Saturday, October 10, 2009

மிகப்பெரிய கோப்புக்களை சிறிய வடிவிலான கோப்பு துண்டுகளாக பிரிக்க ஒரு இலவச மென்பொருள்

மிகப்பெரிய கோப்புக்களை(Large size folders), ஆவணங்களை மற்றும் பல்வேறுபட்ட கோப்புக்களை நீங்கள் மிகச்சிறிய கோப்புக்களாக துண்டு துண்டாக்க விரும்புபவர்கள் இந்த இலவச மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள்.


GSplit எனப்படும் இந்த இலவச மென்பொருளானது(Free Software) எத்தகைய மிகப்பெரிய கோப்புக்களையும் மிகச்சிறிய துண்டுகளாக்கி தருகின்றது. படங்கள்(Images), பல்லூடக வடிவங்கள்(Mulitimedia), காணொளிகள் (Video),ஆவணங்கள்(documents),கோப்புறைகள்(Folders) போன்ற எத்தகைய கோப்புக்களையும் சிறிய துண்டுகளாக மாற்றி நாங்கள் விரும்பிய இடங்ககளில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் அல்லது உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: GSplit Download



Thursday, October 8, 2009

புகைப்படங்களை மிக இலகுவாக வடிவமைக்கவென ஒரு இலவச மென்பொருள்

புகைப்படங்களை வண்ணமயமாக வடிவமைத்து பார்க்க விரும்புகிறீர்களா? இதோ அதற்கான ஒரு இலவச மென்பொருள்.
Photoscape எனப்படும் இந்த மென்பொருளானது பல புகைப்படங்களை ஒன்று சேர்த்து உருவாக்கவும்(Photo Combine) மற்றும் அசையும் உருவங்களை(GIF Animation) உருவாக்கவும் மற்றும் புகைப்படங்களை ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றியமைக்கவும்(Format Conversion) உதவுகின்றது. இன்னும் பல்வேறுபட்ட அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு இலவச மென்பொருள் பதிப்பாக உள்ளது.

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Photoscape Download Link


Tuesday, October 6, 2009

தமிழ் இணைய கலைச்சொல் அகராதிகள்


தமிழில் விஞ்ஞான கலைச்சொற்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் சில பயனுள்ள கலைச்சொல் இணைய அகராதிகள் இங்கு தரப்படுகின்றன.

இந்த கலைச்சொல் அகராதிகளில் தகவல் தொழில்நுட்பவியல்,தாவரவியல்,விலங்கியல்,கணிதவியல்,உயிரியல்,கலை மற்றும் மானிடவியல்,சமுதாயவியல்,மருத்துவம்,வேளாண்மை பொறியியல்,மனையியல்,சட்டம்,அறிவியல்,உயிர் தொழில்நுட்பவியல்,பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல்,புவியியல்,வரலாறு,அரசியல்,உளவியல்,பொது நிர்வாகம் மற்றும் வணிகவியல்,இயற்பியல்,வேதியியல்,நிலவியல் போன்ற பல்வேறுபட்ட கலைச்சொற்கள் உள்ளடங்கியுள்ளன. பயன்படுத்தி பயனடையுங்கள்.

கலைச்சொல் அகராதிகளின் இணையச்சுட்டிகள்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
தொழில்நுட்பம்
நவீன தமிழ் அருஞ்சொற்பொருள்
தகவல் தொழில்நுட்ப கலைச்சொல்
கணணி
தமிழ் மின்நூலகம்
கணிப்பொறி கலைச்சொல் அகராதி
கணிப்பொறி கலைச்சொல் அகராதி மென்நூல்
விக்சனரி
தமிழ்-ஆங்கில ,ஆங்கில-தமிழ் இணைய அகராதி
தமிழ் சுற்றுப்பலகையியல்
கலைச்சொல் அகராதி மென்நூல்

Monday, October 5, 2009

உங்கள் USB Drives, MP3 players,iPod, memory cards போன்ற சேமிப்பு கருவிகளில் (Storage Devices) அழிபட்ட கோப்புக்களை மீட்டுத்தரும் இலவச மென்பொருள்


உங்கள் USB Drives, HDD, MP3 player,ipod,memory Cards போன்ற நீங்கள் பாவிக்கும் சேமிப்பகங்களிலுள்ள ஆவணங்கள்,(Documents)கோப்புக்கள்(Folders),மற்றும் தரவுகள்(Data) தவறுதலாக அழிபட்டுவிட்டனவா? அவற்றை மீட்டுத்தரவென இலவச மென்பொருள் ஓன்று உள்ளது.

Recuva1.25.4 என்னும் இலவச மென்பொருளானது உங்கள் சேமிப்பு கருவிகளிலுள்ள (Storage Devices) மீட்டுத்தருகின்றது. அவை எத்தகைய கோப்புக்களாக இருந்தாலும் சரி அதாவது ஆவணங்கள் (Documents), கோப்புறைகள் (Folders), படங்கள் (Images), காணொளிகள்(Videos), மற்றும் பாடல்கள் ( Songs) போன்ற எத்தகைய தரவுகளாக இருந்தாலும் சரி அவற்றை மீட்டு தருகின்றது. உங்கள் கோப்புறைகள் வைரஸ் தாக்கி அழிந்திருந்தாலும் அவற்றைக்கூட நீங்கள் மீட்டெடுக்க முடியும்.


மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Recuva Download link

Friday, October 2, 2009

அழிக்க முடியாதவாறு கோப்புக்களை (Folders) எவ்வாறு உருவாக்குவது?


முக்கியமான ஆவணங்கள் அடங்கிய கோப்புக்களை (Folders) மற்றவர்கள் அழிக்கமுடியாத வகையில் மிக இலகுவான முறையில் எந்த மென்பொருளின் உதவியுமின்றி உருவாக்கலாம்.

இத்தகைய கோப்புக்களை (Undeleteable Folders) DOS Command Prompt மூலமாக மட்டும்தான் உருவாக்கமுடியும். அத்தகைய கோப்புக்களை சாதாரணமாக எவரும் அழிக்கமுடியாது. அவ்வாறு அழிப்பதாயின் DOS Command Prompt வழியே சென்றுதான் அழிக்கமுடியும்.

இதோ அதற்கான வழிமுறைகள்.

1. முதலில் DOS Command Prompt ஐ திறவுங்கள்.(Open DOS Command prompt)
(Start>Run>(type) 'cmd' )





2. பின்னர் கோப்பு (folder) சேமிக்கவேண்டிய இடத்தினை (C: or D:) தெரிவு செய்த பின்னர் Command Prompt இல் 'md\aux\' என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.( கோப்புக்களை உருவாக்க நீங்கள் (aux,lpt1,con,lpt5) போன்ற பெயர்களைமட்டுமே பாவிக்க முடியும்.)



3. தற்பொழுது aux என்ற கோப்பானது (folder) உங்கள் கணனியில் நீங்கள் தெரிவுசெய்த இடத்தில் (directory: C: or D:) சேமிக்கப்பட்டிருக்கும்.




4. தற்பொழுது அந்த கோப்பினை அழிக்க முயற்சி செய்து பாருங்கள். அது கீழே உள்ளவாறான தகவலை உங்களுக்கு தரும்( Error Message).








5. இத்தகைய கோப்புகளை உருவாக்குவதற்கான பிற பெயர்கள். ( நீங்கள் கோப்புக்களை உருவாக்க வேண்டுமாயின் இத்தகைய பெயர்களையே பாவிக்க வேண்டும்.)
lpt1 (உதாரணம்: md\lpt1\),CON,lpt5,ஆக்ஸ்

6. கோப்பை அழிக்க வேண்டுமாயின் rd\aux\ என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.


எங்கே நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

Wednesday, September 30, 2009

கணணி திரையிலுள்ள(Desktop) சின்னங்களை (Icons) எவ்வாறு பூட்டி வைப்பது?-இலவச மென்பொருள்


கணணி திரையிலுள்ள (Desktop) சின்னங்களை (Icons) மற்றவர்கள் பாவிக்கமுடியாமல் கடவுச்சொல் (Password) கொடுத்து பாதுகாப்பாக பூட்டி வைக்கவென இலவச மென்பொருள் உள்ளது.

