தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கென கையடக்கத்தொலைபேசிகளுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருட்கள் பல கணணி இணைய உலகில் பல காணப்படுகின்றன. அத்தகைய கையடக்க தொலைபேசிகளுக்கான சில தகவல் தொடர்பாடல் மென்பொருட்கள் சம்பந்தமான தகவல்கள் தொடர்பான பதிவு இது.
இந்த மென்பொருட்கள் மூலமாக நாங்கள் இன்னொருவருடன் குரல் வழியாகவோ(Voice) , தகவல்களை எழுத்து மூலமாக(Text Chat) பகிர்ந்து கொள்ளவோ முடியும். இந்த மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கி கையடக்க தொலைபேசிகளில் நிறுவிக்கொள்ள முடியும். இவற்றை நீங்கள் பயன்படுத்துவதற்கு கையடக்க தொலைபேசி வழங்குனர்களால் GPRS கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும். இவை மிகவும் செலவு குறைந்த தொடர்பாடல் மென்பொருட்கள் ஆகும். இவற்றினூடாக வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் உறவுகளுடன் மிக குறைந்த செலவில் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். இவற்றை நீங்கள் பாவிக்க வேண்டுமாயின் GPRS வசதியுள்ள கையடக்க தொலைபேசிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
3G,3.5G வசதியுள்ள கையடக்க தொலைபேசிகள் இன்னும் சிறப்பானவை. இத்தகைய கையடக்க தொலைபேசிகள் மூலமாக குரல் வழி தொடர்பினை இலகுவாக மேற்கொள்ளமுடியும்.
இதோ அத்தகைய மென்பொருட்கள் சிலவும் அவற்றின் சுட்டிகளும்.
1. eBuddy - Yahoo!, MSN, Facebook Chat, AIM, ICQ மற்றும் Google talk போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழங்கிகளின் பயனர் கணக்கினை பாவித்து தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும்.
2. Snaptu - YouTube, MySpace, hi5, Orkut, Friendster, Wikipedia, Gmail, eBay, Bebo போன்றவற்றின் பயனர் கணக்கினை பயன்படுத்தி தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். அத்துடன் பல வசதிகளும் இதிலுள்ளன.
தரவிறக்க இணையச்சுட்டி:Snaptu
4. mig33 - Yahoo!, MSN, Facebook Chat, AIM, ICQ மற்றும் Google talk போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழங்கிகளின் பயனர் கணக்கினை பாவித்து தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும்.
தரவிறக்க இணையச்சுட்டி: mig33
6 கருத்துரைகள்:
பயனுள்ள தகவல்..
Fring படத்தைப் பயன்படுத்திய நீங்கள் அதைப் பற்றிய எந்த ஒரு தகவலையும் வழங்கவில்லை.
Video மற்றும் Voice Call செய்வதற்கு Fring மிகச்சிறந்த தெரிவு.
fring படத்தை பயன்படுத்திவிட்டு அதைபற்றி ஒன்றுமே சொல்லவில்லையே.. Fring & Nimbuzz ஆகியன SIP எனப்படும் Voip ஐ பயன்படுத்தி Internet call மூலமும் கதைக்கலாம்..
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கனகராஜ் fring சம்பந்தமாக நான் ஏற்கனவே எனது முன்னைய பதிவில் குறிப்பிட்டுவிட்டேன்
http://vannitec.blogspot.com/2009/08/gprs.html
can you give me skype mobile version?
please...
useful informations !
thank s to share this here!!.
"is there any special software for E75" ..?!
Post a Comment