Monday, July 5, 2010

கூகிளின் இரகசிய சமூக வலைத்தள உருவாக்கம்

இணைய உலகில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திவரும் கூகிளானது மிகவும் இரகசியமான முறையில் Facebook சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக புதியதொரு சமூக வலைத்தளமொன்றினை உருவாக்கி வருகின்றது.   Google me என்னும் பெயரில் அமைந்த இந்த வலைத்தளமானது மிகவும் இரகசியமான முறையிலே உருவாக்கப்பட்டு வருகின்றது. சமூக வலைத்தளங்களின் ஆராய்ச்சிகளில் பிரபல்யம் பெற்று விளங்கும் எடம் டி அஞ்சேலோ (Adam D Angelo) என்பவர் இந்த தகவலை உருத்திப்படுத்தியுள்ளார். இது ஒரு வதந்தியல்ல...

Thursday, June 17, 2010

கூகிளின் முகப்பு பக்கத்தின் (Home Page) பின்னணி (Background) வடிவினை எவ்வாறு மாற்றுவது?

அதிரடி அறிவிப்புகள் மற்றும் பல சேவைகளை வழங்கிவரும் கூகிள் அண்மையில் தனது முகப்பு பக்கத்தின் (HOME PAGE) பின்னணி(Background) வடிவத்தினை  நாங்கள் விரும்பிய வடிவங்களில் மாற்றக்கூடியவிதத்தில்  சிறப்பான ஒரு சேவையை வழங்குகின்றது. இந்த சேவையின் மூலமாக கூகிளின் முகப்பு பக்கத்தின் பின்னணியினை  எமக்கு பிடித்தமான படத்தினைக்கொண்டு மாற்றியமைக்க முடியும். இதைவிட கூகிள் வழங்கும் படங்களின் மூலமாகவும் மாற்றியமைக்கலாம்.   கூகிளின் முகப்பு பக்கத்தின்...

Monday, June 14, 2010

பதிவுகளை திருடி வெளியிடுபவர்களின் கவனத்திற்கு........

பதிவுகளை இணையத்தளங்களில் இருந்தோ அல்லது வலைப்பூக்களில் இருந்தோ திருடி தங்களின் வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடுபவர்களின் கவனத்திற்காக இந்த பதிவை எழுத்துகின்றேன். பல பதிவர்களின் பதிவுகளை திருடி சில இணையத்தளங்களிலும் மற்றும் வலைப்பூக்களிலும் வெளியிடுகின்றார்கள். அவ்வாறு வெளியிடுவது தவறில்லை ஆனால் அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் தயவுசெய்து எந்த வலைப்பூக்களில் திருடினார்களோ அந்த வலைப்பூக்களின் பெயர்களை அந்த பதிவுகளின் கீழே பதிவிட்டுக்கொள்ளுங்கள்.இந்த...

Saturday, May 29, 2010

அலுவலக பாவனைக்கென உருவாக்கப்பட்டுள்ள இலவச Portable Application

கணணி மற்றும் இணைய உலகில் பல்வேறுபட்ட மென்பொருட்கள் குவிந்து காணப்படுகின்றன. அத்தகைய மென்பொருட்களை கணனியில் நிறுவாமல் USB Pendrive போன்றவற்றில் எடுத்துச்சென்று பயன்படுத்தக்கூடிய வகையில் பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் காணப்படும் மென்பொருள்தான் இது. Tiny USB Office எனப்படும் இந்த மென்பொருளானது கணனியில் நிறுவாமல் Portable Application ஆக எடுத்துச்சென்று பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது பிரத்தியேகமாக அலுவலக...

Thursday, May 27, 2010

Facebook இன் புதிய வரவு: குரல்வழி மற்றும் முகம்பார்த்து அரட்டை(Voice and Video chat)வசதி அறிமுகம்.

 அதிரடியாக வளர்ந்து வரும் சமூக வலைப்பின்னல் ஆகிய Facebook நீண்டகாலமாக பரீட்சார்த்த நிலையில் இருந்த குரல்வழி மற்றும் முகம்பார்த்து அரட்டை(Voice and Video chat) பண்ணும் தொழில்நுட்பத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னமும் Beta நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது. FriendCam Video Chat  என்னும் பெயருடன்  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மென்பொருளானது இணைய உலகில் Skype க்கு போட்டியாக அமைந்திருக்கின்றது. இருந்தபோதிலும் இந்த மென்பொருளானது...

Sunday, May 9, 2010

மெய்நிகர் விசைப்பலகை(Virtual Keyboard)- கூகிளின் புதியதொரு சேவை.

இணைய உலகில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி பல்வேறுபட்ட புதிய இணையவழி மென்பொருட்களை அறிமுகப்படுத்திவரும் கூகிளானது அண்மையில் புதியதொரு சேவையொன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது. மெய்நிகர் விசைப்பலகை (Virtual Keyboard) என்ற புதியதொரு சேவையை தேடல் துறைக்கென அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உச்சரிப்பு(Phonetic) முறையில் தட்டச்சு செய்து தேடல்களை மேற்கொள்ளமுடியும். எவ்வாறு உச்சரிப்பு முறையில் தேடுவது? முதலில் Google இணையத்தளத்துக்கு செல்லுங்கள். http://www.google.lk ...

Saturday, May 8, 2010

கணணி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவென சில பயனுள்ள Command Prompt கட்டளைகள்.

Command prompt என்பது கணனியில் மிகவும் பயனுள்ள ஒரு பகுதியாகும். இந்த Command prompt ஊடாக எமது கணணியை செயற்படுத்தமுடியும். இந்த Command prompt அன்னது எமக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை தரவல்லது. Command prompt இன் உதவியுடன் எமது கணணி குறித்த பல தகவல்களை பெற்றுகொள்ள முடியும். நாம் சில கட்டளைகளை  வழங்கினால் போதும் அவை குறித்த பல தகவல்களை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். அத்தகைய Command prompt இல் பயன்படுத்தி எமது கணனி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவென...

Sunday, April 25, 2010

ஆவணங்களை பாதுகாத்துக்கொள்ளவென ஒரு இலவச மென்பொருள்

பொது இடங்களிலோ அல்லது வீடுகளிலோ உங்கள் கணனியில் முக்கியமான ஆவணங்களை நீங்கள் கோப்புறைகளில்(Folders) இட்டு பாதுகாத்துக்கொள்ளும்போது மற்றவர்கள் உங்கள் ஆவணங்களை பார்வையிடாமல் பாதுகாப்பாக வைத்துகொள்ளவென பல மென்பொருட்கள் மற்றும் பலவழிகள் உள்ளன. அவ்வாறான வழிகளில் இதுவும் ஒன்று. கோப்புறைகளை(Folders) பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவென இலவச மென்பொருள் பற்றிய ஒரு பதிவுதான் இது. FileSecrets எனப்படும் இந்த மென்பொருளானது கோப்புறைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. ...

Wednesday, April 21, 2010

படங்களின் அளவுகளை(Capacity) சுருக்குவதற்கான பயனுள்ள இலவச மென்பொருள்

நண்பர்களுக்கு எங்கள் படங்கள்,புகைப்படங்களை (Images,Photos) மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறுவழியிலோ பகிர்ந்துகொள்ளும்போது அவை மிகப்பெரிய அளவுகளில் இருந்தால் எம்மால் சிலவேளைகளில் பகிர்ந்துகொள்ளவோ அனுப்பவோ முடியாதநிலை ஏற்படும். அத்தகைய இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்கென பிரத்தியேகமாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது. மிகப்பெரிய அளவிலான (Capacity) படங்களின் அளவுகளை அவற்றின் தன்மை மாறாமல் (Resolution) மிகக் குறைந்தளவில் படங்களை, புகைப்படங்களை சுருக்கிக்கொள்ளலாம். ...

Monday, March 22, 2010

இலவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள் (Create Free Website)

இணையத்தளங்களை உருவாக்க விரும்புபவர்கள் பணம் செலுத்தி இணையமுகவரியை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் அதற்கான வடிவமைப்புக்களையும் செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் எமக்கான இணையத்தளங்களை எத்துவித செலவும் இல்லாமல் இலவசமாக இணையமுகவரி மற்றும் இணைய வார்ப்புருக்களுடன்(Web Templates) இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அத்தகைய இணையத்தளங்களை உருவாக்குவதற்கு சில இணையசேவை வழங்குனர்கள் இந்த சேவைகளை சில வரையறைகளுடன் உங்களுக்கு தருகின்றார்கள். அத்தகைய...

Thursday, March 18, 2010

ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மாற்றியமைக்கவென சில இலவச மென்பொருட்கள் (Free Audio Editors)

கணணியுலகில் மென்பொருட்களின் பாவனை மிக அதிகரித்த வண்ணமே உள்ளது.  அந்த வகையில் பாடல்கள்,ஒலிப்பதிவுகள் போன்ற ஒலியுடன் சம்பந்தபட்ட பல்வேறுபட்ட ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அத்தகைய மென்பொருட்களை இலவசமாக பெற்றுப் பயன்படுத்தினால் செலவுகளை மீதப்படுத்திகொள்ளலாம். அவ்வாறு ஒலிப்பதிவுகளை மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென சில திறந்த மென்பொருட்கள் இணையுலகில் காணப்படுக்கின்றன. அத்தகைய மென்பொருட்கள்...

Wednesday, March 17, 2010

உலகின் மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய இணையத்தளங்கள்

பலரும் பலவிதத்தில் சாதனை படைக்க விரும்புவார்கள்.  அவ்வாறு இணைய உலகில் சிலர் சாதனை படைத்திருக்கிறார்கள். அந்த வகையில் உலகில் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய இணையத்தளங்களை உருவாக்கி சிலர் சாதனை படைத்திருக்கிறார்கள். அத்தகைய இணையத்தளங்கள் பற்றிய தகவல்கள் இதோ: உலகின் மிகச்சிறிய இணையத்தளம்: http://www.guimp.com/  எனப்படும் இந்த இணையத்தளமானது வெறும் 18x18 படத்தனிமங்களை(18x18 pixels) கொண்டமைந்துள்ளதொரு இணையத்தளம். இந்த இணையத்தளம் கணணி விளையாட்டுக்களை...

Thursday, March 11, 2010

இலவசமாக இணையமுகவரிகளை பெற்றுக்கொள்ள சில இணையசேவைகள்(Free Domain Names)

இணையத்தளம் ஒன்றை சொந்தாமாக வைத்திருக்க பலரும் ஆசைப்படுவார்கள். அவ்வாறு இணையத்தளம் ஒன்றை சொந்தமாக வைத்திருக்க பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் இலவசமாக பெற்றுக்கொள்ள   விரும்புபவர்களுக்கென சில இணையசேவை  வழங்கிகள்(Web Service Providers) உள்ளன. அவ்வாறு இலவசமாக இணையத்தள முகவரிகளை வழங்கும் சில இணையசேவை வழங்கிகளின் முகவரிகள். 1.http://www.co.cc/ இந்த இணையத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கிற்கு 3 இணையமுகவரிகளை(Free...

Tuesday, March 9, 2010

3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System)

கணணியை செயற்படுத்தவென உருவாக்கப்பட்டவைதான் இயங்குதளங்கள் (Operating System). இன்னும் சொல்லப்போனால் கணணி வன்பொருட்களுக்கும்(Hardwares) பயனாளர்களுக்கும்(users) இடையிலான ஒரு இடைமுகமாக(Interface)  செயற்படுபவை. இவ்வாறான பல இயங்குதளங்கள் இன்றைய உலகில் பல உருவாக்கப்பட்டுள்ளன உருவாக்கபட்டுக்கொண்டிருக்கின்றன. அவ்வாறான பல இயங்குதளங்களாக Windows XP, Windows Vista, Windows 7 , Apple OS, Ubuntu OS, Linux, Google Chrome OS, RISC OS, Amiga OS, MAC OS, போன்ற...

Saturday, March 6, 2010

இணையத்திலிருந்து இலவசமாக நூல்களை தரவிறக்க சில இணையத்தளங்கள்(Free Books)

வாசிப்பதனால் மனிதன் ஒருவன் முழுமையான மனிதனாகின்றான். வாசிப்பு தேடல்களுக்கென நூலகங்கள் இருக்கின்றபோதிலும் இன்றைய இணையயுகத்தில் இணையநூலகங்கள் மூலமாகவும் நாம் எமது அறிவுப்பசியினை தீர்த்துக்கொள்ளகூடியதாக இருக்கின்றது. அதைவிட நாம் இன்று இணைய உலகில் பல்வேறுபட்ட மின்நூல்களையும் பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது. அவ்வாறான மின்நூல்களை இணையத்தில் இலவசமாக வழங்கவென பல இணையத்தளங்கள் உள்ளன. அத்தகைய இணையத்தளங்கள் சிலவற்றின் பட்டியல்: 1. FreeBookSpot FreeBookSpot...