Wednesday, August 19, 2009

வீடியோ கோப்பு வடிவை மாற்ற 5 இலவச மென்பொருட்கள்



ஒவ்வொரு இணைஞரிடமும் மேசைக்கணினி (desktop), மடிக்கணினி (laptop), செல்பேசி, கையடக்க இசைக்கருவி(hand held), எம்பி3 இசைப்பான் என நவீனத்துவத்தைக் காண நேரிடுகிறது. காதில் மாட்டிக்கொண்டி திரிகிறார்கள். இசைப்பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.


ஒவ்வொரு கருவிகளுக்கும் தனிப்பட்ட கோப்பு வடிவங்கள் (file formats). ஒன்றை ஒன்று எதிர்க்கின்ற (incompatible) வகையில் அமைந்திருக்கும் கோப்பு வடிவங்கள்.

இந்தக் கருவியில் இயங்கக்கூடிய கோப்பானது வேறு கருவியில் ஒத்திசையாமல் போகிறது. கணினியில் காண இயலும் காணொளியை, கையடக்கக் கருவியில் காண ஏதேதோ தகிடுதத்தம் செய்ய வேண்டி இருக்கிறது.

ஒரு கருவியில் பார்த்த காணொளியை அடுத்த கருவியில் காண வைப்பதற்கு ஏகப்பட்ட cracking தளங்களையெல்லாம் நாட வேண்டியிருக்கும். அத்துடன் வைர (virus) போன்ற வியாதிகளையும் இலவசமாக வாங்க வேண்டி இருக்கும்.

ஏன் இந்தக் கொலை வெறி?

ஏராளமான காணொளிகளுக்கான கோப்பு வடிவங்களால் (Video file types) வந்த பிரச்சினையே இவை. ஒன்றையொன்று அனுசரித்துப்போகாத வடிவங்கள்.


இதில் இருந்து சமாளித்து எல்லாக் கருவிகளிலும் நமது காணொளிகளை இயக்கி மகிழ என்ன வழி?

எந்த கேடுவிளைவிக்கும் cracking தளத்திற்கும் செல்லாதீர்கள். கீழ்க்கண்ட தளங்களில் கிடைக்கும் அருமையான இலவச மென்பொருட்களைப் பயன்படுத்துங்கள். பயன்படுத்துவதற்கு எளிமையானதாக இருக்கும் அதே வேளையில் அற்புதமான செயல்திறமை கொண்ட மென்பொருட்கள் இவை.

1) Quick Media Converter [ http://www.cocoonsoftware.com/ ]

மிகத் திறமையான இலவச மென்பொருள். இதன் மூலம் FLV, AVI, DIVX, XVID, MPEG 1-4, iPod/iPhone, Real Media, and M4A ஆகிய கோப்புகளைக் கையாலும் திறன் கொண்டது.


2) Super Video Converter [ http://www.erightsoft.net/S6Kg1.html ]

3GP and 3G2 for mobile phones, ASF, DIVX AVI, MOV, MPEG, flash video, real media, PSP video கோப்புகளை மாற்றித்தரும் இயல்புடையது.

3) Any Video Converter [ http://www.any-video-converter.com/products/for_video_free/ ]

மிக எளிமையான முகப்புடன் வருகிறது. யாரும் இயக்கலாம் - எந்தச் சிக்கலும் இல்லாதது.

4) MediaCoder [ http://mediacoder.sourceforge.net/]

இதன் நிரலானது இலவசமாகக் கொடுக்கப்படும் Open Source வகையைச் சேர்ந்தது. ஏராளமான கோப்பு வகைகளுடன் அனுசரனை உள்ளது. நாளை ஏதேனும் புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான update ஐயும் இவர்கள் தருவார்கள் என்பது சிறப்பம்சம்

வேறெந்த மற்ற மாற்றிகளிடம் காணாத சிறப்பம்சங்களான Video Compression, வீடியோவில் இருந்து ஒலியை மட்டும் பிரித்தெடுத்தல், கெட்டுப்போன கோப்புகளை சரிசெய்யும் வசதி - இவையெல்லாம் உண்டு.


5) Format Factory [ http://www.formatoz.com/]

PSP, iPhone இன்னும் பல வீடியோ வகைகளுடன் இயங்க வல்லது.
நன்றி : இணையம்

0 கருத்துரைகள்: