நேற்று தான் Yahoo Messenger பதிப்பு-9 வெளியானது போல நாம் உணர்ந்திருக்கும் வேளையில், தற்போது பதிப்பு-10 இன் சோதனைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. பதிப்பு 9 வெளியாகி இன்னும் ஓர் ஆண்டு கூட முடியவில்லை என்று நினைக்கிறேன். தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் yahoo பணியாற்றி இதனை வெளியிட்டுள்ளது.
சமூக வலையமைப்பு மற்றும் வீடியோ வழி அழைப்பு இதில் மேம்படுத்தப் பட்டுள்ளது.
வீடியோ வழி அரட்டை அழைக்க இப்போது Icon ஒன்று தரப்பட்டு எமது வேலை எளிதாக்கப்பட்டுள்ளது.Instant Messenger வசதி தரும் பல Client Programs, webcam வழியாக ஒலி எழுப்பி அழைக்கும் வசதியைத் தருகின்றன. ஆனால் இந்த நடைமுறை இந்த பதிப்பில் Yahoo மாற்றியுள்ளது. இதன் மூலம் Skype செயல்பாட்டிற்கு, தான் ஒரு போட்டியாளர் என Yahoo காட்டியுள்ளது. ஏனென்றால் Skype தான் Voice Over Internet Protocol(VOIP) வழிகளுக்கு முதலில் வழி வகுத்தது.
இந்த பதிப்பில் வீடியோ அரட்டை , பேசும் ஒலிக் கூர்மை, படத் தெளிவு ஆகியவை சிறப்பாக உள்ளன. வீடியோ அழைப்பு அமுலில் இருக்கையில் ஆவணம்(file) பகிர்ந்து கொள்வது சில நேரம் குறைவான வேகத்தில் நடைபெறுகிறது. இதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் கணனி மற்றும் இணைய வேகமாகக் கூட இருக்கலாம். எனவே மிகச் சிறப்பாக இந்த பதிப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றால், கீழ்க்குறித்த அளவிலாவது நம்மிடம் வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருள்(சாப்ட்வேர்) இருக்க வேண்டும். Windows XP அல்லது அடுத்து வந்த Operating system, 1GHz Processor, 512MB RAM MEMORY, குறைந்தது 300Kbs வேகத்தில் இணைய இணைப்பு வேகம், அதேபோல குறைந்தது 128Kbs வேகத்தில் தரவேற்றும் (Uploading) வசதி, webcam, Microsoft Directx பதிவு ஆகியவை அமைப்பில்(system) இருக்க வேண்டும். இன்னும் தெளிவாகத் தேவைகளை Yahoo தளத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிக தகவல்களுக்கு : http://messenger.yahoo.com/winbeta
0 கருத்துரைகள்:
Post a Comment