செப்டம்பர் 7ல் கூகுள் தன் பதினோராவது ஆண்டை முடித்து 12 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி கூகுல் தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடியது.
Google Earth மற்றும் வரைபடம் மூலம் ஆகாயத்தில் அடி எடுத்து வைத்து தகவல் தொழில் நுட்ப உலகில் இன்று இன்னும் உயர உயரச் செல்லும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இளைய தலைமுறை எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகிறது. இதனுடைய வளர்ச்சியைக் காணலாம்.
1995
லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin) ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்தாய்வு செய்கின்றனர்.
1996
பேஜ் மற்றும் பெரின் பேக்ரப் என்னும் தேடு பொறியினை வடிவமைக்கின் றனர். இணையதள இணைப்புகளை இது ஆய்வு செய்து தகவல்களைத் தெரிவிக் கிறது. இதன் பின் கூகுள் முதல் பதிப்பு ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது.
1997
Google.com பதிவு செய்யப்படுகிறது. சன் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஆண்டி (Andy Bechtolsheim ) கூகுள் நிறுவனத்தில் ஒரு லட்சம் டாலர் முதலீடு செய்கிறார். Google கார் தரிப்பிடம் ஒன்றில் தன் முதல் பணி மையத்தை அமைக்கிறது. அடுத்த செப்டம்பர் 7ல், அதன் முதல் பிறந்த நாளில், கூகுள் அறிமுகமாகின்றது.
1999
கூகுள் நிறுவனம் தொழிலில் வர்த்தக ரீதியாக புது முயற்சி செய்பவர்களுக்கான முதலீடு 2 கோடியே 50 லட்சம் டாலர் பெறுகிறது. 8 ஊழியர்களுடன் முழுமையான ஓர் அலுவலகத்தினை மவுண்ட்டன் வியூ என்ற இடத்தில் அமைக்கிறது.
2000
google முதன் முதலாக Ad words என்னும் விளம்பரப் பிரிவினை அமைக்கிறது. யாஹூ கூகுள் தேடு பொறியினை தன் தேடல் சாதனமாக அமைத்துக் கொள்கிறது. பத்து மொழிகளில் கூகுள் வெளிவருகிறது. உலகின் மிகப் பெரிய வேகமான தேடல் சாதனமாக கூகுள் இடம் பிடிக்கிறது.
2001
கூகுள் நிறுவனத்தின் தலைவராக எரிக் ஸ்மித் ஆகிறார். பேஜ் மற்றும் பிரின் தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம் ஆகிய இருபிரிவுகளுக்கு ஒவ்வொருவரும் தலைவராகின்றனர். கூகுள் தேஜா. காம் நிறுவனத்திலிருந்து 1995 ஆண்டிலிருந்து வெளியான 50 கோடி தகவல்களைப் பெறுகிறது.
2002
Google labs,Google news (4000 செய்தி தொடர்பு களுடன்) மற்றும் Froogle தொடங்கப்பட்டன. அமெரிக்க இணையதள நிறுவனமான ஏ.ஓ.எல். (AOL) Google தேடு தளத்தைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறது.
2003
அமெரிக்காவில் இயங்கும் Dialogue society (வட்டார மொழி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம்) 2002 ஆன் ஆண்டில் அதிகம் பயன் படுத்தப்பட்ட சொல் “கூகுள்” எனக் கண்டு அறிவிக்கிறது. Blogs காரணகர்த்தாவான பைரா லேப்ஸ் (Blogger) நிறுவனத்தை கூகுள் பெறுகிறது.
2004
மூலதன நிதி திரட்ட பங்கு ஒன்று 85 டாலர் என்ற விலையில் பங்குகளை கூகுள் வெளியிட்டது. இமெயில் சேவை ஜிமெயில் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இத்துடன் Desktop Search வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. Picasa நிறுவனம் வாங்கப்பட்டது. அதன் தேடல் தொகுப்பு அட்டவணையில் உள்ள 600 கோடி வகைகள் google தேடு பொறிக்கு இணைந்தன.
2005
Google Earth,Google Docs,Google Space மற்றும் Google Blog search ஆகியவை தொடங்கப்பட்டன. Google reader என்ற பெயரில் RSS feed Reader அறிமுகமானது.Google Analytics என்ற இணையதள ஆய்வு சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
2006
Youtube நிறுவனம் கையகப்படுத்தப்பட்டது. Google Calendar, Gmail in mobile மற்றும் Google Finance ஆகியவை உருவாகி வெளியாயின. Google Checkout வர்த்தக நோக்கில் தரப்பட்டது. ஒரு சில பயனாளிகளுக்கென Google page creator வடிவமைக்கப்பட்டு தரப்பட்டது. ஒரு சில பிரச்சினைகளுக்குப் பின் சீனாவில் கூகுள் நுழைந்தது.
2007
Double Click என்னும் விளம்பர நிறுவனத்தை கூகுள் வாங்கியது. Jaiku என்னும் Social Mobile நிறுவனத்தினயும் பெற்றது.
2008
Google Chrome வெளியானது. வெளியான ஒரே நாளில் உலகின் மொத்த பிரவுசர் பயன்பாட்டில் 1 % மக்களிடம் சென்றது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. விக்கிபீடியாவிற்கு இணையாக கூகுள் நால் (Google Knol) வெளியானது.
2009
கூகிள் தனது Operating system ( Google Chrome OS ) அறிவிப்பை வெளியிட்டது. மைக்கரோசாப்டின் Bing தேடுபொறிக்கு போட்டியாக கூகிள் Google squared எனும் தேடுபொறியை அறிமுகப்படுத்தியது.
மைக்ரோசாப்ட் / கூகுள் யார் பெரியவர்?
தகவல் தொழில் நுட்ப உலகில் எதாவது நடந்தால் உடனே அது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான மோதலாகத்தான் இருக்கிறது. கூகுள் நிறுவனம் தொடங்கி 11 ஆண்டுகள் தான் முடிந்துள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. மனிதனின் சிந்தனைப் போக்கையே மாற்றி அமைத்த நிறுவனம் மைக்ரோசாப்ட். MS Dos, MS office, Windows, Hotmail,Visual studio, Microsoft developer network, Dot net frame work, Windows Mobile பலராலும் இன்று விளையாடப்படும் கேம்ஸ், (Age of Empires, Halo, Microsoft Flight Simulator) MSN live messenger,Vista தொழில்நுட்பம் என கணனி மற்றும் இணைய உலகை மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த நிலைக்குக் கொண்டு வந்தது மைக்ரோசாப்ட் தான்.
இருப்பினும் தேடு பொறி என்பதனைத் தன் கையில் எடுத்து அதில் எவரெஸ்ட்டைத் தொட் டது Google தான். அதனையே கணனியின் அடிப்படையாக அமைக்கத் தொடர்ந்து பாடு படும் Google திட்டம் ஒரு நாள் வெல்லலாம். அன்று மைக்ரோசாப்ட் கணனியின் நிலையையே மாற்றலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி: தேன்தமிழ்
Tuesday, September 8, 2009
கூகுளிற்கு வயது பதினொன்று...!!!
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment