கணினி -சில ஆலோசனைகள்
பலமுறை நாம் கையாளும் இமெயில் அக்கவுண்ட்களில் நாமே செய்திடும் தவறுகள் குறித்து எழுதி வந்திருக்கிறோம். அவ்வப் போது ஒன்றிரண்டு தவறுகளைச் சுட்டிக் காட்டி அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளையும் குறிப்பிட்டுள்ளோம். இவை அனைத்தையும் ஒரு சேரக் கொடுத்தால் என்ன என்ற எண்ணத்தில் இந்த கட்டுரை தரப்படுகிறது.
1. ஒரே இமெயில் அக்கவுண்ட்: நமக்கென்று ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட் வைத்து அதனை மட்டும் பயன்படுத்தக் கூடாது. நம்முடைய மூதாதையர் வீட்டு முகவரியினை நிரந்தர முகவரியாகக் கொள்வது போல இமெயில் முகவரியினையும் எண்ணக் கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்களை நீங்கள் வைத்துக் கொள்ள வேண் டும். குறைந்த பட்சம் மூன்று இமெயில் அக்கவுண்ட்களையாவது ஒருவர் கொண் டிருக்க வேண்டும். இவற்றில் ஒன்றை வீட்டு பணிகளுக்கும் உறவினர்களுக் கும் வைத்துக் கொள்ளலாம். இன் னொன்றை உங்கள் அலுவலகப் பணிகளுக்கும் மற்றொன்றை உங்களின் இன்டர்நெட் சார்ந்த செயல்பாடுகளுக்குமாக வைத்துக் கொள்ளலாம். இமெயில் அக்கவுண்ட்கள் இலவசமாகக் கிடைத் தாலும் ஒரு இமெயில் அக்கவுண்ட்டை கட்டணம் செலுத்திப் பெறும் வகையில் வைத்துக் கொள்ளலாம்.
2. அக்கவுண்ட்டை மூடலாம்: ஏதேனும் ஒரு இமெயில் அக்கவுண்ட்டை வெகு நாட் களாக வைத்திருப்பீர்கள். அதன் மூலம் பல வழிகளில் தொடர்பினை ஏற்படுத் திக் கொண்டு இருந்தால் உங்களுடைய இமெயில் பல ஸ்பாம் மெயில் அனுப்புபவர்களிடம் சென்றிருக்கும். அதனால் தொடர்ந்து அந்த அக்கவுண்ட்டிற்கு மிக அதிகமான எண்ணிக்கையில் ஸ்பேம் மெயில்கள் என்னும் குப்பை மெயில்களும் உங்களை கண்ணி வைத்துப் பிடிக் கும் மெயில்களும் வந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த அக்கவுண்ட்டையே மூடிவிட்டு வேறு பெயரில் புதிய அக்கவுண்ட்டை ஏற்படுத்துங்கள். உங்களிடம் உள்ள மற்ற இமெயில் அக்கவுண்ட் மூலம் உற்ற நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு மட் டும் இந்த மாற்றத்தை தெரிவியுங்கள்.
3. பிரவுசரை மூட மறப்பது: உங்களுடைய இமெயில் அக்கவுண்ட்டை எப்போதாவது மற்ற இடங்களில் பிற கம்ப்யூட்டர்களில் இருந்து செக் செய்தது உண்டா? நூலகங்கள், சைபர் கபே என் னும் இன்டர்நெட் மையங்கள் ஆகிய வற்றில் அவசரத்தில் இமெயில்களைப் படித்திருப்பீர்கள். அப்போது அந்த பிரவுசர் அல்லது இமெயில் அக்கவுண்ட்டை மூட மறக்க வேண்டாம். லாக் அவுட் செய்து பிரவுசரை மூடவில்லை என்றால் உங்களுடைய யூசர் நேம் மற்றும் அக்கவுண்ட்டைப் பிறர் பயன்படுத்த முயற்சிக்கலாம்.
4. கேஷ் மெமரி காலி செய்யுங்கள்: அடுத்தவரின் கம்ப்யூட்டரில் இமெயில் அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி முடித்தவுடன் அதில் உள்ள கேஷ் மெமரியைக் காலி செய்திடுங்கள். அப்போதுதான் இன்டர் நெட் ஹிஸ்டரி, யூசர்நேம் மற்றும் பாஸ் வேர்ட் ஆகியவை அடுத்தவரின் கம்ப்யூட்டரில் தங்காமல் இருக்கும். உங்களை அடுத்து அந்த கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரிடம் இவை போய்ச் சேராது. இன் டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools மற்றும் Internet Options செல்லவும். கிடைக்கும் விண்டோவில் “Clear History”, “Delete Cokkies” மற்றும் “Delete Files” ஆகிய மூன்று பட்டன்களிலும் கிளிக் செய்திடவும். பயர்பாக்ஸ் பிரவுசர் என்றால் Ctrl + Shft+Del பட்டன்களை அழுத்தினால் இவை அனைத்தும் காலியாகிவிடும்.
5. மகளிர் கவனம் : பெண்கள் தங்கள் பெயரில் யூசர் நேம் கொண்டு இமெயில் அக்கவுண்ட்டை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அக்கவுண்ட்டைத் தெரிந்து கொண்ட வக்கிரபுத்தி கொண்ட பலர் வேண்டுமென்றே அநாமதேயப் பெயர்களில் உள்ள இமெயில் அக்கவுண்ட்டில் இருந்து மோசமான இமெயில் கடிதங்களை அனுப்புவார்கள். நான் அறிந்த வகையில் இது போன்ற ஒரு குடும்பப் பெண்ணிற்கு இமெயில் கடிதங்கள் வந்து அவருடைய கணவர் சந்தேகக் கண்ணோடு இதனை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொண்டார். பின் மற்றவர்களின் துணையோடு பிரச்சினை தீர்த்து வைக்கப் பட்டது. எனவே பெண்கள் தங்கள் பெயர்களில் யூசர் நேம் கொண்டு இமெயில் அக்கவுண்ட்களைத் திறப்பதனைத் தவிர்க்கலாம்.
6. பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துதல்: பலர் தங்களின் பெர்சனல் இமெயில் அக் கவுண்ட்களை தாங்கள் பணி புரியும் அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்துவார்கள். இதன் மூலம் அலுவலகக் கடிதங்கள் சில வேளைகளில் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் தங்கிவிடும். இதனால் அலுவலகத்தின் ரகசிய தகவல்களை அடுத்தவர்கள் பெறும் வாய்ப்பு அதிகமாகிவிடும். இதே போல உங்கள் பெர்சனல் கடிதங்களை அலுவலக நண்பர்கள் அறிந்து கொள்ளும் வேளைகளும் ஏற்படும்.
7. தொலைபேசி பயன்பாடு: மிக மிக முக்கியமான ரகசியத் தகவல்களை இமெயில் மூலம் அனுப்புவதைக் காட்டிலும் தொலை பேசி வழியாக தெரியப்படுத்துவதே நல்லது.
8. BCC (Blind Carbon Copy) பயன்படுத்தவும்: பெரும்பாலானவர்கள் இமெயில் சாதனத்தில் உள்ள BCC வசதியைப் பயன்படுத்துவதே இல்லை. பலருக்கு ஒரே இமெயிலை அனுப்புகையில் இதனை நாம் அவசியம் பயன்படுத்தலாம். யாருக்கெல்லாம் அனுப்புவது மற்றவர்களுக்குத் தெரியக் கூடாதோ அவர்களின் இமெயில் முகவரிகளை இந்த பகுதியில் அமைத்து அனுப்ப வேண்டும்.
9. ரிப்ளை ஆல்: இமெயில் கடிதம் ஒன்றுக்குப் பதில் அனுப்ப முயற்சிக்கையில் பலருக்கும் ரிப்ளை மட்டும் கிளிக் செய்திட வேண்டுமா அல்லது ரிப்ளை ஆல் (Reply or Reply All) கிளிக் செய்திட வேண்டுமா என்பது தெரிவதில்லை. Reply All அழுத்தினால் நீங்கள் யாருக்கு பதில் அனுப்ப வேண்டுமோ அவர் உட்பட அக்கடிதம் சார்ந்த அனைவருக்கும் உங்கள் பதில் சென்றுவிடும். இதனால் நீங்கள் அடுத்தவர் அறியாமல் அனுப்ப எண்ணும் பதில் மற்றவரையும் சேர்ந்துவிடும். எனவே எப்போதும் Reply மட்டும் அழுத்தி குறிப்பிட்டவரின் இமெயிலுக்கு மட்டும் அனுப்பவும். பின் மற்றவருக்கு அனுப்ப வேண்டும் என எண்ணினால் அதனையே தனித்தனியே அனுப்பிக் கொள்ளலாம். உங்கள் பதில் கடிதத்தில் மற்றவர்கள் அறிய வேண்டாத தகவல்களை அழித்து அனுப்பலாம்.
10. பார்வேர்டிங் இமெயில்: இமெயில் மெசேஜ் ஒன்று உங்களுக்கு பார்வேர்ட் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் உங்களுக்கு அதனை பார்வேர்ட் செய்தவருக்கு பதில் அனுப்ப எண்ணினால் அப்படியே பார்வேர்ட் செய்தால் அந்த மெயிலில் உள்ள அனைத்து முகவரிகளும் அவருக்கும் சென்றுவிடும். இதனால் இதற்கு முன் இந்த மெயிலைப் பெற்றவர்களின் முகவரிகள் தெரிந்துவிடும். மொத்தமாக ஸ்பேம் இமெயில் அனுப்புபவர்களுக்கு இது நல்ல வாய்ப் பாகப் போய்விடும். எனவே எந்த மெயிலை பார்வேர்ட் செய்வதாக இருந்தாலும் அதில் குறிப்பிட்டவரின் இமெயில் முகவரி மட்டும் டைப் செய்து அனுப்பவும்.
11.பேக் அப் மறப்பது: கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்களில் 90% பேர் பேக் அப் எடுப்பதில்லை என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பலமுறை அறிவுறுத்தப்பட்டாலும் இந்த தவற்றைப் பலர் செய்து வருகின்றனர். பேக் அப் எடுத்தலில் இமெயில் தகவல்களும் மிக முக்கியம். கம்ப்யூட்டரிலேயே இருக்கட்டும் என சில முக்கியமான பொருள் குறித்த தகவல்கள் அடங் கிய இமெயில்களை வைத்திருப்போம். இவற்றையும் நாம் பேக் அப் எடுத்தாக வேண்டும். இந்த வகை இமெயில்களில் பல சட்ட ரீதியான ஒப்பந்தங்கள் இருக்கலாம். வர்த்தக ரீதியான நிதி சார்ந்த தகவல்கள் இருக்கலாம். பெர்சனல் தகவல்கள், புக் செய்த டிக்கட்களின் படிவங்கள் என எத்தனையோ முக்கிய ஆவணங்கள் இருக்கலாம். இவற்றை பேக் அப் எடுத்து வைத்தால் தான் நாம் அதன் இழப்பிலிருந்து தப்பிக்கலாம்.
12.மொபைல் வழி இமெயில்: நீங்கள் உங் கள் மொபைல் போன் வழியாக இமெயில் அக்கவுண்ட்டை இயக்குபவரா? பிளாக் பெரி போன்ற போன்களை இதற்குப் பயன் படுத்துபவரா? இமெயில் பார்க்க இது நல்லதா? பாதுகாப்பானதா? பாதுகாப் பானதுதான். ஆனால் ஓரிரு விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது நல் லது. உங்கள் மொபைல் போனில் இமெயில் களைக் கொண்டு வரும் சாப்ட்வேர் தொகுப்பின் தன்மையினையும் அது எப்படி செட் செய்யப்பட்டிருக்கிறது என்பதனையும் புரிந்து கொள்ளுங்கள். சில மொபைல் பிரவுசர்கள் வழியே இமெயில் பார்த்தவுடன் சர்வரில் இருந்து அந்த இமெயில்கள் நீக்கப்பட்டுவிடும். அவை உங்களுக்குப் பின் நாட்களில் கிடைக் காது. எனவே எப்படி உங்கள் மொபைல் சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது என்று முதலில் செக் செய்து கொள்ளுங்கள்.
13. நல்லவேளை அழிச்சுட்டேன்!: சில வேளைகளில் நண்பர்களுக்கு அவர்கள் மனம் புண்படும் வகையில் மெயில்களை எழுதி அனுப்பி விடுவோம். அல்லது நம் நண் பர்களிடமிருந்து அத்தகைய மெயில்கள் வரலாம். இவற்றை அழித்துவிடுவோம். ஒருவழியா அழிச்சுட்டேன் என நீங்கள் நினைக்கலாம். அவை உங்கள் கம்ப் யூட்டரிலிருந்து அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அழிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி வந்தபின்னும் உங்கள் சர்வரில் அவை எங்காவது இருக்கலாம். இத்தகைய மெயில்கள் ஸ்பாம் அனுப்புபவர் கள் கைகளில் சிக்கினால் என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள். எனவே ஒருவருக்கு இமெயிலில் கடிதங்கள் அனுப் பும் முன், குறிப்பாக கோபத்தில் எழுதி அனுப்புமுன், ஒருமுறைக்கு பல முறை யோசித்து நிதானமாக சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் கழித்தே அனுப்பவும்.
14.ஸ்பாம் மெயிலை நம்புவது: அதிகப் பணத் திற்கு ஆசைப்படாத மனிதன் இல்லை. ஆனால் அந்தப் பணம் நம் உழைப்பிற்கு பரிசாக வர வேண்டும். பல ஸ்பேம் மெயில்கள் நமக்கு லாட்டரி பரிசு விழுந்திருக்கிறது என்றும், லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று பரிசாகத் தரப்படும் என் றும் அனுப்பப்படும். பின் பொருளை அனுப்பும் செலவிற்காகப் பணம் அனுப் பச் சொல்வார்கள். அல்லது பரிசு விழுந்த கோடிக்கணக்கான ரூபாயைக் கேட்டுப் பெற வங்கிச் செலவாக சில லட்சம் கேட்பார்கள். அல்லது வங்கியில் பணம் செலுத்த உங்கள் வங்கிக் கணக்கு, இன்டர் நெட் கணக்கின் யூசர்நேம் பாஸ்வேர்ட் கேட்பார்கள். தந்துவிட்டால் அவ்வளவுதான். நாம் உழைத்து சேர்த்த பணம் எல்லாம் நம்மை ஏமாற்றுபவன் கைகளுக்குச் சென்றுவிடும். எனவே இந்த மெயில்களைப் படிக்காமலேயே அழித்துவிட்டு ட்ரேஷ் பெட்டியிலிருந்தும் நீக்கிவிடுங்கள்.
15.பிஷ்ஷிங் மெயில்கள்: நம்மை சிக்க வைக்கும் மெயில்களே பிஷ்ஷிங் மெயில்கள். ஏதேனும் பிரபலமான பேங்க், இன்டர்நெட் வழி பேங்க் பே பால், மைக்ரோசாப்ட் போன்ற பிரபலமான நிறுவனப் பெயர்களில் இமெயில்கள் வரும். அதில் உள்ள லிங்க் கிளிக் செய்து தொடர்ந்தால் நம் கம்ப்யூட்டரில் அவர்களின் புரோகிராம்கள் அமர்ந்து கொண்டு நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும். எனவே இது போன்ற மெயில் கள் வந்தால் திறக்கவே கூடாது.
16.பெர்சனல் தகவல்கள்: இமெயில் மூலம் பெர்சனல் தகவல்களை அனுப்புவது எப்போதும் ஆபத்தான விஷயம். முகவரிகள், தொலைபேசி எண்கள், பேங்க் அக்கவுண்ட் எண்கள், யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை இமெயில் மூலம் அனுப்பவே கூடாது. இவற்றை போன் மூலம் தெரிவிக்கலாமே. ஏனென்றால் நீங்கள் அனுப்பும் இமெயில் இடையே மற்றொருவரால் குறுக்கிட்டுப் பெறக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதால் இமெயில்கள் மூலம் இந்த வகை தகவல்கள் செல்லவே கூடாது.
17. சப்ஸ்கிரைப் செய்யாத நியூஸ் லெட்டர்: நீங்கள் எந்த தளத்திலும் சென்று பதியாமல் ஒரு நியூஸ் லெட்டர் ஒன்று சரியான கால இடைவெளியில் வருகிறதா? அப்படியானல் நிச்சயம் அது ஸ்பேம் மெயில்தான். அதிலேயே உங்களுக்கு இந்த நியூஸ் லெட்டர் வேண்டாம் என்றால் இந்த லிங்க்கில் கிளிக் செய்து அன்சப்ஸ்கிரைப் செய்துவிடுங் கள் என்ற செய்தியும் ஒரு லிங்க்கும் தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரில் தகவல்களைத் திருடி அனுப்பும் புரோகிராம் வந்து அமர்ந்து கொள்ளும். எனவே அவற்றை அப்படியே அழித்துவிடுங்கள்.
18. நண்பர்களை மட்டும் நம்புங்கள்: சில வேளைகளில் நம் இனிய நண்பர்களிடமிருந்து மெயில்கள் வந்தவுடன் அதைத் திறந்து பார்த்து பின் பதில் மெயில் அனுப்புவோம். உங்கள் நண்பர்கள் நல்லவர்கள் தான், நம்பிக்கைக்குரியவர்கள்தான். ஆனால் அவர்களின் பெயரில் வந்த மெயில்கள் அவர்களிடமிருந்து வந்தவையாக இருக்காது. உங்கள் நண்பர் கம்ப் யூட்டரில் வந்தமர்ந்த ஸ்பேம் மெயில் அட்ரஸ் புக்கை திருடி அதில் இருந்த உங்கள் இமெயில் முகவரிக்கு அவர் பெயரில் மெயில்களை அனுப்பி இருக்கும். இந்த மாதிரி மெயில்களுக்கு அவசரத்தில் பதில் அனுப்புவதைத் தவிர்க்கவும்.
