Monday, July 5, 2010

கூகிளின் இரகசிய சமூக வலைத்தள உருவாக்கம்

இணைய உலகில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திவரும் கூகிளானது மிகவும் இரகசியமான முறையில் Facebook சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக புதியதொரு சமூக வலைத்தளமொன்றினை உருவாக்கி வருகின்றது. 
 Google me என்னும் பெயரில் அமைந்த இந்த வலைத்தளமானது மிகவும் இரகசியமான முறையிலே உருவாக்கப்பட்டு வருகின்றது. சமூக வலைத்தளங்களின் ஆராய்ச்சிகளில் பிரபல்யம் பெற்று விளங்கும் எடம் டி அஞ்சேலோ (Adam D Angelo) என்பவர் இந்த தகவலை உருத்திப்படுத்தியுள்ளார். இது ஒரு வதந்தியல்ல எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் கிடைத்த தகவல் எனவும் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே Google Buzz என்னும் twitter க்கு போட்டியாக உருவாக்கிய கூகிள் Google me என்னும் சமூக வலைத்தளத்தினையும் விரைவில் அறிமுகப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும் Facebook உடன் போட்டியாக அமையுமா என்பதினை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Thursday, June 17, 2010

கூகிளின் முகப்பு பக்கத்தின் (Home Page) பின்னணி (Background) வடிவினை எவ்வாறு மாற்றுவது?

அதிரடி அறிவிப்புகள் மற்றும் பல சேவைகளை வழங்கிவரும் கூகிள் அண்மையில் தனது முகப்பு பக்கத்தின் (HOME PAGE) பின்னணி(Background) வடிவத்தினை  நாங்கள் விரும்பிய வடிவங்களில் மாற்றக்கூடியவிதத்தில்  சிறப்பான ஒரு சேவையை வழங்குகின்றது. இந்த சேவையின் மூலமாக கூகிளின் முகப்பு பக்கத்தின் பின்னணியினை  எமக்கு பிடித்தமான படத்தினைக்கொண்டு மாற்றியமைக்க முடியும்.
இதைவிட கூகிள் வழங்கும் படங்களின் மூலமாகவும் மாற்றியமைக்கலாம்.
 
கூகிளின் முகப்பு பக்கத்தின் பின்னணியினை  மாற்றியமைப்பதற்கான வழிமுறைகள்:

1. முதலில் கூகிளின் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்.(Go to Google Homepage)
பின்னர் அதில் தோன்றும் Change background image என்னும் இடத்தில் அழுத்துங்கள்.


2. பின்னர் உங்களுடைய ஜிமெயில் மின்னஞ்சல்(Gmail Account ID) மற்றும் கடவுச்சொல் (password)  ஆகியவற்றை வழங்கி புகுபதிகை(Login) செய்துகொள்ளுங்கள்.
 

3. புகுபதிகை செய்தபின்னர் நீங்கள் விரும்பிய படத்தினைக்கொண்டு பின்னணி வடிவத்தினை மாற்றியமைக்கலாம்.


4. படத்தினை தெரிவுசெய்த பின்னர் Select என்பதினை அழுத்துங்கள் இப்பொழுது பின்னணி வடிவமானது உங்களுக்கு பிடித்தமான படத்துடன் தோற்றமளிக்கும்.

Monday, June 14, 2010

பதிவுகளை திருடி வெளியிடுபவர்களின் கவனத்திற்கு........


பதிவுகளை இணையத்தளங்களில் இருந்தோ அல்லது வலைப்பூக்களில் இருந்தோ திருடி தங்களின் வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடுபவர்களின் கவனத்திற்காக இந்த பதிவை எழுத்துகின்றேன். பல பதிவர்களின் பதிவுகளை திருடி சில இணையத்தளங்களிலும் மற்றும் வலைப்பூக்களிலும் வெளியிடுகின்றார்கள். அவ்வாறு வெளியிடுவது தவறில்லை ஆனால் அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் தயவுசெய்து எந்த வலைப்பூக்களில் திருடினார்களோ அந்த வலைப்பூக்களின் பெயர்களை அந்த பதிவுகளின் கீழே பதிவிட்டுக்கொள்ளுங்கள்.
இந்த வகையில் என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்ட இணையத்தளங்களிலும் மற்றும் வலைப்பூக்களிலும் வெளிவந்துள்ளன. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

என்னுடைய பதிவுகள் வெளியிடப்பட்ட சில இணையத்தளங்களின் பெயர்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

www.tamilcnn.com
(http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=3351&Itemid=444)

www.z9tech.com
(http://www.z9tech.com/mobile.php?page=5)

www.paranthan.com
(http://parantan.com/pranthannews/Detail.asp?id=12707)

http://computerthaha.blogspot.com
(http://computerthaha.blogspot.com/2010/06/facebook-voice-and-video-chat.html)

http://tamilwep.blogspot.com/2010_05_01_archive.html

இன்னும் பல வலைப்பூக்களில் இத்தகைய எனது பல பதிவுகள் வெளிவந்துள்ளன.

குறிப்பு: தகவல் தொழில்நுட்பப் பூங்காவானது(http://tamilitpark.blogspot.com) முன்னர் வன்னி தகவல் தொழில்நுட்பம்(http://vannitec.blogspot.com) என்னும் பெயரில் இயங்கிய வலைப்பதிவு என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக வலைப்பதிவின் பெயரில் மாற்றம் செய்த்துள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் தங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.



Saturday, May 29, 2010

அலுவலக பாவனைக்கென உருவாக்கப்பட்டுள்ள இலவச Portable Application


கணணி மற்றும் இணைய உலகில் பல்வேறுபட்ட மென்பொருட்கள் குவிந்து காணப்படுகின்றன. அத்தகைய மென்பொருட்களை கணனியில் நிறுவாமல் USB Pendrive போன்றவற்றில் எடுத்துச்சென்று பயன்படுத்தக்கூடிய வகையில் பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் காணப்படும் மென்பொருள்தான் இது.
Tiny USB Office எனப்படும் இந்த மென்பொருளானது கணனியில் நிறுவாமல் Portable Application ஆக எடுத்துச்சென்று பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது பிரத்தியேகமாக அலுவலக பாவனைக்கு தேவையான அடிப்படை மென்பொருட்களை உள்ளடக்கியுள்ளது. இது ஒரு இலவச மென்பொருள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

இந்த மென்பொருள் கொண்டிருக்கும் அடங்கியுள்ள மென்பொருட்களின் பட்டியல்:
Database Creation – with CSVed

Data Encryption – with DScrypt
Email Client Software – with NPopUK
File Compression – with 100 Zipper
File Sharing – with HFS
File Transfer – with FTP Wanderer
Flowchart Creation – with EVE Vector Editor
MSN Messenger Client – with PixaMSN
Tree-Style Outliner Software – with Mempad
PDF Creation – with PDF Producer
Password Recovery – with XPass
Secure Deletion – with DSdel
Spreadsheet Creation – with Spread32
Text Editing – with TedNotepad
Word Processing – with Kpad
Program Launching – with Qsel

மிகவும் பயனுள்ளதொரு மென்பொருள்.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி:  Tiny USB Office
http://www.xtort.net/apps/tiny_usb_office.zip  

Thursday, May 27, 2010

Facebook இன் புதிய வரவு: குரல்வழி மற்றும் முகம்பார்த்து அரட்டை(Voice and Video chat)வசதி அறிமுகம்.


 அதிரடியாக வளர்ந்து வரும் சமூக வலைப்பின்னல் ஆகிய Facebook நீண்டகாலமாக பரீட்சார்த்த நிலையில் இருந்த குரல்வழி மற்றும் முகம்பார்த்து அரட்டை(Voice and Video chat) பண்ணும் தொழில்நுட்பத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னமும் Beta நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FriendCam Video Chat  என்னும் பெயருடன்  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மென்பொருளானது இணைய உலகில் Skype க்கு போட்டியாக அமைந்திருக்கின்றது. இருந்தபோதிலும் இந்த மென்பொருளானது சில அடிப்படை பிரச்சனைகளை இன்னும் நிவர்த்திசெய்யவில்லை. Beta நிலையிலுள்ளமையினால்  இது காலப்போக்கில் சரிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இணைப்பு:   http://apps.facebook.com/webcamfb/?t=g



Sunday, May 9, 2010

மெய்நிகர் விசைப்பலகை(Virtual Keyboard)- கூகிளின் புதியதொரு சேவை.

இணைய உலகில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி பல்வேறுபட்ட புதிய இணையவழி மென்பொருட்களை அறிமுகப்படுத்திவரும் கூகிளானது அண்மையில் புதியதொரு சேவையொன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது.
மெய்நிகர் விசைப்பலகை (Virtual Keyboard) என்ற புதியதொரு சேவையை தேடல் துறைக்கென அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உச்சரிப்பு(Phonetic) முறையில் தட்டச்சு செய்து தேடல்களை மேற்கொள்ளமுடியும்.
எவ்வாறு உச்சரிப்பு முறையில் தேடுவது?

முதலில் Google இணையத்தளத்துக்கு செல்லுங்கள். http://www.google.lk  அல்லது http://www.google.co.in .
தமிழ்மொழியை தெரிவுசெய்துகொள்ளுங்கள்.





பின்னர் தேடல்பெட்டிக்கு (SearchBox) அருகில் விசைப்பலகை அடையாளத்தை அழுத்துங்கள்.


அதில் தோன்றும் விசைப்பலகையில் Alt+Ctrl என்பதை அழுத்துங்கள். இனி விசைப்பலகையானது தமிழில் தோன்றும்.




இனி உங்கள் விருப்பபடி தட்டச்சு செய்து தேடிக்கொள்ளுங்கள்.

Saturday, May 8, 2010

கணணி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவென சில பயனுள்ள Command Prompt கட்டளைகள்.

Command prompt என்பது கணனியில் மிகவும் பயனுள்ள ஒரு பகுதியாகும். இந்த Command prompt ஊடாக எமது கணணியை செயற்படுத்தமுடியும். இந்த Command prompt அன்னது எமக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை தரவல்லது. Command prompt இன் உதவியுடன் எமது கணணி குறித்த பல தகவல்களை பெற்றுகொள்ள முடியும். நாம் சில கட்டளைகளை  வழங்கினால் போதும் அவை குறித்த பல தகவல்களை நாம் பெற்றுக்கொள்ளமுடியும்.
அத்தகைய Command prompt இல் பயன்படுத்தி எமது கணனி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவென சில கட்டளைகளை இங்கு தருகிறேன்.

முதலில் Command prompt ஐ திறந்து கொள்ளுங்கள்.
Command prompt ஐ திறந்துகொள்வதற்கான வழிமுறைகள் இதோ.
 Start-->>Accesories-->>Command prompt
அல்லது
Start-->>Run  இல் cmd என தட்டச்சு செய்து திறந்துகொள்ளுங்கள்.

கீழ்வரும் கட்டளைகளை தோன்றும் Command prompt இல் தட்டச்சு செய்து கணணி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

1.கட்டளை: systeminfo
கணனியின் Host Name மற்றும் இயங்குதளம் குறித்த தகவல்கள் போன்ற இன்னும் பல தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

2. கட்டளை: driverquery 
கணனியின் இயக்கிகள்(Drivers) குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

3. கட்டளை: subst W: C:\windows

4. கட்டளை: tasklist 
கணனியில் இயங்கிக்கொண்டிருக்கும் Programs குறித்த தகவல்களை பெறுக்கொள்ளமுடியும்.

5.கட்டளை: ipconfig /all
உங்கள் கணனியின் IP முகவரியினையும் மற்றும் வலையமைப்பு குறித்த தகவல்களையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

6. கட்டளை: net user
கணணி பயனாளர்கள்(User names) குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

Sunday, April 25, 2010

ஆவணங்களை பாதுகாத்துக்கொள்ளவென ஒரு இலவச மென்பொருள்

பொது இடங்களிலோ அல்லது வீடுகளிலோ உங்கள் கணனியில் முக்கியமான ஆவணங்களை நீங்கள் கோப்புறைகளில்(Folders) இட்டு பாதுகாத்துக்கொள்ளும்போது மற்றவர்கள் உங்கள் ஆவணங்களை பார்வையிடாமல் பாதுகாப்பாக வைத்துகொள்ளவென பல மென்பொருட்கள் மற்றும் பலவழிகள் உள்ளன. அவ்வாறான வழிகளில் இதுவும் ஒன்று.

