Thursday, December 31, 2009

கணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை( Shortcut Icons) உருவாக்க ஒரு இலவச மென்பொருள்

நேரத்தை மீதப்படுத்தி கணணியை கையாள்வதற்கு பல வழிகள் உள்ளன. அவ்வாறான வழிகளில் ஒன்று தான் கணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை (Desktop Shortcut Icons) உருவாக்கி அவற்றின் மூலம் கணணியை கையாள்வதற்கான நேரத்தை மீதப்படுத்தி கொள்ளலாம்.
அவ்வாறு கணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை (Shortcut Icons) உருவாக்கவென இலவச மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளில் சுருக்குவழியில் உருவாக்கப்பட்டுள்ள சில சின்னங்கள் உள்ளன.






Handy Shortcuts எனப்படும் இந்த மென்பொருளில் Lock WorkStation, Switch Account. Shutdown, Restart, Log Off, Hibernate, Show Desktop, Uninstall Programs, Device Manager, Security Center, Windows Defender, Windows DVD maker, Flip 3D, Launch Screen-saver, Disable Windows Firewall, Enable Windows Firewall, Clear Clipboard, Connect to Internet, Safely Remove Hardware and a Master Control Panel. போன்ற சுருக்குவழி சின்னங்களை உருவாக்க முடியும். இந்த சுருக்குவழி சின்னங்கள் யாவும் உங்கள் கணனித்திரையில் உருவாக்கப்படும். இலகுவானதொன்றாகவுள்ளது.




இணையச்சுட்டி: Handy Shortcuts

Monday, December 28, 2009

கணனியிலுள்ள வைரஸ் மென்பொருள் (Anti Virus) ஒழுங்காக வேலை செய்கின்றதா என பரிசோதித்து(Check) பார்ப்பது எப்படி?


உங்கள் கணனியில் நீங்கள் நிறுவியிருக்கும் Anti-Virus மென்பொருளானது சிலவேளைகளில் அதனுடைய செயற்பாட்டை இழந்தோ அல்லது புதிய வைரஸ்களை இனங்கான முடியாமலோ இருக்கலாம். அத்தகைய நேரங்களில் உங்கள் கணனியிலுள்ள Anti-Virus மென்பொருளை பரிசோதித்து பார்ப்பதற்கான வழிமுறைதான் இது.

முதலில் Notepad ஐ திறந்து கொள்ளுங்கள் (open Notepad)

கீழே தரப்பட்டுள்ள Code ஐ பிரதி செய்து Notepad இல் இடுங்கள்.
(Copy this Code in text file)

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

இதனை fakevirus.exe என்னும் பெயரில் சேமித்து கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் சேமித்த இந்த ஆவணமானது உடனே அழிக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே உங்கள் கணனியிலுள்ள Anti-Virus ஆனது ஒழுங்காக செயற்படுகின்றது.

Saturday, December 26, 2009

YouTube இலிருந்து காணொளிகளை தரவிறக்க இணையவழி இலவச மென்பொருள்

இணையத்தில் Youtube இலிருந்து காணொளிகளை ன்றும் பல ஆவணங்களை பல்வேறுபட்ட வடிவங்களில் தரவிறக்கவென பல்வேறு இணையத்தளங்கள், மென்பொருட்கள்  உள்ளன.  ஏற்கனவே எனது இடுகைகளில் அத்தகைய பல தகவல்களை பதிவிட்டுள்ளேன். அத்தகைய ஒரு இணைய வழியிலான மென்பொருள் சம்பந்தமான இணையம் பற்றித்தான் இன்றைய பதிவை இடவுள்ளேன்.



catch YouTube இது ஒரு இணையவழியிலான மென்பொருள் என்று குறிப்பிடலாம். இதிலிருந்து நீங்கள் YouTube காணும் காணொளிகளை பார்த்து மகிழலாம். இதிலுள்ள சிறப்பம்சம் mpg,mov,3gp,mp3,dvd,wav,mp4 போன்ற வடிவங்களில் இந்த தொகுப்புக்களை நீங்கள் தரவிறக்கி கொள்ளலாம்.  நீங்களும்  தரவிறக்கி பார்த்து மகிழுங்கள்.

இணையச்சுட்டி:  http://www.catchyoutube.com/





Thursday, December 24, 2009

இலவச புகைப்பட வடிவமைப்பு மென்பொருள்-Hornil StylePix

புகைப்பட வடிவமைப்புக்களுக்கென பல மென்பொருட்கள் இன்றைய கணனியுகத்தில் குவிந்து காணப்படுகின்றன. சிலவற்றை கணனியில் நிறுவியும் சில மென்பொருட்கள் இணையவழியிலாகவும் காணப்படுகின்றன. அவ்வாறன பல மென்பொருட்கள் பற்றிய பல தகவல்களை நான் ஏற்கனவே எனது முன்னைய இடுகைகளில் தந்துள்ளேன். அத்தகைய ஒரு இலவச புகைப்பட வடிவமைக்கான ஒரு மென்பொருள் பற்றிய பதிவுதான் இது.

Hornil StylePix இது ஒரு இலவச புகைப்பட வடிவமைப்புக்கான ஒரு மென்பொருள். இந்த மென்பொருளானது பயனாளரால் மிக இலகுவான விதத்தில் கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.(intuitive user interface) இந்த மென்பொருளானது கிட்டத்தட்ட Adobe Photoshop இன் செயற்பாடுகளையுடையதாகவும் மிக வேகமாகவும் வடிவமைப்பு செய்யக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இந்த மென்பொருளை உங்கள் கணையில் நிறுவியோ அல்லது USB Drive இல் சேமித்து எந்தவொரு கணணியிலும் பாவிக்ககூடிய விதத்திலும் என இரு வழிகளில் இதை பயன்படுத்தலாம்(Portable Apps).



இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவி பயன் பெறுங்கள்.

தரவிறக்க மற்றும் மென்பொருள் தொடர்பான இணையச்சுட்டி: Hornil StylePix


Wednesday, December 9, 2009

Twitter இல் பயனுள்ள ஆவணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் (Share Files) புதிய வசதி.

மிகவும் பிரபல்யமான நுண்ணிய வலைபதிவு (Micro Blogging) எனப்படும் Twitter ஆனது இலவசமாக ஆவணங்களை,கோப்புக்களை (Folders And Files) பகிர்ந்து கொள்ளும் வசதியை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியானது மற்றவர்களுடன் உங்கள் ஆவணங்களை தனிப்பட்டரீதியாகவும் (Private) மற்றும் எல்லாரும் பகிர்ந்து (Public) கொள்ளும் விதத்திலும் வழங்கப்படுகின்றது. நீங்கள் FileTwt என்னும் இணையத்தளத்தில் சென்று உங்கள் ஆவணங்களை தரவேற்றி Twitter ஊடாக பகிர்ந்து கொள்ள முடியும். 20MB வரையில் உங்கள் ஆவணங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள முடியும்.
நீங்களும் சென்று பயனுள்ள விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்பெறுங்கள்.


இணைய சுட்டி: FileTwt