19. ஸ்பாம் மெயில் பிளாக்கிங்: உங்களுக்கு வந்த மெயில் ஸ்பாம் மெயில் தான் என்று தெரிந்தால் அந்த முகவரியினைத் தடுக்கப் பட வேண்டிய இமெயில் முகவரி லிஸ்ட் டில் சேர்த்து பிளாக் லிஸ்ட் செய்திட வேண்டும். அந்த முகவரியிலிருந்து மெயில் வந்தால் திருப்பி அனுப்பிவிடு என்று உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் செட் செய்திடுங்கள்.
20. அட்டாச்மெண்ட் ஸ்கேன்: உங்களுக்கு வரும் இமெயில்களுடன் அட்டாச் செய் யப்பட்டு பைல்கள் வருகின்றனவா? அப் படியானால் உங்கள் இமெயில் கிளையண்ட் அவற்றை ஸ்கேன் செய்த பிறகு டவுண்லோட் செய்திடும் வகையில் அதனை செட் செய்திட வேண்டும். அப்போதுதான் அட்டாச்டு பைல்கள் பாதுகாப்பானவையா என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
21. அடுத்தவர் மூலம் செக்கிங்: உங்களால் இமெயில் அக்கவுண்ட் பார்க்க முடியாத நிலையில் என்ன செய்கிறீர்கள். உங்கள் நண்பரை அழைத்து அவரிடம் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து இமெயில் செக் செய்யச் சொல்கிறீர்களா? அதைப் போன்ற தவறான செயல் எதுவுமில்லை. எந்த சூழ்நிலையிலும் அடுத்தவரிடம் உங்கள் பெர்சனல் தகவல்களைக் கொடுத்து இமெயில்களைச் செக் செய்திடச் சொல்ல வேண்டாம். கூடுமானவரை நீங்கள் மட்டுமே உங்கள் இமெயில் அக்கவுண்ட்டை செக் செய்திட வேண்டும்.
22.பாஸ்வேர்ட் அமைப்பு: உங்கள் பாஸ் வேர்ட் என்ன? ஒரு சிலர் தங்கள் பெயரையே வைத்துக் கொள்வார்கள். சிலரோ யூசர் நேம் எதுவோ அதனையே பாஸ் வேர்டாகவும் வைத்துக் கொள்வார்கள். ஒரு சிலர் தங்கள் குழந்தை, மனைவி பெயரை வைத்திருப்பார்கள். இவை எல்லாம் எளிதாகக் கண்டறியக் கூடிய பாஸ்வேர்டுகள். எனவே இது போல வைத்திருந்தால் உடனே மாற்றிவிடுங்கள். மாற்றுவதாக இருந்தால்(1) பாஸ்வேர்ட் குறைந்தது 8 கேரக்டருடன் இருக்க வேண்டும் (2) சிறிய பெரிய எழுத்துக்கள் அமைந்ததாக இருக்க வேண்டும். (3) ஸ்பெஷல் குறியீடுகளுடன் அமையப் பெற்றிருக்க வேண்டும். (4) இலக்கங்களையும் இணைத்து அமைக்க வேண்டும்.
23.என்கிரிப்ஷன்: உங்கள் இமெயில்களை என்கிரிப்ட் செய்வதில்லையா? அப்படியானல் செய்திடத் தொடங்குங்கள். என் கிரிப்ட் என்பது மெயிலை அடுத்தவர் யாரும் படித்திட முடியாதபடி சுருக்கி மாற்றி அமைப்பது. அதற்கான கீயைப் பெறுபவர் மட்டுமே அதனைப் படிக்க முடியும். இலவச என்கிரிப்ஷன் ப்ரோகிராம்கள் நிறைய கிடைக்கின்றன. PGP என்ற ஒரு புரோகிராம் நன்றாகச் செயல்படுகிறது. அதனைப் பயன்படுத்திப் பார்க்கவும்.
மேலே சொல்லப்பட்டவை எல்லாம் இமெயில் பாதுகாப்பிற்கான சில முக்கிய வழிகள். இவற்றை அவசியம் கடைப்பிடித்து வருவது உங்களுக்கும் உங்கள் இமெயில்களுக்கும் பலமான பாதுகாப்பினைத் தரும்.
பகுப்புகள்: கம்ப்யூட்டர் செய்தி
Sunday, July 5, 2009
கணினி -சில ஆலோசனைகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 கருத்துரைகள்:
Hi
Very useful informations. Nandri.
Post a Comment