அதற்கான மென்பொருள் தான் Desklock. இந்த மென்பொருளை கணனியில் நிறுவி உங்கள் கணனித்திரையை பாதுகாப்பாக பூட்டி மற்றவர்கள் அவற்றை பாவிக்கமுடியாமல் செய்யமுடியும். இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணனியிலுள்ள சின்னங்களை (Icons) மற்றவர்கள் அதை ஒழுங்குபடுத்த முடியாமலும் செய்யமுடியும்.(drag and Drop).

மென்பொருள் தரவிறக்க சுட்டி: Desklock Download link



Monday, September 28, 2009

Yahoo மின்னஞ்சல் முகவரியினை(Email ID) எவ்வாறு நிரந்தரமாக அழிப்பது?

உங்கள் Yahoo Mail Account முற்று முழுதாக நிரந்தரமாக அழிக்க விரும்புகின்றீர்களா? இதோ அதற்கான வழி.







1. உங்கள் Yahoo Mail Account புகுபதிகை செய்து கொள்ளுங்கள்.

2. நீங்கள் நிரந்தரமாக அழிக்க விரும்பும் மின்னஞ்சல் முகவரி(Email ID) மற்றும் கடவுச்சொல்(Password) என்பவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

3. Terminate Your Yahoo Account என்ற இந்த இணைப்பின் மீது அழுத்துங்கள்(click).
(தேவையேற்படின் புகுபதிகை செய்யவும்)

4. இந்த பக்கத்தில் உங்களது தரவுகள் யாவும் இல்லாமல் போகும் என்று குறிப்பிடபட்டிருக்கும் பக்கத்தில் உங்கள் கடவுச்சொல்லை(Passowrd) மீண்டும் வழங்குங்கள்.

5. Terminate this Account என்பதை அழுத்தி உங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை நிரந்தரமாக இல்லாமல் செய்யலாம்.










இனிவரும் பதிவுகளில் எவ்வாறு Gmail Account மற்றும் Facebbok Account என்பவற்றை இல்லாமல் செய்வது பற்றி பார்க்கலாம்.

Sunday, September 27, 2009

USB Devices ஐ பாதுகாப்பாக கணனியிலிருந்து அகற்றுவதற்கான ஒரு இலவச மென்பொருள்

USB Removable Devices ஐ எமது கணனியிலிருந்து பாதுகாப்பாக அகற்றுவது அவசியம். இல்லாதுவிடில் உங்கள் USB Drives களிலிருந்து சிலவேளைகளில்தரவுகளோ, கோப்புக்களோ( documents and folder) காணாமல் போகும் சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே உங்கள் கணனியிலிருந்து USB Devices பாதுகாப்பாக அகற்றப்படுவது மிக அவசியம்.

அவ்வாறு உங்கள் USB Devices ஐ பாதுகாப்பாக நீக்குவதற்கு என பிரத்தியேகமாக சில மென்பொருட்கள் உள்ளன. அத்தகைய ஒரு இலவச மென்பொருள் தான் USB Safely Remove.




மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியதன் (Install) பின்னர் கணனியில் System Tray இல் ICON ஒன்று தோன்றும். அதில் அழுத்தி (CLICK) USB Devices ஐ பாதுக்காப்பாக உங்கள் கணனியிலிருந்து அகற்றி கொள்ளுங்கள்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி: Download USB Safely Remove.








Saturday, September 26, 2009

மற்றவர்களின் USB Drive இல் உள்ள தரவுகளை அவர்களை அறியாமலே திருடுவதற்கான மென்பொருள்:

உங்கள் இல் USB இல் உள்ள கோப்புகளையோ (Folders) அவர்களின் ஆவணங்களையோ (Documents) அல்லது உங்களுக்கு தெரியாத நபர்களின் USB Drive க்களில் உள்ள கோப்புக்களை, ஆவணங்களை அவர்கள் அறிந்து கொள்ளாமல் எவ்வாறு பிரதி (Copy) செய்து கொள்ள Copier என்னும் இந்த மென்பொருள் உதவுகின்றது.

(உங்களுக்கு விளங்கிற தமிழிலை சொன்னால் மற்ற ஆட்களின்ரை தரவுகளை திருடுறது.....எல்லாரும் ஒரு வகையிலை திருடர் தான்.)


அவர்கள் உங்கள் கணனியில் தங்கள் USB Drive களை பாவிப்பவர்களாயின் அவர்களின் சகல தரவுகள் யாவும் அவர்களை அறியாமலே பிரதி(Copy) செய்யப்பட்டுவிடும். அவர்களின் தரவுகள் பிரதி செய்யப்பட்டதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இருக்காது.

இந்த மென்பொருளானது ஆகக் கூடுதலாக 8GB அளவிலான தரவுகளையே திருடும். மன்னிக்கவும் பிரதி செய்யும். (திருடுறதிற்கும் ஒரு அளவு இருக்கு)

இந்த மென்பொருள் மூலம் பிரதி செய்யப்படும் தரவுகள் முன்னிருப்பு அடைவான (Default directory) "C:\WINDOWS\sysbackup\" என்னும் அடைவினுள் (Director) இல் சேமிக்கப்படும்.

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Download USB Hidden File Copier




Friday, September 25, 2009

1GB அளவுள்ள கோப்புக்களை 10MB அளவுள்ள கோப்புக்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருள்.

மிகப்பெரிய அளவிலான கோப்புக்களை மிகச்சிறிய அளவிலான கோப்புக்களாக மாற்றவென ஒரு திறந்த இலவச மென்பொருள்தான் இது. உங்கள் கோப்புக்கள் (Folder) எத்தகைய பெரிய அளவிலான கோப்புக்களாக இருந்தாலும் அதனை மிகச்சிறிய அளவிலான கோப்புக்களாக மாற்ற முடியும்.


KGB Archiver என்னும் மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கோப்புக்களை மிகச்சிறிய அளவிலான கோப்புக்களாக மாற்றிக்கொள்ள முடியும்.

இதற்கு உங்கள் கணனியில் RAM ஆனது குறைந்தது 256MB அளவில் இருக்கவேண்டும்.



மென்பொருள் தரவிறக்க சுட்டி: KGB Archiver Download
KGB Beta Download



Wednesday, September 23, 2009

USB Drive இல் பாவிப்பதற்கான பயனுள்ள நான்கு மென்பொருட்கள்


USB DRIVE இல் பயன்படுத்தவென பயனுள்ள நான்கு மென்பொருட்களைப்பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.


1.VIRUS தாக்கத்திலிருந்து உங்கள் USB Drive களை பாதுகாப்பதற்கான மென்பொருள்.
THUMBS SCREW என்னும் மென்பொருளை பயன்படுத்தி உங்கள் USB இல் வைரஸ் இலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். நீங்கள் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவியதன்(Install) பின்னர் System Tray Icon இல் வலது சொடுக்கின் (Right Click) மூலம் Make USB Writeable என்பதை தெரிவுசெய்து உங்கள் USB ஐ VIRUS இலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.










மென்பொருள் தரவிறக்க சுட்டி: Thumbscrew Download




2. பாதுகாப்பாக உங்கள் கணனியிலிருந்து USB Drive ஐ அகற்றுவதற்கான மென்பொருள்.















தரவிறக்க சுட்டி: USB Disk Ejector Download




3.DeskDrive எனப்படும் உங்கள் கணனியிலுள்ள Hard drives களுக்கு Shortcut களை வழங்கி இலகுவாக கையாள்வதற்கான மென்பொருள்.
















மென்பொருள் சுட்டி: DeskDrive Download
















4. உங்கள் USB Drive இல் காணாமல் போன கோப்புக்களை (Documents Folders) மீட்பதற்கான SyncToy என்னும் மென்பொருள்.






மென்பொருள் தரவிறக்க சுட்டி: SyncToy Download

Sunday, September 20, 2009

புகைப்படத்தை உயிரோட்டமுள்ள புகைப்படமாக மாற்ற இணையவழி மென்பொருள்

உங்கள் புகைப்படங்களை உயிரோட்டமுள்ள (Sort-of-living) புகைப்படமாக முப்பரிமாண தோற்றத்தில் (Sort-of-3D) பார்க்க விரும்புகிறீர்களா? இதோ அதற்கான இணைய வழி மென்பொருள்.

Japanese app என்னும் மென்பொருளில் உங்கள் புகைப்படத்தை தரவேற்றி உங்கள் புகைப்படத்தை உயிரோட்டமுள்ள ஒரு புகைப்படமாக மாற்றி அமையுங்கள்.

http://labs.mppark.jp/hige/ என்ற இணையதளத்திற்கு சென்று CHANGE என்பதை அழுத்தி புகைப்படத்தை தரவேற்றி கொள்ளுங்கள்.




அதில் ஏற்கனவே உள்ள புகைப்படம் மாற்றம் பெற்று உங்கள் புகைப்படம் உயிரோட்டமுள்ள புகைப்படமாக மாற்றம் பெறுவதை நீங்கள் காணலாம்.
அத்துடன் நீங்கள் உங்கள் புகைப்படத்துக்கு அசைவியக்கங்களையும் (Animations) சேர்த்துக்கொள்ள முடியும். சுட்டியின் (mouse) அசைவுகளுக்கு ஏற்ப புகைப்படத்தின் அசைவில் மாற்றங்களை உண்டுபண்ண முடியும்.



Saturday, September 19, 2009

Powerpoint கோப்புக்களை Flash வடிவில் மாற்றுவதற்கான இலவச மென்பொருள்


Microsoft Powerpoint இன் உதவியுடன் உருவாக்கப்பட்ட கோப்புக்களை மிகவும் இலகுவான முறையில் Flash வடிவத்திற்கு மாற்ற உதவும் மென்பொருளின் தான் iSpring . அதாவது இது ஒருவைகையில் நமது இணைய வழியிலான கற்றல் செயற்பாடுகளுக்கு பெரும் உறுதுணையாக அமையும்.


நீங்கள் iSpring என்ற மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியதன் பிற்பாடு. உங்களுக்கு தேவையான Microsoft Powerpoint கோப்புக்களை தரவேற்றி இலகுவாக Flash வடிவத்திற்கு மாற்றி அமைக்கலாம்.
இந்த மென்பொருள் ஆனது Windows 2000/XP/2003/2007 ஆகிய இயங்குதளங்கள் ( operating systems )நிறுவப்பட்டுள்ள கணனிகளில் மாத்திரமே பயன்படுத்தலாம்.

அவ்வாறு நீங்கள் பதிவேற்றிய கோப்புக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள http://www.slideboom.com/ என்ற இணையத்தளத்தை பயன்படுத்தி பதிவேற்றி கொள்ளலாம்.

இது ஒரு இலவச மென்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.

தரவிறக்குவதற்கான இணையச்சுட்டி: iSpring அல்லது
http://www.ispringsolutions.com/down...g_free_4_2.exe

நீங்களும் பயன்பெறுங்கள் மற்றவர்களையும் பயன்பெற செய்யுங்கள்.


Friday, September 18, 2009

நேரடியாகவே YouTube இலிருந்து காணொளிகளை (Videos) தரவிறக்குவது எப்படி?

YouTube இலிருந்து அதிலுள்ள காணொளிகளை(Videos) தரவிறக்கி(Download) பயன்படுத்த விரும்புபவர்கள் நேரடியாகவே YouTube இலிருந்து தரவிறக்கி கொள்வதற்கான மிகவும் எளிமையான நடைமுறை தான் இது.
நீங்கள் செய்யவேண்டியது உங்கள் Address Bar இல் http://www.youtube.com/ என்பதற்கு பதிலாக http://www.kickyoutube.com/ என தட்டச்சு செய்யுங்கள். அதாவது Youtube என்பதற்கு முன்னால் kick என்னும் சொல்லை போட்டால் போதும்.
பின்னர் தோன்றும் திரையில் நீங்கள் தரவிறக்க வேண்டிய காணொளியை தேடல் பெட்டியினுள் (Search Box) தட்டச்சு செய்வதன் மூலம் தேடி அதனை தெரிவுசெய்யுங்கள்.


பின்னர் விரும்பிய வடிவமைப்பினை (format:MP4,FLV,3GP,IPHONE,PSP,MP3) தெரிவு செய்து பச்சை நிறத்திலான GO என்பதினை அழுத்துங்கள்.



GO என்பதினை தெரிவு செய்த பின்னர் நீல நிறத்திலுள்ள DOWN என்பதினை அழுத்துங்கள். இப்போது நீங்கள் தரவிறக்கி பார்க்கலாம்.


Facebook தகவல்: தற்பொழுது Facebook இன் பயனாளர்(User name) பெயருக்கு நீங்கள் நேரடியாகவே உங்கள் பயனர் பெயரையே பாவிக்கலாம். மின்னஞ்சல் பாவிக்க வேண்டிய அவசியம் இல்லை.


Thursday, September 17, 2009

Facebook பயனாளர்களுக்கு (Users) இனித்திடும் செய்தி.......


Skype போன்ற குரல்,வீடியோ அரட்டை (Voice and Video chatting) இணைய வழி அரட்டை மென்பொருள் மற்றும் இணையத்தளங்களுக்கு தலையிடியை கொடுக்கும் செய்தி. Facebook அன்பர்களுக்கு இனியசெய்தி.

வெகுவிரைவில் சமூக வலைத்தளமான Facebook தனது 300 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு (Users) ஒரு இனித்திடும் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. Vivox என்னும் இணைய மென்பொருள் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து குரல் மற்றும் வீடியோ அரட்டை வசதியை (Voice and Video chatting) இன்னும் சில வாரங்களில் வழங்கவுள்ளது.

பிறகென்ன Facebook உடன் தவம் கிடப்பவர்கள் இனி Headset ஐயும் கொண்டு வெளிக்கிட வேண்டியதுதான். இங்கைபார் சொல்லி முடியிறதுக்கிடையிலை வெளிக்கிட்டாங்கள்.

Wednesday, September 16, 2009

Facebook இன் புதிய இடைமுகம் (Interface)-Facebook lite

சமூக வலைத்தளமான Facebook புதியதொரு Facebook lite என்னும் இலகுவான பயனாளர் இடைமுகத்தை (User Interface) தனது இணைய பயனாளர்களுக்காக (Facebook's User) வழங்கியுள்ளது. இது twitter க்கு போட்டியான ஒரு வருகை. முன்னைய இயல்புநிலை இடைமுகத்தை(standard Interface) விட அதி வேகமான கொண்டிருக்கிறது (Interface) கொண்டிருக்கின்றது. சிறிது காலத்துக்கு முன்னர் பரீட்சார்த்த (Testing) இணையப்பதிப்பாக இருந்த Facebook Lite தற்பொழுது பொது வெளியீடாக எல்லோரினதும் பாவனைக்கு வந்துள்ளது.




அதற்கான தள முகவரி: Facebook Lite












Monday, September 14, 2009

Yahoo இன் புதிய அரட்டை பதிப்பு-10(Yahoo Messenger Beta-10)


நேற்று தான் Yahoo Messenger பதிப்பு-9 வெளியானது போல நாம் உணர்ந்திருக்கும் வேளையில், தற்போது பதிப்பு-10 இன் சோதனைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. பதிப்பு 9 வெளியாகி இன்னும் ஓர் ஆண்டு கூட முடியவில்லை என்று நினைக்கிறேன். தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் yahoo பணியாற்றி இதனை வெளியிட்டுள்ளது.
சமூக வலையமைப்பு மற்றும் வீடியோ வழி அழைப்பு இதில் மேம்படுத்தப் பட்டுள்ளது.
வீடியோ வழி அரட்டை அழைக்க இப்போது Icon ஒன்று தரப்பட்டு எமது வேலை எளிதாக்கப்பட்டுள்ளது.Instant Messenger வசதி தரும் பல Client Programs, webcam வழியாக ஒலி எழுப்பி அழைக்கும் வசதியைத் தருகின்றன. ஆனால் இந்த நடைமுறை இந்த பதிப்பில் Yahoo மாற்றியுள்ளது. இதன் மூலம் Skype செயல்பாட்டிற்கு, தான் ஒரு போட்டியாளர் என Yahoo காட்டியுள்ளது. ஏனென்றால் Skype தான் Voice Over Internet Protocol(VOIP) வழிகளுக்கு முதலில் வழி வகுத்தது.


இந்த பதிப்பில் வீடியோ அரட்டை , பேசும் ஒலிக் கூர்மை, படத் தெளிவு ஆகியவை சிறப்பாக உள்ளன. வீடியோ அழைப்பு அமுலில் இருக்கையில் ஆவணம்(file) பகிர்ந்து கொள்வது சில நேரம் குறைவான வேகத்தில் நடைபெறுகிறது. இதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் கணனி மற்றும் இணைய வேகமாகக் கூட இருக்கலாம். எனவே மிகச் சிறப்பாக இந்த பதிப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றால், கீழ்க்குறித்த அளவிலாவது நம்மிடம் வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருள்(சாப்ட்வேர்) இருக்க வேண்டும். Windows XP அல்லது அடுத்து வந்த Operating system, 1GHz Processor, 512MB RAM MEMORY, குறைந்தது 300Kbs வேகத்தில் இணைய இணைப்பு வேகம், அதேபோல குறைந்தது 128Kbs வேகத்தில் தரவேற்றும் (Uploading) வசதி, webcam, Microsoft Directx பதிவு ஆகியவை அமைப்பில்(system) இருக்க வேண்டும். இன்னும் தெளிவாகத் தேவைகளை Yahoo தளத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக தகவல்களுக்கு : http://messenger.yahoo.com/winbeta

Friday, September 11, 2009

Google Books என்னும் சேவையிலிருந்து நூல்களை PDF ஆக தரவிறக்குவதற்கான (Download) இலவச மென்பொருள்:


எமக்கு தேவையான நூல்களை அதுவும் இலவசமாக பெறுவது என்பது சிரமமான விடயம். அத்தகைய பெரும்பாலான நூல்களை பெற்றுக்கொள்ளவென Google இன் அரியதொரு சேவையுள்ளது. books.google.com இதில் உங்களுக்கு தேவையான புத்தகங்களை தேடி பெற்றுக்கொள்ள முடியும் . ஆனால் அவற்றை PDF வடிவில் தரவிறக்குவது(Download) என்பது கடினம்(சில PDF ஆக தரவிறக்கும் வசதி உள்ளது ) அவ்வாறான நூல்களை தரவிறக்கவென ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.

Melon Google Books Downloader என்னும் மென்பொருள் உள்ளது. இது ஒரு இலவச மென்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.


இந்த மென்பொருளை கணனியில் நிறுவ முதல் Microsoft .net Framework 3.5 SP1 என்னும் மென்பொருள் ஆனது உங்கள் கணனியில் முதலில் நிருவபட்டிருக்க வேண்டும்


(Microsoft .net Framework 3.5 SP1 என்னும் மென்பொருளை நீங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.)


Microsoft .net Framework 3.5 SP1 என்னும் மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியதன் பின்னர் Melon Google Books Downloader என்னும் மென்பொருளை திறந்து அதில் அந்த நூலுக்குரிய இணையதள இணைப்பை வழங்குங்கள்.



Microsoft .NET Framework 3.5 SP1 என்னும் மென்பொருளை தரவிறக்குவதற்கான இணையத்தளச்சுட்டி.
Microsoft .NET Framework 3.5 SP1 என்னும் இணைப்பில் அழுத்துங்கள்.

Melon Google Books Downloader மென்பொருளை தரவிறக்குவதற்கான சுட்டி:
Melon Google Books Downloader இந்த இணைப்பில் அழுத்துங்கள்.



இதோ Melon Google Books Downloader இலிருந்து புத்தகங்களை தரவிறக்குவதற்கான வழிகாட்டி (Guide):

1.Melon Google Books Downloader ஐ திறவுங்கள்.(open Melon Google Books Downloader))




2.File ஐ தெரிவுசெய்து Add book என்பதினை அழுத்துங்கள்.





3.பின்னர் தோன்றும் menu இல் url ஐ இடுங்கள்.




4. தரவிறக்க வேண்டிய நூலினை தெரிவுசெய்து Queue என்பதினை அழுத்துங்கள்.