Showing posts with label YouTube. Show all posts
Showing posts with label YouTube. Show all posts

Saturday, December 26, 2009

YouTube இலிருந்து காணொளிகளை தரவிறக்க இணையவழி இலவச மென்பொருள்

இணையத்தில் Youtube இலிருந்து காணொளிகளை ன்றும் பல ஆவணங்களை பல்வேறுபட்ட வடிவங்களில் தரவிறக்கவென பல்வேறு இணையத்தளங்கள், மென்பொருட்கள்  உள்ளன.  ஏற்கனவே எனது இடுகைகளில் அத்தகைய பல தகவல்களை பதிவிட்டுள்ளேன். அத்தகைய ஒரு இணைய வழியிலான மென்பொருள் சம்பந்தமான இணையம் பற்றித்தான் இன்றைய பதிவை இடவுள்ளேன்.



catch YouTube இது ஒரு இணையவழியிலான மென்பொருள் என்று குறிப்பிடலாம். இதிலிருந்து நீங்கள் YouTube காணும் காணொளிகளை பார்த்து மகிழலாம். இதிலுள்ள சிறப்பம்சம் mpg,mov,3gp,mp3,dvd,wav,mp4 போன்ற வடிவங்களில் இந்த தொகுப்புக்களை நீங்கள் தரவிறக்கி கொள்ளலாம்.  நீங்களும்  தரவிறக்கி பார்த்து மகிழுங்கள்.

இணையச்சுட்டி:  http://www.catchyoutube.com/





Friday, September 18, 2009

நேரடியாகவே YouTube இலிருந்து காணொளிகளை (Videos) தரவிறக்குவது எப்படி?

YouTube இலிருந்து அதிலுள்ள காணொளிகளை(Videos) தரவிறக்கி(Download) பயன்படுத்த விரும்புபவர்கள் நேரடியாகவே YouTube இலிருந்து தரவிறக்கி கொள்வதற்கான மிகவும் எளிமையான நடைமுறை தான் இது.
நீங்கள் செய்யவேண்டியது உங்கள் Address Bar இல் http://www.youtube.com/ என்பதற்கு பதிலாக http://www.kickyoutube.com/ என தட்டச்சு செய்யுங்கள். அதாவது Youtube என்பதற்கு முன்னால் kick என்னும் சொல்லை போட்டால் போதும்.
பின்னர் தோன்றும் திரையில் நீங்கள் தரவிறக்க வேண்டிய காணொளியை தேடல் பெட்டியினுள் (Search Box) தட்டச்சு செய்வதன் மூலம் தேடி அதனை தெரிவுசெய்யுங்கள்.


பின்னர் விரும்பிய வடிவமைப்பினை (format:MP4,FLV,3GP,IPHONE,PSP,MP3) தெரிவு செய்து பச்சை நிறத்திலான GO என்பதினை அழுத்துங்கள்.



GO என்பதினை தெரிவு செய்த பின்னர் நீல நிறத்திலுள்ள DOWN என்பதினை அழுத்துங்கள். இப்போது நீங்கள் தரவிறக்கி பார்க்கலாம்.


Facebook தகவல்: தற்பொழுது Facebook இன் பயனாளர்(User name) பெயருக்கு நீங்கள் நேரடியாகவே உங்கள் பயனர் பெயரையே பாவிக்கலாம். மின்னஞ்சல் பாவிக்க வேண்டிய அவசியம் இல்லை.