Thursday, September 10, 2015

Apple iPhone 6S and 6S Plus அறிமுகம்

கைத்தொலைபேசி துறையில் புதிய பரிமாணங்களை படைத்துவரும் Apple நிறுவனமானது செப்டெம்பர் 9ம் திகதி, 2015 இல் தனது புதிய பதிப்பான iPhone 6S மற்றும் iPhone 6S Plus ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Retina® HD என்னும் தொடுதிரையுடன் முப்பரிமாண தொடுதிறனுடன் (3D Touch) மற்றும் பல அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது.

iPhone 6S மற்றும் iPhone 6S Plus இன் Features and Specifications ஐ இங்கே பட்டியலிட்டுள்ளேன்.

 iPhone6S

•Silver, Gold, Space Grey and Rose Gold colour options in 7000 series aluminium

• 4.7in (1334x750, 326ppi) Retina HD display with 1400:1 contrast ratio, 500 cd/m2 brightness, fingerprint-resistant oleophobic coating, Reachability

• Apple A9 64-bit processor with embedded M9 motion coprocessor

• 16GB, 32GB or 64GB of storage

• 12Mp iSight camera with 1.22µ pixels, f/2.2 aperture, five-element lens and True Tone flash, now with support for Live Photo and 4K video recording

• 5Mp FaceTime HD selfie camera with Retina Flash and 720p video

• Second-generation Touch ID fingerprint sensor

• 802.11a/b/g/n/ac Wi-Fi with MIMO

• Bluetooth 4.2

• NFC

• aGPS and GLONASS

• 4G LTE Advanced

• iOS 9

• 138.3x67.1x7.1mm

• 143g
                       
   


Thursday, September 3, 2015

Google Logo ஒரு பார்வை

இணையத்தேடல் மூலமாக காலடி எடுத்து வைத்த Google ஆனது இன்று மென்பொருள் உருவாக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பல புரட்சிகளை செய்துகொண்டிருக்கின்றது. அதே நேரம் அதன் சின்னங்களையும்(Logo) காலத்துக்கு காலம் மாற்றி வருகிறது. அந்த வகையில் செப்டெம்பர் முதலாம் திகதி, 2015 இல் அதன் சின்னத்தை மாற்றி அமைத்திருக்கின்றது.
அதைவிட இந்த பதிவில் இதுவரை காலமும் Google மாற்றி அமைத்த சின்னங்கள் மீதான ஒரு பார்வை..

1. 1998
லாரி பேஜ் மற்றும் சேர்கே பிறின் பல்கலைக்கழக ஆய்வுக்கட்டுரைக்காக பயன்படுத்திய முதல் சின்னம்.
Larry Page and Sergey Brin use this logo for their Stanford University graduate project.
2.30 August 1998
The team heads to Burning Man and creates the first Doodle as an out of office message.
3.September 1998
Google moves to google.com and shares its beta release with the world.


4.May 1999
Still playful, the logo gets a more sophisticated look based on the Catull typeface.
5.May 2010
The logo brightens up and sports a reduced drop shadow.


6. September 2013
The logo goes flat with some typographical tweaks.


7. September 2015
The logo becomes part of a new family that includes the Google dots and 'G' icon.Wednesday, December 18, 2013

கூகிள் இணையத்தேடலில் இதயம் வரைவது எப்படி?

இணையத்தேடலில் பயணத்தை தொடங்கிய கூகுள் ஆனது இன்று மென்பொருள் உருவாக்கம், வரைப்படத்தளம்,நூலகம்,நிரலாக்கமொழி மற்றும் இணையம் ஊடான கொடுக்கல் வாங்கல்கள், போன்ற பல்வேறுபட்ட துறைகளில் காலடி பதித்திருக்கின்றது.
அதன் ஒரு அங்கமாக நகைச்சுவை தேடல் என்பதை அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களில்தந்துகொண்டிருக்கின்றது. அத்தகைய ஒரு தேடல் தான் இதயத்தை கூகுளில் வரைவது.

அதற்கான வழிமுறைகள்

1. கூகுள் தளத்திற்கு செல்லுங்கள்.
     Just go to www.google.com


2. அதன் தேடல் பகுதியில் கீழே வழங்கப்பட்டவாறு தட்டச்சு செயுங்கள்.
     (sqrt(cos(x))*cos(200*x)+sqrt(abs(x))-0.7)*(4-x*x)^0.1, sqrt(9-x^2),-sqrt(9-x^2) from -4.5 to 4.5

Friday, February 1, 2013

தமிழ் மென்பொருட்கள்-Android

உலகின் இணையத்தேடலில் சாதனை படைத்த கூகிளானது(GOOGLE) இன்று பல்வேறுபட்ட விடயங்களிலும் காலடி பதித்துள்ளது. அந்தவகையில் கூகிளின் android இயங்குதளமானது கைத்தொலைபேசிகள், Tablets, Tabs,மற்றும்  Pads (Apple iPad  அல்ல). போன்ற பல்வேறுபட்ட இலத்திரனியல் ஊடக சாதனங்களில் இயங்குதளமாக செயற்படுகிறது. அவற்றில் பயன்ப்படுத்தவென சில பயனுள்ள மென்பொருட்கள் சிலவற்றை இங்கு தருகிறேன்.
தமிழ் எழுத்துருக்கள் சார்ந்த மென்பொருட்கள்.


தமிழ் சார்ந்த மென்பொருட்கள் 


தமிழ் நூல்கள்


இன்னும் பல தமிழ் சார்ந்த விடயங்கள் பல உள்ளன.

அடுத்த பதிவில் கட்டுமானங்கள் தொடர்பான மென்பொருட்களை தருகிறேன்.

Friday, July 6, 2012

கூகிளில் சில வித்தியாசமான ஆச்சரியப்படக்கூடிய தேடல்கள்தேடல் துறையில் சாதனைகளை படைத்துவரும் கூகிளானது சில வித்தியாசமான தேடல்களையும் தருகிறது அத்தகைய தேடல்கள் சில....

1.Do a barrel roll :  google.com சென்று Do a barrel roll என்றவாறு தட்டச்சு  செய்யுங்கள். என்ன நடக்கிறதென்று பாருங்கள்.


2. Zerg rush: கூகிளில் Zerg rush என்றவாறு தட்டச்சு செய்து 10 விநாடிகள் பொறுத்திருந்து பாருங்கள்.

3. Google Gravity trick: கூகிளில் Google Gravity trick: என்று தட்டச்சு செய்துவரும் தேடல் முடிவில் முதலாவது தேடல் முடிவின் மீது அழுத்துங்கள்.


4.Google's Les paul Guitar: கூகிலானது Les paul என்னும் இசைக்கலைஞரின் 96 ஆவது பிறந்தநாளை கௌரவிக்கும் முகமாக கொண்டுவரப்பட்ட ஒரு தேடல் நீங்களும் இசைத்து மகிழ்திடுங்கள்.


5.  Askew: கூகிளில்  Askew என்றவாறு தட்டச்சுசெய்து என்ன நடக்கிறதென்று பாருங்கள்.

Friday, June 29, 2012

கையடக்கத்தொலைபேசிகளில் கோப்புறைகளை(Folder) மறைத்து வைத்துக்கொள்வது எப்படி?

கையடக்கத்தொலைபேசிகளில் கோப்புகளையோ அல்லது ஆவணங்களையோ எந்த மென்பொருளின்  உதவியும் இன்றி மறைத்துவைப்பதற்கான ஒரு வழிமுறைதான் இது.
1. முதலில் ஒரு கோப்பொன்றை (Folder) உருவாக்கிகொள்ளுங்கள் அல்லது ஏற்கனவே உள்ள ஒரு கோப்பையும்(Existing Folder) மறைத்துவைக்க பயன்படுத்தலாம்.
2.மறைத்துவைத்துக்கொள்ளவேண்டிய கோப்பை(Folder) .jad என்னும் நீட்சியுடன்(Extension) மீள் பெயரிட்டுக்கொள்ளுங்கள்(Rename the folder  with extension of  .jad) உதாரணம்: IMAGES.jad
3.இப்பொழுது அதேபெயரில் புதிய கோப்பொன்றை .jar என்ற நீட்சியுடன்(extension) உருவாக்கிக்கொள்ளுங்கள்.(now create a new folder with same name in the same directory with extension of .jar). உதாரணம் : IMAGES.jar
4.இப்பொழுது IMAGES.jad என்னும் கோப்புறை மறைந்துவிடும்.

நீங்கள் மீண்டும் மறைந்து காணப்படும் கோப்புறையை பெற்றுக்கொள்ள .jar என்னும் நீட்சியுடன் உருவாக்கிய கோப்புறையிலுள்ள .jar என்னும் நீட்சியை அகற்றிவிடுங்கள்.

(நீண்ட நாட்களாக மிகுந்த வேலைப்பளு காரணமாக பதிவுலகப்பக்கம் தலைகாட்டமுடியவில்லை இனி அவ்வப்போது பதிவிடுவன் என்று நம்புறன்)

Friday, July 1, 2011

விஞ்ஞானரீதியாக பயன்படுத்தத்தக்கவகையிலே உருவாக்கப்பட்டுள்ள இலவச கணிப்பொறி(Calculator) மென்பொருள்

கணிப்பொறிகள்(Calculators) கணனிகளுக்கு முற்பட்ட காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. கணிப்பொறிகளின் அடுத்த தலைமுறையாகத்தான் கணனிகள் கருதப்படுகின்றன. அத்தகைய கணிப்பொறிகள் இன்று கணனியில் பயன்படுத்தக்கூடிய விதத்தில் மென்பொருளாக வெளிவருகின்றன. அவ்வாறானதொரு கணிப்பொறி மென்பொருள் RedCrab.
RedCrab எனப்படும் இந்த இலவச மென்பொருளானது விஞ்ஞானரீதியாக பயன்படுத்தக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவவேண்டிய(Installation) அவசியம் இல்லை. இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் வழங்கும் தரவுகளுக்கு ஏற்ற முறையிலே வரைபுகளையும் தயரித்துக்கொள்ளமுடியும். மிகவும் பயனுள்ளதொரு மென்பொருள். 
தரவிறக்கச் சுட்டி: RedCrab


Monday, July 5, 2010

கூகிளின் இரகசிய சமூக வலைத்தள உருவாக்கம்

இணைய உலகில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திவரும் கூகிளானது மிகவும் இரகசியமான முறையில் Facebook சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக புதியதொரு சமூக வலைத்தளமொன்றினை உருவாக்கி வருகின்றது. 
 Google me என்னும் பெயரில் அமைந்த இந்த வலைத்தளமானது மிகவும் இரகசியமான முறையிலே உருவாக்கப்பட்டு வருகின்றது. சமூக வலைத்தளங்களின் ஆராய்ச்சிகளில் பிரபல்யம் பெற்று விளங்கும் எடம் டி அஞ்சேலோ (Adam D Angelo) என்பவர் இந்த தகவலை உருத்திப்படுத்தியுள்ளார். இது ஒரு வதந்தியல்ல எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் கிடைத்த தகவல் எனவும் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே Google Buzz என்னும் twitter க்கு போட்டியாக உருவாக்கிய கூகிள் Google me என்னும் சமூக வலைத்தளத்தினையும் விரைவில் அறிமுகப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும் Facebook உடன் போட்டியாக அமையுமா என்பதினை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Thursday, June 17, 2010

கூகிளின் முகப்பு பக்கத்தின் (Home Page) பின்னணி (Background) வடிவினை எவ்வாறு மாற்றுவது?

அதிரடி அறிவிப்புகள் மற்றும் பல சேவைகளை வழங்கிவரும் கூகிள் அண்மையில் தனது முகப்பு பக்கத்தின் (HOME PAGE) பின்னணி(Background) வடிவத்தினை  நாங்கள் விரும்பிய வடிவங்களில் மாற்றக்கூடியவிதத்தில்  சிறப்பான ஒரு சேவையை வழங்குகின்றது. இந்த சேவையின் மூலமாக கூகிளின் முகப்பு பக்கத்தின் பின்னணியினை  எமக்கு பிடித்தமான படத்தினைக்கொண்டு மாற்றியமைக்க முடியும்.
இதைவிட கூகிள் வழங்கும் படங்களின் மூலமாகவும் மாற்றியமைக்கலாம்.
 
கூகிளின் முகப்பு பக்கத்தின் பின்னணியினை  மாற்றியமைப்பதற்கான வழிமுறைகள்:

1. முதலில் கூகிளின் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்.(Go to Google Homepage)
பின்னர் அதில் தோன்றும் Change background image என்னும் இடத்தில் அழுத்துங்கள்.


2. பின்னர் உங்களுடைய ஜிமெயில் மின்னஞ்சல்(Gmail Account ID) மற்றும் கடவுச்சொல் (password)  ஆகியவற்றை வழங்கி புகுபதிகை(Login) செய்துகொள்ளுங்கள்.
 

3. புகுபதிகை செய்தபின்னர் நீங்கள் விரும்பிய படத்தினைக்கொண்டு பின்னணி வடிவத்தினை மாற்றியமைக்கலாம்.


4. படத்தினை தெரிவுசெய்த பின்னர் Select என்பதினை அழுத்துங்கள் இப்பொழுது பின்னணி வடிவமானது உங்களுக்கு பிடித்தமான படத்துடன் தோற்றமளிக்கும்.

Monday, June 14, 2010

பதிவுகளை திருடி வெளியிடுபவர்களின் கவனத்திற்கு........


பதிவுகளை இணையத்தளங்களில் இருந்தோ அல்லது வலைப்பூக்களில் இருந்தோ திருடி தங்களின் வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடுபவர்களின் கவனத்திற்காக இந்த பதிவை எழுத்துகின்றேன். பல பதிவர்களின் பதிவுகளை திருடி சில இணையத்தளங்களிலும் மற்றும் வலைப்பூக்களிலும் வெளியிடுகின்றார்கள். அவ்வாறு வெளியிடுவது தவறில்லை ஆனால் அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் தயவுசெய்து எந்த வலைப்பூக்களில் திருடினார்களோ அந்த வலைப்பூக்களின் பெயர்களை அந்த பதிவுகளின் கீழே பதிவிட்டுக்கொள்ளுங்கள்.
இந்த வகையில் என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்ட இணையத்தளங்களிலும் மற்றும் வலைப்பூக்களிலும் வெளிவந்துள்ளன. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

என்னுடைய பதிவுகள் வெளியிடப்பட்ட சில இணையத்தளங்களின் பெயர்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

www.tamilcnn.com
(http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=3351&Itemid=444)

www.z9tech.com
(http://www.z9tech.com/mobile.php?page=5)

www.paranthan.com
(http://parantan.com/pranthannews/Detail.asp?id=12707)

http://computerthaha.blogspot.com
(http://computerthaha.blogspot.com/2010/06/facebook-voice-and-video-chat.html)

http://tamilwep.blogspot.com/2010_05_01_archive.html

இன்னும் பல வலைப்பூக்களில் இத்தகைய எனது பல பதிவுகள் வெளிவந்துள்ளன.

குறிப்பு: தகவல் தொழில்நுட்பப் பூங்காவானது(http://tamilitpark.blogspot.com) முன்னர் வன்னி தகவல் தொழில்நுட்பம்(http://vannitec.blogspot.com) என்னும் பெயரில் இயங்கிய வலைப்பதிவு என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக வலைப்பதிவின் பெயரில் மாற்றம் செய்த்துள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் தங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.Saturday, May 29, 2010

அலுவலக பாவனைக்கென உருவாக்கப்பட்டுள்ள இலவச Portable Application


கணணி மற்றும் இணைய உலகில் பல்வேறுபட்ட மென்பொருட்கள் குவிந்து காணப்படுகின்றன. அத்தகைய மென்பொருட்களை கணனியில் நிறுவாமல் USB Pendrive போன்றவற்றில் எடுத்துச்சென்று பயன்படுத்தக்கூடிய வகையில் பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் காணப்படும் மென்பொருள்தான் இது.
Tiny USB Office எனப்படும் இந்த மென்பொருளானது கணனியில் நிறுவாமல் Portable Application ஆக எடுத்துச்சென்று பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது பிரத்தியேகமாக அலுவலக பாவனைக்கு தேவையான அடிப்படை மென்பொருட்களை உள்ளடக்கியுள்ளது. இது ஒரு இலவச மென்பொருள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

இந்த மென்பொருள் கொண்டிருக்கும் அடங்கியுள்ள மென்பொருட்களின் பட்டியல்:
Database Creation – with CSVed

Data Encryption – with DScrypt
Email Client Software – with NPopUK
File Compression – with 100 Zipper
File Sharing – with HFS
File Transfer – with FTP Wanderer
Flowchart Creation – with EVE Vector Editor
MSN Messenger Client – with PixaMSN
Tree-Style Outliner Software – with Mempad
PDF Creation – with PDF Producer
Password Recovery – with XPass
Secure Deletion – with DSdel
Spreadsheet Creation – with Spread32
Text Editing – with TedNotepad
Word Processing – with Kpad
Program Launching – with Qsel

மிகவும் பயனுள்ளதொரு மென்பொருள்.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி:  Tiny USB Office
http://www.xtort.net/apps/tiny_usb_office.zip  

Thursday, May 27, 2010

Facebook இன் புதிய வரவு: குரல்வழி மற்றும் முகம்பார்த்து அரட்டை(Voice and Video chat)வசதி அறிமுகம்.


 அதிரடியாக வளர்ந்து வரும் சமூக வலைப்பின்னல் ஆகிய Facebook நீண்டகாலமாக பரீட்சார்த்த நிலையில் இருந்த குரல்வழி மற்றும் முகம்பார்த்து அரட்டை(Voice and Video chat) பண்ணும் தொழில்நுட்பத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னமும் Beta நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FriendCam Video Chat  என்னும் பெயருடன்  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மென்பொருளானது இணைய உலகில் Skype க்கு போட்டியாக அமைந்திருக்கின்றது. இருந்தபோதிலும் இந்த மென்பொருளானது சில அடிப்படை பிரச்சனைகளை இன்னும் நிவர்த்திசெய்யவில்லை. Beta நிலையிலுள்ளமையினால்  இது காலப்போக்கில் சரிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இணைப்பு:   http://apps.facebook.com/webcamfb/?t=gSunday, May 9, 2010

மெய்நிகர் விசைப்பலகை(Virtual Keyboard)- கூகிளின் புதியதொரு சேவை.

இணைய உலகில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி பல்வேறுபட்ட புதிய இணையவழி மென்பொருட்களை அறிமுகப்படுத்திவரும் கூகிளானது அண்மையில் புதியதொரு சேவையொன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது.
மெய்நிகர் விசைப்பலகை (Virtual Keyboard) என்ற புதியதொரு சேவையை தேடல் துறைக்கென அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உச்சரிப்பு(Phonetic) முறையில் தட்டச்சு செய்து தேடல்களை மேற்கொள்ளமுடியும்.
எவ்வாறு உச்சரிப்பு முறையில் தேடுவது?

முதலில் Google இணையத்தளத்துக்கு செல்லுங்கள். http://www.google.lk  அல்லது http://www.google.co.in .
தமிழ்மொழியை தெரிவுசெய்துகொள்ளுங்கள்.

பின்னர் தேடல்பெட்டிக்கு (SearchBox) அருகில் விசைப்பலகை அடையாளத்தை அழுத்துங்கள்.


அதில் தோன்றும் விசைப்பலகையில் Alt+Ctrl என்பதை அழுத்துங்கள். இனி விசைப்பலகையானது தமிழில் தோன்றும்.
இனி உங்கள் விருப்பபடி தட்டச்சு செய்து தேடிக்கொள்ளுங்கள்.

Saturday, May 8, 2010

கணணி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவென சில பயனுள்ள Command Prompt கட்டளைகள்.

Command prompt என்பது கணனியில் மிகவும் பயனுள்ள ஒரு பகுதியாகும். இந்த Command prompt ஊடாக எமது கணணியை செயற்படுத்தமுடியும். இந்த Command prompt அன்னது எமக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை தரவல்லது. Command prompt இன் உதவியுடன் எமது கணணி குறித்த பல தகவல்களை பெற்றுகொள்ள முடியும். நாம் சில கட்டளைகளை  வழங்கினால் போதும் அவை குறித்த பல தகவல்களை நாம் பெற்றுக்கொள்ளமுடியும்.
அத்தகைய Command prompt இல் பயன்படுத்தி எமது கணனி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவென சில கட்டளைகளை இங்கு தருகிறேன்.

முதலில் Command prompt ஐ திறந்து கொள்ளுங்கள்.
Command prompt ஐ திறந்துகொள்வதற்கான வழிமுறைகள் இதோ.
 Start-->>Accesories-->>Command prompt
அல்லது
Start-->>Run  இல் cmd என தட்டச்சு செய்து திறந்துகொள்ளுங்கள்.

கீழ்வரும் கட்டளைகளை தோன்றும் Command prompt இல் தட்டச்சு செய்து கணணி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

1.கட்டளை: systeminfo
கணனியின் Host Name மற்றும் இயங்குதளம் குறித்த தகவல்கள் போன்ற இன்னும் பல தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

2. கட்டளை: driverquery 
கணனியின் இயக்கிகள்(Drivers) குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

3. கட்டளை: subst W: C:\windows

4. கட்டளை: tasklist 
கணனியில் இயங்கிக்கொண்டிருக்கும் Programs குறித்த தகவல்களை பெறுக்கொள்ளமுடியும்.

5.கட்டளை: ipconfig /all
உங்கள் கணனியின் IP முகவரியினையும் மற்றும் வலையமைப்பு குறித்த தகவல்களையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

6. கட்டளை: net user
கணணி பயனாளர்கள்(User names) குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

Sunday, April 25, 2010

ஆவணங்களை பாதுகாத்துக்கொள்ளவென ஒரு இலவச மென்பொருள்

பொது இடங்களிலோ அல்லது வீடுகளிலோ உங்கள் கணனியில் முக்கியமான ஆவணங்களை நீங்கள் கோப்புறைகளில்(Folders) இட்டு பாதுகாத்துக்கொள்ளும்போது மற்றவர்கள் உங்கள் ஆவணங்களை பார்வையிடாமல் பாதுகாப்பாக வைத்துகொள்ளவென பல மென்பொருட்கள் மற்றும் பலவழிகள் உள்ளன. அவ்வாறான வழிகளில் இதுவும் ஒன்று.

கோப்புறைகளை(Folders) பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவென இலவச மென்பொருள் பற்றிய ஒரு பதிவுதான் இது. FileSecrets எனப்படும் இந்த மென்பொருளானது கோப்புறைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.  மற்றவர் உங்கள் கோப்புறைகளை திறக்க முடியாதபடியும் கடவுச்சொல் வழங்கியும் மறைத்தும் பாதுகாப்பாக கோப்புறைகளை வைத்திருக்க முடியும்.

