Saturday, February 13, 2010

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள்

கணணி மூலமாக செய்யப்படும் விடயங்களை தூர இடத்திலுள்ள ஒருவருக்கு விளங்கப்படுத்துவது என்பது மிக கடினமான விடயம். அத்தகைய விடயங்களை நாம் தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாக இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என்று விளங்கபடுத்துவது கடினமான விடயம். அவ்வாறு செய்வதென்பது செலவு கூடிய விடயமும் நேரத்தையும் விரயமாக்கும் செயலுமாகும். அத்தகைய கணனியின் மூலமாக செய்யும் விடயங்களை கணனியில் எவ்வாறு செய்யவேண்டும் என ஒரு காணொளி மூலமாக அல்லது ஒரு புகைப்படமூலமாகவோ தெளிவுபடுத்தினால் மிக இலகுவாக இருக்கும். அத்தகைய செயற்பாடுகளுக்கு நாம் காணொளி,புகைப்பட  கருவிகளை  (Video Camera) வைத்து செய்ய வேண்டியதில்லை.

அத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளவென சில பிரத்தியேக மென்பொருட்கள் உள்ளன. அவை நாம் கணனியில் செய்துகொண்டிருக்கும் விடயங்களை தாங்களாகவே காணொளியாகவோ (Video Clips) அல்லது புகைப்படமாகவோ(Images) மாற்றி அமைத்துக்கொள்ளும். இத்தகைய மென்பொருட்கள் சிலவற்றை இலவசமாக பெறக்கூடியதாக இருக்கும். அத்தகைய சில இலவச மென்பொருட்களின் பட்டியல் இதோ:


1. Cam Studio
ஆவண அமைப்புக்கள்(file Formats): .avi, .swf
சகல Windows இயங்குதளங்களிலும் (Operating System) பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
மென்பொருளின் அளவு(File Size): 1.20MB

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Cam Studio
 http://camstudio.org/



2. Wink
சகல Windows இயங்குதளங்களிலும் மற்றும் சில குறிப்பிட்ட Linux வகை இயங்குதளங்களிலும்  செயற்படும்.
ஆவண அமைப்புக்கள்: swf, மற்றும் BMP/JPG/PNG/TIFF/GIF
மென்பொருள் அளவு: 3272KB

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Wink
http://www.debugmode.com/wink/







3. Jing
Windows XP,Vista ,Windows 7 மற்றும் Mac OS X போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.
மென்பொருள் அளவு: 9.1MB
Windows இயங்குதளத்தில் பயன்படுத்த தேவையான சில விடயங்கள்.
•Windows XP, Vista, or Windows 7

•Microsoft .NET Framework 3.0
•Broadband Connection

Mac OS x இயங்குதளத்தில் பயன்படுத்த தேவையான சில விடயங்கள்.
•Mac OS X 10.4.11, or 10.5.5 or later

•QuickTime 7.5.5 or later
•Broadband

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Jing
http://www.jingproject.com/









4. Free Screen Recorder
சகல Windows இயங்குதளங்களிலும் பயன்படுத்த முடியும்.
மென்பொருள் அளவு: 591 MB
ஆவண அமைப்புக்கள்:

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Free Screen Recorder
http://www.nbxsoft.com/screen-recorder.php







5. Freez Screen Recorder
Windows 2003, XP, 2000, 98, Me, NT போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.

மென்பொருள் அளவு:  772 MB
ஆவண அமைப்புக்கள்:Microsoft Video 1, MPEG-4, DivX,AVI மற்றும் PCM, ADPCM, MP3, OGG,JPG,PNG,GIF

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Freez Screen Recorder
http://www.smallvideosoft.com/screen-video-capture/




மேலே குறிப்பிட்ட மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றபோதிலும் இவற்றைவிட மிகவும் சிறப்பான Camtasia Studio என்னும் பிரத்தியேக மென்பொருள் ஒன்று இதற்கென உள்ளது. இந்த மென்பொருள் மூலமாக நாம் மிகவும் சிறப்பாக செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். இந்த மென்பொருள் சம்பந்தமான விடயங்களையும் மற்றும் தரவிறக்க சுட்டியையும் கீழே உள்ள இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.
http://www.techsmith.com/camtasia.asp










1 கருத்துரைகள்:

tamil comedy said...

I use cam studio, its very very light weight and very powerful, free to use too.