Monday, August 31, 2009

சமூக தளங்களை தாக்கி வரும் Koobface வைரஸ்

Facebook,Twitter,myspace,friendster புதுப்பித்து hi5 கணணியை சமுதாய இணைய தள வலைப்பின்னல்களை பயன்படுத்துபவரா நீங்கள்! அப்படியானால் அண்மைக் காலத்தில் வேகமாகப் பரவி வரும் கூப்பேஸ் (Koobface) வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.இந்த தளங்களின் பேரில் உங்களைத் தூண்டும் தகவல் ஒன்று உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்ட காணொளி ஒன்றை தரவிறக்கம் செய்து பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளும் தூண்டில் செய்தி ஒன்று கிடைக்கும். காணொளிக்கான...

Sunday, August 30, 2009

ஒரே சொடுக்கில் 12 தளங்களில் கோப்புகளை ஏற்றுவதற்கு

கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்குக.uploadmirrorsஇந்தத் தளத்தின் முகப்பு பக்கத்தை (home page) திறந்து, எந்தக் கோப்பினை (file) ஏற்ற விரும்புகிறோமோ அதை தேர்வு செய்து Upload ஐ சொடுக்க வேண்டும். ஒரே சொடுக்கில் கீழே உள்ள 12 தளங்களிலும் உங்களது கோப்பு ஏற்றப்பட்டு (upload) அவற்றிற்குரிய தரவிறக்கச் சுட்டி (download links) உங்களுக்குக் கிடைத்துவிடும்.12 தளங்கள்UploadedToDepositFilesFileFactoryHotFileMegaUploadEasyShareZShareFlyUploadSendSpaceSharedZillaBadongoNetLoadLoadtoMegaShareRapidShareZippyShareஆகிய...

Saturday, August 29, 2009

கோப்புகளை மறைப்பது எப்படி?

எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமலேயே உங்கள் கணினியில் உங்களது கோப்புகளை யாரும் அறியாமல் மறைத்து வைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களை எழுத்துபலகையைத்( Notepad ) திறந்து அதில் சேமிக்கவும். அந்த வாக்கியங்களில் இருக்கும் "type your password here" என்ற வார்த்தைகளை நீக்கி விட்டு உங்களுக்குத் தேவையான கடவுச்சொல்லை வழங்குங்கள் (மேற்கோள்கள் இன்றி தரவும்). இதை எந்தக்காரணம் கொண்டும் மறக்க வேண்டாம். அந்த கோப்பை ஏதாவது ஒரு...

நூலகம் இணையமானது நன்கொடையாளர்களிடமிருந்து நிதிப்பங்களிப்புகளை எதிர்பார்க்கின்றது.

நூலகம் இணையமானது(http://www.noolaham.org/ ) நன்கொடையாளர்களிடமிருந்து நிதிப்பங்களிப்புகளை எதிர்பார்க்கின்றது.நூலகத் திட்டம்: இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி. நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன.1.நூலக நிறுவன நிர்வாகச் செலவுகள்2.நூலகத் திட்டம், சுவடி...

Thursday, August 27, 2009

"விருப்பப்படி" -ஒரு முழுமையான தமிழ் மென்பொருள்

தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக வெளிவந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக்குடும்பங்களும், பத்திற்கும் மேற்பட்ட விசைப்பலகை வகைகளும் உள்ளன. இதனால் ஒரு எழுத்துருவில் தட்டச்சு செய்தோர் மற்ற எழுத்துருவில் அத்தகவலை பார்க்க முடியாமல், தட்டச்சு செய்ய முடியாமல் உள்ளனர். இதே போல் ஒரு விசைப்பலகையில் பழகியோர் அந்த விசைப்பலகை துணை செய்யாத மற்ற எழுத்துருக்களில்...

Friday, August 21, 2009

படங்களை உருவாக்க, படங்கள் மற்றும் புகைப்படங்களில் தேவையான மாற்றங்களை செய்வதற்கான இந்த GIMP (Graphical Image Manipulation Program) மென்பொருள்

படங்களை உருவாக்க, படங்கள் மற்றும் புகைப்படங்களில் தேவையான மாற்றங்களை செய்வதற்கான இந்த GIMP (Graphical Image Manipulation Program) மென்பொருள், Unix மற்றும் Linux இயங்குதளங்குகளில் உபயோகிப்பதற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. விண்டோஸ் இயங்குதளங்களில் 'Paint' தவிர்த்து, பெரும்பாலும் Adobe photoshop, Corel Draw, Irfanview போன்ற மென்பொருட்கள் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இதில் Irfanview இலவச மென்பொருளாக கிடைக்கிறது. கூடுதல் வசதிகள் நிறைந்த மேலும் பல மென்பொருட்களும்...

Wednesday, August 19, 2009

உலகின் முதல் 64 GB Memory Card :Toshiba நிறுவனம் வெளியிட்டது

ஜப்பானை சேர்ந்த Toshiba நிறுவனம் உலகின் முதல் 64 GB Memory Card வெளியிட்டுள்ளது. இதன் விலை 630 Dollars என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் 35 MB per Second வேகத்தில் தகவல்களை எழுதவும் , 60 MB per Second வேகத்தில் தகவல்களை படிக்கவும் இயலும் .இது சந்தை விற்பனைக்கு வரும் நவம்பர் மாதம் வரலாம் என எதிபார்க்கப்படுகிறது.மேலும் சில புதிய 32 GB , 16 GB வகை கார்டுகளையும் வெளியிடுகிறது. இதன் சிறப்பு என்னவெனில் , இதில் 35 MB per Second வேகத்தில் தகவல்களை எழுதவும்...

வீடியோ கோப்பு வடிவை மாற்ற 5 இலவச மென்பொருட்கள்

ஒவ்வொரு இணைஞரிடமும் மேசைக்கணினி (desktop), மடிக்கணினி (laptop), செல்பேசி, கையடக்க இசைக்கருவி(hand held), எம்பி3 இசைப்பான் என நவீனத்துவத்தைக் காண நேரிடுகிறது. காதில் மாட்டிக்கொண்டி திரிகிறார்கள். இசைப்பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.ஒவ்வொரு கருவிகளுக்கும் தனிப்பட்ட கோப்பு வடிவங்கள் (file formats). ஒன்றை ஒன்று எதிர்க்கின்ற (incompatible) வகையில் அமைந்திருக்கும் கோப்பு வடிவங்கள்.இந்தக் கருவியில் இயங்கக்கூடிய கோப்பானது வேறு கருவியில் ஒத்திசையாமல் போகிறது....

Tuesday, August 18, 2009

கணனியின் வேகத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளில் இதுவும் ஒன்று.

கணணியை இயக்க தொடங்கும்போது(Log on) உங்கள் கணனியானது தொடங்குநிலைக்கு(Start up) செல்ல கூடிய நேரம் எடுக்கின்றதா? அதற்கான காரணம் நீங்கள் உங்கள் தொடங்குநிலை பட்டியலில்(Start up menu) கூடிய தகவல்களை வைத்திருப்பதுதான். அவற்றிக்கான தீர்வு அத்தகைய தகவல்களை உங்கள் தொடங்குநிலையிலிருந்து அகற்றுவது தான் சரியான வழி. அதற்கு நீங்கள் செய்யவேண்டியது Run கட்டளை என்ற (Run command window) msconfig என தட்டச்சு செய்யுங்கள்.OK என்பதினை அழுத்துங்கள்.பின்னர் வரும் சாளரத்தில்(Window)...

Monday, August 17, 2009

கணனியில் ஆவணங்கள்(Documents), படங்களை(Pictures) ,கோப்புறைகளை(Folders) எவ்வாறு விரைவாக திறப்பது?

ஒரு ஆவணத்தை அதன் நிரலி (Program) மூலம் திறப்பதற்கான நேரத்தைக் காட்டிலும் Internet Explorer மூலம் குறைவான நேரத்தில் திறந்துவிடலாம். குறிப்பாக படங்கள் ஆவணங்களை இந்த வகையில் திறக்கலாம்.Internet Explorer அனைத்து வகை ஆவணங்களையும் திறக்கும். Internet Explorer ஆனது கணனியில் உடனடியாக திறபடக்கூடியதாக இருக்கும். ஆனால் படங்களைத் திறக்கும் Picture Manager, Adope photoshop போன்ற Applications programs திறக்கப்பட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.இதற்கு என்ன செய்ய...

Sunday, August 16, 2009

கைத்தொலைபேசிகளின் இரகசிய குறியீட்டு இலக்கங்கள்

கைத்தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு குறியீட்டு எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் கைத்தொலைபேசியின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில குறியீட்டு எண்களை வகுத்து தந்துள்ளன. இது கைத்தொலைபேசி பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.LG வகை கைத்தொலைபேசியின் குறியீட்டு எண்கள்கைத்தொலைபேசியின் Test Mode க்கு செல்ல –– 2945#*#எல்ஜி கைத்தொலைபேசியின் ரகசிய Menu ஐக் கொண்டு வர – 2945*#01*#கைத்தொலைபேசியில்...

Saturday, August 15, 2009

இந்தியாவின் முப்பரிமாண வரைபடம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(ISRO) இணையத்தளத்தில்

Google Earth இணையத்தளத்தைப் போல இந்தியாவின் எந்த இடத்தையும் பார்க்க உதவும் புதிய இணையதளத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) தொடங்கி உள்ளது. இதில் வீதியில் நிற்கும் ஒரு காரைக்கூட தெட்டத்தெளிவாக பார்க்க முடியும்.Google Earth இணையதளம் உலக அளவில் பிரபலமானது. இதில் கிராமத்திலிருந்து நகரம் வரைக்கும் உலகின் எந்த இடத்தையும் தெட்டத்தெளிவாக பார்க்க முடியும். இவை எல்லாம் செயற்கைக்கோள் மூலம் படம் பிடிக்கப்பட்டவை. ஒரு காரின் இலக்க தகட்டை கூட இதில் பார்க்க...

Friday, August 14, 2009

செல்பேசிகளில் தமிழ்த்தளங்களை வாசித்தல்.

அனேகமான செல்லிடப்பேசிகளில் தமிழ் எழுத்துருக்களை வாசிப்பதற்குப் பிரச்சினை இருந்து வருகிறது.நான் கூடப் பலநாட்களாக முயன்று அதன்பின்னதாக அறிந்து கொண்ட சில வழிமுறைகளைப்பற்றி உங்களுக்கும் அறியத்தரலாம் என்று எண்ணுகின்றேன்.இதற்காக இரண்டுவகையான உலாவிகளைச் செல்லிடப்பேசிகளிலே பயன்படுத்தமுடியும்.1.Skyfire-இதனைச் செல்லிடப்பேசியின் உலாவியிலே www.skyfire.com என்ற தளத்திற்குச் சென்று அதனைப்பதிவிறக்கி நிறுவினால், நேரடியாகவே தமிழ்த்தளங்களைத் தங்குதடையின்றிப் பார்வையிட...

Wednesday, August 12, 2009

தமிழ் இடைமுகத்துடன் (Interface) hotmail,livemail

ஹொட்மெயில் ஆரம்பத்தில் ஒரு இந்தியரால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தவேளையில் அதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கிக்கொண்டது. பின்னர் Hotmail இணையப்பயனர்களிடையே மிகப்பெரிய ஆதரவுபெற்ற இணைய மின்னஞ்சல்சேவையாகத் திகழ்ந்தது. பின்னர் Gmail வந்தவுடன் நிலைமைகள் மாறத்தொடங்கியது.பல பேர் வேகமாக ஜிமெயிலுக்கு மாறத் தொடங்கினர். ஜிமெயிலின் வெற்றிக்கு காரணம் 1GB சேமிப்பிடம் வழங்குவோம் என்று வாக்களித்தமையுடன் எளிமையான இடைமுகத்தையும் (Interface) வழங்கியமையே ஆகும்.இதன்பின்னரும்...

