Sunday, January 31, 2010

நகைச்சுவையாக புகைப்படங்களை வடிவமைக்கவென இலவச இணையவழி மென்பொருள்

புகைப்படங்களை பல்வேறுபட்ட வடிவங்களில் பலரும் வடிவமைக்க விரும்புவார்கள். ஆனால் அவற்றை நகைச்சுவையாக கேலிசித்திரங்களாக வடிவமைக்கவும் ஆசைப்படுவார்கள்.
அவ்வாறு நகைச்சுவையாக,கேலிசித்திரங்களாக மிக குறுகிய நேரத்தில் மென்பொருட்களை பாவித்து வடிவமைப்பதென்பது மிகவும் கடினமான விடயம். அத்தகைய புகைப்படங்களை வடிவமைக்க விரும்புபவர்களுக்கென இலவச இணையவழியிலான மென்பொருள் உள்ளது.

Picjoke என்னும் இணையத்தளமானது இந்த சேவையை இலவசமாக வழங்குகின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த இணையத்தளத்திற்கு சென்று நீங்கள் எந்த வடிவத்தில் புகைப்படத்தை மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களோ அந்த வடிவத்தில் புகைப்படங்களை தரவேற்றி பெற்றுக்கொள்ள முடியும்.

இது முற்றிலும் இலவசமான ஒரு இணையவழி மென்பொருள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயம்.

இணையத்தளச்சுட்டி: Picjoke

இதோ நான் வடிவமைத்த சில புகைப்படங்கள்.







Monday, January 18, 2010

கையடக்கத்தொலைபேசிகளில் இணையவானொலி-இலவச மென்பொருட்கள்


கையடக்கத்தொலைபேசிகளில் இணையப்பாவனை என்பது இன்றும் அதிகரித்த ஒன்றாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் கையடக்க தொலைபேசிகள் வாயிலாக இணைய வானொலி பாவனையும் அதிகரித்தே காணப்படுகின்றது. பல கையடக்க தொலைபேசிகளில் பண்பலை வாயிலான வானொலி மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றின் தெளிவின்மை காரணமாக பலரும் இணைய வானொலியினை பயன்படுத்துகிறார்கள். இணைய வானொலியினை பயன்படுத்துவதற்கு பொதுப்பொட்டல வானலைச் சேவை(GPRS) உள்ள கையடக்க தொலைபேசிகள் அவசியம். அந்த வகையில் இந்த இணைய வானொலி சேவைகளை பெற்றுக் கொள்ளுவதற்கு சிறப்பான மென்பொருட்கள் உள்ளன.

அத்தகையதொரு மென்பொருட்கள் தான்  iRadio மற்றும் VirtualRadio என்னும் இணையவானொலி மென்பொருட்கள் ஆகும். இவற்றினை இணையத்தளங்களிலிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளமுடியும். இவற்றை கையாள்வதற்கும் மிக இலகுவாக இருக்கும்.

iRadio என்னும் மென்பொருளில் 700 க்கும் மேற்பட்ட இணைய வானொலிகள் உள்ளன. இந்த மென்பொருளில் தமிழ் மொழியிலான பல இணைய வானொலிகளும் இடம்பிடித்துல்லைமை மிகவும் சிறப்பானதொரு விடயம்.

iRadio என்னும் மென்பொருளை தரவிறக்குவதற்கான மென்பொருள் சுட்டி:
கணணி வழியிலான சுட்டி: iRadio
கையடக்கத்தொலைபேசி  வழியிலான சுட்டி: m.getjar.com
                                                                      குறியீடு: 083548



VirtualRadio  என்னும் மென்பொருள் மூலமாகவும் தமிழ்மொழியிலான பல இணையவானொலி சேவைகள் உள்ளன.
மென்பொருள் தரவிறக்குவதற்கான சுட்டி: VirtualRadio
கையடக்கத்தொலைபேசி வழியிலான சுட்டி: m.getjar.com
                                                                     குறியீடு:084278
        
                                                                         

Sunday, January 17, 2010

காணொளியை(Video) நிழற்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருள் கருவி


