தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக வெளிவந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக்குடும்பங்களும், பத்திற்கும் மேற்பட்ட விசைப்பலகை வகைகளும் உள்ளன. இதனால் ஒரு எழுத்துருவில் தட்டச்சு செய்தோர் மற்ற எழுத்துருவில் அத்தகவலை பார்க்க முடியாமல், தட்டச்சு செய்ய முடியாமல் உள்ளனர். இதே போல் ஒரு விசைப்பலகையில் பழகியோர் அந்த விசைப்பலகை துணை செய்யாத மற்ற எழுத்துருக்களில் தட்டச்சு செய்ய முடியாத நிலை உள்ளது. 'விருப்பப்படி' மென் பொருளானது மேற்கூறிய சிக்கல்களை எளிதாக தீர்த்து வைக்கிறது. அதாவது ஒரு தகவல் எந்த எழுத்துருவில் உருவாக்கப்பட்டிருந்தாலும், எந்த விசைப்பலகை முறையை பயன்படுத்தி உருவாக்கப் பட்டிருந்தாலும், ஒருவர் அதே எழுத்துருவில் அவர் அறிந்த விசைப்பலகை முறையை கொண்டு 'தட்டச்சு' செய்ய முடியும். அதாவது எந்த விசைப் பலகை முறையை கொண்டும் எந்த எழுத்துருவிலும் தட்டச்சு செய்யவோ அல்லது ஏற்கனவே தட்டச்சு செய்ததை 'தட்டச்சு' செய்யவோ முடியும். இம்மென்பொருளை பயன்படுத்தி பெரும்பாலான மென்பொருள்களில்(MS Office,Corel draw,Pagemaker..) தட்டச்சு செய்ய முடியும். இந்த பயன்பாடு விருப்பபடி மென்பொருளின் முதன்மையான வசதியாக கூறப்பட்டாலும் மேலும் பல மேம்பட்ட வசதிகளை கொண்டுள்ளது.
கீழ்காண்பது விருப்பப்படி மென் பொருளின் விசைப் பலகை மற்றும் எழுத்துருக் குடும்பம் தேர்வு செய்யும் முறை ..
குறிப்பாக" தன்னியக்க திருத்தம் "( Autocorrect ) எனும் வசதி எல்லா மென்பொருள்களிலும் இயங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இவை தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க உதவுகிறது. அடுத்ததாக "Font Sampler" எனப்படும் எழுத்துருக்களை குழுக்களாக காட்டும் வசதி உள்ளது. இவ்வசதியினால் ஏராளமாக எழுத்துருக்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த முடியாமல் இருக்கும் பல பயனாளர்கள் பெரிதும் பயன் பெறுவர். சிறப்பம்சமாக தமிழ் - ஆங்கிலம் அகராதியை கொண்டுள்ளது. இதில் ஏறத்தாழ 60000 ஆங்கில வார்த்தைகளுக்கு 1,50,000 தமிழ் பொருள்களை கொண்டுள்ளது. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலிருந்தும் எந்த எழுத்துருவிற்கும் ஒரு தகவலை மாற்றிக் கொள்ள முடியும். ஒருங்குறி மூலமாகவும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் சிறப்பம்சங்களாக முகவரி புத்தகம் மற்றும் மின்னஞ்சல் சேவையையும் விருப்பப்படி கொண்டுள்ளது.
தமிழ் மொழியைப் பொறுத்தவரை கணினியில் அதன் அடுத்தக் கட்ட இலக்குகளை அடைவதில் தடையாக இருந்தவை எழுத்துருச்சிக்கல்கள், விசைப்பலகையில் உள்ள குழப்பங்கள் ஆகியவை ஆகும். இவற்றை முழுமையாக தீர்த்து வைக்கும் விதமாக "விருப்பப்படி" மென் பொருள் வெளிவந்துள்ளது. மேலும் சொல் திருத்தி போன்ற கருவிகளுக்கு அடிப்படையான " தன்னியக்க திருத்தம் "(Auto Correct) வசதியுடன் வெளிவந்துள்ளது சிறப்பான ஒன்றாகும். உண்மையில், 'எந்த எழுத்துருவிலும், எந்த விசைப்பலகையிலும்' என்ற நிலை ஒரு கனவு போலத்தான் இருந்து வந்திருக்கிறது இதுவரை. ஆனால் விருப்பப்படி இக்கனவை நிறைவேற்றி உள்ளது.
மேலும் இதுவரையில் வெளிவந்திருக்கும் ஏராளமான எழுத்துருக்களில் எதில் தட்டச்சு செய்யப்பட்ட தகவல்களையும் எளிதாக நாம் விரும்பிய எழுத்துருவிலோ அல்லது ஒருங்குறியிலோ மாற்றம் செய்து கொள்ள முடிவது மிகவும் அரிய ஒரு வசதியாகும். தற்போது அதிக அளவில் பயன்படுத்தபடுகின்ற மொழிமாற்றும் ( transliteration )விசைமுறையை பயன்படுத்தியும் கூட எல்லாவகை எழுத்துருக்களிலும், ஒருங்குறியிலும் தட்டச்சு செய்ய முடியும் என்றவாறு உருவாக்கியுள்ளது மிகவும் சிறப்பானதொரு முன்னேற்றமாகும். இம்மென் பொருளின் பயன்பாட்டு எல்லைகள் உண்மையில் கணக்கிட முடியாததாகும். இதுவரை வந்துள்ள பெரும்பாலான மென்பொருள் கருவிகளின் பயன்பாடுகள் அனைத்தையும் "விருப்பப்படி" மென்பொருள் ஒன்றிலேயே கொண்டுள்ளது. "விருப்பப்படி" மென்பொருளை ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டுமெனில் ஒரு முழுமையான தமிழ் மென்பொருள் என்று கூறலாம்.
மேலதிக தகவல்களுக்கு: http://auw.sarma.co.in/Info/flasha/index.htm
1 கருத்துரைகள்:
Please give me permission to quote a sentence from this post in my forthcoming post.
Post a Comment