Friday, November 13, 2009

கூகிளின் GO என்னும் கணனி நிரலாக்க மொழி


தேடல் துறையில் பல புரட்சிகள் படைத்து உலகையே கட்டிப்போட்டிருக்கும் கூகிள் மேலும் பல்வேறுபட்ட புதிய படைப்புக்களான இயங்குதளம்(Google OS),இணைய உலாவி(google Chrome), கூகிள் அலை(Google Wave) போன்ற பல்வேறுபட்ட புதியனவற்றை அறிமுகப்படுத்தி வரும் கூகிள் கணனி நிரலாக்க மொழித்துறையிலும் காலடி பதித்துள்ளது.

GO என்னும் திறந்த இலவச கணனி நிரலாக்கமொழியினை(Open Source programming lanuage) அண்மையில் அறிமுகப்படுத்தி வெளியிட்டிருக்கின்றது.
இவ் கணனி நிரலாக்க மொழியானது உலகில் மிகவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் C என்னும் நிரலாக்க மொழிக் குடும்பத்தினை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவ் நிரலாக்க மொழியானது Python and the Pascal/Modula/Oberon போன்ற மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியாகவுள்ளமை இதிலுள்ள ஒரு சிறப்பம்சமாகவுள்ளது.அத்துடன் இந்த நிரலாக்க மொழியானது மென்பொருள் கட்டுமான துறைக்கென(Building software) விசேட விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இவ் நிரலாக்க மென்பொருளின் பயிற்சிகளும் விளக்கங்களுக்குமான இணையச்சுட்டிகள் இங்கே தரப்பட்டுள்ளன.

http://golang.org/

http://golang.org/doc/go_faq.html

(பல்கலைக்கழக விடுமுறை காரணமாக நீண்ட நாட்களாக பதிவுகள் இட முடியவில்லை.)

1 கருத்துரைகள்:

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்