காணொளிகளை நிழற்படங்களாக மாற்றுவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றினை இணையங்களிருந்து இலவசமாகவோ பணம் செலுத்தியோ பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தகைய மென்பொருட்கள் இருக்கின்ற போதிலும் Free video to JPG Converter என்னும் மென்பொருளானது மிக இலகுவாக காணொளிகளை நிழற்படங்களாக மிக தெளிவான நிழற்படங்களாக பிரித்து வழங்குகின்றது. காணொளியில் காட்சிகள் எவ்வாறு நகருகின்றன என்பதற்கு ஏற்ப அவ்வாற்றின் நகர்வுகளையும் மிக துல்லியமாக மாற்றி வழங்குகின்றது. இது ஒரு இலவசமான மென்பொருள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயம்.

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Free Video To JPG Converter


காணொளியில் இருந்து நிழற்படங்களாக மாற்றிய சில படங்கள்.




































Friday, January 15, 2010

Moodle - இணையத்தினூடான இலத்திரனியல் கற்கைநெறிக்கான (E-Learning System) ஒரு பிரத்தியேக மென்பொருள்

இணையத்தினூடாக இலத்திரனியல் கற்கைநெறிக்கென (E-Learning) பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் தான் Moodle. இன்று இந்த இலத்திரனியல் கற்கைநெறியானது உலகளாவிய ரீதியிலான அங்கீகரிக்கப்பட்ட ஒரு கற்கைநெறி சாதனமாக விளங்குகின்றது. உலகின் பெரும்பாலான பல்கலைக்கழங்களில் இலத்திரனியல் கற்கைநெறி சாதனமாக Moodle ஐ பயன்படுத்துகிறார்கள். அத்துடன் இணைய வழியில் இலத்திரனியல் கற்கைநெறிகளை நடாத்திகொண்டிருக்கின்ற உயர்கல்வி நிறுவகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் Moodle என்னும் மென்பொருளை பாவித்து கற்கைநெறிகளை வழிநடத்திக்கொண்டு இருக்கின்றன.
அண்மைய புள்ளிவிபரங்களின்படி moodle இல் 45,000 மேற்பட்ட தளங்கள் பதியப்பட்டும் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட கற்கைநெறிகளை கொண்டும் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்களை கொண்டும் 75 க்கும் மேற்பட்ட உள்ளது.
(ஆதாரம் :Moodle Stats)
Moodle மென்பொருளை அடிப்படையாகக்கொண்டு பல தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1. உள்ளடக்க முகாமைத்துவ தொகுதி (Content Management System)
2.கற்றல் முகாமைத்துவத் தொகுதி (Learning Management System)
3. பாடநெறி முகாமைத்துவத் தொகுதி (Course Management System)
4. கற்பனை கற்றல் சூழல் (Virtual Learning Environment)




அத்துடன் Moodle ஆனது இணைய கற்றல் பயனாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகின்றது.


Moodle மென்பொருளினை கணனியில் நிறுவிக்கொள்ள வேண்டுமாயின் Apache,PHP போன்ற மென்பொருட்களை முதலில் நிறுவியிருக்க வேண்டும். இவற்றை இணையத்திலிருந்து இலவசமாக பெற்றுகொள்ள முடியும். அத்துடன் கணணியை வழங்கியாக (Server) பாவிக்க வேண்டும். Moodle பற்றிய பல தகவல்கள் இணையத்தில் குவிந்து காணப்படுகின்றன. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கின்றேன். Moodle பற்றிய பல தகவல்களை தேடல் இயந்திரங்கள் மூலம் தேடி பெற்றுக்கொள்ளமுடியும்.



