Monday, July 13, 2009

Registry என்றால் என்ன?விண்டோஸ் இயங்கு தளத்தில் ரெஜிஸ்ட்ரி (பதிவகம்) என்பது ஒரு தரவுத் தளம். புதிதாக ஒரு வன்பொருளை அல்லது மென்பொருளை கணினியில் நிறுவும்போது அல்லது நீக்கும்போது அவை பற்றிய விவரங்களை தொடர்ச்சியாகப் பதியப்படும் ஒரு தரவுத் தளமே இந்த ரெஜிஸ்ட்ரி. கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய விவரங்கள் ரெஜிஸ்ட்ரியிலேயே பதியப்படுகின்றன.விண்டோஸில் என்னென்ன செட்டிங்ஸ் செய்யப்பட்டுள்ளன, கணினியை இயக்கியதும் எந்த எப்லிகேசன்களை ஆரம்பிக்க வேண்டும், ஒவ்வொரு பயனரும் என்ன செட்டிங்ஸ் வைத்திருக்கிறார், பல்வேறு எப்லிகேசன்களாலும் உருவாக்கப்படும் பைல் வகைகள் என்ன போன்ற் பல்வேறு தகவல்களை ரெஜிஸ்ட்ரி பதிந்து கொள்கிறது.டெஸ்க்டொப்பில் நீங்கள் காண்பவற்றையும், ஸ்டார் மெனு மற்றும் டாஸ்க் பார் என்பன எவ்வாறு இயங்குகின்றன, இயங்கு தளம் எவ்வாறு ஆரம்பிக்கின்றது என்பதனையும் ரெஜிஸ்ட்ரியே தீர்மாணிக்கின்ற்து.விண்டோஸ் 95 ற்கு முந்திய பதிப்புகளில் .ini (initialization) எனும் பைல் இந்த செயற்பாடுகளைத் தீர்மாணித்தன. இதற்கு மாற்றீடாகவே இந்த ரெஜிஸ்ட்ரி உருவாக்கப்பட்டுள்ளது.விண்டோஸ் கண்ட்ரோல் பேனலில் ஒருவர் மாற்றங்கள் செய்யும்போது தன்னையறியாமலேயே ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்கிறார். ரெஜிஸ்ட்ரியில் நாமாகவும் மாற்றங்கள் செய்யலாம்.ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்கள் செய்வதில் மிகுந்த அவதானம் தேவை. சராசரி கணினிப் பயனர்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்கள் செய்யாமலிருப்பதே நல்லது. ஏனெனில் நீங்கள் விடும் ஒரு சிறிய தவறும் கணினியில் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்வதற்கு முன்னர் ஒரு முன்னேற்பாடாக அதனை பேக்கப் (Backup) செய்து கொள்ள வேண்டும் அல்லது ஒரு ரீஸ்டோர் பொயிண்டை (Restore Point) உருவாக்கிக் கொள்ள வேண்டும். (பேக்கப், ரீஸ்டோர் பற்றி ஏற்கனவே இந்தப் பகுதியில் சொல்லியிருக்கிறேன்)எப்லிககேசன்களை முறையாக நீக்கப்படாதபோது ரெஜிஸ்ட்ரியில் அது பற்றிய தகவல்கள் சிதறலாக தேங்கியிருக்கும். இதனால் கணினியின் இயக்கத்தில் மந்த நிலை தோன்றும். அல்லது அடிக்கடி பிழைச் செய்திகளைக் (Error Messages) காண்பித்து எரிச்சலூட்டும். சில வேளை கனினி இயக்கமற்று முடங்கிப் போகவும் கூடும்.ரெஜிஸ்ட்ரியில் ஏற்படும் வழுக்களை நாமாக சரி செய்யவும் முடியும். அவற்றைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வென (Registry Cleaners) ரெஜிஸ்ட்ட்ரி க்ளீனர்ஸ் எனும் ஏராளமான மென்பொருள் கருவிகளும் பாவனையில் உள்ளன.மாதத்தில் ஒரு முறையேனும் இந்த ரெஜிஸ்ட்ரி க்ளீனரை இயக்கி ரெஜிஸ்ட்ரியில் ஏற்படும் பிழைகளை நீக்கிக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அடிக்கடி மென்பொருள்களை நிறுவுதல், நீக்குதல், பிழைச் செய்திகள் அடிக்கடி தோன்றுதல், கணினியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படல் போன்ற சந்தர்ப்பங்களில் ரெஜிஸ்ட்ரி க்ளீனரை அடிக்கடி இய்க்கிக் கொள்ளுதல் நல்லது. சில ரெஜிஸ்ட்ரி க்ளீனர்களில் உரிய கால இடைவெளிகளில் தானாகவே இயங்கும் வசதியும் இணைக்கபட்டிருக்கும். இந்த வசதி இல்லையாயின் விண்டோஸிலுள்ள ஸ்கெடியூல்ட் டாஸ்க் (Scheduled task) எனும் வசதியைப் பயன் படுத்தலாம்.ரெஜிஸ்ட்ரி கட்டமைப்புரெஜிஸ்ட்ரியானது ஐந்து தனியான கட்டமைப்புகளைக் கொண்டது. இவை ரெஜிஸ்ட்ரி தரவுத் தளத்தை முழுமையாகாப் பிரதி நிதித்துவப் படுத்துகின்றன. இந்த ஐந்து பிரிவுகளும் கீஸ் (Keys) எனப்படுகின்றன. ஒவ்வொரு கீயும் பல உப பிரிவுகளையும், உப பிரிவிகள மேலும் பல உட் பிரிவுகளையும் உள்ளடக்கியிருக்கும். அத்தோடு ஒவ்வொரு கீயும் பல்வேறு பெறுமானங்களையும் கொண்டிருக்கும்.. இங்கு HKEY என்பது Handle to a Key என்பதைக் குறிக்கிறது.1) HKEY_CURRENT_USER இந்த ரெஜிஸ்ட்ரி கீயானது தற்போது கணினியில் லொக்-இன் செய்துள்ள பயனருக்குரிய தகவல்களைக் கொண்டுள்ளது.2) HKEY_USERS இந்த கீயானது விண்டோஸில் பயனர் கணக்கு உருவாக்கியிருக்கும் அனைத்து பயனர் பற்றிய விவரங்களைக் கொண்டிருக்கும்.3) HKEY_LOCAL_MACHINE இது கணினி பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்டிருக்கும்4) HKEY_CLASSES_ROOT இங்கு பதியப்படும் தகவல்கள், ஒரு பைலை திறக்கும்போது அதனை எந்த எப்லிகேசனுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களைக் கொண்டுள்ளது..5) HKEY_CURRENT_CONFIGடீவைஸ் ட்ரைவர். டிஸ்ப்லே ரெஸ்லுயூசன் மற்றும் எப்லிகேசன்கள் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது.ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்ய ரெஜிஸ்ட்ரி எடிட்டரை அணுக வேண்டும். அதற்கு ஸ்டாட் மெனுவில் ரன் தெரிவு செய்து Regedit என டைப் செய்யுங்கள் அப்போது Registry Editor விண்டோ தோன்றக் காணலாம்..


0 கருத்துரைகள்: