, 2009

Google Books என்னும் சேவையிலிருந்து நூல்களை PDF ஆக தரவிறக்குவதற்கான (Download) இலவச மென்பொருள்:


எமக்கு தேவையான நூல்களை அதுவும் இலவசமாக பெறுவது என்பது சிரமமான விடயம். அத்தகைய பெரும்பாலான நூல்களை பெற்றுக்கொள்ளவென Google இன் அரியதொரு சேவையுள்ளது. books.google.com இதில் உங்களுக்கு தேவையான புத்தகங்களை தேடி பெற்றுக்கொள்ள முடியும் . ஆனால் அவற்றை PDF வடிவில் தரவிறக்குவது(Download) என்பது கடினம்(சில PDF ஆக தரவிறக்கும் வசதி உள்ளது ) அவ்வாறான நூல்களை தரவிறக்கவென ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.

Melon Google Books Downloader என்னும் மென்பொருள் உள்ளது. இது ஒரு இலவச மென்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.


இந்த மென்பொருளை கணனியில் நிறுவ முதல் Microsoft .net Framework 3.5 SP1 என்னும் மென்பொருள் ஆனது உங்கள் கணனியில் முதலில் நிருவபட்டிருக்க வேண்டும்


(Microsoft .net Framework 3.5 SP1 என்னும் மென்பொருளை நீங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.)


Microsoft .net Framework 3.5 SP1 என்னும் மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியதன் பின்னர் Melon Google Books Downloader என்னும் மென்பொருளை திறந்து அதில் அந்த நூலுக்குரிய இணையதள இணைப்பை வழங்குங்கள்.



Microsoft .NET Framework 3.5 SP1 என்னும் மென்பொருளை தரவிறக்குவதற்கான இணையத்தளச்சுட்டி.
Microsoft .NET Framework 3.5 SP1 என்னும் இணைப்பில் அழுத்துங்கள்.

Melon Google Books Downloader மென்பொருளை தரவிறக்குவதற்கான சுட்டி:
Melon Google Books Downloader இந்த இணைப்பில் அழுத்துங்கள்.



இதோ Melon Google Books Downloader இலிருந்து புத்தகங்களை தரவிறக்குவதற்கான வழிகாட்டி (Guide):

1.Melon Google Books Downloader ஐ திறவுங்கள்.(open Melon Google Books Downloader))




2.File ஐ தெரிவுசெய்து Add book என்பதினை அழுத்துங்கள்.





3.பின்னர் தோன்றும் menu இல் url ஐ இடுங்கள்.




4. தரவிறக்க வேண்டிய நூலினை தெரிவுசெய்து Queue என்பதினை அழுத்துங்கள்.












Tuesday, September 8, 2009

கூகுளிற்கு வயது பதினொன்று...!!!


செப்டம்பர் 7ல் கூகுள் தன் பதினோராவது ஆண்டை முடித்து 12 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி கூகுல் தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடியது.

Google Earth மற்றும் வரைபடம் மூலம் ஆகாயத்தில் அடி எடுத்து வைத்து தகவல் தொழில் நுட்ப உலகில் இன்று இன்னும் உயர உயரச் செல்லும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இளைய தலைமுறை எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகிறது. இதனுடைய வளர்ச்சியைக் காணலாம்.

1995

லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin) ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்தாய்வு செய்கின்றனர்.

1996

பேஜ் மற்றும் பெரின் பேக்ரப் என்னும் தேடு பொறியினை வடிவமைக்கின் றனர். இணையதள இணைப்புகளை இது ஆய்வு செய்து தகவல்களைத் தெரிவிக் கிறது. இதன் பின் கூகுள் முதல் பதிப்பு ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது.

1997

Google.com பதிவு செய்யப்படுகிறது. சன் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஆண்டி (Andy Bechtolsheim ) கூகுள் நிறுவனத்தில் ஒரு லட்சம் டாலர் முதலீடு செய்கிறார். Google கார் தரிப்பிடம் ஒன்றில் தன் முதல் பணி மையத்தை அமைக்கிறது. அடுத்த செப்டம்பர் 7ல், அதன் முதல் பிறந்த நாளில், கூகுள் அறிமுகமாகின்றது.

1999

கூகுள் நிறுவனம் தொழிலில் வர்த்தக ரீதியாக புது முயற்சி செய்பவர்களுக்கான முதலீடு 2 கோடியே 50 லட்சம் டாலர் பெறுகிறது. 8 ஊழியர்களுடன் முழுமையான ஓர் அலுவலகத்தினை மவுண்ட்டன் வியூ என்ற இடத்தில் அமைக்கிறது.

2000

google முதன் முதலாக Ad words என்னும் விளம்பரப் பிரிவினை அமைக்கிறது. யாஹூ கூகுள் தேடு பொறியினை தன் தேடல் சாதனமாக அமைத்துக் கொள்கிறது. பத்து மொழிகளில் கூகுள் வெளிவருகிறது. உலகின் மிகப் பெரிய வேகமான தேடல் சாதனமாக கூகுள் இடம் பிடிக்கிறது.

2001

கூகுள் நிறுவனத்தின் தலைவராக எரிக் ஸ்மித் ஆகிறார். பேஜ் மற்றும் பிரின் தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம் ஆகிய இருபிரிவுகளுக்கு ஒவ்வொருவரும் தலைவராகின்றனர். கூகுள் தேஜா. காம் நிறுவனத்திலிருந்து 1995 ஆண்டிலிருந்து வெளியான 50 கோடி தகவல்களைப் பெறுகிறது.

2002

Google labs,Google news (4000 செய்தி தொடர்பு களுடன்) மற்றும் Froogle தொடங்கப்பட்டன. அமெரிக்க இணையதள நிறுவனமான ஏ.ஓ.எல். (AOL) Google தேடு தளத்தைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறது.

2003

அமெரிக்காவில் இயங்கும் Dialogue society (வட்டார மொழி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம்) 2002 ஆன் ஆண்டில் அதிகம் பயன் படுத்தப்பட்ட சொல் “கூகுள்” எனக் கண்டு அறிவிக்கிறது. Blogs காரணகர்த்தாவான பைரா லேப்ஸ் (Blogger) நிறுவனத்தை கூகுள் பெறுகிறது.

2004

மூலதன நிதி திரட்ட பங்கு ஒன்று 85 டாலர் என்ற விலையில் பங்குகளை கூகுள் வெளியிட்டது. இமெயில் சேவை ஜிமெயில் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இத்துடன் Desktop Search வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. Picasa நிறுவனம் வாங்கப்பட்டது. அதன் தேடல் தொகுப்பு அட்டவணையில் உள்ள 600 கோடி வகைகள் google தேடு பொறிக்கு இணைந்தன.

2005

Google Earth,Google Docs,Google Space மற்றும் Google Blog search ஆகியவை தொடங்கப்பட்டன. Google reader என்ற பெயரில் RSS feed Reader அறிமுகமானது.Google Analytics என்ற இணையதள ஆய்வு சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

2006

Youtube நிறுவனம் கையகப்படுத்தப்பட்டது. Google Calendar, Gmail in mobile மற்றும் Google Finance ஆகியவை உருவாகி வெளியாயின. Google Checkout வர்த்தக நோக்கில் தரப்பட்டது. ஒரு சில பயனாளிகளுக்கென Google page creator வடிவமைக்கப்பட்டு தரப்பட்டது. ஒரு சில பிரச்சினைகளுக்குப் பின் சீனாவில் கூகுள் நுழைந்தது.

2007

Double Click என்னும் விளம்பர நிறுவனத்தை கூகுள் வாங்கியது. Jaiku என்னும் Social Mobile நிறுவனத்தினயும் பெற்றது.

2008

Google Chrome வெளியானது. வெளியான ஒரே நாளில் உலகின் மொத்த பிரவுசர் பயன்பாட்டில் 1 % மக்களிடம் சென்றது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. விக்கிபீடியாவிற்கு இணையாக கூகுள் நால் (Google Knol) வெளியானது.

2009

கூகிள் தனது Operating system ( Google Chrome OS ) அறிவிப்பை வெளியிட்டது. மைக்கரோசாப்டின் Bing தேடுபொறிக்கு போட்டியாக கூகிள் Google squared எனும் தேடுபொறியை அறிமுகப்படுத்தியது.

மைக்ரோசாப்ட் / கூகுள் யார் பெரியவர்?

தகவல் தொழில் நுட்ப உலகில் எதாவது நடந்தால் உடனே அது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான மோதலாகத்தான் இருக்கிறது. கூகுள் நிறுவனம் தொடங்கி 11 ஆண்டுகள் தான் முடிந்துள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. மனிதனின் சிந்தனைப் போக்கையே மாற்றி அமைத்த நிறுவனம் மைக்ரோசாப்ட். MS Dos, MS office, Windows, Hotmail,Visual studio, Microsoft developer network, Dot net frame work, Windows Mobile பலராலும் இன்று விளையாடப்படும் கேம்ஸ், (Age of Empires, Halo, Microsoft Flight Simulator) MSN live messenger,Vista தொழில்நுட்பம் என கணனி மற்றும் இணைய உலகை மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த நிலைக்குக் கொண்டு வந்தது மைக்ரோசாப்ட் தான்.

இருப்பினும் தேடு பொறி என்பதனைத் தன் கையில் எடுத்து அதில் எவரெஸ்ட்டைத் தொட் டது Google தான். அதனையே கணனியின் அடிப்படையாக அமைக்கத் தொடர்ந்து பாடு படும் Google திட்டம் ஒரு நாள் வெல்லலாம். அன்று மைக்ரோசாப்ட் கணனியின் நிலையையே மாற்றலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி: தேன்தமிழ்

Saturday, August 8, 2009

செப்டம்பர் 30ல் கூகுள் வேவ்


கூகுள் வேவ் குறித்து கம்ப்யூட்டர் மலரில் வந்த தகவல்கள் உங்கள் மனதில் இன்னும் இருக்கும் என எண்ணுகிறேன். சென்ற மே மாதம் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கில் இது குறித்த அறிவிப்பினை கூகுள் முதல் முதலில் வெளியிட்டது. ஆனால் அதனை அடுத்து மைக்ரோசாப்ட் தன் பிங் (Bing) சேவை குறித்து செய்திகள் வெளியிட்டு டிஜிட்டல் மீடியா கவனத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டது.
கூகுள் மே மாதம் அறிவித்த போது இது கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி சாதனையாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. தற்போதைய ஜிமெயிலின் ஒரு எக்ஸ்டென்ஷனாகத்தான் இது இருக்கும் என அனைவரும் எண்ணினார்கள். இதன் மூலம் பயனாளர்கள் இமேஜஸ், வீடியோ மற்றும் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்றும் பலர் ஒரே நேரத்தில் எளிதாகத் தங்களுக்குள் உரையாடலை நடத்திக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 30ல் இந்த சேவை பொதுமக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கனவே 6000 டெவலப்பர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு அவர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி இதனை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தந்து வருகின்றனர். அடுத்து பொது மக்களில் ஒரு லட்சம் பேரைத் தேர்ந்தெடுத்து சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளைக் கேட்க கூகுள் முடிவு எடுத்துள்ளது. இவர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று இன்னும் கூகுள் அறிவிக்கவில்லை. இது குறித்து தொடர்ந்து தகவல் பெற
http://wave.google.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.
நன்றி: கம்ப்யூட்டர்மலர்