இணையத்தள சுட்டிகள்:

Moodle இணையத்தளம்: p://www.moodle.org
Moodle மென்பொருள் தரவிறக்க சுட்டி: http://download.moodle.org/
Apache.PHP போன்ற பிற மென்பொருட்கள் தரவிறக்க சுட்டி: http://www.wampserver.com/en/download.php





Tuesday, January 12, 2010

திறந்த மென்பொருட்கள் காணப்படும் இணையதளங்கள்


திறந்த மென்பொருட்கள் எனப்படுபவை அனைத்துலக ரீதியிலான தகவல் தொழில்நுட்ப சட்ட வரையறைகளுக்கு அமைவாக அனைத்துலக மென்பொருட்கள் நிறுவனங்களின் அங்கீகாரத்துடன் மென்பொருட்களின் தராதரத்திற்கு அமைவாக அவற்றின் நெகிழ்வு போக்குடன் மென்பொருட்களின் பாதுகாப்பு தன்மைக்கு ஏற்ப உருவாக்கப்படும் மென்பொருட்கள் ஆகும்.


இத்தகைய திறந்த மென்பொருட்கள் பொதுவாக இலவசமாகவே கிடைக்கின்றன. திறந்த மென்பொருட்கள் இலாப நோக்கமற்ற அரசு சாராத ஒரு துறையாக செயற்படுகின்றன. இவை உயர் தரத்திலான மிகவும் பாதுகாப்பான மென்பொருட்களை வழங்க உத்தரவாதமளிக்கின்றன.


இத்தகைய மென்பொருட்கள் காணப்படும் சில இணையத்தளங்கள்













Monday, January 11, 2010

கணனிக்கு தேவையான அடிப்படை மென்பொருட்களின் பொதி

கணணியை புதியதாக வாங்குபவர்கள் அல்லது கணனியில் புதியதொரு இயங்குதளத்தை (Operating system) நிறுவினால் அததற்கு சில அடிப்படையான மிக மென்பொருட்கள் தேவைப்பாடு அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக தேடி எடுத்து நிறுவுவது என்பது மிக ஒரு கடினமான விடயம். அப்படியானவற்றை ஒவ்வொன்றாக எடுத்து நிறுவுவது என்பது நேரம் விரயமான செயல். அப்படியான மென்பொருட்களை ஒரே மென்பொருளில் எடுத்து நிறுவினால் மிக இலகுவாக இருக்கும் அத்தகைய ஒரு மென்பொருள் பொதி பற்றிய பதிவுதான் இது.


Ninite என்னும் மென்பொருளானது எல்லாவற்றையும் ஒரே குடையின் கீழ் பெறக்கூடியதான ஒரு மென்பொருளாகும். இந்த மென்பொருளானது இலவசமான ஒரு மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். இந்த மென்பொருளில் இணைய உலாவிகள் (Web Browsers), தகவல் பரிமாற்ற ஊடகங்கள் (Messaging), காணொளி, ஒலி ஊடகங்கள் (Media Players) , புகைப்பட வடிவமைப்பு மென்பொருட்கள் (Imaging), ஆவணமென்பொருட்கள் (Documents), கணணி பாதுகாப்பு(Security), போன்ற இன்னும் பல மென்பொருட்களை உள்ளடக்கியதாக இந்த மென்பொருள் பொதி காணப்படுகின்றது. மிகவும் பயனுள்ள இலவச மென்பொருள் என்பது மிகவும் சிறப்பான விடயமாகும்.


மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Ninite http://www.ninite.com/












Friday, January 8, 2010

இணையத்தினூடாக 2GB வரை அளவுள்ள கோப்புக்களை இலகுவாக பகிர்ந்து கொள்ள இலவச இணையத்தளம்


மிகப்பெரிய அளவிலான கோப்புக்களை,ஆவணங்களை (Folders and Documents) மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்து கொள்வதென்பது முடியாத ஒரு விடயம். ஏனெனில் பெரும்பாலான இலவச மின்னஞ்சல்களை வழங்கும் சேவை வழங்குனர்கள் (Gmail,Yahoomail,Hotmail,AOL,USA@net,lycosmail) 20MB வரையிலான அல்லது அதற்கு குறைவான அளவு கொள்ளளவுடைய கோப்புக்களையே பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இருந்தபோதிலும் சில yousendit போன்ற சில இணையத்தளங்கள் 200MB வரையிலான கோப்புக்களையே பகிர்ந்து கொள்ள அனுமதிக்கின்றன.

இவை எல்லாவற்றுக்கும் மேலே சென்று 2GB அளவுள்ள கோப்புக்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் WeTransfer என்னும் இணையத்தளமானது இந்த சேவையை வழங்குகின்றது. இந்த இணையத்தளத்திற்கு சென்று நீங்கள் யாருக்கு கோப்புக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களோ அவரின் மின்னஞ்சல் முகவரினையும் உங்கள் மின்னஞ்சல் முகவரியினையும் வழங்கி கோப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த இணையத்தளத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கு பயனாளர் கணக்கு தேவையில்லை. இது முற்றிலும் இலவசமான ஒரு சேவை என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.








இணையத்தளம் : WeTransfer

Wednesday, January 6, 2010

இணையத்தில் ஒரு கணணி வியத்தகு இணையவழி இலவச இயங்குதளம்


ஆச்சரியப்பட கூடியவிதத்தில் இணையத்தில் கணணியை உருவாக்கியுள்ளார்கள் இணைய வல்லுனர்கள். இந்த இணையத்தில் கணணி என்பது (A computer in a web page) நீங்கள் கணணியை ஆரம்பித்து கடவுச்சொல் வழங்கி கணணி திறக்கும் போது கணணித்திரை   (Desktop)   எமது கண்களுக்கு எவ்வாறு புலப்படுகின்றதோ அவ்வாறு http://g.ho.st  என்னும்  இணையத்தளத்தில் இணையக்கணணி என்று அழைக்கப்படக்கூடிய விதத்திலே இவ் இணையத்தளமானது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையக்கணணி தளத்திலே 15GB கொள்ளளவுடைய G.ho.st Drive என்னும் சேமிப்பகம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 10GB கொள்ளளவுடைய மின்னஞ்சல் ஒன்றும் தருகின்றது. அத்துடன் ஆவணங்களை,தரவுகளை உருவாக்கக்கூடிய விதத்திலே Zoho Editor,Zoho sheets போன்ற மென்பொருட்கள் காணப்படுகின்றன. கணணித்தகவல்களை நிர்வகிக்ககூடிய விதத்திலே கட்டுபாட்டு தளம் (Control panel) போன்ற பல பகுதிகளும் காணப்படுகின்றன. கணணி ஒன்றுக்கு தேவையான அடிப்படை மென்பொருட்கள் பலவும் இதில் காணப்படுகின்றன. அத்துடன் மேலும் பல வசதிகளும் இதில் காணப்படுகின்றன. இது ஒரு முற்று முழுதான இலவசமான தளம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு  சிறப்பான அம்சமாகும்.













இணையத்தளம்: G.ho.st

Tuesday, January 5, 2010

கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தவென ஒரு இலவச திசைகாட்டி (Compass) மென்பொருள்


கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தவென  ஏராளமான பயனுள்ள  மென்பொருட்கள் இணையத்தில் குவிந்து காணப்படுகின்றன. அத்தகைய ஒரு மென்பொருள் பற்றிய பதிவுதான் இது.

Compass 4.1 எனப்படும் இந்த மென்பொருளானது கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்த கூடிய வகையில் அமைக்கப்படுள்ள ஒரு திசைகாட்டி ஆகும்.
இந்த மென்பொருளானது நமது அமைவிடத்தின் ஆள்கூறுகளை(Location Coordinates)  கொண்டு வானியலில் கதிரவன்(Sun) மற்றும் நிலவின்(Moon)  வானியல்  (Astronomy) அமைவிடங்களை எமக்கு தருகின்றது. அத்துடன் சர்வதேச நியம நேரத்தினை அடிப்படையாக கொண்டு (GMT)  அந்த நாடுகளின் நேரங்களில் கதிரவனினதும் சந்திரனினதும் உதயமாகும் நேரம்(Rise) , மத்திய கோட்டினை கட்டைக்கும் நேரம் (Transit) மற்றும் மறையும் நேரம் (Set) என்பவற்றினையும் எமக்கு தருகின்றது. அத்துடன் பல்வேறுபட்ட தகவல்களையும் பெற்றுகொள்ள கூடிய விதத்தில் இந்த மென்பொருளானது வடிவமைக்கப்படுள்ளது.
பெரும்பாலான Nokia, Samsung, Sony ericson,LG,RoverPC:M1,sagem.Qtek,Philips,pantech, lenovo, T-Mobile , Toshiba, i-mate,Sendo,sharp,Orange,O2,Mitac,Motorola,Huawei, போன்ற பல வகையான தொலைபேசிகளில் பயன்படுத்த முடியும்.

இணையச்சுட்டி: Compass







                              

Saturday, January 2, 2010

PDF இலிருந்து word க்கு கோப்புகளை மாற்றியமைக்க இணையவழியிலான இலவச மென்பொருள்



ஆவணங்களை ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றுவதற்கு பல மென்பொருட்கள் இருகின்றபோதிலும் இணையவழியிலான மென்பொருட்கள் சிறப்பான மென்பொருட்களாக இருக்கின்றன. அவ்வாறன பல இணையவழியிலான மென்பொருட்கள் பற்றிய பதிவுகளை எனது முன்னைய பதிவுகளில் தந்துள்ளேன். இந்த பதிவும் அவ்வாறான ஒரு இணையவழியிலான மென்பொருள் பற்றிய பதிவு.

PDF வடிவில் இருக்கும் ஆவணங்களை word வடிவத்திற்கு மாற்றி கொள்ளவென http://www.pdftoword.com/  என்னும் இணையத்தினூடாக நீங்கள் உங்கள் ஆவணங்களை மாற்றியமைத்து கொள்ளமுடியும்.மேலே குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று கீழேயுள்ள படிமுறைகளின்படி PDF வடிவிலுள்ள கோப்புக்களை மாற்றியமைத்து கொள்ளுங்கள். இதில் மூன்று படிமுறைகள் உள்ளன.





படிமுறை 1:
Step 1 என்ற இடத்தில் PDF கோப்பை தரவேற்றி (Upload) கொள்ளுங்கள்.

படிமுறை 3:
Step 2 என்ற இடத்தில்   கோப்பு வடிவத்தினை தெரிவுசெய்து கொள்ளுங்கள்.

படிமுறை 2:
Step 3 என்ற இடத்தில் உங்களின் மின்னச்சல் முகவரியினை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். ( ஏனெனில்  மாற்றியமைக்கப்படும் கோப்புக்கள் யாவும் உங்கள் மின்னச்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்)
பின்னர் Convert என்பதினை அழுத்தி கோப்புகளை மாற்றி கொள்ளமுடியும்.
இணையச்சுட்டி: http://www.pdftoword.com/


Friday, January 1, 2010

கணனியின் உட்கட்டமைப்பு தகவல்களை அறிந்துகொள்ள ஒரு இலவச மென்பொருள்

கணனியின் உள்ளக கட்டமைப்புக்கள் மற்றும் அதன் வன்பொருட்கள்  பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவென பலவழிகள் உள்ளன.


அவ்வாறு பலவழிகள் இருகின்றபோதிலும் QuickSYS Informer என்னும் மென்பொருளானது கணனியின் உட்கட்டமைப்புகள்  பற்றிய தகவல்களை வழங்குவதோடு இந்த மென்பொருளானது மிக இலகுவான இடைமுகத்துடன் (Interface) வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளானது
CPU usage;

Hard disk usage;
Memory usage;
Network adapter use; and
Battery life (for notebooks)
போன்றவற்றின் தகவல்களை அறிந்து கொள்ளகூடியவிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் உங்கள் கணணி மெதுவாக வேலை செய்யும் நேரங்களில் அதன் குறைகளை அறிந்து கொள்ளக்கூடிய விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளினை windoows 2000, 2003, XP, Vista, or Windows 7 (32 and 64 bit versions)  போன்ற இயங்குதளங்கள் உள்ள கணனிகளில் நிறுவமுடியும் அத்துடன் 1.4MB இடவசதி போதுமானதாக உள்ளது.

இணையச்சுட்டி: QuickSYS Informer