Friday, August 7, 2009

GPRS உதவியுடன் எந்த நாட்டிற்கும் கைத்தொலைபேசியிலிருந்து தொடர்புகொள்ள


நான் இத்தளத்தினை இணையத்தேடல் மூலமாக அறிந்துகொண்டேன் இத்தளத்தினுாடாக நாம்
MSN
Skype
Google Talk
Yahoo
மேலும் பல இலவச இணைய Voice Chating ஊடாக மற்றவர்களை கையடக்கத் தொலைபேசியிலிருந்தே கணினிக்கு தொடர்பு கொள்ளலாம். இத்தளத்திலிருந்து ஒரு மென்பொருளை கையடக்கத் தொலைபேசியில் தரவிறக்கம் செய்து அம்மென்பொருளினுாடாக கணினிக்கு அழைப்பு(Call) எடுக்கமுடியும். இம் மென்பொருள் உங்கள் நண்பர்கள் கையடக்கத்தொலைபேசியில் உபயோகித்தால் அவர்களுக்கு நீங்கள் அழைப்பு(Call) எடுக்கும் பொழுது அவர்களுடைய கையடக்கத்தொலைபேசிக்கு தொடர்புபடுத்திவிடும். இணையத்திலிருந்தே messenger உதவியில்லாமல் அரட்டை(Chatting) செய்வதற்கு e-buddy போன்ற பல தளங்கள் உள்ளன ஆனால் அவற்றில் கையடக்கத்தொலைபேசியிலிருந்து voice chating செய்ய இயலாது ஆனால் இதில் அவ்வசதியுள்ளது.ஆனால் இலவசம் என்று சொல்ல முடியாது GPRS கட்டணம் அறவிடப்படும் GPRS Pack பாவிப்பவர்களுக்கு இது இலவசமானது ஏனெனில் அவர்களுக்கு மாதாந்தம் குறிப்பிட்டளவு MB Download இலவசமாக கொடுத்திருப்பின் உங்கள் கையடக்கத் தொலைபேசியிலிருந்து எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.
இதுபோன்று தளம் உங்களுக்குத் தெரிந்திருந்தால் கூறுங்கள். நிச்சயம் இது உதவும் என்று நினைக்கிறேன்.
மென்பொருள் தரவிறக்க: http://www.fring.com/download/
இணையத்தளம்: http://www.fring.com/

5 comments:

  1. நல்ல தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. உங்கள் பிளாக்கை ஓப்பன் செய்யும் போது (tamileditor.org)ஸ்பெம் எச்சரிக்கை வருகிறது. சரி செய்யவும்.

    ReplyDelete
  3. மேலே நண்பர் குறிப்பிட்டதுபோலே Nimbuzz ஐ www.nimbuzz.com க்கு சென்று தரவிறக்கி உபயோகிக்கலாம்

    ReplyDelete