Friday, June 26, 2009

கணனியில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா?

கம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம் அறிவோம். மதர் போர்டு என ஒன்று இருப்பதைப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருப்போம்.இதனுடன் பல துணை சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கீ போர்டு, மவுஸ் போன்றவை பொதுவாக உள்ளவை. இவை எல்லாம் சரியாக உள்ளனவா? அல்லது பிரச்னையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனவா ? திடீரென நம் காலை வாரிவிடுமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது? அல்லது அவை இயங்க வேண்டிய வேகத்தில் அதற்கான தன்மையுடன் இயங்குகின்றனவா?...

அறிமுகம்

வணக்கம்.....வாருங்கோ. எப்படி எல்லாரும் சுகமாக இருக்கிறியளோ?எனக்கும் புதிசா ஒரு ஆசை வந்தது பாருங்கோ. புதிசாக ஏதாவது எழுத வேணுமென்று. சரி என்று "வன்னி தகவல் தொழில்நுட்பம்" என்று பெயரை வைத்து சும்மா எழுதுவம் என்று வெளிக்கிட்டனான் பாருங்கோ.தொழில்நுட்பத்தைப்பற்றி தெரியாதவன் எல்லாம் எழுத வெளிக்கிடுகினம் என்ற உங்கடை ஆதங்கம் எனக்கு புரியுது பாருங்கோ இருந்தும் கம்பன் சொன்னது போல பெரிய பாற்கடல் ஒன்றை சிறிய பூனை ஒன்று நக்கிக்குடிக்க ஆசைப்படுவது போல நானும் இந்த தகவல் தொழில்நுட்பம் என்ற பெரிய கடல் ஒன்றுக்கு வாறன் உங்கடை ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சரி...