Tuesday, July 7, 2009

அழிக்க முடியாமல் இருக்கும் File களை அழிப்பதற்கு ஒரு மென்பொருள்(softare)-Unlocker

பலமுறை நாம் ஏதேனும் பைல்களை(Files) அழிக்க முற்படுகையில் சில எரிச்சலூட்டும் செய்திகள் காட்டப்பட்டு நம் முயற்சியில் குறுக்கே நிற்கும். அந்த செய்திகள் பின்வருமாறு இருக்கலாம்:–
இன்னொரு புரோகிராம் இந்த பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளது.
பைலைப்(File) பகிர்ந்து கொள்வதில் வரையறை மீறப்பட்டுள்ளது. இன்னொரு புரோகிராம்(Program) அல்லது இன்னொரு User இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். டிஸ்க்(Disk) முழுமையாக இல்லை அல்லது எழுதப்படவிடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. பைல் இப்போது பயன்பாட்டில் இல்லை.
Source அல்லது Destination File ஒருவேளை பயன்பாட்டில் இல்லை.
இதில் என்ன சோகம் என்றால் இன்னொரு புரோகிராம் பயன்படுத்துவதாக செய்தி வருகையில் நாம் கம்ப்யூட்டரில் வேறு எந்த புரோகிராமினையும் பயன்படுத்தாமல் இருப்போம். என்ன புதிராக உள்ளதே என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்போம். இன்னொரு யூசர் எங்கே இருக்கிறார்? இது யாரைக் குறிக்கிறது என்று வியப்பில் இருப்போம். இதெல்லாம் கம்ப்யூட்டரில் சில செட் அப் அமைப்பின் காரணமாக நமக்கு வரும் செய்திகள். பொதுவாக இது போன் ற செய்திகள் வருகையில் பைலை அழிக்கும் வேலையையே விட்டுவிடுவோம்; அல்லது ரீஸ்டார்ட் செய்து பைலை அழிப்போம்.
இந்த வேலை இல்லாமல், கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடாமல் பைலை அழிக்க இலவசமாக ஒரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் (Unlocker)அன்லாக்கர். இதனை http://ccollomb.free.fr/unlocker/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இதனை எளிதாக டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்திடலாம்.
இன்ஸ்டால் செய்த பின் நீங்கள் அழிக்க விரும்பும் பைல் அல்லது போல்டரில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.
கிடைக்கும் மெனுவில் Unlocker என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடுங்கள். நீங்கள் இலக்கு வைக்கும் பைல் மேலே சொல்லப்பட்ட காரணங்களால் லாக் செய்யப்பட்டிருந்தால் ஒரு சிறிய விண்டோ ஒன்று திறக்கப்படும்.
அதில் எந்த புரோகிராமினால் அல்லது யூசரால் எதற்காக லாக் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைக்கும்.
உடனே மிக எளிதாக “ Unlock All ” என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். பைல் இப்போது விடுவிக்கப்பட்டு டெலீட் செய்திட ஏதுவாக இருக்கும். நீங்கள் அதனை அழித்துவிடலாம்.

0 கருத்துரைகள்: