Sunday, April 25, 2010

ஆவணங்களை பாதுகாத்துக்கொள்ளவென ஒரு இலவச மென்பொருள்

பொது இடங்களிலோ அல்லது வீடுகளிலோ உங்கள் கணனியில் முக்கியமான ஆவணங்களை நீங்கள் கோப்புறைகளில்(Folders) இட்டு பாதுகாத்துக்கொள்ளும்போது மற்றவர்கள் உங்கள் ஆவணங்களை பார்வையிடாமல் பாதுகாப்பாக வைத்துகொள்ளவென பல மென்பொருட்கள் மற்றும் பலவழிகள் உள்ளன. அவ்வாறான வழிகளில் இதுவும் ஒன்று.

கோப்புறைகளை(Folders) பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவென இலவச மென்பொருள் பற்றிய ஒரு பதிவுதான் இது. FileSecrets எனப்படும் இந்த மென்பொருளானது கோப்புறைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.  மற்றவர் உங்கள் கோப்புறைகளை திறக்க முடியாதபடியும் கடவுச்சொல் வழங்கியும் மறைத்தும் பாதுகாப்பாக கோப்புறைகளை வைத்திருக்க முடியும்.

கணனியில் FileSecrets எனப்படும் இந்த மென்பொருளை முதலில் நிறுவிக்கொள்ளுங்கள்
பின்னர் நிறுவிய மென்பொருளை திறந்து file or folder என்ற இடத்தில் நீங்கள் பாதுகாக்க வேண்டிய மென்பொருளை browse என்பதில் அழுத்தி (Click) தெரிவுசெய்துகொள்ளுங்கள்.
பின்னர் Action என்ற இடத்தில் எந்த வகையில் உங்கள் கோப்புறைகளை பாதுகாக்க போகிறீர்கள் என்பதை தெரிவு செய்துகொள்ளுங்கள்.
பின்னர் add என்பதை அழுத்தி பாதுகாக்க வேண்டிய கோப்புறையை இணைத்துக்கொள்ளுங்கள்.




பாதுகாத்த கோப்புறைகளை திறந்துகொள்ளும்போது  நீங்கள் வழங்கிய Action க்கு ஏற்ப பின்வரும் எச்சரிக்கைகளை அது காண்பிக்கும்.

1.Deny Access to File or Folder :




2.Deny Modify to File or Folder:




3.Password Protection :



மென்பொருளை தரவிறக்க இணையச்சுட்டி:  FileSecrets
http://www.pogisys.com/downloads/FileSecretsSetup.exe 








 

Wednesday, April 21, 2010

படங்களின் அளவுகளை(Capacity) சுருக்குவதற்கான பயனுள்ள இலவச மென்பொருள்

நண்பர்களுக்கு எங்கள் படங்கள்,புகைப்படங்களை (Images,Photos) மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறுவழியிலோ பகிர்ந்துகொள்ளும்போது அவை மிகப்பெரிய அளவுகளில் இருந்தால் எம்மால் சிலவேளைகளில் பகிர்ந்துகொள்ளவோ அனுப்பவோ முடியாதநிலை ஏற்படும். அத்தகைய இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்கென பிரத்தியேகமாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

மிகப்பெரிய அளவிலான (Capacity) படங்களின் அளவுகளை அவற்றின் தன்மை மாறாமல் (Resolution) மிகக் குறைந்தளவில் படங்களை, புகைப்படங்களை சுருக்கிக்கொள்ளலாம்.  RIOT (Radical Image Optimization Tool) எனப்படும் இந்த மென்பொருளானது 1MB க்கும் குறைவான அளவில் கிடைப்பதால் மிக இலகுவாக தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளலாம். உங்கள் தேவைக்கேற்ப சுருக்கும் படங்களின் அளவுகளை நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.  படங்களின் அளவுகளை சுருக்குவதற்கான திறன்வாய்ந்த பயனுள்ள மென்பொருள்.

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: RIOT
http://luci.criosweb.ro/riot/ 

Monday, March 22, 2010

இலவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள் (Create Free Website)

இணையத்தளங்களை உருவாக்க விரும்புபவர்கள் பணம் செலுத்தி இணையமுகவரியை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் அதற்கான வடிவமைப்புக்களையும் செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் எமக்கான இணையத்தளங்களை எத்துவித செலவும் இல்லாமல் இலவசமாக இணையமுகவரி மற்றும் இணைய வார்ப்புருக்களுடன்(Web Templates) இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அத்தகைய இணையத்தளங்களை உருவாக்குவதற்கு சில இணையசேவை வழங்குனர்கள் இந்த சேவைகளை சில வரையறைகளுடன் உங்களுக்கு தருகின்றார்கள்.
அத்தகைய சேவைகளை வழங்கும் இணையத்தளங்கள்.

1. Webs
இணையத்தளமுகவரி: http://www.webs.com/



2. Webnode
இணையத்தளமுகவரி: http://www.webnode.com/



3. Wetpaint
இணையத்தளமுகவரி: http://www.wetpaint.com/ 



4.Weebly
இணையத்தளமுகவரி: http://www.weebly.com/


5. yola
இணையத்தளமுகவரி: http://www.yola.com/



6. own-free-website
இணையத்தளமுகவரி: http://www.own-free-website.com/




7. Jimdo
இணையத்தளமுகவரி: http://www.jimdo.com/

Thursday, March 18, 2010

ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மாற்றியமைக்கவென சில இலவச மென்பொருட்கள் (Free Audio Editors)

கணணியுலகில் மென்பொருட்களின் பாவனை மிக அதிகரித்த வண்ணமே உள்ளது.  அந்த வகையில் பாடல்கள்,ஒலிப்பதிவுகள் போன்ற ஒலியுடன் சம்பந்தபட்ட பல்வேறுபட்ட ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அத்தகைய மென்பொருட்களை இலவசமாக பெற்றுப் பயன்படுத்தினால் செலவுகளை மீதப்படுத்திகொள்ளலாம். அவ்வாறு ஒலிப்பதிவுகளை மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென சில திறந்த மென்பொருட்கள் இணையுலகில் காணப்படுக்கின்றன. அத்தகைய மென்பொருட்கள் சிலவற்றை இங்கே பட்டியல் இடுகிறேன்.

1.Power Sound Editor
மென்பொருள் சுட்டி: http://www.free-sound-editor.com/



2.Music Editor Free
மென்பொருள் சுட்டி: http://www.music-editor.net/



3.Wavosaur
மென்பொருள் சுட்டி: http://www.wavosaur.com/



4.Traverso DAW
மென்பொருள் சுட்டி: http://www.traverso-daw.org/




5.Rosegarden
மென்பொருள் சுட்டி: http://www.rosegardenmusic.com/getting/



6.Sound Engine
மென்பொருள் சுட்டி: http://www.cycleof5th.com/products/soundengine/?lang=en



7.Expstudio Audio Editor
மென்பொருள் சுட்டி: http://www.expstudio.com/audio-editor-free.html



8.FREE WAVE MP3 Editor
மென்பொருள் சுட்டி: http://www.code-it.com/KISS_free_wave_editor.htm





Wednesday, March 17, 2010

உலகின் மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய இணையத்தளங்கள்

பலரும் பலவிதத்தில் சாதனை படைக்க விரும்புவார்கள்.  அவ்வாறு இணைய உலகில் சிலர் சாதனை படைத்திருக்கிறார்கள். அந்த வகையில் உலகில் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய இணையத்தளங்களை உருவாக்கி சிலர் சாதனை படைத்திருக்கிறார்கள். அத்தகைய இணையத்தளங்கள் பற்றிய தகவல்கள் இதோ:

உலகின் மிகச்சிறிய இணையத்தளம்:
http://www.guimp.com/  எனப்படும் இந்த இணையத்தளமானது வெறும் 18x18 படத்தனிமங்களை(18x18 pixels) கொண்டமைந்துள்ளதொரு இணையத்தளம். இந்த இணையத்தளம் கணணி விளையாட்டுக்களை கொண்டமைந்துள்ளது.




உலகின் மிகப்பெரிய இணையத்தளம்:
http://www.28fields.com/ எனப்படும் இந்த இணையத்தளம் பலமில்லியன் படத்தனிமங்களை கொண்டமைந்துள்ளது. இந்த இணையத்தளமானது 56k இணைய இணைப்பின் மூலமாக தரவிறங்க 8 வருடங்கள், 309 நாட்கள் , 8 மணித்தியாலங்கள், 57 நிமிடங்கள், 37 வினாடிகள் தேவை. DSL இணைய இணைப்பின் மூலமாக தரவிறங்க 120 நாட்கள், 13 மணித்தியாலங்கள், 31 நிமிடங்கள், 6 வினாடிகள் தேவை.


Thursday, March 11, 2010

இலவசமாக இணையமுகவரிகளை பெற்றுக்கொள்ள சில இணையசேவைகள்(Free Domain Names)

இணையத்தளம் ஒன்றை சொந்தாமாக வைத்திருக்க பலரும் ஆசைப்படுவார்கள். அவ்வாறு இணையத்தளம் ஒன்றை சொந்தமாக வைத்திருக்க பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் இலவசமாக பெற்றுக்கொள்ள   விரும்புபவர்களுக்கென சில இணையசேவை  வழங்கிகள்(Web Service Providers) உள்ளன. அவ்வாறு இலவசமாக இணையத்தள முகவரிகளை வழங்கும் சில இணையசேவை வழங்கிகளின் முகவரிகள்.

1.http://www.co.cc/
இந்த இணையத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கிற்கு 3 இணையமுகவரிகளை(Free Domain Names) பெற்றுகொள்ள முடியும்.  அதன் பின்னர் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இணையமுகவரிக்கும் $10 செலுத்தவேண்டும்.
CNAME, A, MX, NS ,TXT போன்ற சேவைகளையும் மற்றும் Google Apps,windows live சேவைகளையும்  இதனோடு இணைந்ததாக பெற்றுக்கொள்ள முடியும்.

2.  http://www.eu.tv/
இந்த இணையத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கிற்கு 3 இணையமுகவரிகளை(Free Domain Names) பெற்றுகொள்ள முடியும். CNAME, A, MX, NS ,TXT போன்ற சேவைகளையும் மற்றும் Google Apps,windows live சேவைகளையும் இதனோடு இணைந்ததாக பெற்றுக்கொள்ள முடியும்.



3. http://www.co.tv/
இந்த இணையத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கிற்கு 3 இணையமுகவரிகளை(Free Domain Names) பெற்றுகொள்ள முடியும். CNAME, A, MX, NS ,TXT போன்ற சேவைகளையும் மற்றும் Google Apps,windows live சேவைகளையும் இதனோடு இணைந்ததாக பெற்றுக்கொள்ள முடியும்.

4. http://www.smartdots.com/
இணையமுகவரியுடன் உங்கள் இணையமுகவரியில் அமைந்த மின்னஞ்சல் முகவரிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

5. http://www.cydots.com/
இணையமுகவரியுடன் உங்கள் இணையமுகவரியில் அமைந்த மின்னஞ்சல் முகவரிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Tuesday, March 9, 2010

3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System)

கணணியை செயற்படுத்தவென உருவாக்கப்பட்டவைதான் இயங்குதளங்கள் (Operating System). இன்னும் சொல்லப்போனால் கணணி வன்பொருட்களுக்கும்(Hardwares) பயனாளர்களுக்கும்(users) இடையிலான ஒரு இடைமுகமாக(Interface)  செயற்படுபவை. இவ்வாறான பல இயங்குதளங்கள் இன்றைய உலகில் பல உருவாக்கப்பட்டுள்ளன உருவாக்கபட்டுக்கொண்டிருக்கின்றன. அவ்வாறான பல இயங்குதளங்களாக Windows XP, Windows Vista, Windows 7 , Apple OS, Ubuntu OS, Linux, Google Chrome OS, RISC OS, Amiga OS, MAC OS, போன்ற இன்னும் பல இயங்குதளங்கள் இன்று காணப்படுகின்றன.


அவ்வாறான இயங்குதளங்கள் இருக்கின்றபோதிலும் இவற்றைவிட மிகச்சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஒன்றும் உள்ளது.


KOLIBRI OS  எனப்படும் இந்த இயங்குதளமானது 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது Windows,Linux, Mac போன்ற பிற இயங்குதளங்களை அடிப்படையாகக்கொண்டு அமையாமல் CPU நிரலாக்கமொழி எனப்படும் முதலாம் தலைமுறை( First Generation language)  மொழியான கணணி இயந்திர மொழியின்(Machine Code) துணையுடன் உருவாக்கப்பட்ட இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது மிகச்சிறிய அளவில் மென்பொருள் பொதிகளையும் கொண்டுள்ளது.  Games, Tables Editor, Compiler,Text Editor, Demos, Web Browser போன்ற மென்பொருட்கள் உள்ளடங்கலாக இந்த இயங்குதளமானது உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான மிகச்சிறிய மென்பொருளாகும். 


இயங்குதளம் தரவிறக்க சுட்டிகள்: 
Floppy Disk Image Format
Compact Disk Image Format





Saturday, March 6, 2010

இணையத்திலிருந்து இலவசமாக நூல்களை தரவிறக்க சில இணையத்தளங்கள்(Free Books)

வாசிப்பதனால் மனிதன் ஒருவன் முழுமையான மனிதனாகின்றான். வாசிப்பு தேடல்களுக்கென நூலகங்கள் இருக்கின்றபோதிலும் இன்றைய இணையயுகத்தில் இணையநூலகங்கள் மூலமாகவும் நாம் எமது அறிவுப்பசியினை தீர்த்துக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
அதைவிட நாம் இன்று இணைய உலகில் பல்வேறுபட்ட மின்நூல்களையும் பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது. அவ்வாறான மின்நூல்களை இணையத்தில் இலவசமாக வழங்கவென பல இணையத்தளங்கள் உள்ளன.










அத்தகைய இணையத்தளங்கள் சிலவற்றின் பட்டியல்:

1. FreeBookSpot
FreeBookSpot இல் 4485 இலவச நூல்கள் 96 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் விஞ்ஞான, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் கணணி நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி:  FreeBookSpot
http://www.freebookspot.in/



2.4eBooks
இந்த இணையத்தளத்தில் கணணி சம்பந்தமான மற்றும் கணணி நிரலாக்க நூல்கள் பலவற்றை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி: 4eBooks
http://4ebooks.org/




3.Free-eBooks
உயிரியல், சுகாதாரம், மருத்துவம், முகாமைத்துவம், பொருளியல், பொறியியல்,கணணி மற்றும் வலையமைப்பு, மெய்யியல், உளவியல், அரசியல், ஆன்மீகம், கலை, இலக்கியம், மற்றும் பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல்வேறுபட்ட துறைகளில் நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும்.
இணையத்தளச்சுட்டி: Free-eBooks
http://www.free-ebooks.net/




4. GetFreeEBooks
கலை, இலக்கியம், ஆன்மீகம், கணிதவியல், கணணி வலையமைப்பு, நிரலாக்கம், மொழியியல், சமூகவியல், நாவல்கள் முகாமைத்துவம் போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி: GetFreeEBooks
http://www.getfreeebooks.com/





5. FreeComputerBooks
கணணி சம்பந்த்தப்பட்ட பல்வேறுவகையான நூல்கள்,கணணி சஞ்சிகைகள் பாடக்குறிப்புக்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: FreeComputerBooks
http://freecomputerbooks.com/




6. FreeTechBooks
கணணி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல், கணிதவியல், கணணி நிரலாக்கம் போன்ற பல்வேறுபட்ட தொழில்நுட்பம் சார்ந்த நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: FreeTechBooks
http://www.freetechbooks.com/




7. KnowFree
இணைய சஞ்சிகைகள், கணணி சார்ந்த நூல்கள் கணிதவியல் நூல்கள், பொறியியல், மருத்துவ விஞ்ஞானம், போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: KnowFree
http://knowfree.net/




8. OnlineFreeEBooks
பொறியியல், சுகாதாரம் மற்றும் மருத்துவம், கணணி மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, அறிவியல் போன்ற பல்வேறு வகையான நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: OnlineFreeEBooks
http://www.onlinefreeebooks.net/




9. The Online Books Page
30,000 க்கும் மேற்பட்ட இலவச நூல்களை தாங்கியதொரு இணைய நூலகம்.
இணையத்தளச்சுட்டி: The Online Books Page
http://digital.library.upenn.edu/books/




10. BookYards
பிரபல்யம் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் பலவற்றை இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: BookYards
http://www.bookyards.com/






இத்தகைய பல்வேறுபட்ட இணையத்தளங்கள் இன்னும் பல உள்ளன. முடிந்தால் அவற்றையும் பட்டியல் இடுகிறேன்.

Sunday, February 28, 2010

பல்வேறுவிதமான இசைவடிவங்களை தரவிறக்க சில இணையத்தளங்கள்( Download free Sound Effects)

இசை என்பது மனிதவாழ்வில் மிக முக்கியாமானதொன்று. இசையால் நோயைக்கூட குணப்படுத்தமுடியும் என்பது நிபுணர்களின் கருத்து. அத்தகைய இசையை இன்று பல்வேறுபட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. தொலைக்காட்சிகள்,இலத்திரனியல் ஊடகங்கள், அசைவுருக்கள், கணணி விளையாட்டுகள்,மற்றும் மருத்துவ தேவைகளுக்கெனவும் இசையானது இன்று முக்கிய இடத்தை வகிக்கின்றது. கிரகம் நகரும் ஓசை முதல் அரும்பு உடையும் சத்தம் வரை அத்தனையும் இன்றைய கணணியுலகில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
அத்தகைய இசைவடிவங்களை பெற்றுக்கொள்ளவதற்கான இணையத்தளங்கள் தொடர்பாக இன்றைய பதிவு.  விலங்குகள், பறவைகள்,இயற்கையின் சப்தங்கள், இலத்திரனியல் சாதனங்களின் ஒலிகள், இயந்திரங்களின் ஓசைகள், மானிடத்தின் குரல்கள், மற்றும் தொடர்பாடல் ஒலிகள் போன்ற இன்னும் பல்வேறுவகையான ஒலிகளின் விளைவுகளை கீழே உள்ள இணையத்தளங்களிலிருந்து இலவசமாக தரவிறக்கிக்கொள்ளமுடியும்.

இணையத்தளங்களின் பட்டியல்:
1.Flash Kit
இணையத்தளச்சுட்டி: Flash Kit
http://flashkit.com/soundfx/

2.Audio Micro
இணையத்தளச்சுட்டி:  Audio Micro
http://www.audiomicro.com/sound-effects

3.Sound-Effect
இணையத்தளச்சுட்டி: Sound-Effect
http://www.sound-effect.com/

4.SoundSnap
இணையத்தளச்சுட்டி: SoundSnap
http://www.soundsnap.com/browse

5.FindSounds
இணையத்தளச்சுட்டி: FindSounds
http://www.findsounds.com/

6.Soungle
இணையத்தளச்சுட்டி: Soungle
http://soungle.com/

7.SFX Source
இணையத்தளச்சுட்டி: SFX Source
http://www.sfxsource.com/sound-effects.html

8.A1 Free Sound Effects
இணையத்தளச்சுட்டி: A1 Free Sound Effects
http://www.a1freesoundeffects.com/

9.Soundrangers
இணையத்தளச்சுட்டி: Soundrangers
http://www.soundrangers.com/index.cfm

10.I Love Waves
இணையத்தளச்சுட்டி: I Love Waves
http://www.ilovewavs.com/

11.Partners In Rhyme
இணையத்தளச்சுட்டி: Partners In Rhyme
http://www.partnersinrhyme.com/pir/PIRsfx.shtml

12.Soundboard
இணையத்தளச்சுட்டி: Soundboard
http://www.soundboard.com/

13.FreeSound.org
இணையத்தளச்சுட்டி: FreeSound.org
http://www.freesound.org/

14.Ljudo
இணையத்தளச்சுட்டி: Ljudo
http://www.ljudo.com/default.asp?lang=tEnglish&do=it

15.Nature Sounds
இணையத்தளச்சுட்டி: Nature Sounds
http://nature-downloads.naturesounds.ca/

போன்ற இன்னும் பல இணையத்தளங்கள் உள்ளன.

Thursday, February 18, 2010

இணையத்தளங்களில் உள்ள படங்களுடன் ஒரு விநோத விளையாட்டு

கடந்த பதிவில் குறிப்பிட்டது போன்று இந்த பதிவானது இணையத்தில் உள்ள படங்களுடன் ஒரு சின்ன விளையாட்டு. இது இணையத்திலுள்ள படங்களை வித்தியாசமாக நகரச்செய்வதற்கான ஒரு குறிப்பு.
இது பெரும்பாலான இணையத்தளங்களில் இந்த நகர்வினை காணலாம். Bing  போன்ற சில இணையத்தளங்களில் இந்த நகர்வினை காணமுடியாது. இந்த நகர்வினை காண்பதற்கு மிக சிறந்த இணையத்தளம் Google images தான்.




வழிமுறைகள் இதோ:

 1.முதலில் நீங்கள் எந்த இணையத்தளத்தில் இந்த நகர்வினை பார்க்க விரும்புகிறீர்களோ அந்த இணையத்தளத்திற்கு செல்லுங்கள்.
( உதாரணம்: http://vannitec.blogspot.com/)
Google images இல் பார்க்க விரும்புபவர்கள் கூகிள் சென்று அந்த இணையத்தளத்தில் Images தேடல் பகுதிக்கு சென்று(http://images.google.com/) அதில் உங்களுக்கு பிடித்தமானவரின் புகைப்படத்தையோ அல்லது உங்களுக்கு பிடித்த காட்சிகளையோ தேடுங்கள். ( புகைப்படங்கள் அதிகம் உள்ள இணையத்தளங்களில் மிக அழகாக இருக்கும்)

2.  பின்னர் அந்த இணையத்தளத்தின் URL முகவரியினை அழியுங்கள் (delete the URL).



3. பின்னர் URL இருந்த இடத்தில் கீழே காணப்படும் குறியீட்டினை பிரதி செய்து URL இருந்த இடத்தில் இடுங்கள்.(Copy and paste below Script on URL bar)

 javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.images; DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5; DIS.top=Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5}R++}setInterval('A()',5); void(0);






4 .அதன் பின்னர் Enter விசையையோ(Key) Go என்பதையோ அழுத்துங்கள். 
இப்பொழுது பார்த்து மகிழுங்கள்.

Wednesday, February 17, 2010

கூகுளில் சில வித்தியாசமான நகைச்சுவையான தேடல்கள்

உலகில் இணைய  தேடல்  இயந்திரங்களில்   முதலிடத்தை பல ஆண்டு காலமாக தக்கவைத்துகொண்டிருக்கும் தேடலில் ஆர்வமுள்ளவர்களுக்கென சில நகைச்சுவையான வித்தியாசமான சில தேடல் வடிவங்கள் உள்ளன. இந்த தேடல் வடிவங்கள் வித்தியாசமாக தேட விரும்புபவர்களுக்கு என உருவாக்கப்பட்டவை.


வித்தியாசமாக எவ்வாறு தேடுவது எனப்பார்ப்போம்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களை Google இன் இணையமுகவரியில் (http://www.google.com/) சென்று தட்டச்சு(type) செய்யுங்கள்.
(Just write it in google searchbar )

பின்னர் I'm Feeling Lucky என்பதன் மேல் அழுத்துங்கள். அப்பொழுது கூகுளின் வித்தியாசமான தேடல் முகப்பு தோற்றங்கள் நகைச்சுவையாக தோற்றமளிக்கும்.
(Then Click on I'm Feeling Lucky)

வித்தியாசமான தேடல் வடிவங்களுக்குரிய சொற்கள்:

  1. Elgoog
  2. Google 133t
  3. Google Gothic
  4. Google BSD
  5. Google Easter egg
  6. xx-piglatin
  7. Google linux
  8. Ewmew fudd
  9. xx-klingon
  10. Google BearShare
  11. Google Loco
  12. Google Linux
  13. Google Ewmew
  14. Answer to life the Universe and Everything
  15. Google Mozilla
  16. Google Gizoogle
கூகுளின் மற்றுமொரு வேடிக்கையான தேடலை அடுத்துவரும் பதிவுகளில் தருகிறேன்.






Monday, February 15, 2010

கடந்த வருடம்(2009) கூகுளில் அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியல்( top searches on google)

2009 கடந்து பல மாதங்கள் சென்றபின் இது ஒரு காலம் தாமதித்த இடுகை. கூகுளில் கடந்த 2009 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியல் இதோ. இதில் அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியலில் Michael jackson என்னும் சொல் முதலிடத்தில் உள்ளது.
இதோ கூகிளில் அதிகம் தேடப்பட்ட முதல் பத்து சொற்களின் பட்டியல்:



  1. michael jackson
  2. facebook
  3. tuenti
  4. twitter
  5. sanalika
  6. new moon
  7. lady gaga
  8. windows 7
  9. dantri.com.vn
  10. torpedo gratis
இதைவிட விளையாட்டுகள்,பொழுதுபோக்கு அம்சங்கள்,உணவு மற்றும் குடிபானங்கள் போன்றவற்றிலும் அதிகம் தேடப்பட்டவற்றையும் இங்கே பட்டியல் இட்டுள்ளேன். இது ஒரு உலகளாவிய பட்டியல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயம்.

பொழுதுபோக்கு அம்சங்களில்...........
  1. michael jackson
  2. transformers
  3. eminem
  4. naruto shippuden
  5. beyonce
  6. peliculas id
  7. paranormal activity
  8. anime online
  9. natasha richardson
  10. poker face lyrics

விளையாட்டு சம்பந்தமாக................
  1. real madrid
  2. us open
  3. ufc
  4. sahadan
  5. livescore
  6. pacquiao vs cotto
  7. wbc 速報
  8. pga tour leaderboard
  9. confederations cup
  10. l'equipe football
உணவு மற்றும் குடிபானம் சம்பந்தமாக................

  1. acai berry
  2. picnic
  3. クックパッド
  4. tesco direct
  5. senseo
  6. peanut butter recall
  7. nespresso commande
  8. habibs delivery
  9. mocktail
  10. masterchef ஆஸ்திரேலியா
இவற்றை எல்லாம் விட அண்மைய நாட்களில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியல்....
1. winter olympics schedule

2. valentines
3. pairs short program
4. mens moguls
5. medals
6. kumaritashvili
7. johnny spillane
8. bharti airtel
9. we are the world 25
10. ohno




 

Saturday, February 13, 2010

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள்

கணணி மூலமாக செய்யப்படும் விடயங்களை தூர இடத்திலுள்ள ஒருவருக்கு விளங்கப்படுத்துவது என்பது மிக கடினமான விடயம். அத்தகைய விடயங்களை நாம் தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாக இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என்று விளங்கபடுத்துவது கடினமான விடயம். அவ்வாறு செய்வதென்பது செலவு கூடிய விடயமும் நேரத்தையும் விரயமாக்கும் செயலுமாகும். அத்தகைய கணனியின் மூலமாக செய்யும் விடயங்களை கணனியில் எவ்வாறு செய்யவேண்டும் என ஒரு காணொளி மூலமாக அல்லது ஒரு புகைப்படமூலமாகவோ தெளிவுபடுத்தினால் மிக இலகுவாக இருக்கும். அத்தகைய செயற்பாடுகளுக்கு நாம் காணொளி,புகைப்பட  கருவிகளை  (Video Camera) வைத்து செய்ய வேண்டியதில்லை.

அத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளவென சில பிரத்தியேக மென்பொருட்கள் உள்ளன. அவை நாம் கணனியில் செய்துகொண்டிருக்கும் விடயங்களை தாங்களாகவே காணொளியாகவோ (Video Clips) அல்லது புகைப்படமாகவோ(Images) மாற்றி அமைத்துக்கொள்ளும். இத்தகைய மென்பொருட்கள் சிலவற்றை இலவசமாக பெறக்கூடியதாக இருக்கும். அத்தகைய சில இலவச மென்பொருட்களின் பட்டியல் இதோ:


1. Cam Studio
ஆவண அமைப்புக்கள்(file Formats): .avi, .swf
சகல Windows இயங்குதளங்களிலும் (Operating System) பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
மென்பொருளின் அளவு(File Size): 1.20MB

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Cam Studio
 http://camstudio.org/



2. Wink
சகல Windows இயங்குதளங்களிலும் மற்றும் சில குறிப்பிட்ட Linux வகை இயங்குதளங்களிலும்  செயற்படும்.
ஆவண அமைப்புக்கள்: swf, மற்றும் BMP/JPG/PNG/TIFF/GIF
மென்பொருள் அளவு: 3272KB

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Wink
http://www.debugmode.com/wink/







3. Jing
Windows XP,Vista ,Windows 7 மற்றும் Mac OS X போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.
மென்பொருள் அளவு: 9.1MB
Windows இயங்குதளத்தில் பயன்படுத்த தேவையான சில விடயங்கள்.
•Windows XP, Vista, or Windows 7

•Microsoft .NET Framework 3.0
•Broadband Connection

Mac OS x இயங்குதளத்தில் பயன்படுத்த தேவையான சில விடயங்கள்.
•Mac OS X 10.4.11, or 10.5.5 or later

•QuickTime 7.5.5 or later
•Broadband

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Jing
http://www.jingproject.com/









4. Free Screen Recorder
சகல Windows இயங்குதளங்களிலும் பயன்படுத்த முடியும்.
மென்பொருள் அளவு: 591 MB
ஆவண அமைப்புக்கள்:

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Free Screen Recorder
http://www.nbxsoft.com/screen-recorder.php







5. Freez Screen Recorder
Windows 2003, XP, 2000, 98, Me, NT போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.

மென்பொருள் அளவு:  772 MB
ஆவண அமைப்புக்கள்:Microsoft Video 1, MPEG-4, DivX,AVI மற்றும் PCM, ADPCM, MP3, OGG,JPG,PNG,GIF

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Freez Screen Recorder
http://www.smallvideosoft.com/screen-video-capture/




மேலே குறிப்பிட்ட மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றபோதிலும் இவற்றைவிட மிகவும் சிறப்பான Camtasia Studio என்னும் பிரத்தியேக மென்பொருள் ஒன்று இதற்கென உள்ளது. இந்த மென்பொருள் மூலமாக நாம் மிகவும் சிறப்பாக செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். இந்த மென்பொருள் சம்பந்தமான விடயங்களையும் மற்றும் தரவிறக்க சுட்டியையும் கீழே உள்ள இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.
http://www.techsmith.com/camtasia.asp