கோப்புறைகளை(Folders) பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவென இலவச மென்பொருள் பற்றிய ஒரு பதிவுதான் இது. FileSecrets எனப்படும் இந்த மென்பொருளானது கோப்புறைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.  மற்றவர் உங்கள் கோப்புறைகளை திறக்க முடியாதபடியும் கடவுச்சொல் வழங்கியும் மறைத்தும் பாதுகாப்பாக கோப்புறைகளை வைத்திருக்க முடியும்.

கணனியில் FileSecrets எனப்படும் இந்த மென்பொருளை முதலில் நிறுவிக்கொள்ளுங்கள்
பின்னர் நிறுவிய மென்பொருளை திறந்து file or folder என்ற இடத்தில் நீங்கள் பாதுகாக்க வேண்டிய மென்பொருளை browse என்பதில் அழுத்தி (Click) தெரிவுசெய்துகொள்ளுங்கள்.
பின்னர் Action என்ற இடத்தில் எந்த வகையில் உங்கள் கோப்புறைகளை பாதுகாக்க போகிறீர்கள் என்பதை தெரிவு செய்துகொள்ளுங்கள்.
பின்னர் add என்பதை அழுத்தி பாதுகாக்க வேண்டிய கோப்புறையை இணைத்துக்கொள்ளுங்கள்.




பாதுகாத்த கோப்புறைகளை திறந்துகொள்ளும்போது  நீங்கள் வழங்கிய Action க்கு ஏற்ப பின்வரும் எச்சரிக்கைகளை அது காண்பிக்கும்.

1.Deny Access to File or Folder :




2.Deny Modify to File or Folder:




3.Password Protection :



மென்பொருளை தரவிறக்க இணையச்சுட்டி:  FileSecrets
http://www.pogisys.com/downloads/FileSecretsSetup.exe 








 

Wednesday, April 21, 2010

படங்களின் அளவுகளை(Capacity) சுருக்குவதற்கான பயனுள்ள இலவச மென்பொருள்

நண்பர்களுக்கு எங்கள் படங்கள்,புகைப்படங்களை (Images,Photos) மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறுவழியிலோ பகிர்ந்துகொள்ளும்போது அவை மிகப்பெரிய அளவுகளில் இருந்தால் எம்மால் சிலவேளைகளில் பகிர்ந்துகொள்ளவோ அனுப்பவோ முடியாதநிலை ஏற்படும். அத்தகைய இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்கென பிரத்தியேகமாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

மிகப்பெரிய அளவிலான (Capacity) படங்களின் அளவுகளை அவற்றின் தன்மை மாறாமல் (Resolution) மிகக் குறைந்தளவில் படங்களை, புகைப்படங்களை சுருக்கிக்கொள்ளலாம்.  RIOT (Radical Image Optimization Tool) எனப்படும் இந்த மென்பொருளானது 1MB க்கும் குறைவான அளவில் கிடைப்பதால் மிக இலகுவாக தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளலாம். உங்கள் தேவைக்கேற்ப சுருக்கும் படங்களின் அளவுகளை நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.  படங்களின் அளவுகளை சுருக்குவதற்கான திறன்வாய்ந்த பயனுள்ள மென்பொருள்.

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: RIOT
http://luci.criosweb.ro/riot/ 

Monday, March 22, 2010

இலவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள் (Create Free Website)

இணையத்தளங்களை உருவாக்க விரும்புபவர்கள் பணம் செலுத்தி இணையமுகவரியை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் அதற்கான வடிவமைப்புக்களையும் செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் எமக்கான இணையத்தளங்களை எத்துவித செலவும் இல்லாமல் இலவசமாக இணையமுகவரி மற்றும் இணைய வார்ப்புருக்களுடன்(Web Templates) இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அத்தகைய இணையத்தளங்களை உருவாக்குவதற்கு சில இணையசேவை வழங்குனர்கள் இந்த சேவைகளை சில வரையறைகளுடன் உங்களுக்கு தருகின்றார்கள்.
அத்தகைய சேவைகளை வழங்கும் இணையத்தளங்கள்.

