Friday, February 12, 2010

Facebook இன் பின்னணி வடிவத்தினை அழகிய பின்னணியாக மாற்றுவது எப்படி?

சமூக வலைத்தளமாகிய(Social Network) Facebook தான்கதி இன்று பலர் Facebook இன் முன்னால் தவம் இருப்பவர்களுக்கு அதனது பின்னணி(Background) நீல நிறத்தில் இருப்பது வெறுப்பை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய பின்னணி அழகிய பின்னணியை கொண்டிருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுபவர்களுக்கு Facebook இன் பின்னணியை எவ்வாறு அழகிய பின்னணி(Background) வடிவமாக மாற்றியமைப்பது எனப்பார்க்கலாம்.

அழகிய பின்னணி வடிவமாக மாற்றி அமைக்கவென Chamelon Tom என்னும் மென்பொருள் இதற்கு உதவுகின்றது. இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியபின் http://plugin.chameleontom.com/  என்ற இணையத்தளத்தில் சென்று உங்களுக்கு பிடித்தமான பின்னணி உருவினை தெரிவுசெய்வதன் மூலம் பின்னணி வடிவினை மாற்றி அமைக்கலாம்.

உங்களுக்கு இந்த பின்னணி வடிவங்கள் பிடிக்கவில்லை Facebook இன் நீலநிற வடிவிலான பின்னணி வடிவம் தான் தேவை என்பவர்கள் பின்னணி வடிவினை நீக்க என்ற இந்த சுட்டியின் மூலம் சென்று நீக்கிக்கொள்ள முடியும்.

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: chamelon Tom
http://plugin.chameleontom.com/

1 கருத்துரைகள்:

Thenammai Lakshmanan said...

தகவலுக்கு நன்றி வன்னி இன்ஃபோ