Wednesday, September 30, 2009

கணணி திரையிலுள்ள(Desktop) சின்னங்களை (Icons) எவ்வாறு பூட்டி வைப்பது?-இலவச மென்பொருள்


கணணி திரையிலுள்ள (Desktop) சின்னங்களை (Icons) மற்றவர்கள் பாவிக்கமுடியாமல் கடவுச்சொல் (Password) கொடுத்து பாதுகாப்பாக பூட்டி வைக்கவென இலவச மென்பொருள் உள்ளது.

அதற்கான மென்பொருள் தான் Desklock. இந்த மென்பொருளை கணனியில் நிறுவி உங்கள் கணனித்திரையை பாதுகாப்பாக பூட்டி மற்றவர்கள் அவற்றை பாவிக்கமுடியாமல் செய்யமுடியும். இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணனியிலுள்ள சின்னங்களை (Icons) மற்றவர்கள் அதை ஒழுங்குபடுத்த முடியாமலும் செய்யமுடியும்.(drag and Drop).

மென்பொருள் தரவிறக்க சுட்டி: Desklock Download link



Monday, September 28, 2009

Yahoo மின்னஞ்சல் முகவரியினை(Email ID) எவ்வாறு நிரந்தரமாக அழிப்பது?

உங்கள் Yahoo Mail Account முற்று முழுதாக நிரந்தரமாக அழிக்க விரும்புகின்றீர்களா? இதோ அதற்கான வழி.







1. உங்கள் Yahoo Mail Account புகுபதிகை செய்து கொள்ளுங்கள்.

2. நீங்கள் நிரந்தரமாக அழிக்க விரும்பும் மின்னஞ்சல் முகவரி(Email ID) மற்றும் கடவுச்சொல்(Password) என்பவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

3. Terminate Your Yahoo Account என்ற இந்த இணைப்பின் மீது அழுத்துங்கள்(click).
(தேவையேற்படின் புகுபதிகை செய்யவும்)

4. இந்த பக்கத்தில் உங்களது தரவுகள் யாவும் இல்லாமல் போகும் என்று குறிப்பிடபட்டிருக்கும் பக்கத்தில் உங்கள் கடவுச்சொல்லை(Passowrd) மீண்டும் வழங்குங்கள்.

5. Terminate this Account என்பதை அழுத்தி உங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை நிரந்தரமாக இல்லாமல் செய்யலாம்.










இனிவரும் பதிவுகளில் எவ்வாறு Gmail Account மற்றும் Facebbok Account என்பவற்றை இல்லாமல் செய்வது பற்றி பார்க்கலாம்.

Sunday, September 27, 2009

USB Devices ஐ பாதுகாப்பாக கணனியிலிருந்து அகற்றுவதற்கான ஒரு இலவச மென்பொருள்

USB Removable Devices ஐ எமது கணனியிலிருந்து பாதுகாப்பாக அகற்றுவது அவசியம். இல்லாதுவிடில் உங்கள் USB Drives களிலிருந்து சிலவேளைகளில்தரவுகளோ, கோப்புக்களோ( documents and folder) காணாமல் போகும் சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே உங்கள் கணனியிலிருந்து USB Devices பாதுகாப்பாக அகற்றப்படுவது மிக அவசியம்.

அவ்வாறு உங்கள் USB Devices ஐ பாதுகாப்பாக நீக்குவதற்கு என பிரத்தியேகமாக சில மென்பொருட்கள் உள்ளன. அத்தகைய ஒரு இலவச மென்பொருள் தான் USB Safely Remove.




மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியதன் (Install) பின்னர் கணனியில் System Tray இல் ICON ஒன்று தோன்றும். அதில் அழுத்தி (CLICK) USB Devices ஐ பாதுக்காப்பாக உங்கள் கணனியிலிருந்து அகற்றி கொள்ளுங்கள்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி: Download USB Safely Remove.








Saturday, September 26, 2009

மற்றவர்களின் USB Drive இல் உள்ள தரவுகளை அவர்களை அறியாமலே திருடுவதற்கான மென்பொருள்:

உங்கள் இல் USB இல் உள்ள கோப்புகளையோ (Folders) அவர்களின் ஆவணங்களையோ (Documents) அல்லது உங்களுக்கு தெரியாத நபர்களின் USB Drive க்களில் உள்ள கோப்புக்களை, ஆவணங்களை அவர்கள் அறிந்து கொள்ளாமல் எவ்வாறு பிரதி (Copy) செய்து கொள்ள Copier என்னும் இந்த மென்பொருள் உதவுகின்றது.

(உங்களுக்கு விளங்கிற தமிழிலை சொன்னால் மற்ற ஆட்களின்ரை தரவுகளை திருடுறது.....எல்லாரும் ஒரு வகையிலை திருடர் தான்.)


அவர்கள் உங்கள் கணனியில் தங்கள் USB Drive களை பாவிப்பவர்களாயின் அவர்களின் சகல தரவுகள் யாவும் அவர்களை அறியாமலே பிரதி(Copy) செய்யப்பட்டுவிடும். அவர்களின் தரவுகள் பிரதி செய்யப்பட்டதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இருக்காது.

இந்த மென்பொருளானது ஆகக் கூடுதலாக 8GB அளவிலான தரவுகளையே திருடும். மன்னிக்கவும் பிரதி செய்யும். (திருடுறதிற்கும் ஒரு அளவு இருக்கு)

இந்த மென்பொருள் மூலம் பிரதி செய்யப்படும் தரவுகள் முன்னிருப்பு அடைவான (Default directory) "C:\WINDOWS\sysbackup\" என்னும் அடைவினுள் (Director) இல் சேமிக்கப்படும்.

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Download USB Hidden File Copier




Friday, September 25, 2009

1GB அளவுள்ள கோப்புக்களை 10MB அளவுள்ள கோப்புக்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருள்.

மிகப்பெரிய அளவிலான கோப்புக்களை மிகச்சிறிய அளவிலான கோப்புக்களாக மாற்றவென ஒரு திறந்த இலவச மென்பொருள்தான் இது. உங்கள் கோப்புக்கள் (Folder) எத்தகைய பெரிய அளவிலான கோப்புக்களாக இருந்தாலும் அதனை மிகச்சிறிய அளவிலான கோப்புக்களாக மாற்ற முடியும்.


KGB Archiver என்னும் மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கோப்புக்களை மிகச்சிறிய அளவிலான கோப்புக்களாக மாற்றிக்கொள்ள முடியும்.

இதற்கு உங்கள் கணனியில் RAM ஆனது குறைந்தது 256MB அளவில் இருக்கவேண்டும்.



மென்பொருள் தரவிறக்க சுட்டி: KGB Archiver Download
KGB Beta Download



Wednesday, September 23, 2009

USB Drive இல் பாவிப்பதற்கான பயனுள்ள நான்கு மென்பொருட்கள்


USB DRIVE இல் பயன்படுத்தவென பயனுள்ள நான்கு மென்பொருட்களைப்பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.


1.VIRUS தாக்கத்திலிருந்து உங்கள் USB Drive களை பாதுகாப்பதற்கான மென்பொருள்.
THUMBS SCREW என்னும் மென்பொருளை பயன்படுத்தி உங்கள் USB இல் வைரஸ் இலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். நீங்கள் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவியதன்(Install) பின்னர் System Tray Icon இல் வலது சொடுக்கின் (Right Click) மூலம் Make USB Writeable என்பதை தெரிவுசெய்து உங்கள் USB ஐ VIRUS இலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.










மென்பொருள் தரவிறக்க சுட்டி: Thumbscrew Download




2. பாதுகாப்பாக உங்கள் கணனியிலிருந்து USB Drive ஐ அகற்றுவதற்கான மென்பொருள்.















தரவிறக்க சுட்டி: USB Disk Ejector Download




3.DeskDrive எனப்படும் உங்கள் கணனியிலுள்ள Hard drives களுக்கு Shortcut களை வழங்கி இலகுவாக கையாள்வதற்கான மென்பொருள்.
















மென்பொருள் சுட்டி: DeskDrive Download
















4. உங்கள் USB Drive இல் காணாமல் போன கோப்புக்களை (Documents Folders) மீட்பதற்கான SyncToy என்னும் மென்பொருள்.






மென்பொருள் தரவிறக்க சுட்டி: SyncToy Download

Sunday, September 20, 2009

புகைப்படத்தை உயிரோட்டமுள்ள புகைப்படமாக மாற்ற இணையவழி மென்பொருள்

உங்கள் புகைப்படங்களை உயிரோட்டமுள்ள (Sort-of-living) புகைப்படமாக முப்பரிமாண தோற்றத்தில் (Sort-of-3D) பார்க்க விரும்புகிறீர்களா? இதோ அதற்கான இணைய வழி மென்பொருள்.

Japanese app என்னும் மென்பொருளில் உங்கள் புகைப்படத்தை தரவேற்றி உங்கள் புகைப்படத்தை உயிரோட்டமுள்ள ஒரு புகைப்படமாக மாற்றி அமையுங்கள்.

http://labs.mppark.jp/hige/ என்ற இணையதளத்திற்கு சென்று CHANGE என்பதை அழுத்தி புகைப்படத்தை தரவேற்றி கொள்ளுங்கள்.




அதில் ஏற்கனவே உள்ள புகைப்படம் மாற்றம் பெற்று உங்கள் புகைப்படம் உயிரோட்டமுள்ள புகைப்படமாக மாற்றம் பெறுவதை நீங்கள் காணலாம்.
அத்துடன் நீங்கள் உங்கள் புகைப்படத்துக்கு அசைவியக்கங்களையும் (Animations) சேர்த்துக்கொள்ள முடியும். சுட்டியின் (mouse) அசைவுகளுக்கு ஏற்ப புகைப்படத்தின் அசைவில் மாற்றங்களை உண்டுபண்ண முடியும்.



Saturday, September 19, 2009

Powerpoint கோப்புக்களை Flash வடிவில் மாற்றுவதற்கான இலவச மென்பொருள்


Microsoft Powerpoint இன் உதவியுடன் உருவாக்கப்பட்ட கோப்புக்களை மிகவும் இலகுவான முறையில் Flash வடிவத்திற்கு மாற்ற உதவும் மென்பொருளின் தான் iSpring . அதாவது இது ஒருவைகையில் நமது இணைய வழியிலான கற்றல் செயற்பாடுகளுக்கு பெரும் உறுதுணையாக அமையும்.


நீங்கள் iSpring என்ற மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியதன் பிற்பாடு. உங்களுக்கு தேவையான Microsoft Powerpoint கோப்புக்களை தரவேற்றி இலகுவாக Flash வடிவத்திற்கு மாற்றி அமைக்கலாம்.
இந்த மென்பொருள் ஆனது Windows 2000/XP/2003/2007 ஆகிய இயங்குதளங்கள் ( operating systems )நிறுவப்பட்டுள்ள கணனிகளில் மாத்திரமே பயன்படுத்தலாம்.

அவ்வாறு நீங்கள் பதிவேற்றிய கோப்புக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள http://www.slideboom.com/ என்ற இணையத்தளத்தை பயன்படுத்தி பதிவேற்றி கொள்ளலாம்.

இது ஒரு இலவச மென்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.

தரவிறக்குவதற்கான இணையச்சுட்டி: iSpring அல்லது
http://www.ispringsolutions.com/down...g_free_4_2.exe

நீங்களும் பயன்பெறுங்கள் மற்றவர்களையும் பயன்பெற செய்யுங்கள்.


Friday, September 18, 2009

நேரடியாகவே YouTube இலிருந்து காணொளிகளை (Videos) தரவிறக்குவது எப்படி?

YouTube இலிருந்து அதிலுள்ள காணொளிகளை(Videos) தரவிறக்கி(Download) பயன்படுத்த விரும்புபவர்கள் நேரடியாகவே YouTube இலிருந்து தரவிறக்கி கொள்வதற்கான மிகவும் எளிமையான நடைமுறை தான் இது.
நீங்கள் செய்யவேண்டியது உங்கள் Address Bar இல் http://www.youtube.com/ என்பதற்கு பதிலாக http://www.kickyoutube.com/ என தட்டச்சு செய்யுங்கள். அதாவது Youtube என்பதற்கு முன்னால் kick என்னும் சொல்லை போட்டால் போதும்.
பின்னர் தோன்றும் திரையில் நீங்கள் தரவிறக்க வேண்டிய காணொளியை தேடல் பெட்டியினுள் (Search Box) தட்டச்சு செய்வதன் மூலம் தேடி அதனை தெரிவுசெய்யுங்கள்.


பின்னர் விரும்பிய வடிவமைப்பினை (format:MP4,FLV,3GP,IPHONE,PSP,MP3) தெரிவு செய்து பச்சை நிறத்திலான GO என்பதினை அழுத்துங்கள்.



GO என்பதினை தெரிவு செய்த பின்னர் நீல நிறத்திலுள்ள DOWN என்பதினை அழுத்துங்கள். இப்போது நீங்கள் தரவிறக்கி பார்க்கலாம்.


Facebook தகவல்: தற்பொழுது Facebook இன் பயனாளர்(User name) பெயருக்கு நீங்கள் நேரடியாகவே உங்கள் பயனர் பெயரையே பாவிக்கலாம். மின்னஞ்சல் பாவிக்க வேண்டிய அவசியம் இல்லை.


Thursday, September 17, 2009

Facebook பயனாளர்களுக்கு (Users) இனித்திடும் செய்தி.......


Skype போன்ற குரல்,வீடியோ அரட்டை (Voice and Video chatting) இணைய வழி அரட்டை மென்பொருள் மற்றும் இணையத்தளங்களுக்கு தலையிடியை கொடுக்கும் செய்தி. Facebook அன்பர்களுக்கு இனியசெய்தி.

வெகுவிரைவில் சமூக வலைத்தளமான Facebook தனது 300 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு (Users) ஒரு இனித்திடும் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. Vivox என்னும் இணைய மென்பொருள் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து குரல் மற்றும் வீடியோ அரட்டை வசதியை (Voice and Video chatting) இன்னும் சில வாரங்களில் வழங்கவுள்ளது.

பிறகென்ன Facebook உடன் தவம் கிடப்பவர்கள் இனி Headset ஐயும் கொண்டு வெளிக்கிட வேண்டியதுதான். இங்கைபார் சொல்லி முடியிறதுக்கிடையிலை வெளிக்கிட்டாங்கள்.

Wednesday, September 16, 2009

Facebook இன் புதிய இடைமுகம் (Interface)-Facebook lite

சமூக வலைத்தளமான Facebook புதியதொரு Facebook lite என்னும் இலகுவான பயனாளர் இடைமுகத்தை (User Interface) தனது இணைய பயனாளர்களுக்காக (Facebook's User) வழங்கியுள்ளது. இது twitter க்கு போட்டியான ஒரு வருகை. முன்னைய இயல்புநிலை இடைமுகத்தை(standard Interface) விட அதி வேகமான கொண்டிருக்கிறது (Interface) கொண்டிருக்கின்றது. சிறிது காலத்துக்கு முன்னர் பரீட்சார்த்த (Testing) இணையப்பதிப்பாக இருந்த Facebook Lite தற்பொழுது பொது வெளியீடாக எல்லோரினதும் பாவனைக்கு வந்துள்ளது.




அதற்கான தள முகவரி: Facebook Lite












Monday, September 14, 2009

Yahoo இன் புதிய அரட்டை பதிப்பு-10(Yahoo Messenger Beta-10)


நேற்று தான் Yahoo Messenger பதிப்பு-9 வெளியானது போல நாம் உணர்ந்திருக்கும் வேளையில், தற்போது பதிப்பு-10 இன் சோதனைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. பதிப்பு 9 வெளியாகி இன்னும் ஓர் ஆண்டு கூட முடியவில்லை என்று நினைக்கிறேன். தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் yahoo பணியாற்றி இதனை வெளியிட்டுள்ளது.
சமூக வலையமைப்பு மற்றும் வீடியோ வழி அழைப்பு இதில் மேம்படுத்தப் பட்டுள்ளது.
வீடியோ வழி அரட்டை அழைக்க இப்போது Icon ஒன்று தரப்பட்டு எமது வேலை எளிதாக்கப்பட்டுள்ளது.Instant Messenger வசதி தரும் பல Client Programs, webcam வழியாக ஒலி எழுப்பி அழைக்கும் வசதியைத் தருகின்றன. ஆனால் இந்த நடைமுறை இந்த பதிப்பில் Yahoo மாற்றியுள்ளது. இதன் மூலம் Skype செயல்பாட்டிற்கு, தான் ஒரு போட்டியாளர் என Yahoo காட்டியுள்ளது. ஏனென்றால் Skype தான் Voice Over Internet Protocol(VOIP) வழிகளுக்கு முதலில் வழி வகுத்தது.


இந்த பதிப்பில் வீடியோ அரட்டை , பேசும் ஒலிக் கூர்மை, படத் தெளிவு ஆகியவை சிறப்பாக உள்ளன. வீடியோ அழைப்பு அமுலில் இருக்கையில் ஆவணம்(file) பகிர்ந்து கொள்வது சில நேரம் குறைவான வேகத்தில் நடைபெறுகிறது. இதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் கணனி மற்றும் இணைய வேகமாகக் கூட இருக்கலாம். எனவே மிகச் சிறப்பாக இந்த பதிப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றால், கீழ்க்குறித்த அளவிலாவது நம்மிடம் வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருள்(சாப்ட்வேர்) இருக்க வேண்டும். Windows XP அல்லது அடுத்து வந்த Operating system, 1GHz Processor, 512MB RAM MEMORY, குறைந்தது 300Kbs வேகத்தில் இணைய இணைப்பு வேகம், அதேபோல குறைந்தது 128Kbs வேகத்தில் தரவேற்றும் (Uploading) வசதி, webcam, Microsoft Directx பதிவு ஆகியவை அமைப்பில்(system) இருக்க வேண்டும். இன்னும் தெளிவாகத் தேவைகளை Yahoo தளத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக தகவல்களுக்கு : http://messenger.yahoo.com/winbeta

Friday, September 11, 2009

Google Books என்னும் சேவையிலிருந்து நூல்களை PDF ஆக தரவிறக்குவதற்கான (Download) இலவச மென்பொருள்:


எமக்கு தேவையான நூல்களை அதுவும் இலவசமாக பெறுவது என்பது சிரமமான விடயம். அத்தகைய பெரும்பாலான நூல்களை பெற்றுக்கொள்ளவென Google இன் அரியதொரு சேவையுள்ளது. books.google.com இதில் உங்களுக்கு தேவையான புத்தகங்களை தேடி பெற்றுக்கொள்ள முடியும் . ஆனால் அவற்றை PDF வடிவில் தரவிறக்குவது(Download) என்பது கடினம்(சில PDF ஆக தரவிறக்கும் வசதி உள்ளது ) அவ்வாறான நூல்களை தரவிறக்கவென ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.

Melon Google Books Downloader என்னும் மென்பொருள் உள்ளது. இது ஒரு இலவச மென்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.


இந்த மென்பொருளை கணனியில் நிறுவ முதல் Microsoft .net Framework 3.5 SP1 என்னும் மென்பொருள் ஆனது உங்கள் கணனியில் முதலில் நிருவபட்டிருக்க வேண்டும்


(Microsoft .net Framework 3.5 SP1 என்னும் மென்பொருளை நீங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.)


Microsoft .net Framework 3.5 SP1 என்னும் மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியதன் பின்னர் Melon Google Books Downloader என்னும் மென்பொருளை திறந்து அதில் அந்த நூலுக்குரிய இணையதள இணைப்பை வழங்குங்கள்.



Microsoft .NET Framework 3.5 SP1 என்னும் மென்பொருளை தரவிறக்குவதற்கான இணையத்தளச்சுட்டி.
Microsoft .NET Framework 3.5 SP1 என்னும் இணைப்பில் அழுத்துங்கள்.

Melon Google Books Downloader மென்பொருளை தரவிறக்குவதற்கான சுட்டி:
Melon Google Books Downloader இந்த இணைப்பில் அழுத்துங்கள்.



இதோ Melon Google Books Downloader இலிருந்து புத்தகங்களை தரவிறக்குவதற்கான வழிகாட்டி (Guide):

1.Melon Google Books Downloader ஐ திறவுங்கள்.(open Melon Google Books Downloader))




2.File ஐ தெரிவுசெய்து Add book என்பதினை அழுத்துங்கள்.





3.பின்னர் தோன்றும் menu இல் url ஐ இடுங்கள்.




4. தரவிறக்க வேண்டிய நூலினை தெரிவுசெய்து Queue என்பதினை அழுத்துங்கள்.












Tuesday, September 8, 2009

கூகுளிற்கு வயது பதினொன்று...!!!


செப்டம்பர் 7ல் கூகுள் தன் பதினோராவது ஆண்டை முடித்து 12 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி கூகுல் தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடியது.

Google Earth மற்றும் வரைபடம் மூலம் ஆகாயத்தில் அடி எடுத்து வைத்து தகவல் தொழில் நுட்ப உலகில் இன்று இன்னும் உயர உயரச் செல்லும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இளைய தலைமுறை எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகிறது. இதனுடைய வளர்ச்சியைக் காணலாம்.

1995

லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin) ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்தாய்வு செய்கின்றனர்.

1996

பேஜ் மற்றும் பெரின் பேக்ரப் என்னும் தேடு பொறியினை வடிவமைக்கின் றனர். இணையதள இணைப்புகளை இது ஆய்வு செய்து தகவல்களைத் தெரிவிக் கிறது. இதன் பின் கூகுள் முதல் பதிப்பு ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது.

1997

Google.com பதிவு செய்யப்படுகிறது. சன் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஆண்டி (Andy Bechtolsheim ) கூகுள் நிறுவனத்தில் ஒரு லட்சம் டாலர் முதலீடு செய்கிறார். Google கார் தரிப்பிடம் ஒன்றில் தன் முதல் பணி மையத்தை அமைக்கிறது. அடுத்த செப்டம்பர் 7ல், அதன் முதல் பிறந்த நாளில், கூகுள் அறிமுகமாகின்றது.

1999

கூகுள் நிறுவனம் தொழிலில் வர்த்தக ரீதியாக புது முயற்சி செய்பவர்களுக்கான முதலீடு 2 கோடியே 50 லட்சம் டாலர் பெறுகிறது. 8 ஊழியர்களுடன் முழுமையான ஓர் அலுவலகத்தினை மவுண்ட்டன் வியூ என்ற இடத்தில் அமைக்கிறது.

2000

google முதன் முதலாக Ad words என்னும் விளம்பரப் பிரிவினை அமைக்கிறது. யாஹூ கூகுள் தேடு பொறியினை தன் தேடல் சாதனமாக அமைத்துக் கொள்கிறது. பத்து மொழிகளில் கூகுள் வெளிவருகிறது. உலகின் மிகப் பெரிய வேகமான தேடல் சாதனமாக கூகுள் இடம் பிடிக்கிறது.

2001

கூகுள் நிறுவனத்தின் தலைவராக எரிக் ஸ்மித் ஆகிறார். பேஜ் மற்றும் பிரின் தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம் ஆகிய இருபிரிவுகளுக்கு ஒவ்வொருவரும் தலைவராகின்றனர். கூகுள் தேஜா. காம் நிறுவனத்திலிருந்து 1995 ஆண்டிலிருந்து வெளியான 50 கோடி தகவல்களைப் பெறுகிறது.

2002

Google labs,Google news (4000 செய்தி தொடர்பு களுடன்) மற்றும் Froogle தொடங்கப்பட்டன. அமெரிக்க இணையதள நிறுவனமான ஏ.ஓ.எல். (AOL) Google தேடு தளத்தைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறது.

2003

அமெரிக்காவில் இயங்கும் Dialogue society (வட்டார மொழி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம்) 2002 ஆன் ஆண்டில் அதிகம் பயன் படுத்தப்பட்ட சொல் “கூகுள்” எனக் கண்டு அறிவிக்கிறது. Blogs காரணகர்த்தாவான பைரா லேப்ஸ் (Blogger) நிறுவனத்தை கூகுள் பெறுகிறது.

2004

மூலதன நிதி திரட்ட பங்கு ஒன்று 85 டாலர் என்ற விலையில் பங்குகளை கூகுள் வெளியிட்டது. இமெயில் சேவை ஜிமெயில் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இத்துடன் Desktop Search வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. Picasa நிறுவனம் வாங்கப்பட்டது. அதன் தேடல் தொகுப்பு அட்டவணையில் உள்ள 600 கோடி வகைகள் google தேடு பொறிக்கு இணைந்தன.

2005

Google Earth,Google Docs,Google Space மற்றும் Google Blog search ஆகியவை தொடங்கப்பட்டன. Google reader என்ற பெயரில் RSS feed Reader அறிமுகமானது.Google Analytics என்ற இணையதள ஆய்வு சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

2006

Youtube நிறுவனம் கையகப்படுத்தப்பட்டது. Google Calendar, Gmail in mobile மற்றும் Google Finance ஆகியவை உருவாகி வெளியாயின. Google Checkout வர்த்தக நோக்கில் தரப்பட்டது. ஒரு சில பயனாளிகளுக்கென Google page creator வடிவமைக்கப்பட்டு தரப்பட்டது. ஒரு சில பிரச்சினைகளுக்குப் பின் சீனாவில் கூகுள் நுழைந்தது.

2007

Double Click என்னும் விளம்பர நிறுவனத்தை கூகுள் வாங்கியது. Jaiku என்னும் Social Mobile நிறுவனத்தினயும் பெற்றது.

2008

Google Chrome வெளியானது. வெளியான ஒரே நாளில் உலகின் மொத்த பிரவுசர் பயன்பாட்டில் 1 % மக்களிடம் சென்றது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. விக்கிபீடியாவிற்கு இணையாக கூகுள் நால் (Google Knol) வெளியானது.

2009

கூகிள் தனது Operating system ( Google Chrome OS ) அறிவிப்பை வெளியிட்டது. மைக்கரோசாப்டின் Bing தேடுபொறிக்கு போட்டியாக கூகிள் Google squared எனும் தேடுபொறியை அறிமுகப்படுத்தியது.

மைக்ரோசாப்ட் / கூகுள் யார் பெரியவர்?

தகவல் தொழில் நுட்ப உலகில் எதாவது நடந்தால் உடனே அது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான மோதலாகத்தான் இருக்கிறது. கூகுள் நிறுவனம் தொடங்கி 11 ஆண்டுகள் தான் முடிந்துள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. மனிதனின் சிந்தனைப் போக்கையே மாற்றி அமைத்த நிறுவனம் மைக்ரோசாப்ட். MS Dos, MS office, Windows, Hotmail,Visual studio, Microsoft developer network, Dot net frame work, Windows Mobile பலராலும் இன்று விளையாடப்படும் கேம்ஸ், (Age of Empires, Halo, Microsoft Flight Simulator) MSN live messenger,Vista தொழில்நுட்பம் என கணனி மற்றும் இணைய உலகை மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த நிலைக்குக் கொண்டு வந்தது மைக்ரோசாப்ட் தான்.

இருப்பினும் தேடு பொறி என்பதனைத் தன் கையில் எடுத்து அதில் எவரெஸ்ட்டைத் தொட் டது Google தான். அதனையே கணனியின் அடிப்படையாக அமைக்கத் தொடர்ந்து பாடு படும் Google திட்டம் ஒரு நாள் வெல்லலாம். அன்று மைக்ரோசாப்ட் கணனியின் நிலையையே மாற்றலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி: தேன்தமிழ்

கைத்தொலைபேசிகளுக்கான themes,ringtones,Applications, மற்றும் Games போன்றவற்றை இலவசமாக வழங்கும் தளங்கள்


கைத்தொலைபேசிகளுக்கு அழகான themes,ringtones,Applications, மற்றும் Games பயன்படுத்த பலரும் விரும்புவார்கள். அத்தகைய நுட்பங்களை இலவசமாக பெற பலரும் விரும்புவார்கள். அவற்றை இலவசமாக தரவிறக்கி பயன்படுத்தவென பல இணையத்தளங்கள் அந்த வசதிகளை வழங்குகின்றன. அவற்றை நீங்கள் நேரடியாக உங்கள் கணனியில் தரவிறக்கி நினைவக அட்டையைப் பயன்படுத்தியோ ( Memory card ) அல்லது நேரடியாகவே பொது பொட்டல வானொலி சேவையைப் (GPRS) பயன்படுத்தி அதன் wap தளத்தினூடாகவோ அவற்றை தரவிறக்கி உங்கள் கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தலாம். ஆனால் பொது பொட்டல வானொலி சேவையைப் (GPRS) பயன்படுத்துவது என்பது செலவான ஒரு விடயம் ஏனெனில் கையடக்க தொலைபேசி சேவை வழங்குனர்கள் ஊடாக இதற்கு கட்டணங்கள் அறவிடப்படும். இணைய இணைப்பு வசதி இல்லாதவர்கள் இந்த வசதியைப்பயன்படுத்தலாம்.

அவற்றை இலவசமாக வழங்கும் தளங்கள்:

Zedge : http://www.zedge.net/
இதில் பல்வேறுபட்ட
Themes Ringtones Videos Wallpapers TxTs மற்றும் Games போன்றவற்றை தரவிறக்கி பயன்படுத்தலாம்.
இதற்கான wap தளம் : ://m.zedge.net

mobile9 : http://www.mobile9.com/

இதற்கான wap தளம் : http://m.mobile9.com/

Getjar : http://www.getjar.com/

இதற்கான wap தளம் : http://m.getjar.com/

Mobile24 : http://www.mobiles24.com/

இதற்கான wap தளம் : http://wap.mobile24.com/

Sunday, September 6, 2009

பெயரில்லாமல் கோப்புறையை(Folder) உருவாக்க முடியுமா?


பெயரில்லாமல் ஒரு கோப்புறையை (Folder) உங்களால் உருவாக்க முடியுமா? கணினியில் இருக்கும் ஒவ்வொரு கோப்பும்(File),கோப்புறையும்(Folder) ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில்(Windows) கோப்புறை (Folder) ஒன்றை அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும்.

பெயரை வழங்காதுவிடின் New Folder எனும் பெயரை விண்டோஸ் முன்னிருப்பாக(default) போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் கோப்புறையை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப Space Bar விசையையோ(Key) Delete விசையையோ(key) அழுத்தினாலும் New Folder எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும்.

நான் சொல்வது சரிதானா என்பதை கணினி முன்னே உட்கார்ந்து ஒரு முறை முயன்று பார்த்து விட்டு கீழே சொல்லப்படும் வழி முறையைப் படியுங்கள்.

முதலில் போல்டர் ஒன்றை உருவாக்குங்கள். அதன் பெயரை (text label) அழித்து விட்டு விசைப்பலகையில்(Keyboard) ‘Alt’ கீயை அழுத்தியவாறே இலக்கம் ‘255′ ஐ டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு கோப்புறை தோன்றக் காணலாம். இலக்கத்தை தட்டச்சு செய்ய விசைப்பலகையில் எண்ணியல் விசைப்பலகையையே(Numeric Keyboard) பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Friday, September 4, 2009

கையடக்க தொலைபேசிகளில் வைரஸ்


கையடக்க தொலைபேசிகளில் வைரஸ்கள் பரவத் தொடங்கி உள்ளன. NOKIA வகை செல்லிடப்பேசிகளில் Sympian 60 இயக்கத் தொகுப்பு உள்ள தொடர் வகை சாதனங்களில் இது ஏற்படத் தொடங்கி உள்ளது. இது "Curse of Silence," எனத் தன்னைத் தானே அழைத்துக் கொள்கிறது.


இது பெரும்பாலும் இந்த தொடரில் 2.6, 2.8, 3.0 அல்லது 3.1 ஆகிய பதிப்புகள் இயங்கும் கையடக்க தொலைபேசிகளையே பாதிக்கிறது. இது பாதித்த பின்னர் குறுஞ்செய்திகளை (SMS) பெறுவதும் அனுப்புவதும் தடைபடுகிறது. அதே போல குறுஞ்செய்திகளுக்கும் தடை ஏற்படுகிறது. இதுவரை கிடைத்த செய்திகளின் படி இந்த வைரஸ் கீழே குறித்தபடி செயல்படுகிறது. குறைந்தது 32 எழுத்துக்கள்(Characters) கொண்ட குறுஞ்செய்தி கிடைக்கப்பெறுகிறது. இதன் முடிவில் ஒரு இடைவெளி(Space) கொடுக் கப்பட்டு ஒரு மின்னஞ்சல் முகவரி(Email) இருக்கும். இது போல குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்று Phone lock ஆவதிலிருந்து தப்பிக்க அடிக்கடி உங்கள் கைத்தொலைபேசியின் தரவுகளை (Phone Data) Sync செய்திட வேண்டும். உங்கள் தரவுகளையும் பத்திரப்படுத்த ( BackUp )வேண்டும். இதனை எப்படி மேற்கொள்வது என்று தெரியாதவர்கள் விசைப்பலகை மூலம் *#7370# என தட்டச்சு செய்திடவும். அல்லது இன்னொரு வழியும் உள்ளது. பச்சை நிறத்தில் உள்ள Call Key ஐயும் நட்சத்திர குறியையும் மற்றும் 3 எண் விசையும்(Key) ஒரு சேர அழுத்தவும். கையடக்க தொலைபேசிகளில் மீண்டும் ஆரம்பிக்கும் (Restart) வரை அழுத்தவும்.



இது குறித்து குறிப்பாக சோதனை நடத்தியதில் இது போல தகவல்கள்(message) 11 முறை கிடைத்தவுடன் 2.8 மற்றும் 3.1 பதிப்புகளில் இயங்கும் தொலைபேசிகள் Lock ஆகிவிடுகின்றன. குறைந்த அளவே அழைப்புக்களை(Calls) பெறும் வசதி கொண்டதாக மாறுகின்றன. 2.6 மற்றும் 3.0 பதிப்பு கொண்டுள்ள கையடக்க தொலைபேசிகள் அடுத்ததாக ஒரு செய்தியை அனுப்பியவுடன் பூட்டு(lock) ஆகின்றன. இதனை எப்–செக் யூர் நிறுவனம் சோதனை செய்து பார்த்து உறுதி செய்துள்ளது.

Wednesday, September 2, 2009

ஒளிப்பதிவுகள்,ஒலிப்பதிவுகள்,மற்றும் புகைப்படங்களின் அமைப்புக்களை (Format) மாற்றுவதற்கான இலவச மென்பொருள்


Format factory எனப்படும் இந்த மென்பொருளை கொண்டு ஒளிப்பதிவுகள்,ஒலிப்பதிவுகள்,மற்றும் புகைப்படங்களின் அமைப்புக்களை (Format) உங்களுக்கு தேவையான அமைப்புக்கு மாற்றியமைக்கமுடியும்
அனேகமான அமைப்புக்கு இலகுவாக வேகமாக மாற்றக்கூடியதாக இருக்கிறது, எல்லாவகையான அமைப்புகளையும் கீழ் வரும் வகையிலான அமைப்புக்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
Video Formats- MP4/3GP/MPG/AVI/WMV/FLV/SWF.
Audio Formats- MP3/WMA/AMR/OGG/AAC/WAV
Picture formats-JPG/BMP/PNG/TIF/ICO/GIF/TGA.
அத்துடன் Rip DVD to video file , Rip Music CD to audio file. போன்ற செயற்பாடுகளையும் மேற்க்கொள்ள முடியும்.
இது ஒரு முற்று முழுதான இலவச மென்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தரவிறக்க இணையச்சுட்டி :சுட்டி 1
சுட்டி 2

உங்களுடைய Media player ஐ இணைய உலாவியிலிருந்தே இயக்குவது எப்படி?


நீங்கள் இணையத்தில் அதிகம் வலம் வருபவரா? அதுவும் பாடல்களை ஒலிக்க விட்டே இணையத்தில் இருப்பவரா? மேற்கண்ட கேள்விகளுக்கு உங்களின் பதில் “ஆம்” என்றால் உங்களுக்காகவே இருக்கிறது ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் Foxy tunes.

இது Internet Explorer, Mozilla Firefox உடன் வேலைசெய்கிறது. இதை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் உங்களது Media player ஐ இணைய உலாவில் இருந்துகொண்டே இயக்கலாம். உங்களிடம் இருக்கும் பாடல்களை உங்களது media player இல் பாடவிடவும், பின்னர் Media player ஐ Minimize செய்துவிட்டு இணைய உலாவியில் இருக்கும் Foxy Tunes மூலமாக இயக்கிக்கொள்ளலாம்.. இதை பயர்பாக்ஸில் உபயோகித்தால் Youtube தளத்தின் playlist கூட கையாள‌முடியும் என்பது கூடுதல் சிறப்பு.








பதிவிறக்கம் செய்ய‌