படங்களை உருவாக்க, படங்கள் மற்றும் புகைப்படங்களில் தேவையான மாற்றங்களை செய்வதற்கான இந்த GIMP (Graphical Image Manipulation Program) மென்பொருள், Unix மற்றும் Linux இயங்குதளங்குகளில் உபயோகிப்பதற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. விண்டோஸ் இயங்குதளங்களில் 'Paint' தவிர்த்து, பெரும்பாலும் Adobe photoshop, Corel Draw, Irfanview போன்ற மென்பொருட்கள் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இதில் Irfanview இலவச மென்பொருளாக கிடைக்கிறது. கூடுதல் வசதிகள் நிறைந்த மேலும் பல மென்பொருட்களும் சந்தையில் விலைக்கு கிடைக்கின்றன.
தற்போது விண்டோஸில் இயங்குவதற்கான GIMP2 மென்பொருள் பதிவிறக்கத்திற்கு கிடைக்கிறது. கிட்டத்தட்ட Adobe photoshop மென்பொருளில் இருக்கும் அத்தனை வசதிகளும் இதிலும் இருக்கின்றனவாம். இந்த மென்பொருளை உபயோகிப்பதற்கு முன்னர் GTK+ (GIMP Tool Kit) என்ற மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும். முதலில் GTK+ நிறுவிய பின்னர், ஜிம்ப்-ஐ நிறுவ வேண்டும். நிறுவும் போது, "Select Components" - தலைப்பில் "Full Installation" என்பதை தேர்வு செய்திருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மென்பொருளை நிறுவும் போது default ஆக உள்ளவற்றில் எதையும் மாற்றத் தேவையில்லை. மிகவும் உபயோகமான இந்த மென்பொருட்கள் இலவசம்தான் என்பது பயனாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
நான் பதிவிறக்கி உபயோகம் செய்து பார்த்தேன். நன்றாகத்தான் இருக்கிறது. மென்பொருளில் உள்ள வசதிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். விரும்புபவர்கள் பதிவிறக்கி உபயோகம் செய்து பாருங்கள்.
பதிவிறக்குவதற்கான சுட்டி:
http://gimp-win.sourceforge.net/stable.html
நன்றி :தமிழ்மன்றம்
Friday, August 21, 2009
படங்களை உருவாக்க, படங்கள் மற்றும் புகைப்படங்களில் தேவையான மாற்றங்களை செய்வதற்கான இந்த GIMP (Graphical Image Manipulation Program) மென்பொருள்
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment