Monday, July 5, 2010

கூகிளின் இரகசிய சமூக வலைத்தள உருவாக்கம்

இணைய உலகில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திவரும் கூகிளானது மிகவும் இரகசியமான முறையில் Facebook சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக புதியதொரு சமூக வலைத்தளமொன்றினை உருவாக்கி வருகின்றது. 
 Google me என்னும் பெயரில் அமைந்த இந்த வலைத்தளமானது மிகவும் இரகசியமான முறையிலே உருவாக்கப்பட்டு வருகின்றது. சமூக வலைத்தளங்களின் ஆராய்ச்சிகளில் பிரபல்யம் பெற்று விளங்கும் எடம் டி அஞ்சேலோ (Adam D Angelo) என்பவர் இந்த தகவலை உருத்திப்படுத்தியுள்ளார். இது ஒரு வதந்தியல்ல எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் கிடைத்த தகவல் எனவும் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே Google Buzz என்னும் twitter க்கு போட்டியாக உருவாக்கிய கூகிள் Google me என்னும் சமூக வலைத்தளத்தினையும் விரைவில் அறிமுகப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும் Facebook உடன் போட்டியாக அமையுமா என்பதினை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2 கருத்துரைகள்:

Anonymous said...

நண்பருக்கு வணக்கம்,எனக்கு இரு தகவல்கள் தேவை.உதவமுடியுமா?
1.நோக்கியா சிலதினங்களுக்கு முன் வெளியிட்ட NOKIA C3 என்ற மொபைலில் wifi வசதியுள்ளது.அதில் gprs மூலம் இணைய வசதிபெற்று gtalk,skype,fring....போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தி ஆன்லைனில் voice chat செய்யமுடியுமா?

2.நெட்புக் என்றால் என்ன?அதன் பயன்பாடு என்ன?அதை வாங்கும்போது கவனிக்கவேண்டிய அம்சம் என்ன?சென்னையில் எவ்வளவு விலை முதல் வாங்கலாம்?
இதற்கு தங்களின் ஆலோசனை தேவை

mani said...

google is a heavy competitor..
let see...