Thursday, March 11, 2010

இலவசமாக இணையமுகவரிகளை பெற்றுக்கொள்ள சில இணையசேவைகள்(Free Domain Names)

இணையத்தளம் ஒன்றை சொந்தாமாக வைத்திருக்க பலரும் ஆசைப்படுவார்கள். அவ்வாறு இணையத்தளம் ஒன்றை சொந்தமாக வைத்திருக்க பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் இலவசமாக பெற்றுக்கொள்ள   விரும்புபவர்களுக்கென சில இணையசேவை  வழங்கிகள்(Web Service Providers) உள்ளன. அவ்வாறு இலவசமாக இணையத்தள முகவரிகளை வழங்கும் சில இணையசேவை வழங்கிகளின் முகவரிகள்.

1.http://www.co.cc/
இந்த இணையத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கிற்கு 3 இணையமுகவரிகளை(Free Domain Names) பெற்றுகொள்ள முடியும்.  அதன் பின்னர் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இணையமுகவரிக்கும் $10 செலுத்தவேண்டும்.
CNAME, A, MX, NS ,TXT போன்ற சேவைகளையும் மற்றும் Google Apps,windows live சேவைகளையும்  இதனோடு இணைந்ததாக பெற்றுக்கொள்ள முடியும்.

2.  http://www.eu.tv/
இந்த இணையத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கிற்கு 3 இணையமுகவரிகளை(Free Domain Names) பெற்றுகொள்ள முடியும். CNAME, A, MX, NS ,TXT போன்ற சேவைகளையும் மற்றும் Google Apps,windows live சேவைகளையும் இதனோடு இணைந்ததாக பெற்றுக்கொள்ள முடியும்.

3. http://www.co.tv/

4. http://www.smartdots.com/
இணையமுகவரியுடன் உங்கள் இணையமுகவரியில் அமைந்த மின்னஞ்சல் முகவரிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

5. http://www.cydots.com/
இணையமுகவரியுடன் உங்கள் இணையமுகவரியில் அமைந்த மின்னஞ்சல் முகவரிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

3 கருத்துரைகள்:

நீச்சல்காரன் said...

நல்ல தகவல்,
எனினும் co.cc, co.tv, net.tc, eu.tv போன்றவை தான் டொமைன்னாகவும் நம் பெயர் சப்-டொமைன்னாகவும் தான் இருக்கிறது என எண்ணுகிறேன்.

தமிழ்க்கணினி said...

ஆம் நீச்சல்காரா, நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் தமிழ்ப் பூங்கா

அரிய தகவல் - பெற முய்ற்சிக்கிறேன்
தளம் முழுவதும் தகவல்கள்

நன்றி
நல்வாழ்த்துக்ள்
நட்புடன் சீனா