Microsoft Powerpoint இன் உதவியுடன் உருவாக்கப்பட்ட கோப்புக்களை மிகவும் இலகுவான முறையில் Flash வடிவத்திற்கு மாற்ற உதவும் மென்பொருளின் தான் iSpring . அதாவது இது ஒருவைகையில் நமது இணைய வழியிலான கற்றல் செயற்பாடுகளுக்கு பெரும் உறுதுணையாக அமையும்.
நீங்கள் iSpring என்ற மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியதன் பிற்பாடு. உங்களுக்கு தேவையான Microsoft Powerpoint கோப்புக்களை தரவேற்றி இலகுவாக Flash வடிவத்திற்கு மாற்றி அமைக்கலாம்.
இந்த மென்பொருள் ஆனது Windows 2000/XP/2003/2007 ஆகிய இயங்குதளங்கள் ( operating systems )நிறுவப்பட்டுள்ள கணனிகளில் மாத்திரமே பயன்படுத்தலாம்.
அவ்வாறு நீங்கள் பதிவேற்றிய கோப்புக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள http://www.slideboom.com/ என்ற இணையத்தளத்தை பயன்படுத்தி பதிவேற்றி கொள்ளலாம்.
இது ஒரு இலவச மென்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.
தரவிறக்குவதற்கான இணையச்சுட்டி: iSpring அல்லது
http://www.ispringsolutions.com/down...g_free_4_2.exe
நீங்களும் பயன்பெறுங்கள் மற்றவர்களையும் பயன்பெற செய்யுங்கள்.
Saturday, September 19, 2009
Powerpoint கோப்புக்களை Flash வடிவில் மாற்றுவதற்கான இலவச மென்பொருள்
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment