Saturday, August 15, 2009

இந்தியாவின் முப்பரிமாண வரைபடம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(ISRO) இணையத்தளத்தில்


Google Earth இணையத்தளத்தைப் போல இந்தியாவின் எந்த இடத்தையும் பார்க்க உதவும் புதிய இணையதளத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) தொடங்கி உள்ளது. இதில் வீதியில் நிற்கும் ஒரு காரைக்கூட தெட்டத்தெளிவாக பார்க்க முடியும்.

Google Earth இணையதளம் உலக அளவில் பிரபலமானது. இதில் கிராமத்திலிருந்து நகரம் வரைக்கும் உலகின் எந்த இடத்தையும் தெட்டத்தெளிவாக பார்க்க முடியும். இவை எல்லாம் செயற்கைக்கோள் மூலம் படம் பிடிக்கப்பட்டவை. ஒரு காரின் இலக்க தகட்டை கூட இதில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எதிர்ப்புகள் எழுந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்ணில் இருந்து படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல் பார்க்க முடியாத அளவுக்கு ஆக்கப்பட்டது.


கூகுள் எர்த்துக்கு போட்டியாக இப்போது இந்தியாவின்
ISRO(Indian Space Research Organization) புதிய இணையதளத்தை தொடங்கி உள்ளது.

http://www.bhuvan.nrsc.gov.in/about.html
http://www.isro.org/

என்ற அந்த இணையதளத்தில் சென்றால், இந்தியாவின் எந்த நிலப்பரப்பையும் தெட்டத்தெளிவாக பார்க்க முடியும். அதன் துல்லிய அளவு, 10 மீட்டர் முதல் 55 மீட்டர் உயரம் வரை. இதன் மூலம் ரோட்டில் உள்ள ஒரு காரை கூட இந்த இணையதளம் மூலம் பார்க்க முடியும்.


ஆனால், தீவிரவாதிகள், தேச துரோகிகளுக்கு உதவிடும் வகையில் இந்த இணையதளம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக, பாதுகாப்பு பகுதிகள், ராணுவ சம்பந்தப்பட்ட இடங்கள், முக்கிய இடங்கள் ஆகியவை குறிப்பிட்ட அளவுக்கு மேல் துல்லியமாக பார்க்க முடியாது.

இதில் உள்ள காட்சிகள் ஒரு ஆண்டுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்திய செயற்கைக்கோள்கள் CARTOSAT-1 ,CARTOSAT - 2 ஆகியவை மூலம் முப்பரிமாணத்தில் படம் பிடிக்கப்பட்டவை.
நன்றி: பிரித்தானியா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்(BBC)

0 கருத்துரைகள்: