Wednesday, July 22, 2009

வெப்சைட்டுக்கு shortcut key


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 இப்போது பழக்கத்திற்கு வந்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. இதில் உள்ள பேவரிட்ஸ் பட்டியல் வழக்கம்போல் நமக்குப் பிடித்த வெப்சைட்டுகளை எளிதான கிளிக்கில் பெற்றுத் தருகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் திறக்கப்படாமல் இருக்கும்போதும் இந்த பேவரிட்ஸ் பட்டியலில் உள்ள தளங்களைத் திறக்கலாம். இதனை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் கமாண்ட் பாரில் பேவரிட்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும்.
2. இதில் உள்ள பேவரிட் தளங்களில் எதற்கு ஷார்ட் கட் கீ அமைக்க விரும்புகிறீர்களோ அதனை ரைட் கிளிக் செய்திடவும். மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இப்போது அந்த பேவரிட் தளத்திற்கான ப்ராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் "Web Document"என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Shortcut Key என்று இருப்பதற்கு அடுத்தபடியாக ஒரு ஷார்ட் கட் கீ தொகுப்பினை டைப் செய்திடவும். இந்த ஷார்ட் கட் கீ வேறு அப்ளிகேஷன் புரோகிராம் அல்லது விண்டோஸ் ஆப்பரெட்டிங் சிஸ்டம் பயன்படுத்தாததாய் இருக்க வேண்டும். இதற்கு Alt, Ctrl, மற்றும் Shift போன்றவற்றைப் பயன்படுத்தவும்.
எடுத்துக் காட்டாக தினமலர் இணைய தளத்திற்கு நீங்கள் Ctrl + Shift + Alt + D என்பதை உருவாக்கலாம். இதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.இனி இந்த ஷார்ட் கட் கீயினை அழுத்தினால் உங்களுக்குப் பிடித்தமான தளம் நீங்கள் டிபால்ட்டாக அமைத்திருக்கும் தளத்தில் திறக்கப்படும். அது இன்டர்நெட் எக்ஸ்புளோரராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பயர்பாக்ஸ், குரோம், சபாரி என எதுவாக வேண்டு மானாலும் இருக்கலாம்.

Undelete program


விண்டோஸ் சிஸ்டத்தில் பயன்படுத்தும் வகையில் நமக்குக் கிடைத்திருப்பது ரோட்கில் தரும் அன்டெலீட் (Roadkil’s Undelete) புரோகிராம். இது ஒரு இலவசமாய் டவுண்லோட் செய்யப்படக் கூடிய புரோகிராம். ஒரு ஸிப் பைல் உள்ளாக எக்ஸிகியூடபிள் பைலாக இது கிடைக்கிறது. இதனை ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவிலும் வைத்துப் பயன்படுத்தலாம். இதனால் ஹார்ட் டிரைவில் அழித்த பைலை எளிதாகத் திரும்பப் பெறலாம்.
இந்த புரோகிராம் பயன்படுத்த மிக மிக எளிதானது. இதனை இயக்கியவுடன் Recover from Drive’ என்பதிலிருந்து எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்கேன் முடிந்தவுடன் அந்த டிரைவில் அழிக்கப்பட்ட பைல்களில் எந்த எந்த பைல்களை மீண்டும் பெறலாம் என்று ஒரு பட்டியல் நமக்குக் காட்டப்படும். ஒவ்வொரு பைலுக்கும் அது இருந்த இடம், அளவு, நாள், அதன் தன்மை வகைகள், பைலின் தற்போதைய நிலை காட்டப்படும். எந்த பைலை மீண்டும் பெற வேண்டும் என விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுக் கவும். பின் "Browse"பட்டனை அழுத்தி எந்த இடத்தில் மீண்டும் பெறப்படும் பைலை வைக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் "Recover" என்பதனை அழுத்தவும். இந்த புரோகிராமினைப் பயன்படுத்திப் பார்த்த பிறகு வெவ்வேறான வகை பைல்களை நீக்கிப் பின் மீண்டும் பெற முடிந்தது. ஆனால் ஒரு பெரிய எக்ஸிகியூடபிள் பைலைப் பெற முடியவில்லை. இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடலாம்.

USB பாதுகாப்பாக அகற்றல்(USB safely Remove)
விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. சில வாரங்களுக்கு முன் இது போன்ற புரோகிராம் ஒன்று குறித்து எழுதி இருந்தோம். USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.1 தற்போது வெளியாகியுள்ளது. இதனை http://safelyremove.com/usbsafelyremovesetup.exe?v4newsen என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா!
1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல் மேனேஜரை இயக்கி என்ன என்ன பைல்கள் இருக்கின்றன எனப்பார்க்கலாம்.
2. யு.எஸ்.பி.யில் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தை நீக்கும் முன் அதில் உள்ள பைல்களை ஆட்டோ பேக் அப் எடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.
3. எக்ஸ்டெர்னல் டிரைவ் என்றால் அதனை இணைக்கும்போதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை செய்திடும் படி அமைக்கலாம். இதே போல பல செயல்பாடுகளை செட் செய்திடலாம்.
யு.எஸ்.பி.யில் இணைத்த சாதனம் எந்நிலையில் உள்ளது என்று அறிய பல்வேறு ஐகான்கள் காட்டப்படுகின்றன. இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் இயக்கத்தில் உள்ளனவா என்று காட்டப்படும். போர்ட்டில் சாதனங்களே இல்லை என்றாலும் ஐகான் மூலம் தெரிந்து கொள்ளலாம். இணைக்கப்பட்ட ஒரு சாதனத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் அது நீக்கப்படவில்லை என்றால் காட்டப்படும். இதன் பயன்பாடுகள் குறித்து மேலும் அறிய மேலே தரப்பட்டுள்ள இணைய தளத்தினையே காணவும்.
பி.டி.எப். ஸில்லா
பி.டி.எப். பைல்களை டெக்ஸ்ட் பைல்களாக மாற்றுவதற்கென பல புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின் றன. சில புரோகிராம்கள் குறித்து இந்த பகுதியில் ஏற்கனவே எழுதி உள்ளோம். அண்மையில் சிறப்பு அம்சம் ஒன்றுடன் கூடிய புரோகிராம் ஒன்றினைக் காண நேர்ந்தது. அதன் பெயர் பி.டி.எப். ஸில்லா (pdfzilla). இதனை http://www.pdfzilla.com/zilla_pdf_to_txt_converter.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இயக்கலாம். இதுவும் இலவசமே. எந்த ஒரு பிடிஎப் பைலையும் டெக்ஸ்ட்டாக இது மாற்றி தருகிறது. இதன் சிறப்பம்சம் என்னவெனில் மொத்தமாகவும் இது பிடிஎப் பைல்களைக் கையாள்கிறது. இந்த கன்வெர்டரில் பிடிஎப் பைல்களை இழுத்துக் கொண்டுவந்து விட்டுவிட்டால் பேட்ச் ப்ராசசிங் முறையில் டெக்ஸ்ட் பைல்களாக மாற்றுகிறது. அல்லது ஏதேனும் ஒரு டைரக்டரியில் மாற்ற வேண்டிய பிடிஎப் பைல்கள் அனைத்தையும் போட்டுவிட்டு அந்த டைரக்டரியினைச் சுட்டிக் காட்டி விட்டுவிடலாம். டெக்ஸ்ட் கன்வெர்ஷன் வேகமாக நடத்தப்பட்டு அவுட்புட் டைரக்டரிக்கு அனைத்து பைல்களும் டெக்ஸ்ட் பைல்களாகக் கிடைக்கின்றன.

0 கருத்துரைகள்: