புகைப்படங்களை பல்வேறுபட்ட வடிவங்களில் பலரும் வடிவமைக்க விரும்புவார்கள். ஆனால் அவற்றை நகைச்சுவையாக கேலிசித்திரங்களாக வடிவமைக்கவும் ஆசைப்படுவார்கள்.அவ்வாறு நகைச்சுவையாக,கேலிசித்திரங்களாக மிக குறுகிய நேரத்தில் மென்பொருட்களை பாவித்து வடிவமைப்பதென்பது மிகவும் கடினமான விடயம். அத்தகைய புகைப்படங்களை வடிவமைக்க விரும்புபவர்களுக்கென இலவச இணையவழியிலான மென்பொருள் உள்ளது.
Picjoke என்னும் இணையத்தளமானது இந்த சேவையை இலவசமாக வழங்குகின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த இணையத்தளத்திற்கு சென்று நீங்கள் எந்த வடிவத்தில் புகைப்படத்தை மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களோ அந்த வடிவத்தில் புகைப்படங்களை தரவேற்றி பெற்றுக்கொள்ள முடியும்.
இது முற்றிலும் இலவசமான ஒரு இணையவழி மென்பொருள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயம்.
இணையத்தளச்சுட்டி: Picjoke
இதோ நான் வடிவமைத்த சில புகைப்படங்கள்.

இணையத்தினூடாக இலத்திரனியல் கற்கைநெறிக்கென (E-Learning) பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் தான் Moodle. இன்று இந்த இலத்திரனியல் கற்கைநெறியானது உலகளாவிய ரீதியிலான அங்கீகரிக்கப்பட்ட ஒரு கற்கைநெறி சாதனமாக விளங்குகின்றது. உலகின் பெரும்பாலான பல்கலைக்கழங்களில் இலத்திரனியல் கற்கைநெறி சாதனமாக Moodle ஐ பயன்படுத்துகிறார்கள். அத்துடன் இணைய வழியில் இலத்திரனியல் கற்கைநெறிகளை நடாத்திகொண்டிருக்கின்ற உயர்கல்வி நிறுவகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் Moodle என்னும் மென்பொருளை பாவித்து கற்கைநெறிகளை வழிநடத்திக்கொண்டு இருக்கின்றன.