கணனியில் FileSecrets எனப்படும் இந்த மென்பொருளை முதலில் நிறுவிக்கொள்ளுங்கள்
பின்னர் நிறுவிய மென்பொருளை திறந்து file or folder என்ற இடத்தில் நீங்கள் பாதுகாக்க வேண்டிய மென்பொருளை browse என்பதில் அழுத்தி (Click) தெரிவுசெய்துகொள்ளுங்கள்.
பின்னர் Action என்ற இடத்தில் எந்த வகையில் உங்கள் கோப்புறைகளை பாதுகாக்க போகிறீர்கள் என்பதை தெரிவு செய்துகொள்ளுங்கள்.
பின்னர் add என்பதை அழுத்தி பாதுகாக்க வேண்டிய கோப்புறையை இணைத்துக்கொள்ளுங்கள்.
பாதுகாத்த கோப்புறைகளை திறந்துகொள்ளும்போது  நீங்கள் வழங்கிய Action க்கு ஏற்ப பின்வரும் எச்சரிக்கைகளை அது காண்பிக்கும்.

1.Deny Access to File or Folder :
2.Deny Modify to File or Folder:
3.Password Protection :மென்பொருளை தரவிறக்க இணையச்சுட்டி:  FileSecrets
http://www.pogisys.com/downloads/FileSecretsSetup.exe 
 

Wednesday, April 21, 2010

படங்களின் அளவுகளை(Capacity) சுருக்குவதற்கான பயனுள்ள இலவச மென்பொருள்

நண்பர்களுக்கு எங்கள் படங்கள்,புகைப்படங்களை (Images,Photos) மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறுவழியிலோ பகிர்ந்துகொள்ளும்போது அவை மிகப்பெரிய அளவுகளில் இருந்தால் எம்மால் சிலவேளைகளில் பகிர்ந்துகொள்ளவோ அனுப்பவோ முடியாதநிலை ஏற்படும். அத்தகைய இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்கென பிரத்தியேகமாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

மிகப்பெரிய அளவிலான (Capacity) படங்களின் அளவுகளை அவற்றின் தன்மை மாறாமல் (Resolution) மிகக் குறைந்தளவில் படங்களை, புகைப்படங்களை சுருக்கிக்கொள்ளலாம்.  RIOT (Radical Image Optimization Tool) எனப்படும் இந்த மென்பொருளானது 1MB க்கும் குறைவான அளவில் கிடைப்பதால் மிக இலகுவாக தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளலாம். உங்கள் தேவைக்கேற்ப சுருக்கும் படங்களின் அளவுகளை நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.  படங்களின் அளவுகளை சுருக்குவதற்கான திறன்வாய்ந்த பயனுள்ள மென்பொருள்.

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: RIOT
http://luci.criosweb.ro/riot/ 

Monday, March 22, 2010

இலவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள் (Create Free Website)

இணையத்தளங்களை உருவாக்க விரும்புபவர்கள் பணம் செலுத்தி இணையமுகவரியை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் அதற்கான வடிவமைப்புக்களையும் செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் எமக்கான இணையத்தளங்களை எத்துவித செலவும் இல்லாமல் இலவசமாக இணையமுகவரி மற்றும் இணைய வார்ப்புருக்களுடன்(Web Templates) இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அத்தகைய இணையத்தளங்களை உருவாக்குவதற்கு சில இணையசேவை வழங்குனர்கள் இந்த சேவைகளை சில வரையறைகளுடன் உங்களுக்கு தருகின்றார்கள்.
அத்தகைய சேவைகளை வழங்கும் இணையத்தளங்கள்.

1. Webs
இணையத்தளமுகவரி: http://www.webs.com/2. Webnode
இணையத்தளமுகவரி: http://www.webnode.com/3. Wetpaint
இணையத்தளமுகவரி: http://www.wetpaint.com/ 4.Weebly
இணையத்தளமுகவரி: http://www.weebly.com/


5. yola
இணையத்தளமுகவரி: http://www.yola.com/6. own-free-website
இணையத்தளமுகவரி: http://www.own-free-website.com/
7. Jimdo
இணையத்தளமுகவரி: http://www.jimdo.com/