Tuesday, August 11, 2009

மால்வேர் புரோகிராம்கள்(Malware programs) என்ன எங்கே எப்போ?

அண்மையில் ஓர் இணையத்தளம் ஒன்றைப் பார்த்தேன். நம் கணனியையும் நம்மையும் பயமுறுத்தும் பாதுகாப்பு குறித்து நாம் Update செய்திடும் வகையில் அந்த தளம் செயல்படுவதனைக் கண்டு கொண்டேன். இது இணையச் செயல்பாட்டினை கண்காணிக்கும் ஒரு தளமாக இயங்குகிறது. இதில் கணனியை அவ்வப்போது அச்சுறுத்தும் மால்வேர்(Malwares) புரோகிராம்களைப் பற்றி விலாவாரியாகக் கூறுகிறது. அந்த தளத்தின் முகவரி:http://mtc.sri.com/ ஒவ்வொரு மோசமான மால்வேர்(Malware) புரோகிராமும் எப்போது வந்தது; எந்த அளவில்...

இணையத்தில் தமிழ் மின்னூல்கள்

இணையத்தில் இப்போது கணனியில் வாசிப்பதற்கான மின்புத்தகங்கள்(EBooks) தாராளமாகவே கிடைக்கின்றன. கடைத்தெரு, நூல் நிலையம் என்று நடந்து சென்று நல்ல புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று அலைந்து திரிந்து களைத்துப் போய்விடாமல் வீட்டில் இருந்தபடியே கணனி மவுஸ் பட்டனை அழுத்தி விரும்பிய புத்தகங்களை தெரிவு செய்து படிக்கும் முறை நன்றாகத்தான் இருக்கிறது. அதைத்தவிர இணையத் தளங்களிலிருந்து இலவசமாகவே எத்தனையோ தமிழ், ஆங்கில மின் புத்தகங்களை சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள...

Monday, August 10, 2009

யாஹுவுடன் கை குலுக்கியது மைக்ரோசாப்ட்

பல மாதங்களாக நீடித்து வந்த இழுபறி நிலையை மைக்ரோசாப்ட் மற்றும் யாஹூ நிறுவனங்கள் ஒரு பத்தாண்டு ஒப்பந்தத்தினைப் போட்டு முடிவிற்குக் கொண்டு வந்துள்ளன. தேடல் இயந்திரம் தொழில் நுட்பத்திலும் அதனைச் சார்ந்த விளம்பர வர்த்தகத்திலும் Google கொண்டிருக்கும் முதல் இடத்தை அசைத்துப் பார்ப்பதற்காகவே இந்த ஒப்பந்தம் இருக்குமோ என்ற எண்ணம் இணைய உலகில் அனைவருக்கும் எழுந்துள்ளது.தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தப்படி Microsoft நிறுவனத்தின் Bing தேடல் இயந்திரத்தினை தன்...

Saturday, August 8, 2009

செப்டம்பர் 30ல் கூகுள் வேவ்

கூகுள் வேவ் குறித்து கம்ப்யூட்டர் மலரில் வந்த தகவல்கள் உங்கள் மனதில் இன்னும் இருக்கும் என எண்ணுகிறேன். சென்ற மே மாதம் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கில் இது குறித்த அறிவிப்பினை கூகுள் முதல் முதலில் வெளியிட்டது. ஆனால் அதனை அடுத்து மைக்ரோசாப்ட் தன் பிங் (Bing) சேவை குறித்து செய்திகள் வெளியிட்டு டிஜிட்டல் மீடியா கவனத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டது.கூகுள் மே மாதம் அறிவித்த போது இது கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி சாதனையாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்...

Friday, August 7, 2009

GPRS உதவியுடன் எந்த நாட்டிற்கும் கைத்தொலைபேசியிலிருந்து தொடர்புகொள்ள

நான் இத்தளத்தினை இணையத்தேடல் மூலமாக அறிந்துகொண்டேன் இத்தளத்தினுாடாக நாம்MSNSkypeGoogle TalkYahooமேலும் பல இலவச இணைய Voice Chating ஊடாக மற்றவர்களை கையடக்கத் தொலைபேசியிலிருந்தே கணினிக்கு தொடர்பு கொள்ளலாம். இத்தளத்திலிருந்து ஒரு மென்பொருளை கையடக்கத் தொலைபேசியில் தரவிறக்கம் செய்து அம்மென்பொருளினுாடாக கணினிக்கு அழைப்பு(Call) எடுக்கமுடியும். இம் மென்பொருள் உங்கள் நண்பர்கள் கையடக்கத்தொலைபேசியில் உபயோகித்தால் அவர்களுக்கு நீங்கள் அழைப்பு(Call) எடுக்கும் பொழுது...

Thursday, August 6, 2009

MS OFFICE மென்பொருள் இல்லாமல் Ms word, Ms excel, Ms powerpoint ஆவணங்களைப் பார்ப்பது எப்படி?-இலவச மென்பொருள்

மென்பொருள் துறையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியிருக்கும் மைக்ரோசொப்ற்(Microsoft) தற்பொழுது MS Word,excel,Powerpoint போன்ற ஆவணங்களை உங்கள் கணனியில் MS OFFICE நிறுவப்படாவிடில் படிப்பது எவ்வாறு என்ற தனது புதிய இலவச மென்பொருள் ஒன்றை அண்மையில் வெளியிட்டிருக்கின்றது. அதற்க்கான இணையச்சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவதன் மூலமாக அவற்றை MS OFFICE இன் உதவியின்றி பார்வையிட முடியும்.இணையச்சுட்டி:Word Viewer: Download Word...

Wednesday, August 5, 2009

PDF,Ms Word documents இலிருந்து Ms Word Documents,PDF க்கு மாற்றுவது எவ்வாறு? கூகிளின்(Google Docs) மற்றுமொரு சேவை

PDF,Ms Word documents இலிருந்து Ms Word Documents,PDF க்கு மாற்றுவது எவ்வாறு? கூகிளின்(Google) மற்றுமொரு சேவை. 1.முதலில் கூகிளின் ஆவணங்கள்(Google Docs) பகுதியில் login செய்யுங்கள்2.Upload என்ற இணைப்பின் மீது அழுத்துங்கள்(Click)3.Browser இன் மீது அழுத்தி ஆவணத்தை(pdf,word,html) தரவேற்றம்(Upload) செய்து கொள்ளுங்கள்4.Upload நிறைவுபெற்றதன் பின்னர் உங்களுக்கு தேவையான வடிவத்தை(Format: PDF,word,HTML,Text) தெரிவுசெய்து பெற்றுகொள்ளக்கூடியதாக இருக்கும். ...

Tuesday, August 4, 2009

Microsoft புதிய Online சேவைகள்

சிறிய மற்றும் நடுத்தர நிலையில் இயங்கும் நிறுவனங்களின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைதொடர்புக்கான செலவினப் பாதியாகக் குறைத்திடும் வகையில் பல்வேறு ஆன்லைன் வசதிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத் தியுள்ளது. இந்த சேவைகளை இரண்டு மாதத்திற்கு இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்திப் பார்த்துப் பின் தேவை எனில் கட்டணம் செலுத்திப் பெறலாம். வர்த்தக ரீதியில் இவை வரும் அக்டோபர் மாதம் முதல் கிடைக்கும். வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள், அலுவலர்கள்,...