1. Webs
இணையத்தளமுகவரி: http://www.webs.com/



2. Webnode
இணையத்தளமுகவரி: http://www.webnode.com/



3. Wetpaint
இணையத்தளமுகவரி: http://www.wetpaint.com/ 



4.Weebly
இணையத்தளமுகவரி: http://www.weebly.com/


5. yola
இணையத்தளமுகவரி: http://www.yola.com/



6. own-free-website
இணையத்தளமுகவரி: http://www.own-free-website.com/




7. Jimdo
இணையத்தளமுகவரி: http://www.jimdo.com/

Thursday, March 18, 2010

ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மாற்றியமைக்கவென சில இலவச மென்பொருட்கள் (Free Audio Editors)

கணணியுலகில் மென்பொருட்களின் பாவனை மிக அதிகரித்த வண்ணமே உள்ளது.  அந்த வகையில் பாடல்கள்,ஒலிப்பதிவுகள் போன்ற ஒலியுடன் சம்பந்தபட்ட பல்வேறுபட்ட ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அத்தகைய மென்பொருட்களை இலவசமாக பெற்றுப் பயன்படுத்தினால் செலவுகளை மீதப்படுத்திகொள்ளலாம். அவ்வாறு ஒலிப்பதிவுகளை மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென சில திறந்த மென்பொருட்கள் இணையுலகில் காணப்படுக்கின்றன. அத்தகைய மென்பொருட்கள் சிலவற்றை இங்கே பட்டியல் இடுகிறேன்.

1.Power Sound Editor
மென்பொருள் சுட்டி: http://www.free-sound-editor.com/



2.Music Editor Free
மென்பொருள் சுட்டி: http://www.music-editor.net/



3.Wavosaur
மென்பொருள் சுட்டி: http://www.wavosaur.com/



4.Traverso DAW
மென்பொருள் சுட்டி: http://www.traverso-daw.org/




5.Rosegarden
மென்பொருள் சுட்டி: http://www.rosegardenmusic.com/getting/



6.Sound Engine
மென்பொருள் சுட்டி: http://www.cycleof5th.com/products/soundengine/?lang=en



7.Expstudio Audio Editor
மென்பொருள் சுட்டி: http://www.expstudio.com/audio-editor-free.html



8.FREE WAVE MP3 Editor
மென்பொருள் சுட்டி: http://www.code-it.com/KISS_free_wave_editor.htm





Wednesday, March 17, 2010

உலகின் மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய இணையத்தளங்கள்

பலரும் பலவிதத்தில் சாதனை படைக்க விரும்புவார்கள்.  அவ்வாறு இணைய உலகில் சிலர் சாதனை படைத்திருக்கிறார்கள். அந்த வகையில் உலகில் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய இணையத்தளங்களை உருவாக்கி சிலர் சாதனை படைத்திருக்கிறார்கள். அத்தகைய இணையத்தளங்கள் பற்றிய தகவல்கள் இதோ:

உலகின் மிகச்சிறிய இணையத்தளம்:
http://www.guimp.com/  எனப்படும் இந்த இணையத்தளமானது வெறும் 18x18 படத்தனிமங்களை(18x18 pixels) கொண்டமைந்துள்ளதொரு இணையத்தளம். இந்த இணையத்தளம் கணணி விளையாட்டுக்களை கொண்டமைந்துள்ளது.




உலகின் மிகப்பெரிய இணையத்தளம்:
http://www.28fields.com/ எனப்படும் இந்த இணையத்தளம் பலமில்லியன் படத்தனிமங்களை கொண்டமைந்துள்ளது. இந்த இணையத்தளமானது 56k இணைய இணைப்பின் மூலமாக தரவிறங்க 8 வருடங்கள், 309 நாட்கள் , 8 மணித்தியாலங்கள், 57 நிமிடங்கள், 37 வினாடிகள் தேவை. DSL இணைய இணைப்பின் மூலமாக தரவிறங்க 120 நாட்கள், 13 மணித்தியாலங்கள், 31 நிமிடங்கள், 6 வினாடிகள் தேவை.


Thursday, March 11, 2010

இலவசமாக இணையமுகவரிகளை பெற்றுக்கொள்ள சில இணையசேவைகள்(Free Domain Names)

இணையத்தளம் ஒன்றை சொந்தாமாக வைத்திருக்க பலரும் ஆசைப்படுவார்கள். அவ்வாறு இணையத்தளம் ஒன்றை சொந்தமாக வைத்திருக்க பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் இலவசமாக பெற்றுக்கொள்ள   விரும்புபவர்களுக்கென சில இணையசேவை  வழங்கிகள்(Web Service Providers) உள்ளன. அவ்வாறு இலவசமாக இணையத்தள முகவரிகளை வழங்கும் சில இணையசேவை வழங்கிகளின் முகவரிகள்.

1.http://www.co.cc/
இந்த இணையத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கிற்கு 3 இணையமுகவரிகளை(Free Domain Names) பெற்றுகொள்ள முடியும்.  அதன் பின்னர் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இணையமுகவரிக்கும் $10 செலுத்தவேண்டும்.
CNAME, A, MX, NS ,TXT போன்ற சேவைகளையும் மற்றும் Google Apps,windows live சேவைகளையும்  இதனோடு இணைந்ததாக பெற்றுக்கொள்ள முடியும்.

2.  http://www.eu.tv/
இந்த இணையத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கிற்கு 3 இணையமுகவரிகளை(Free Domain Names) பெற்றுகொள்ள முடியும். CNAME, A, MX, NS ,TXT போன்ற சேவைகளையும் மற்றும் Google Apps,windows live சேவைகளையும் இதனோடு இணைந்ததாக பெற்றுக்கொள்ள முடியும்.



3. http://www.co.tv/
இந்த இணையத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கிற்கு 3 இணையமுகவரிகளை(Free Domain Names) பெற்றுகொள்ள முடியும். CNAME, A, MX, NS ,TXT போன்ற சேவைகளையும் மற்றும் Google Apps,windows live சேவைகளையும் இதனோடு இணைந்ததாக பெற்றுக்கொள்ள முடியும்.

4. http://www.smartdots.com/
இணையமுகவரியுடன் உங்கள் இணையமுகவரியில் அமைந்த மின்னஞ்சல் முகவரிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

5. http://www.cydots.com/
இணையமுகவரியுடன் உங்கள் இணையமுகவரியில் அமைந்த மின்னஞ்சல் முகவரிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Tuesday, March 9, 2010

3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System)

கணணியை செயற்படுத்தவென உருவாக்கப்பட்டவைதான் இயங்குதளங்கள் (Operating System). இன்னும் சொல்லப்போனால் கணணி வன்பொருட்களுக்கும்(Hardwares) பயனாளர்களுக்கும்(users) இடையிலான ஒரு இடைமுகமாக(Interface)  செயற்படுபவை. இவ்வாறான பல இயங்குதளங்கள் இன்றைய உலகில் பல உருவாக்கப்பட்டுள்ளன உருவாக்கபட்டுக்கொண்டிருக்கின்றன. அவ்வாறான பல இயங்குதளங்களாக Windows XP, Windows Vista, Windows 7 , Apple OS, Ubuntu OS, Linux, Google Chrome OS, RISC OS, Amiga OS, MAC OS, போன்ற இன்னும் பல இயங்குதளங்கள் இன்று காணப்படுகின்றன.


அவ்வாறான இயங்குதளங்கள் இருக்கின்றபோதிலும் இவற்றைவிட மிகச்சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஒன்றும் உள்ளது.


KOLIBRI OS  எனப்படும் இந்த இயங்குதளமானது 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது Windows,Linux, Mac போன்ற பிற இயங்குதளங்களை அடிப்படையாகக்கொண்டு அமையாமல் CPU நிரலாக்கமொழி எனப்படும் முதலாம் தலைமுறை( First Generation language)  மொழியான கணணி இயந்திர மொழியின்(Machine Code) துணையுடன் உருவாக்கப்பட்ட இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது மிகச்சிறிய அளவில் மென்பொருள் பொதிகளையும் கொண்டுள்ளது.  Games, Tables Editor, Compiler,Text Editor, Demos, Web Browser போன்ற மென்பொருட்கள் உள்ளடங்கலாக இந்த இயங்குதளமானது உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான மிகச்சிறிய மென்பொருளாகும். 


இயங்குதளம் தரவிறக்க சுட்டிகள்: 
Floppy Disk Image Format
Compact Disk Image Format





Saturday, March 6, 2010

இணையத்திலிருந்து இலவசமாக நூல்களை தரவிறக்க சில இணையத்தளங்கள்(Free Books)

வாசிப்பதனால் மனிதன் ஒருவன் முழுமையான மனிதனாகின்றான். வாசிப்பு தேடல்களுக்கென நூலகங்கள் இருக்கின்றபோதிலும் இன்றைய இணையயுகத்தில் இணையநூலகங்கள் மூலமாகவும் நாம் எமது அறிவுப்பசியினை தீர்த்துக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
அதைவிட நாம் இன்று இணைய உலகில் பல்வேறுபட்ட மின்நூல்களையும் பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது. அவ்வாறான மின்நூல்களை இணையத்தில் இலவசமாக வழங்கவென பல இணையத்தளங்கள் உள்ளன.










அத்தகைய இணையத்தளங்கள் சிலவற்றின் பட்டியல்:

1. FreeBookSpot
FreeBookSpot இல் 4485 இலவச நூல்கள் 96 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் விஞ்ஞான, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் கணணி நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி:  FreeBookSpot
http://www.freebookspot.in/



2.4eBooks
இந்த இணையத்தளத்தில் கணணி சம்பந்தமான மற்றும் கணணி நிரலாக்க நூல்கள் பலவற்றை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி: 4eBooks
http://4ebooks.org/




3.Free-eBooks
உயிரியல், சுகாதாரம், மருத்துவம், முகாமைத்துவம், பொருளியல், பொறியியல்,கணணி மற்றும் வலையமைப்பு, மெய்யியல், உளவியல், அரசியல், ஆன்மீகம், கலை, இலக்கியம், மற்றும் பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல்வேறுபட்ட துறைகளில் நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும்.
இணையத்தளச்சுட்டி: Free-eBooks
http://www.free-ebooks.net/




4. GetFreeEBooks
கலை, இலக்கியம், ஆன்மீகம், கணிதவியல், கணணி வலையமைப்பு, நிரலாக்கம், மொழியியல், சமூகவியல், நாவல்கள் முகாமைத்துவம் போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி: GetFreeEBooks
http://www.getfreeebooks.com/





5. FreeComputerBooks
கணணி சம்பந்த்தப்பட்ட பல்வேறுவகையான நூல்கள்,கணணி சஞ்சிகைகள் பாடக்குறிப்புக்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: FreeComputerBooks
http://freecomputerbooks.com/




6. FreeTechBooks
கணணி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல், கணிதவியல், கணணி நிரலாக்கம் போன்ற பல்வேறுபட்ட தொழில்நுட்பம் சார்ந்த நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: FreeTechBooks
http://www.freetechbooks.com/




7. KnowFree
இணைய சஞ்சிகைகள், கணணி சார்ந்த நூல்கள் கணிதவியல் நூல்கள், பொறியியல், மருத்துவ விஞ்ஞானம், போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: KnowFree
http://knowfree.net/




8. OnlineFreeEBooks
பொறியியல், சுகாதாரம் மற்றும் மருத்துவம், கணணி மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, அறிவியல் போன்ற பல்வேறு வகையான நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: OnlineFreeEBooks
http://www.onlinefreeebooks.net/




9. The Online Books Page
30,000 க்கும் மேற்பட்ட இலவச நூல்களை தாங்கியதொரு இணைய நூலகம்.
இணையத்தளச்சுட்டி: The Online Books Page
http://digital.library.upenn.edu/books/




10. BookYards
பிரபல்யம் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் பலவற்றை இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: BookYards
http://www.bookyards.com/






இத்தகைய பல்வேறுபட்ட இணையத்தளங்கள் இன்னும் பல உள்ளன. முடிந்தால் அவற்றையும் பட்டியல் இடுகிறேன்.